சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

பாலியல் கொடுமைக்கு பலியாகும் சிறுமிகள் - தமிழகத்தில் தினமும் ஒரு குழந்தை பாதிப்பு Khan11

பாலியல் கொடுமைக்கு பலியாகும் சிறுமிகள் - தமிழகத்தில் தினமும் ஒரு குழந்தை பாதிப்பு

Go down

பாலியல் கொடுமைக்கு பலியாகும் சிறுமிகள் - தமிழகத்தில் தினமும் ஒரு குழந்தை பாதிப்பு Empty பாலியல் கொடுமைக்கு பலியாகும் சிறுமிகள் - தமிழகத்தில் தினமும் ஒரு குழந்தை பாதிப்பு

Post by ahmad78 Wed 3 Sep 2014 - 10:15

பாலியல் கொடுமைக்கு பலியாகும் சிறுமிகள் - தமிழகத்தில் தினமும் ஒரு குழந்தை பாதிப்பு Tamil_News_479667305947
வேலூர்: பெண்களை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்த காலம் மாறி இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஆனாலும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக விபரம் தெரியாத 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகின்றனர். சிறுவயதில் ஏற்படும் பாதிப்புகளால் அவர்களின் வாழ்கை கேள்விக்குறியாகி விடுகிறது.

வேலூரில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 141 சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளான வழக்குகள் பதிவாகியுள்ளது பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதில் 70 பேர் 8 வயதுக்குட்பட்டவர்கள். தமிழகத்தில் தினமும் 1 பெண் குழந்தை பாலியல் ரீதியாக பாதிப்படைவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் சராசரியாக மாதத்திற்கு 4 சிறுமிகள் பாலியல் ரீதியாக பாதிப்படைகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த பாலியல் வன்முறையால் வேலூர் மாவட்டத்தில் 4 சிறுமிகள் பலியானதாக தெரிய வந்துள்ளது.

இவைகள் வெளிப்படையாக வந்த தகவல்கள்தான். பெரும்பாலான சம்பவங்கள் பெண் குழந்தைகளின் நலன் கருதி அவர்களது பெற்றோரால் மறைக்கப்படும் சூழ்நிலை நிலவுகிறது. இது போன்று வேலூரில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதாக சமூக நலத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேபோல் இதுதொடர்பான புகார்கள் வரும்போது, போலீசாரும் தங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு வழக்குபதிவு செய்வதில் அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக புகார் கொடுக்க வருபவர்களிடம் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் போன்ற பல்வேறு காரணங்களை கூறி அச்சுறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், சமூகத்துக்கே இழுக்கை தேடித்தரும் இதுபோன்ற செயல்களை மேலும் பெருகாமல் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக புகார் கொடுக்கவும், அந்த புகாரை பெற்று குற்றவாளியை சட்டத்தின் முன்பு நிறுத்தவும் இரண்டு தரப்புக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, பேரணாம்பட்டு, நாட்றம்பள்ளி, குடியாத்தம், திமிரி போன்ற பகுதிகள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை நடைபெறும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 2 வயது குழந்தைகள் கூட இத்தகைய கொடூரத்திற்கு ஆளாகியிருப்பது சமூக ஆர்வலர்களை வேதனையடைய செய்துள்ளது.

சமீப காலமாக திருப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி 18 வயதுக்கு உட்பட்ட பெண்களை அழைத்து செல்லும் ஒரு கும்பல் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் திருப்பூரில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட 90 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் வேலூரை சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியூருக்கு இடைத்தரகர்களை நம்பி பெண்கள், சிறுமிகளை வேலைக்கு அனுப்புவது ஆபத்தானது என தெரிந்தும் குடும்ப ஏழ்மையின் காரணமாக சிலர் தங்கள் பிள்ளைகளை வெளியூருக்கு வேலைக்கு அனுப்புகின்றனர்.

கடந்த 2007ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 53 சதவீதம் பேர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதன் எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாலியல் கொடுமைக்கு பலியாகும் சிறுமிகள் - தமிழகத்தில் தினமும் ஒரு குழந்தை பாதிப்பு Empty Re: பாலியல் கொடுமைக்கு பலியாகும் சிறுமிகள் - தமிழகத்தில் தினமும் ஒரு குழந்தை பாதிப்பு

Post by ahmad78 Wed 3 Sep 2014 - 10:16

இதுகுறித்து சமூக பாதுகாப்பு அலுவலர் சரவணன் கூறியதாவது:

குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டிலிருந்து வெளியேறும் குழந்தைகள் ஒதுக்கப்படுதல், கடத்தல், துன்புறுத்துதல் போன்றவற்றால் பாதிக்கப்படுவதோடு, மனரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். எனவே குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

இதுவரை சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் வீட்டின் அருகில் இருப்பவர்கள் மற்றும் உறவினர்களால் மட்டுமே நடந்துள்ளன.

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கவனமுடன் இருப்பதுடன், அவர்கள் மீது தங்கள் அக்கறையையும், கண்காணிப்பையும் கூடுதலாக செலுத்த வேண்டும்.

கொலைக்கு ஈடான குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களின் மனநிலை மாறுபட்டதாக உள்ளது. இதற்கு அவர்களது பெற்றோர், அவர்களின் குடும்ப சூழல் ஆகியவற்றையே காரணமாக கூறலாம்.

இது ஒருபுறம் என்றால் 14 வயது தொடங்கி 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் வாழ்வியல் சூழ்நிலைகளும் அவர்களை சுலபமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகின்றன.

காதலை காரணம் கூறி சிறுமியின் அனுமதியோடு தவறு செய்தாலும் 18 வயது நிரம்பாத வரை பலாத்காரம் செய்த குற்றமாகவே கருதப்படும். அந்த குற்றவாளிகளுக்கும் சட்டத்தில் தண்டனை வழங்க வழிவகை உள்ளது.

எது எப்படி இருந்தாலும் சமூகத்தின் மிகப்பெரிய கேடாக வளர்ந்து நிற்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறை மட்டும் இன்றி, அவர்களது பெற்றோர் மற்றும் சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களால் மட்டுமே முடியும்.

சமுதாய மாற்றமே சீர்கேடுகளை தடுக்கும்

நமது நாட்டின் கலாச்சாரம் தனித்துவம் மிக்கது. கூட்டு குடும்ப முறையும், உறவுகளுக்குள் உள்ள பந்தபாசமும் அதன் அடித்தளம். ஒருவனுக்கு ஒருத்தி என்பதும், இதை செய்தால் பாவம், அந்த பாவத்துக்கான தண்டனை நிச்சயம் என்ற கருத்தை வலியுறுத்தும் கதைகளும், புராணங்களும், பழக்க வழக்கங்களும் நம்மை காலங்காலமாக வழிநடத்தின. இப்போதைய உலகளாவிய சூழலும், நவீனமும் நம்மை நமது பாதையை விட்டு நீண்ட தூரம் இழுத்து சென்றதே இன்றைய சமூக சீர்கேடுகளுக்கு காரணம். ஆகவே, நமது குழந்தைகளுக்கு நமது வரலாறு, கலாச்சாரம், புராணங்கள், இதிகாசங்களை நேரம் கிடைக்கும்போது எடுத்து சொல்வதில் நாம் அக்கறை காட்ட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பாதிப்படையும் சிறுமிகளின் மனநிலை குறித்து மனநல வல்லுனர்கள் கூறியதாவது:

பாலியல் ரீதியாக பாதிப்படையும் சிறுமிகள், உடல் ரீதியாக பாதிப்படைவதோடு மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்படும் குழந்தைகளை அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் கடுமையான சொற்களால் பேசுகின்றனர். மனதை பாதிக்கும் கடுமையான சொற்களால் பேசுவதும் பாலியல் குற்றமாகவே கருதப்படுகிறது.

பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சிறுமிகள் வாழ்வில் விரக்தியடைகின்றனர். வாழ பிடிக்காமல் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் தோன்றுகிறது. தொடர்ந்து அடிக்கடி பாதிக்கப்பட்டதை நினைவுபடுத்தாமல் வேறொரு செயல்களில் கவனத்தை கொண்டு செல்ல பெற்றோர் முயற்சி செய்ய வேண்டும். டாக்டர்களின் ஆலோசனைகள் மிகவும் முக்கியமானது. முறையான ஆலோசனைகள் மூலம் மனரீதியான பாதிப்பில் இருந்து விடுபட முடியும். சிறிது நாட்களில் மீண்டும் சாதாரண வாழ்க்கை வாழ மனப்பக்குவம் ஏற்படும் என்கின்றனர். 
 
 
தினகரன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics
» பசி, பட்டினியில் தவிக்கும் சோமாலியாவில் தினமும் 100 பேர் பலியாகும் பரிதாபம்
» இலங்கையில் 40 ஆயிரம் குழந்தை பாலியல் தொழிலாளர்கள்!!!!!
» பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு!!
» தினமும் 2 கப் டீ குடித்தால் குழந்தை பெறும் வாய்ப்பு அதிகம்
» தமிழகத்தில் குறைந்து வரும் பெண் குழந்தை எண்ணிக்கை : 1000 ஆண்களுக்கு, 900 பெண்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum