சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Khan11

கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

+6
jaleelge
ahmad78
rammalar
மதி
பானுஷபானா
Nisha
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Tue 8 Apr 2014 - 18:07

கேக், கேக்  அலங்கரிப்பு குறித்து படங்களுடன் இங்கே பகிர்கிறேன்.

கேக்  செய்யும் முறை நிரம்ப விதமாக இருக்கிறது பானு!

பிறந்த நாள் போன்ற விசேசங்களுக்கு ஐசிங்க்  கேக் செய்ய பட்டர் கேக் அல்லது சாக்லேட் கேக் தான் நல்லது.

ஐசிங்க கிரிம்  இனிப்பாக இருப்பதால்  பழங்கள் சேர்த்து செய்யும் கேக்  ஐசிங்கோடு சேர்ந்து சாப்பிட முடியாமல் திகட்டி விடும்.

நான் சிறிய அளவில் கேக் செய்ய சொல்லி தரேன்.  நீங்க  உங்க உங்கள் தேவைக்கு ஏற்ப  சேர்துக்கங்க.

ஒரு கிலோ  பொருட்கள் போட்டு செய்யும் கேக் தட்டு ஒன்றில் 60  துண்டங்கள் கட் செய்யலாம். சின்னதாக  வெட்டினால்  75 வரை  துண்டங்கள் வரும். ஆனால்  அதற்கு மேல்  சின்னதாக இயலாது.

எந்த வேலையும் போல் இதை செய்யவும் தேவையானவை.

ஆர்வம்
பொறுமை
விடாமுயற்சி
ரசிப்புதன்மை
அன்பு
என்னாலும் முடியும் எனும் தன்னம்பிக்கை.

 !

Last edited by Nisha on Tue 8 Apr 2014 - 18:55; edited 6 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Tue 8 Apr 2014 - 18:08

தேவையான பொருட்கள்.

கோதுமை மா-250 கிராம்,
பட்டர் 250கிராம்,
முட்டை 5 ,
சீனி 250கிராம்,
பேக்கிங்பவுடர், ஒன்றரை தே.கரண்டி,
வனிலா ஒன்றரை தே.கரண்டி,

செய்முறை.

1. பட்டரையும் சீனியையும் பீடடரால் நன்றாக அடிக்கவும்.

2.பட்டர் சீனி கலவையுடன் முட்டையை சேர்த்து அடிக்கவும்-(முட்டையை முதலில் வேறொரு பாத்திரத்தில் முட்டைக்கோது இல்லாதபடி உடைத்தெடுத்து கொள்ளவேண்டும்)

3.பட்டர்,சீனி,முட்டை கலவையில் விரலால் தொட்டுப்பார்த்தால் சீனி கரைந்திருக்க வேண்டும்.

4.சீனி கரைந்து கிரீம் போல் ஆனதும் கோதுமை மா, பேக்கிங்பவுடர், வனிலா சேர்த்து (பீட்டரால் மெதுவாக) கலந்து விடவும். ஒரு துளி அன்னாசி எசன்ஸ் சேர்த்து கொண்டால் கேக் வாசனையாக இருக்கும்.

5.பேக் பண்ணும் தட்டில் அதற்குரிய பட்டர் பேப்பர் போட்டு கேக் கலவையை ஊற்றவும்.

6.பின்னர் முன் சூடு செய்த ஒவனில் (180 டிகிரி சூட்டில்)40,45நிமிடங்கள் பேக் பண்ணவும்.(கேக் நன்றாக ஊதிவர ஒவனை அடிக்கடி திறக்க கூடாது)

7.40,45 நிமிடங்களின் பின் ஒவனை திறந்து சிறு குச்சியால் நடுவில் குத்தி பார்த்து குச்சியில் கேக் ஒட்டவில்லயென்றால் வெளியெ எடுத்து ஆற விடவும்.
சுவையான கேக் தயார்
.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Tue 8 Apr 2014 - 18:18

கேக் மெதுமையாக வர அளவுகள் சரியாக இருக்க வேண்டும்.  சீனி, மா , பட்டர் மூன்றும் ஒரே அளவிலும்  முட்டை  ஒரு கிலோவுக்கு 20 எனும் அளவிலும் நான் சேர்ப்பேன்.

உங்களிட்ம கேக் பிட் செய்யும் பீட்டர் இல்லாவிட்டால் மிக்சியில் முட்டையை  கோதில்லாம்ல் உடைத்து விட்டு விட்டு கூடவே சீனி பட்டர் சேர்த்து நன்றாக்  அடிபட்டதும்  சீனி கரைந்து கீரிமாகியதும் .. சீனி கரைந்ததா என  கிரிமில் கையால் தொட்டு பார்த்தால் தெரியும்...   பாத்திரத்தில்  எடுத்து மா, பேக்கிங் பவுடர்,  எசென்ஸ், வனிலா சேர்த்து  நன்றாக கலக்கி சேர்த்தாலே போதும். மாக்கலவை சேர்த்து  மிக்ஸியில் அடிக்க கூடாது. எல்லாம் கலந்த பின் மா இட்லி மாவு பதத்தை விட கொஞ்சம் இறுகி இருக்கணும்.

கேக் அடிக்கும் போது தண்ணீர் பட விட கூடாது.  பாத்திரங்களில் தண்ணீர் இல்லாது துடைத்து விட்டு பொருட்களை இடவும்.

சீனியும் பட்டரும் முட்டையும்  எவ்வளவு  மிக்ஸ் செய்யப்பட்டு கிரிமாகுதோ அத்தனைக்கு சாப்டா  கேக் இருக்கும்.

நீங்க அங்கேபேக்கரிகளில் ஷாப்ட் கேக் , றிபன் கேக் என வாங்கும் கேக்குகள் செய்முறை இதுவே.

றிபன் கேக்கெனில் இதே கலவையை இரண்டு மூன்று பகுதியாக்கி விட்டு  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பூட் கல்ரிங்க சேர்த்து விட்டு  ஒவ்வொரு வர்ணகலவையையும் ஒன்றின் மேலேக ஒன்றென ஊற்றி பரப்பி பேக் செய்தால்  கேக் வர்ண மயமாய்  இருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Tue 8 Apr 2014 - 18:43

கேக்கின்  மேல் அலங்கரிக்கும் கிறீம் செய்ய..

கேக் அலங்கரிப்பு ;

ஏற்கனவே செய்து ஆறவைக்கப்பட்ட கேக்கை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வட்டம், சதுரம்  என  மேல்பக்கம் சம மாகவும்  கேக் துகள்கள் இல்லாத வாறு  தட்டி, வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

ஐசிங்க் கிறீம் செய்ய தேவையானவை

ஐசிங் சீனி 750கிராம்
பட்டர் 250கிராம்
(விருப்பினால் அன்னாசி எசன்ஸ்வாசனைக்கு)
தேவையான Food கலரிங்

பட்டருடன் ஐசிங் சீனி,  சிறிது சிறிதாய் அளவாக  வெந்நீர் சேர்த்து நன்றாக பீட் பண்ணி கிரீம் போல் ஆனதும் Food கலரிங், எசன்ஸ் சேர்த்து கலந்து வரும் கலவையால் கேக்கை அலங்கரிக்கவும்.

  கையால் தொட்டால் கையிலும் ஒட்டாது, பத்திரத்திலும் ஒட்டகூடாது. சப்பாத்தி மாவு போல் இறுக்கமாயும் இருக்காது , இட்லி மா போல் தளதளன்னும்  இருகாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதம்.

ஐசிங் செய்ய வென்னீருக்கு பதில்  சூடாக்கிய பாலும் உபயோகிக்கலாம்!  பால்  சேர்த்தால் அன்றே சாப்பிட்டு விட வேண்டும்.  நீர் விட்டு செய்தால்  மூன்று நாட்கள் வரை ஐசிங்க் செய்த பின்னும் கெடாமல் இருக்கும் .  

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Tue 8 Apr 2014 - 18:57

ஆபிஸ் போய் விட்டு வீட்டுக்கு வந்து வீட்டு வேலை சமையல்னு முடித்த பின்னும் ரெம்ப நேரம் இருக்கும் !  நான்கு முறை நம்ம விட்டு வீசேசங்கள் வரும் போது செய்து பழகிட்டால் ஐந்தாவது  முறை பிசினஸாக்வும் செய்யலாம்.
 
பிறந்த நாள் விசேசங்களுக்கு குறைவே இல்லாதபடி தினம் ஒரு வர் பிறந்திட்டே இருக்க,, கொண்டாட்டம் குறையவா செய்யும்.
 
நான் ஹோட்டல்னு ஆரம்பிக்க முன்னால்  எல்லா வேலையும் முடிந்த பின்  ஆர்டருக்கு முதல் நாள்கேக்செய்து வைப்பேன்!  மறு நாள்  இரவு எல்லா வேலையும் முடித்து விட்டு பசங்க தூங்கிய பின்  ஒன்பது மணி போல் ஐசிங்க் ஆரம்பித்தால்  11 மணிக்கு முடித்து விடுவேன்! 

பாக்கட் மணியும் ஆச்சு. பொழுதும் வெட்டியாய் போகாது. அழகாக இருக்கு, சுவையாக இருக்கிறது எனும் போது  மனமும் நிறைவடையும். போனில் வெட்டிகதை. சீரியல், சினிமான்னு  வம்பு வழக்குக்கும் நேரம் வராதல்லவா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Tue 8 Apr 2014 - 19:06

சில கேக் வடிவங்கள்.

பார்பி கேக் செய்ய அழகான பார்பி வாங்கி இடுப்பு வரை கட் செய்து விட்டு  இடுப்புக்கு கீழே  குடை விரிப்பு சட்டை போல அலங்கரிக்கணும்.

கொஞ்சம் கலர் ரசனை  இருந்தால் அழகான பார்ட்டி சட்டை அணிந்த  பார்பிப்பெண் தயாராகிடுவா..

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   DSCF0073-2

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   12122011004
 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   12122011005

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   DSCF2205

இன்னும்  வெவ்வேறு வர்ணம் மாடல் என பார்பி கேக் செய்தேன்.  போட்டொ பக்கட்டில்  டவுன்லோட் செய்யாமல்  செல்போனில் இருக்கிறது.  முடியும் போது பார்ப்போம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Wed 9 Apr 2014 - 0:04

ஸ்பான்ஞ் கேக்

தேவையான பொருட்கள்.

கோதுமை மா-250 கிராம்,
பட்டர் 250கிராம்,
முட்டை 5 ,
சீனி 250கிராம்,
பேக்கிங்பவுடர், ஒன்றரை தே.கரண்டி,
வனிலா ஒன்றரை தே.கரண்டி,

ஓரஞ்ச்  ஏசென்ஸ்  

பொருட்களும் அளவும்  பட்டர் கேக் போலவே  தான் எனினும் செய்முறை மாறுவதால்   கேக்  தன்மை இன்னும் மிருதுவாகி  சுவை மாறுபட்டுக்காட்டும்.

கேக் செய்யவோ ஐசிங்க செய்யவோ  பட்டரை சூடாக்க கூடாது.  முன்கூட்டியே பிரிச்சிலிருந்து  வெளியே எடுத்து  ரூம் ரெம்பரேட்டரில்  வைத்தால்   இளகி விடும்.

1.முட்டையைஉடைத்து வெள்ளைக்கரு,மஞ்சட்கருவென  தனியாக பிரிக்கவும்.

2.முட்டை வெள்ளைக்கருவை  முட்டை அடிக்கும் பீட்டரல எல்லது கேக் பீட்டரல  நன்றாக அடிக்க வேண்டும்.  முட்டை வெண்கரு கிரிமாகி  இறுகி கட்டித்தயிர் போல வரணும். 

3.முட்டை மஞ்சட்கருவையும் தனியாக பீட் செய்து கொள்ளவும்.

4. இன்னொரு பாத்திரத்தில் பட்டர் , சீனியை போட்டு   நன்றாக் கிரீம் ஆகும் வரை பீட் செய்து கொள்ளவும். நன்றாக் அடிக்கணும்.

5.  முட்டை வெள்ளைக்கருவை  பட்டர் சீனியுடன் மெதுவாக சிறிது சிறிதாக  சேர்க்கவும் பீட் செய்ய வேண்டாம். கலக்கி மிக்ஸ் செய்தால்  போதும்.  கூடவே மஞ்சள் கருவும் சேர்க்கவும்.

6. மாவுடன், பேக்கிங்க் பவுடன் எசென்ஸ் சேர்த்து கலக்கி  சேர்க்கவும்.

7. 160 தொடக்கம் 180 பாகை சூட்டில்  20 தொடக்கம் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.  அவண் முன் கூட்டியே  சூடு செய்தாலும் எலெக்டிக் அவணுக்கும், காஸ் அவனுக்கும் சூடு மாறும் என்பதால்  கவனித்து கூட்டியோ குறைத்து பேக் செய்யலாம்.
 
8. கேக் வெந்து விட்டதா என அறிய நடுவில் தட்டிபார்த்தால்  கலகலவென நீர் தன்மையாய்   இருக்காது தம் செய்தது போல் இருக்கும்.
 
9. கேக் உள்ளே வைத்தால்  குறைந்தது  30 நிமிடம் திறந்து  பார்க்கக் கூடாது.  திறந்து  மூடினால் காற்று உட் புகுந்து  கேக் ஊதும் தன்மை  நின்று விடும்.

10. கோதுமை மா அதனதன் தரத்துகேறப அரிக்கவேண்டுமா இல்லையா என முடிவு செய்யவும்.அப்படி அரிக்கும் போது  பேக்கிங்க் பவுடன்  சேர்த்தும் அரித்தெடுக்கலாம்.  

நன்றாக ஆற் விட்டு கட் செய்யவும்.  

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by பானுஷபானா Wed 9 Apr 2014 - 11:11

ரொம்ப நன்றி நிஷா.

எனக்கு பிள்ளைகளூக்கு வீட்லயே ஸ்வீட் காரம் செய்து குடுக்க ரொம்ப பிடிக்கும். செய்தும் குடுத்துக் கொண்டிருக்கிறேன். நமக்கும் இதெல்லாம் செய்ய்த் தெரியும்னு பெருமையாவும் இருக்கும்

கேக் வகை தான் செய்ய ஆசை ஆனால் வரமாட்டேங்குது.

கேக் செய்யும் அவன் இல்லை. இருந்தாலும் குக்கரில் செய்தேன். மாவு பதம் சரியில்லைனு நினைக்கிறேன். கேக் டேஸ்ட் இருக்கு. ஆனா கட்டியாகிடுச்சு.

வீட்லயே பஜ்ஜி மாவு முறுக்கு மாவு எல்லாம் ரெடி செய்து வச்சிருக்கேன். டைம் இருக்கும்போது செய்து குடுத்த்ருவேன்.

பிள்ளைகள் சாப்பிட என்னால் முடிந்த வரை செய்து குடுக்கனும்னு ஆசை. இப்போது தான் சாப்பிட ஆசைப்படுவார்கள் செய்து குடுக்க முடியும் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் கையில் காசு புலங்கும் போது இதெல்லாம் சாப்பிடத் தோணாது.

பொறுமையா படிச்சு செய்து குடுக்கிறேன் நிஷா . கேக் பகிர்வுக்கு ரொம்ப நன்றி )( )( )( 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Wed 9 Apr 2014 - 11:26

ஹாய் பானு!

வீட்டில் அவன் இல்லாவிட்டால் அருகில் இருக்கும் பேக்கரி காரர்களிடம் கேளுங்கள். இப்படி வீட்டுதேவைக்கு கேக்  அடித்து கொ்டுத்தால்  பேக் பண்ணி தருவிங்களனனு.

கொஞ்சம் காசு  கேட்பார்கள், அவர்கள் பிரெட் கேக் வேகவைக்கும் நேரம்  கேட்டு கொண்டு கொடுத்தால் செய்து தருவார்கள்.இலங்கையில்  இருப்பவர்கள் இப்படித்தான் செய்வதை அறிந்திருக்கிறேன் பானு!

கேக் குக்கரில் வேக வைக்கும் முறை எனக்கு தெரியாதும்மா. 

அத்துடன் என் வீட்டிலும் இருவருக்கும் எப்போதும் ஏதாவது சாப்பிட இருந்து கொண்டே இருக்கனும். மகன் ஒரு நேரம் சொல்வான்.. நிரமப் சிற்றுண்டி செய்து வைக்காதிங்க .. நீங்க செய்வதால்  வீட்டில் இருக்குதேன்னு நிரமப் சாப்பிட்டு உடம்பு வெயிட் போடுது என்பான்.

இதையே மகள்  வீட்டில் சாப்பிட ஒன்றுமே இல்லையா..ஏதாவது வாங்கி வைக்க வேண்டியதுதானேம்பா.

அப்படி இருந்தால்  அவ பிரெண்சையெல்லாம் கூட்டி வந்து ஒரே நாளில்  சாப்பிட்டு முடிப்பா.மகளுக்கு எங்க பக்க காரம் சோறு  ப்டிக்காதுன்னால் அவள் பிரென்ஸ் மாருக்கு ஆட்டுகறிகுழம்பும் சோறும்  காரமாய் சாப்பிட பிடிக்கும். 

 மகனுக்கோ எந்த நேரம்னாலும் அம்மா சமைத்து அமமாவே தட்டில் போட்டு கொடுக்கும் சாப்பாடு வேண்டும்.இரவு 12 மணிக்கு வந்தாலும் தூங்கிட்டிருக்கும் என்னை தட்டி எழுப்பி அம்மா சாப்பாடு என்பான்.

 இன்னும் எத்தனை வருடம் இவர்கள்  நம்மகூட  இருப்பார்கள் என  தோன்றும்.  படிப்பு முடிந்ததும் வேலை வாழ்க்கைன்னு எங்கே போய் வாழ போகிரார்களோன்னு  இருக்கும்.

அவங்கவங்க நல்லா படித்து தங்கள் வாழ்க்கையை உயர்த்தி நல்லா இருநதால்  போதும்மா.  நம்மையெல்லாம் பார்க்கணும் நமக்கு செய்யணும்னும் எதிர்பார்க்க வேண்டாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by பானுஷபானா Wed 9 Apr 2014 - 12:25

என்பிள்ளைகளுக்கும் சாப்பிட ஏதாவது வீட்ல இருந்துக்கிட்டே இருக்கனும்.

பொண்ணு தான் நிறைய சாப்பிட்டா குண்டாயிடுவேனாம்மானு கேட்டுக்கிட்டே இருப்பா.

பிள்ளைகள் நம்மைக் கவனித்துக் கொள்வார்கள் என்றெல்லாம் என் எதிர்பார்ப்பு கிடையாது. அவர்கள் எதிர்காலம் நல்லா இருந்தா போதும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by மதி Wed 9 Apr 2014 - 12:31

மனித வாழ்வானது கற்றுக்கொள்வதின் அடிப்படையிலேயே வளம் பெறுகிறது. கற்ற நல்லவற்றை செயல்படுத்தியதன் மூலம் வீட்டிலும், நாட்டிலும் சாதனைகள் புரிந்தவர்கள்தான், மற்றவர்களின் வழிகாட்டிகளாக விளங்கி வருகின்றனர்.

தாங்கள் கற்றதை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பதில் உங்களின் நல்உள்ளம் தெரிகிறது நன்றி தொடருங்கள். )(
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Wed 9 Apr 2014 - 17:00

நன்றி பானு!

நன்றி மது!

எனக்கு தெரிந்தது  மற்றவர்களுக்கு சொல்லி  தருவதிலும் தெரியாததை தெரியாதுன்னு சொல்லி கற்றுகொள்வதிலும்  தயக்கம் ஏதும் இல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by rammalar Wed 9 Apr 2014 - 17:16

பயனுள்ள பகிர்வு..
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by ahmad78 Fri 11 Apr 2014 - 9:55

கலக்குறீங்க நிஸா

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Fri 11 Apr 2014 - 10:23

ahmad78 wrote:கலக்குறீங்க நிஸா

டீ காப்பி அல்லது வயிற்றையா .. எதை கலக்குறேனாம் சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by ahmad78 Fri 11 Apr 2014 - 10:28

எப்படி காலைல இப்படிலாம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Fri 11 Apr 2014 - 10:49

ahmad78 wrote:எப்படி காலைல இப்படிலாம்.

காலை, மாலை வேளை  மட்டுமல்ல எல்லா நேரமும் நான்  இப்படித்தான் சார்! இரண்டு மூன்று நளா  பார்ட்டி ஆர்டர் டென்சனில் பி.பி எகிறி தலை சுத்திட்டே இருக்கு.  அதான்  கொஞ்சம் கலகலப்பாகலாம்னு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by ahmad78 Fri 11 Apr 2014 - 10:55

தலை சுத்துதா?  அப்ப ஒரே நேரத்தில எல்லா பக்கமும் பார்க்கலாம்.  ^_

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Fri 11 Apr 2014 - 11:09

ahmad78 wrote:தலை சுத்துதா?  அப்ப ஒரே நேரத்தில எல்லா பக்கமும் பார்க்கலாம்.  ^_

ஆமாமா தலை சுத்தோ சுத்துன்னு சுத்தி அது மட்டும்தனியே  உங்க ஊருக்கும் வந்து  உங்களையும் சுகம் கேட்டுதாம் ! (_ 

முதுகு தெரியுதான்னு  என் வீட்டுக்காரர் சீரியஸ் புரியாமல் கேட்டு என்கிட்ட வாங்கி கட்டிக்கும் விடயம் இது . அவர் கூட என் பையனும் அபப்ப சேர்ந்துப்பான்.  நான் எங்கே என்னவார்த்தையில் தப்பு செய்வேன்னு தேடிட்டே இருப்பாங்கன்னா பாருங்க..

என்னை காலி செய்ய ஒரு விடய்ம கிடைச்சால் போதும்.  )*  )*  )*  )*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by பானுஷபானா Fri 11 Apr 2014 - 12:13

Nisha wrote:
ahmad78 wrote:தலை சுத்துதா?  அப்ப ஒரே நேரத்தில எல்லா பக்கமும் பார்க்கலாம்.  ^_

ஆமாமா தலை சுத்தோ சுத்துன்னு சுத்தி அது மட்டும்தனியே  உங்க ஊருக்கும் வந்து  உங்களையும் சுகம் கேட்டுதாம் ! (_ 

முதுகு தெரியுதான்னு  என் வீட்டுக்காரர் சீரியஸ் புரியாமல் கேட்டு என்கிட்ட வாங்கி கட்டிக்கும் விடயம் இது . அவர் கூட என் பையனும் அபப்ப சேர்ந்துப்பான்.  நான் எங்கே என்னவார்த்தையில் தப்பு செய்வேன்னு தேடிட்டே இருப்பாங்கன்னா பாருங்க..

என்னை காலி செய்ய ஒரு விடய்ம கிடைச்சால் போதும்.  )*  )*  )*  )*

ஃபீல் பண்ணாதிங்க முஹைதின ஒரு கைப் பார்க்கலாம் (_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Sun 13 Apr 2014 - 13:13

அது சரி பானு!

என்னைக்  கலாய்த்து விட்டு ஆளை இந்த பக்கமே காணோம்.
 நான் அடுத்த கேக் பதிவோட வரேன்! நீங்க அவரை ஒரு கை, ரெண்டு கை பாருங்க.. கேக் செய்ய கை வேண்டும் எனக்கு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Fri 13 Jun 2014 - 2:27

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   DSCF2128

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Fri 13 Jun 2014 - 2:28

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   DSCF2125

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Fri 13 Jun 2014 - 2:29

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Scannen011001

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Fri 13 Jun 2014 - 2:30

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   NIL_9560

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum