சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Today at 1:39 pm

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 9:04 pm

» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 5:11 pm

» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 5:05 pm

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 5:02 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 1:04 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 12:57 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 8:28 am

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 8:19 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:45 am

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 7:39 am

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed Jun 26, 2024 11:52 pm

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed Jun 26, 2024 11:37 pm

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed Jun 26, 2024 11:09 am

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed Jun 26, 2024 10:55 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed Jun 26, 2024 8:43 am

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue Jun 25, 2024 8:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue Jun 25, 2024 8:01 pm

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue Jun 25, 2024 8:01 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue Jun 25, 2024 7:57 am

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue Jun 25, 2024 7:46 am

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue Jun 25, 2024 7:38 am

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue Jun 25, 2024 7:18 am

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon Jun 24, 2024 10:46 am

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon Jun 24, 2024 10:40 am

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon Jun 24, 2024 10:35 am

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun Jun 23, 2024 2:56 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun Jun 23, 2024 10:27 am

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:55 pm

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:52 pm

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat Jun 22, 2024 7:50 pm

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat Jun 22, 2024 7:18 pm

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat Jun 22, 2024 7:17 pm

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat Jun 22, 2024 7:16 pm

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat Jun 22, 2024 7:15 pm

மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்! Khan11

மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்!

5 posters

Go down

மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்! Empty மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்!

Post by ahmad78 Wed Feb 22, 2012 5:33 pm

மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்!

இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் மாமியார் – மருமகள் பிரச்சினை தீர்க்க முடியாத, தவிர்க்க இயலாத பிரச்சினையாக இருக்கிறது. இந்த இரண்டுபேரிடம் சிக்கிக்கொள்ளும் ஆண்களின் பாடு பெரும்பாடாகிவிடுகிறது. எனவே பிரச்சினைக்குரிய மாமியாரை சமாளித்து வீட்டினை அமைதிப்பூங்காவாக மாற்றவும், மாமியார் மெச்சிய மருமகளாக மாறவும் ஆலோசனைகளை அளித்துள்ளனர் நிபுணர்கள்.

நட்பாய் அணுகுங்கள்

பள்ளி, கல்லூரிகளில் சீனியர்கள் எப்பொழுதுமே ஜூனியர்களை ராகிங் செய்ய நினைப்பார்கள். அதே மனோபாவத்துடன்தான் மாமியார்கள் நடந்துகொள்கின்றனர். வீட்டில் அவர்கள்தானே சீனியர். புதிதாக வீட்டிற்கு வரும் மருமகள் தங்களின் சொல்பேச்சு கேட்டு நடக்கவேண்டும் என்று நினைக்கின்றன. சற்று அதிகாரத்தோரனையில் பேசுகின்றனர். அவர்களை சமாளிக்க ஒரே வழி நட்புரீதியான அணுகுமுறைதான். எந்த செயலை செய்யும் முன்பும் மாமியாரிடம் ஒரு வார்த்தை கேட்டு செய்யுங்கள் அப்புறம் மாமியார் உங்களிடம் சரண்டர் ஆகிவிடுவார்கள்.

மரியாதை அவசியம்

பெரும்பாலான மாமியார்களை கோபத்திற்குள்ளாக்கும் விசயம் அவர்களை மதிக்காமல் மரியாதைக்குறைவாக நடத்துவதுதான். எனவே அவர்களின் வயதிற்கும், அனுபவத்திற்கும் ஏற்ப மதிப்பு மரியாதையை கொடுங்கள். அப்புறம் உங்களைப் போல ஒரு மருமகள் உண்டா என்று எல்லோரிடமும் கூறி பெருமைப்படுவார் உங்கள் மாமியார்.

பொறுப்புணர்வு

30 வயதுவரை மகனை நன்றாக வளர்த்து ஆளாக்கி புதிதாக ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கும் போது தாயின் மனநிலை சற்று இக்கட்டான சூழ்நிலையில்தான் இருக்கும். மகனை நன்றாக கவனித்துக்கொள்வாளா? சந்ததி நல்ல முறையில் செழிப்பாக இருக்குமா? என்ற கேள்வி இருக்கத்தான் செய்யும்.

எனவே உங்களின் பொறுப்பான செயல்பாடுகள்தான் மாமியாரை நிம்மதியடையவைக்கும். அதை விடுத்து உங்கள் தாய்வீட்டு சொந்தங்களை கவனிக்கும் அவசரத்தில் புகுந்த வீட்டைச்சேர்ந்த நாத்தனார், கொழுந்தனார், மாமனார், மாமியாரை கவனிக்காமல் விடும் பட்சத்தில் பிரச்சினை பூதாகரமாகிறது. எனவே இரண்டு குடும்ப சொந்தங்களையும் சரிசமமாக கவனித்து அனுப்புங்கள்.

அன்புமழை பொழியுங்கள்

மாமியார் – மருமகள் உறவு என்பது பிரச்சினைக்குரிய உறவாகவே, எதிர்மறையாகவே பேசப்படும் உறவாக இருந்து வந்துள்ளது. மாமியாரும் அன்னையை வயது ஒத்த நபர்தான் என்பதை ஒவ்வொரு மருமகளும் புரிந்து கொள்ளவேண்டும். அன்னையர்தினம் கொண்டாடும் நாளில் மாமியாரை மகிழ்ச்சிப்படுத்துங்கள். அன்றையதினம் மிகச்சிறந்த பரிசளியுங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் மாமியாரின் நடவடிக்கைகளை. உங்களை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்.

சொல்வதை கேளுங்கள்

மாமியர் என்பவர் மருமகளைவிட குறைந்த பட்சம் 30 வயது மூத்தவராகத்தான் இருப்பார். அந்த வயதிற்கு ஏற்ப அனுபவங்கள் இருக்கும். எனவே அவர் என்ன கூறுகிறார் என்பதை சற்றே காதுகொடுத்து கேளுங்கள். மாமியாரின் சொற்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர் கூறுவதை கேட்கிறீர்கள் என்பதை தெரிந்தாலே அவர் மகிழ்ச்சியடைவார்.

மாமியாரின் பிறந்தநாள், அவர்களின் திருமண நாட்களில் சிறப்பான முறையில் அவர்களுக்கு பரிசளிப்பது உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும். இன்றைய மருமகள்கள் நாளைய மாமியார் என்பதை மறந்து விட வேண்டாம். ஏனெனில் இன்றைக்கு நாம் செய்யும் காரியம் பின்னாளில் நமக்கும் நடக்க நேரிடலாம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

thatstamil


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்! Empty Re: மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்!

Post by அப்துல்லாஹ் Wed Feb 22, 2012 6:10 pm

மாமியாரின் அன்பு தன மக்களோடு மக்களாய் மருமகளுக்கும் கிட்டும்போது மருமகள்களுக்கு மறுபடியும் ஒரு தாய் தனது புகுந்த வீட்டிலும் கிடைப்பார்கள்...
நல்லதகவல் நன்றி அஹ்மத்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்! Empty Re: மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்!

Post by jasmin Wed Feb 22, 2012 6:59 pm

அருமையான யோசனைகள் இவை அனைத்தும் பொதுப்படையானவை சில குடும்பங்களில் வேறு பிரச்சனைகளும் இருக்கின்றன .என் கண்வரின் சொந்த ஊரில் சொந்தங்களுகுள்ளேயேதான் சம்பந்தம் செய்துகொள்வர் [பெரும்பாலும் ] அதனால் தனது சொந்தங்களில் இருந்து வரும் பெண்களிடம் அன்பாக நடந்து கொள்ளும் சில மாமியார்கள் தனது கணவரின் வழிகளில் வரும் மருமகளை நீதமாக நடத்துவதில்லை .என்னதான் மருமக்ள் நட்புடனும் .பாசத்துடனும் பணிவுடனிடனும் நடந்துகொண்டாலும் இயற்கையான பொறாமை மற்றும் வெறுப்பு காரணமாக பல மாமியார்கள் மருமகளோடு பிணங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்! Empty Re: மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்!

Post by gud boy Wed Feb 22, 2012 10:28 pm

மாமியார் - மருமகள் பிரச்சினை என்பது முற்று பெறாது...அதனை நிவர்த்தி செய்வது என்பது முள் மேல் நடப்பது போன்றது..

மாமியார் - மருமகள் பிரசினைக்கு தற்காலிக தீர்வு தான் கிடைக்குமே தவிர...நிரந்தர தீர்வு கிடைப்பது என்பது அரிது...

ஒரு சிலர் விதி விளக்காக இருக்கலாம்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்! Empty Re: மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்!

Post by mufees Fri Feb 24, 2012 12:54 am

நல்ல பதிவு
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்! Empty Re: மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum