சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Khan11

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Go down

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Empty உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Post by றிமா Fri 11 Feb 2011 - 18:09

வாய்
நாக்குப்புண் தீர :-

இளங்கோவைக்காயை வாயிலிட்டு மென்று துப்பவும்.



எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்



உள்நாக்கு வளர்ச்சி

உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.



வாய்ப்புண் தீர :-

மணத்தக்காளி இலைச்சாறு பிழிந்து வாய் கொப்பளித்து வரவும்.



பற்களின் நோய்கள் :-

1. துத்தி இலை ஒரு கைப்பிடி பறித்துக் கழுவி வாயில் மெல்லவும்.

2. காட்டாமணக்கு குச்சியைக் கொண்டு பல்துலக்கிவரவும் , பல்நோய்கள், பல்வலி, பல்ஈறு நோய் தீரும்.

றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Empty Re: உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Post by றிமா Fri 11 Feb 2011 - 18:10

வாய்ப்புண், வயிற்றுப்புண் :-

அகத்திக் கீரையும், பூவையும் சமைத்துச் சாப்பிட்டு வரவும்


உடம்பில் இரத்தப்பாதையில் உள்ள கொழுப்பை அகற்றுவதற்கு:

எலுமிச்சம்பழம், வெற்றிலைச்சாறு, பாதரசம் இவற்றை உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைப்பொறுத்து மூலிகைச்சாற்றுடன் பாதரசத்தை கரைத்து உட்கொள்ளவேண்டும். இதனால் உடம்பில் இரத்தக்குழாயில் அடைபட்டுள்ள கொழுப்பு மட்டும் உடன் குறைந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். (இது சித்தர் ஆனந்தஜோதி அவர்கள் கூறியது)



நகம் சொத்தை, இளம் வயது கருக்கா பற்கள், பல் சொத்தை இவற்றிலிருந்து நிவாரணம் பெற:

விஸ்வா இலுப்பை எண்ணை என்று நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி எந்த நேரத்திலாவது நகம் மற்றும் புறக்கைகளிலும், கால் நகம், புறங்கால்களிலும் தொடர்ந்து தடவி வர விரைவில் குணமாகும். இதனால் எந்த பின் விளைவுகளும் கிடையாது. (இது சித்தர் ஆனந்தஜோதி அவர்கள் கூறியது)

றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Empty Re: உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Post by றிமா Fri 11 Feb 2011 - 18:11

வாய் நாற்றம் அகல:-

1. நீரில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து வாய் கொப்பளித்தால் பேசும் போது வெளிப்படும் வாய் நாற்றம் அகலும்

2. சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

3. எலுமிச்சம்பழச் சாற்றில் இரண்டு மடங்கு பன்னீர் கலந்து காலை, மாலை நன்றாக வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் வீக்கம், பற்களில் சீழ்வடிதல் நிற்கும்.



பித்தம் தணிய

கறிவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிட பித்தம் தணியும்.



உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.



பல்லில் புழுக்கள்

சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Empty Re: உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Post by றிமா Fri 11 Feb 2011 - 18:12

வெண்மையான பற்களைப் பெற...

வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.



வலுவான பற்கள்

வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.

றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Empty Re: உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Post by றிமா Fri 11 Feb 2011 - 18:14

வயிறு

வாந்தி, பித்தம் தீர :-

எலுமிச்சம் பழச்சாற்றை 30 அளவு சாப்பிடவும்.



தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி தீர :-

1. கொத்தமல்லி விதை வறுத்துப் பொடி செய்து கசாயம் செய்து காலை, மாலை 2 வேளை 1 டம்ளர் அளவு சாப்பிட தீரும்.
2. வாகனப் பயணத்தின்போது வாந்தி வராமல் இருக்க, எலுமிச்சைப் பழம் அல்லது மல்லிகைப் பூவை அடிக்கடி முகரலாம்.
3. துளசிச் சாறு, கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.



தீராத வாந்தி நிற்க!

"சதகுப்பை" என்ற சரக்கை வாங்கி, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சட்டியில் போட்டு செவ்வறுவலாய் வறுத்து ஒன்றிரண்டாய்ப் பொடித்து, பத்து கிராம் அளவுக்கு ஒரு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் பனங்கற்கண்டை போட்டு பாதி அளவுக்கு சுண்டிய பிறகு வடிகட்டி உள்ளுக்குக்கொடுக்க, உடனே வாந்தி நிற்கும்.

றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Empty Re: உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Post by றிமா Fri 11 Feb 2011 - 18:16

பித்தம், வாந்தி, நெஞ்சு கறிப்பு வயிற்று வலி இவற்றிற்கு:-

இஞ்சியை -100 கிராம் எடுத்து அதன் மேல் உள்ள தோலை அகற்றி சுத்தம் செய்துவிட்டு, இஞ்சியை சிறு துண்டுகளாக்கி பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி காயவைக்கவேண்டும். நன்கு காய்ந்ததும் பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். சாப்பிடும்போது ஒரு டீஸ்பூன் பொடியுடன் சர்க்கரை கலந்து சாப்பிடலாம். இதனால் நெஞ்சுகறிப்பு பித்தம், வயிற்றுவலி, குணமாகும். சாதாரணமாக குறைந்த செலவில் செய்யக்கூடிய ஒரு கைகண்ட மருந்தாகும்.



வாயுத்தொல்லை, பசியின்மை:

வாயுத்தொல்லை, பசியின்மை, மலச்சிக்கல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு கற்றாழைச் சாற்றை உட்கொண்டால் நலம் பெறலாம். ஒரு தேக்கரண்டி (5 மி.லி) கற்றாழைச் சாற்றினை நாளுக்கு 3 முறை உட்கொள்ள வேண்டும். (குறிப்பாக வெறும் வயிற்றில்) கசப்புத் தன்மையைக் குறைக்க அதனுடன் சிறிது உப்பு சேர்க்கலாம்.

றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Empty Re: உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Post by றிமா Fri 11 Feb 2011 - 18:17

வாயு தொல்லை

1. வாயு தொல்லை நீங்க ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிது பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து குடித்தால், வாயு தொல்லை இனி இல்லை..
2. சோயா பீன்ஸ், மற்றும் சோயா பொருட்கள் கான்சரை தடுப்பதோடு மட்டுமல்லாமல், இதய் நோய்கள், எலும்பு சீர்கேடுகளையும் சரி செய்கிறது. மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் நிலை மாறுதல்களுக்கும், எலும்பு தேய்வு இவற்றுக்கும் மருந்தாகவும் சோயா உதவுகிறது.
3. வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
4 . வெள்ளைப்பூண்டு, பெருங்காயம் இரண்டையும் நெய்யில் சிவக்க வறுத்து, சிறிது புளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து துவையலாக்கி வைத்துக்கொண்டு, உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல், வாயு பிரச்சினைகள் விலகும்.

றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Empty Re: உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Post by றிமா Fri 11 Feb 2011 - 18:20

பசியின்மை நீங்க:

1. துளசி விதைப்பொடி, திப்பிலிப் பொடி இவைகளை சம அளவு எடுத்து தேனில் குழைத்து உண்டுவர பசியின்மை நீங்கி நல்ல பசி உண்டாகும்.
2. பசியில்லாததால் சாப்பிடப் பிடிக்காமல் அவதிப்படுவோர், கிராம்பு, நிலவேம்பு, வேப்பம்பட்டை இவற்றுள் ஒன்றை தேவையான அளவு நீரில் போட்டு, நன்கு காய்ச்சி, கஷாயமாக்கி குடித்துவர நன்கு பசி எடுக்கும்.
3. நில வேம்பை கஷாயம் வைத்துக் குடிக்க நன்கு பசியெடுக்கும்.



வயிற்றுக்கடுப்பு நீங்க:-

1. வெந்தயத்தை அரைத்துத் தயிரில் கலந்து கொடுக்க வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
2. வயிற்றுக்கடுப்பு தோன்றினால் வடித்த கஞ்சியை சுடச் சுடச் சாப்பிட்டால் குணம் தெரியும் .



வயிற்றுப் பூச்சி வெளியேற:-

மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தித் தூள் செய்து தேனில் குழைத்துக் கொடுத்தால் பூச்சிகள் வெளியேறும்.

றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Empty Re: உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Post by றிமா Fri 11 Feb 2011 - 18:21

வயிற்றுப் போக்கு :

சுண்டைக்காய் அளவு ஜாதிக்காயை நெய்யில் வறுத்துப் பொடி செய்து தேனில் குழைத்து மூன்று வேளை சாப்பிட்டால் எப்படிப்பட்ட வயிற்றுப் போக்கும் நின்றுவிடும்.
தயிர், வெந்தயம், சர்க்கரை மூன்றையும் கலந்து அரைமணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு நிற்கும்.



அஜீரணம்

1. ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
2. வெந்நீர் குடிப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும். பசியும் எடுக்கும். ஆனால் வெந்நீரில் குளிக்க வேண்டாம். நரம்புக் கோளாறுகள் ஏற்படும்! தினமும் வெந்நீரில் குளிப்பதால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்றும் சொல்கின்றனர்!



வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.



நாடாப் புழு வெளியேற:-

கொஞ்சம் நீரில் சிறிதளவு மாதுளை மரவேரைத் தட்டிப்போட்டு சுண்டக்காய்ச்சி தினமும் 1/2 கப் உட்கொண்டு வர வயிற்றிலுள்ள நாடாப்புழுக்கள் வெளியேறும்.

றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Empty Re: உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Post by றிமா Fri 11 Feb 2011 - 18:22

நுரையீரல் நோய் குணமாக:-

நாயுருவிச் செடியின் விதைகளை இடித்துப் பொடி செய்து உட்கொண்டால் நுரையீரல்நோய்கள் குணமாகும்.



நீரிழிவு நோய் குணமாக:-

இதன் தீவிரத்தை குறைக்க வாழைத்தண்டை சமைத்துச் சாப்பிடுவது நல்லது.



சிறுநீர் அடைப்பு:

வெள்ளரிக்காய் விதையை அரைத்து அதனுடன் நீர் சேர்த்து வடிகட்டி, அதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால் `சிறுநீர் அடைப்பு' நீங்கும்!



றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Empty Re: உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Post by றிமா Fri 11 Feb 2011 - 18:28

காது, மூக்கு, தொண்டை

காது குத்தல் சரியாக:-

ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் மிளகளவு பெருங்காயத்தைப் பொரித்து காயத்தை நீக்கிவிட்டு இளஞ்சூட்டில் சில துளிகள் காதில் விட சரியாகும்.



காதில் சீழ்வடிதல் குணமாக:-

மாதுளம் பழச்சாற்றை லேசாகச் சூடுபடுத்தி சில துளிகள் காதில் விட குணம் தெரியும்.



காது குடைச்சல் குணமாக:-

குப்பைமேனி, கோழியவரை இலைகளைச்சாறு பிழிந்து சம அளவு எடுத்துக் கலந்து காதில் சில துளிகள் விட்டால் குணமாகும்.



மூக்குப்புண் ஆற:-

சுட்டுக் கரியாக்கிய மஞ்சளைப் பொடி செய்து வேப்பெண்ணெயில் குழைத்துத் தடவப்புண் ஆறும்.



மூக்கில் நீர் வடிதல்:-

வேப்பிலையையும், ஓமத்தையும் விழுதாக அரைத்து நெற்றி கழுத்து பிடரியில் பூசிக் கொண்டால் மூக்கில் நீர் வடிதல் நிற்கும்.



தொண்டைக் கட்டு சரியாக:-

உலர்ந்த மாவிலையைச் சுட்டு அந்தக் கரியை நீரில்போட்டுக் குடிக்க சரியாகும்.



வரட்டு இருமல்:

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.
றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Empty Re: உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Post by றிமா Fri 11 Feb 2011 - 18:29

தொடர் விக்கல்:

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.



தொண்டை கரகரப்பு:

1. சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
2. தொண்டை கரகரப்புடன் கூடிய வறட்டு இருமலுக்கு, ஒரு டம்ளர் பாலில், ஒரு ஸ்பூன் தேன், மஞ்சள்தூள், மிளகு பொடி ஆகியவற்றை கலந்து அருந்தினால் உடனே குணமாகும். 3. நிலவேம்பு கஷாயத்தில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்க கரப்பான் தீரும்.



தொண்டை எரிச்சல் சரியாக:

ஒரு தேக்கரண்டி வினீகரை ஒரு தம்ளர் நீரில் கலந்து கொள்ள வேண்டும். அந்நீரை தொண்டை வரை ஊற்றிக் கொப்பளித்துவிட்டு பிறகு குடித்தால் தொண்டை சரியாகும். அல்லது கொஞ்சம் உப்பு எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் வெதுவெதுப் பான நீரில் கலந்து தொண்டைவரை ஊற்றிக் கொப்பளிக்க வேண்டும். அல்லது பாதாம் பருப்பை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டாலும் தொண்டை எரிச்சல் சரியாகும்.


றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Empty Re: உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Post by றிமா Fri 11 Feb 2011 - 18:30

கண்
இமை வீக்கம் அடங்க:-

பசும் பாலைக் காய்ச்சி துணியில் நனைத்து ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறைவதுடன் வலியும் எரிச்சலும் அடங்கும்.



கண்பார்வை

பாதாம்பருப்பு சாப்பிட்டால் கண்பார்வை தெளிவாகும். ஆண்மை பெருகும்.



கண் மங்கல் அகல:-
பொன்னாங் கண்ணிக் கீரையை நெய்விட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் கண்கள் மீது வைத்துக் கட்டிப்படுக்க கண் மங்கல் அகலும்.



கண் அரிப்பு நிற்க:-

கடுக்காய்ப் பிஞ்சை சந்தனக் கல்லில் உரைத்துவரும் விழுதை இரவு படுக்கப்போகும் முன்பு மை போல் இட்டுக் கொண்டால் நின்று விடும்.



கண் எரிச்சல்:

நெல்லிக்காயை நன்கு காயவைத்து நைசாகப் பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் காலையிலும் இரவிலும் சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். கண் எரிச்சல் கண் புளிச்சை போன்றவை ஏற்படாது.


றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Empty Re: உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Post by றிமா Fri 11 Feb 2011 - 18:31

கண் இருட்டி மயக்கம்

வெயிலில் போய்விட்டு மிகவும் களைப்பாக வீட்டுக்கு வந்தவுடன் கண் இருட்டி மயக்கம் வருவதுபோல இருக்கும். உடனே அரை டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிய துண்டு வெல்லம் சாப்பிட்டால் எல்லாம் சரியாகும்.



கண்கள் பிரகாசமாக :

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.


றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்.. Empty Re: உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum