சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Today at 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

இத்தாலி வீரர்களிடம் டெல்லியில் விசாரணை: மத்திய அரசு நடவடிக்கை Khan11

இத்தாலி வீரர்களிடம் டெல்லியில் விசாரணை: மத்திய அரசு நடவடிக்கை

2 posters

Go down

இத்தாலி வீரர்களிடம் டெல்லியில் விசாரணை: மத்திய அரசு நடவடிக்கை Empty இத்தாலி வீரர்களிடம் டெல்லியில் விசாரணை: மத்திய அரசு நடவடிக்கை

Post by *சம்ஸ் Sun 24 Mar 2013 - 7:41

இத்தாலி வீரர்களிடம் டெல்லியில் விசாரணை: மத்திய அரசு நடவடிக்கை D89a00a9-e562-4c7e-9099-90e6d2224f8e_S_secvpf
புதுடெல்லி, மார்ச்.24

கேரள மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை எங்கு நடத்துவது என்ற சர்ச்சை உருவாகி உள்ளது.

அரபிக் கடலில் மீன்பிடித்த கேரள மீனவர்களை இத்தாலி கப்பலில் பாதுகாப்புக்கு வந்த கடற்படை வீரர்கள் கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுக் கொன்று விட்டனர்.

இதையடுத்து 2 இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கேரள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இருவரும் இத்தாலி தேர்தலில் வாக்களிக்க பரோலில் தாய்நாடு சென்றனர். அவர்களை திரும்ப ஒப்படைக்க இத்தாலி அரசு மறுத்ததால் இரு நாடுகளிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

தூதர்கள் பேச்சுவார்த்தைக்குப்பின் சுமூக தீர்வு ஏற்பட்டது. இருவரும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் டெல்லி வந்த இத்தாலி வீரர்கள் அங்குள்ள தூதரக அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலி வீரர்களிடம் மென்மையான போக்கை கடைப்பிடிக்குமாறும், கைது செய்து சிறையில் அடைக்காமல் வீட்டுக்காவலில் வைக்குமாறும் இத்தாலி கோரிக்கை விடுத்தது. மேலும் இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது பற்றியும் விளக்கம் கேட்டது. அரிய வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக பதில் அளித்த மத்திய அரசு இத்தாலி வீரர்களுக்கு அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் உறுதி அளித்தது.

இதையடுத்து இத்தாலி சமாதானம் அடைந்தது. இத்தாலி வீரர்கள் மீதான வழக்கு விசாரணை எங்கு நடைபெறும் என்ற சர்ச்சை உருவாகி உள்ளது. வழக்கை விசாரிக்க தனி விரைவு கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

மத்திய அரசு டெல்லியில் தனி கோர்ட்டு அமைத்து இத்தாலி வீரர்கள் மீதான வழக்கு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அப்போதுதான் அவர்களை டெல்லியில் உள்ள இத்தாலி தூதர் அலுவலகத்தில் தங்க வைத்து விசாரணையை சந்திக்க வசதியாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.

கேரள வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச கடல் பகுதியில் நடந்ததால் சர்வதேச சட்டப்படி தங்கள் சொந்த நாட்டில்தான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இத்தாலி கூறி வருகிறது.

கேரள முதல் மந்திரி உம்மன்சாண்டி தங்கள் மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் தனி கோர்ட்டு அமைத்து விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சம்பவம் நடந்த இடம் கேரள பகுதி என்பதால் ஆரம்பகட்ட விசாரணை கொல்லத்தில் நடந்தது. எனவே கொல்லம் கோர்ட்டையே தனி கோர்ட்டாக மாற்றி விசாரணையை தொடரவேண்டும். வழக்கு தொடர்பான அனைத்து தஸ்தாவேஜுகளும் இங்குதான் உள்ளது. டெல்லி அல்லது வேறு இடத்தில் விசாரணை வைத்தால் இங்குள்ள சாட்சிகள் வெளியூர்களுக்கு சென்று வருவதில் சிரமம் உள்ளது. மொழிப்பிரச்சினை ஏற்படும். அது விசாரணையை மேலும் தாமதிக்கும் என்றும் உம்மன்சாண்டி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இது இருநாடுகள் சம்பந்தப்பட்டது. இதில் கேரள மாநில நீதித்துறை விசாரணை நடத்தக்கூடாது என்று கருத்து தெரிவித்து இருந்தது. மேலும் விசாரணையை காலதாமதம் செய்வது குறித்தும் சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.

எனவே டெல்லியில் தனி கோர்ட்டு அமைக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. இதுதொடர்பான முடிவை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்கும். வருகிற ஏப்ரல் 2-ந் தேதிக்குள் தனி கோர்ட்டு அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் வகையில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று தெரியவந்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இத்தாலி வீரர்களிடம் டெல்லியில் விசாரணை: மத்திய அரசு நடவடிக்கை Empty Re: இத்தாலி வீரர்களிடம் டெல்லியில் விசாரணை: மத்திய அரசு நடவடிக்கை

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 8:31

எதுவானாலும் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் இவர்கள் இதில் விதிவிலக்கு உள்ளவர்கள் என நான் நினைக்கிறேன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» ரயில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: பியுஷ் கோயல்
» சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
» இத்தாலி சிறைகளில் வாடும் 109 இந்தியர்கள்: இந்திய அரசு மீட்குமா?
» முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum