சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உப்புமா தர்றேன், சாப்பிடுறியா...
by rammalar Yesterday at 16:17

» கண்ணா லட்டு தின்ன ஆசையா?
by rammalar Yesterday at 16:12

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by rammalar Yesterday at 9:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 13 Jul 2024 - 19:17

» சார்லஸ் டார்வினின் பொன்மொழிகள்
by rammalar Sat 13 Jul 2024 - 16:02

» ஆடி செவ்வாய் தேடிக் குளி!
by rammalar Sat 13 Jul 2024 - 15:39

» புதியதோர் பாதை - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:38

» இயற்கையே வாழ்வு! - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:37

» உண்மையை உணருங்கள் - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:35

» அவள் வரும்முன் ஓடி விடுங்கள்! - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:34

» இசை - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:33

» ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:32

» அன்பை பகிர்வோம் - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:31

» கண்களுக்கு விருந்து - ஹைகூ
by rammalar Sat 13 Jul 2024 - 15:30

» மலரின் மலரே - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:29

» புதிய லுக்கில் சண்டிக்குதிரை!
by rammalar Sat 13 Jul 2024 - 14:17

» இன்றைக்குப் போதும் இது! -
by rammalar Sat 13 Jul 2024 - 10:48

» இன்றைக்குப் போதும் இது! - வெண்பா போட்டி
by rammalar Sat 13 Jul 2024 - 10:47

» காமராஜர் வழி நடப்போம்!
by rammalar Sat 13 Jul 2024 - 10:29

» விருமாண்டி - உன்னை விட இந்த உலகத்தில்
by rammalar Sat 13 Jul 2024 - 10:14

» மழை நின்ற பின்பும் தூறல் போல ...
by rammalar Sat 13 Jul 2024 - 10:05

» பல்சுவை - பகுதி 11
by rammalar Thu 11 Jul 2024 - 16:07

» பல்சுவை
by rammalar Thu 11 Jul 2024 - 12:53

» கோயில் சிற்பங்களில் அந்தரங்கம்...
by rammalar Thu 11 Jul 2024 - 9:56

» ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டுமா?
by rammalar Thu 11 Jul 2024 - 9:54

» புத்தகங்கள் - கவிதை
by rammalar Thu 11 Jul 2024 - 6:14

» மனங்கவர்ந்த கவிதைகள்
by rammalar Thu 11 Jul 2024 - 5:11

» ஓடிடி தளத்தில் வெளியாகும் நடிகை த்ரிஷாவின் முதல் வெப் சீரிஸ்
by rammalar Thu 11 Jul 2024 - 4:53

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by rammalar Wed 10 Jul 2024 - 10:57

» சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!!
by rammalar Mon 8 Jul 2024 - 4:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Sun 7 Jul 2024 - 19:31

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 7 Jul 2024 - 9:26

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்) Khan11

மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்)

Go down

மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்) Empty மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்)

Post by ahmad78 Thu 29 Jan 2015 - 14:14

மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்) Ht3230
‘மஞ்சள் பூசணி’ என்று அழைக்கப்படுகிற பரங்கிக்காயின் அருமை  பெருமைகளை அள்ளி வழங்குகிறார் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)

ஆற்றல்    -    26 கிலோ கலோரி
புரதம்     -    1 கிராம்
கொழுப்பு     -    0.1 கிராம்
கொலஸ்ட்ரால்    -0 கிராம்


மலையாளிகள் சமூகத்தில் ‘மஞ்சள் பூசணிக்காய் எரிசேரி’ என்பது மிகவும் பிரபலமான ஓர் உணவு. வெளிர் ஆரஞ்சு நிறமுள்ள இந்த பதார்த்தம்  பண்டிகை நாட்களின் ஸ்பெஷல் தயாரிப்பு. இது மிகவும் சுவையாக இருக்கும். பிராமண வீடுகளில் தயாரிக்கப்படும் பரங்கிக்காய் சாம்பார் மிகவும்  சுவை நிரம்பியது. இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது. இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு  வைட்டமின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும். 

தோற்றம்

• பரங்கிக்காயின் பூர்வீகம் வட அமெரிக்கா. பரங்கி என்பது ஒரு தாவரத்தின் பெயர். சமையலுக்கு மட்டுமல்ல... விதையாகவும் எண்ணெயாகவும் கூட  இது பயன்படுகிறது.
 
குணங்கள் 

• பரங்கி பரவலாக விளையக்கூடிய ஒரு காய். இது அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபட்டது. மெகா சைஸ் பரங்கிக்காய் 4-6 கிலோ எடை  கூட இருக்கும். இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு இப்படியொரு நிறத்தைக் கொடுப்பது, அதன் தோல் மற்றும்  உள்ளே உள்ள சதைப் பகுதி. இதன் தோல் பகுதி அழுத்தமாகவும் எடையற்றதாகவும் இருக்கும்.

• ஆழமான இதன் உள் பகுதியில், சின்ன சின்ன வெள்ளை நிறமுடைய விதைகள் ஒன்றோடு ஒன்று வலைபோலப் பின்னிப் பிணைந்திருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்) Empty Re: மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்)

Post by ahmad78 Thu 29 Jan 2015 - 14:15

பயன்கள் 

• மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை.  இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின்  ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம்.

• வைட்டமின் ஏவை அபரிமிதமாகக் கொண்ட இது, உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. சரும  ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதிகளையும் (Mucous Membrances) பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.

• இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது.

• Zeaxanthin என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது. 

• பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் (Carotenoids) அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

• ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம்.

• தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய்.

• பரங்கி விதைகளில் நார்ச்சத்தும், ஒற்றை - நிரம்பாத கொழுப்பு அமிலமும் (Monounsaturated fatty acid) உள்ளன. இது இதய ஆரோக்கியத்துக்கு  உதவுகிறது. இதில் ட்ரிப்டோஃபன் எனப்படுகிற அமினோ அமிலம் உள்ளது. 1 டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது  முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது.

• பரங்கியில் நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம்  மற்றும் மக்னீசியமும் உள்ளது.

• பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப்  போராடவும் செய்கிறது. பரங்கியில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது.

• பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவையும் சரி செய்யப்படுகிறது.

எப்படித் தேர்ந்தெடுப்பது? பத்திரப்படுத்துவது?

• பரங்கி வருடம் முழுவதும் எளிதாக கிடைக்கக் கூடியது. அது வெட்டுப்பட்டுள்ளதா, நிறம் மாறுபட்டுள்ளதா, ஏதேனும் கோடுகள் உள்ளதா என்று  பார்த்து வாங்க வேண்டும்.

• வெட்டி வைக்கப்பட்ட பரங்கியை குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் சில நாட்கள் வரை பாதுகாக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்) Empty Re: மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்)

Post by ahmad78 Thu 29 Jan 2015 - 14:16

மஞ்சள் பூசணி சூப்

என்னென்ன தேவை?

பரங்கிக்காய் - 1 கப் (சின்னச் சின்னதாக சதுரங்களாக வெட்டியது), சின்னதாக நறுக்கிய வெங்காயம் - 2,
வெங்காயத் தாள் - 1 கட்டு,
சிறியதாக  நறுக்கிய கேரட் - 1,
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
கருப்பு மிளகு - ருசிக்கு, உப்பு,
தண்ணீர் - தேவைக்கு. 

எப்படிச் செய்வது?

கடாயை  சூடேற்றி அதில் வெண்ணெயையும், நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிற மாகும் வரை வதக்கவும். அதில் பரங்கிக்காய், கேரட்,  சிறிது வெங்காயத் தாள் சேர்த்து வதக்கவும். இத்துடன் உப்பு, தண்ணீரும் சேர்த்து சமைக்கவும்.பிறகு
 
இதனை ஆறவைத்து நன்கு மசிக்கவும்.
 
சாப்பிடும்  முன் சூடுபடுத்தவும். மிளகு மற்றும் வெங்காயத் தாள் சேர்த்து அலங்கரிக்கவும். 


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்) Empty Re: மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்)

Post by ahmad78 Thu 29 Jan 2015 - 14:16

பரங்கிக்காய் சாலட்

என்னென்ன தேவை?

பரங்கிக்காய் - 250 கிராம்,
கெட்டித் தயிர் - 1 கப்,
சீரகம்- 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி இலை - 1/4 டீஸ்பூன்,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
 உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது ?

பரங்கிக்காயை சீவி வேக விடவும். கடாயை சூடாக்கி எண்ணெய் விடாமல் மிளகு, சீரகம் சேர்த்து 2 நிமிடங்கள் வறுத்துத் தூளாக்கவும். இவை  எல்லாவற்றையும் கலந்து குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பரிமாறவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்) Empty Re: மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்)

Post by ahmad78 Thu 29 Jan 2015 - 14:17

பரங்கிக்காய் பச்சடி

என்னென்ன தேவை?

பரங்கிக்காய் - 1 பெரிய பத்தை,
புளி - எலுமிச்சை அளவு,
பொடித்த வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன்,
சாம்பார் தூள் - 1 டீஸ் பூன்,
மஞ்சள் தூள் - 1/4  டீஸ்பூன். 

தாளிக்க... எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 துளி,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு. 

எப்படிச் செய்வது?

பரங்கிக்காயின் தோலையும் விதை களையும் நீக்கி விட்டு சின்னச் சின்னதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பரங்கி துண்டுகளை போட்டு  அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு இத்துடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பரங்கிக்காய் நன்கு வேகும் வரை  கொதிக்க விடவும். புளியை கரைத்துக் கொள்ளவும். இதனை கொதிக்கும் பரங்கிக்காயில் சேர்த்து இத்துடன் வெல்லத்தை சேர்த்து நன்கு  கொதித்தவுடன் ஆற வைத்து  மசிக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும்.
 
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3240


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்) Empty Re: மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum