சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள்  - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள் Khan11

எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள் - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள்

3 posters

Go down

எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள்  - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள் Empty எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள் - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:47

எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள்  - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள் Worm4



ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.அதைக் கொத்தித் தின்ன விரும்பியது.அதை பார்த்த புழு அசையாமல் இருந்தது...புழுவின் இந்த செய்கை புறாவிற்கு வியப்பைத் தந்தது...'நான் உன்னை தின்ன வருவது தெரிந்ததும்..அசையாமல்..என்னிடம் பயம் இல்லாமல் இருக்கிறாயே..எப்படி' என்றது புறா.
'என் மனதிற்குள் ...நீ என்னை துன்புறுத்தமாட்டாய் என்றே தோன்றுகிறது'என்றது புழு.
'என் மனதில் உள்ளது உனக்கு எப்படித் தெரியும்'என புறாக் கேட்டது.
'உன்னைப் பார்த்ததும்..உன்னை என் தோழனாக நினைத்து விட்டேன்..நண்பனுக்கு ஆபத்து வந்தால் காப்பவன் நண்பன் அல்லவா..உயிர் காப்பான் தோழன் ஆயிற்றே..சரி..உனக்கு ஒன்று சொல்கிறேன்..வேடன் ஒருவன் வலைவீசி உன்னைப் பிடித்தால் உனக்கு வருத்தம் ஏற்படாதா ...? அதே போன்று தானே..நீ என்னைத் தின்றால் நானும் வருத்த மடைவேன்.
அது போலவே..அந்த வேடன் உன்னை விடுவித்தால்..நீ எவ்வளவு சந்தோஷம் அடைவாய்...நீயும் என்னை விட்டு விட்டால் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்..அதுதானே நட்பின் இலக்கணம் என்றது.
புறா...புழுவின் பேச்சுத் திறமையை பாராட்டி விட்டு புழுவை விட்டுச் சென்றது.
நல்ல குணம் கொண்ட புறா போன்றவர்கள் ஒருவருக்குக் கெடுதல் செய்யும்போது ..எடுத்துச் சொன்னால் தன்னைத் திருத்திக்கொள்வார்கள்.
உலகில் எல்லோரும் நல்லவர்களே!.
நன்றி நில்கவனிசெல் இணையம்


Last edited by சுறா on Sun 1 Feb 2015 - 20:11; edited 1 time in total


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள்  - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள் Empty Re: எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள் - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:56

எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள்  - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள் Two+bous+2


கண்ணனும் ...முருகனும் நல்ல நண்பர்கள்.ஒரு நாள் கடற்கரைக்குச் சென்ற இவர்கள்..மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..அப்போது நடைபெற்ற விவாதத்தில் முருகனின் பேச்சு கண்ணனுக்கு கோபத்தை உண்டாக்க..அவனது கன்னத்தில் பளாரென அறைந்தான் கண்ணன்.
அடியை வாங்கிக்கொண்ட முருகன்..சற்று நேரம் திகைத்துவிட்டான்.பின் கடற்கரை மணலில் 'கண்ணன் என்னை அடித்தான்' என எழுதினான்.

பின் இருவரும் மௌனமாக வீடு திரும்பினர்..அப்போது வேகமாக வந்த கார் ஒன்று முருகனை இடிக்குமாறு வர..உடனே கண்ணன்...முருகனை இழுத்து..நடக்க இருந்த விபத்தை தவிர்த்தான்.

நன்றியுடன் முருகன்...பக்கத்தில் இருந்த கல் ஒன்றை எடுத்து..பெரிய பாறாங்கல் ஒன்றில் 'இன்று கண்ணன் என் உயிரைக் காப்பாற்றினான்' என செதுக்கினான்.

இதைக் கண்ட கண்ணன்..'நான் உன்னை அடித்ததை மண்ணில் எழுதினாய்..காப்பாற்றியதை கல்லில் எழுதினாயே..ஏன்'என்றான்.

அதற்கு முருகன் ..'ஒருவர் செய்த தீங்கை மணலில் எழுதினால் ...அதை அடுத்த நிமிடம் காற்று கலைத்துவிடும்...அதே வேளையில் செய்த நன்மையை கல்லில் எழுத ..அது அழியாமல் என்றும் நிற்கும்'என்றான்.

ஒருவர் செய்த தீமையை உடனே மறந்து விடவேண்டும்.அதே வேளையில் அவர்கள் செய்த நன்மையை என்றென்றும் மறக்கக்கூடாது என்பதையே இச் செயல் நமக்கு தெரிவிக்கிறது.

நன்றி நில்கவனிசெல் இணையம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள்  - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள் Empty Re: எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள் - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள்

Post by Nisha Fri 30 Jan 2015 - 18:38

உன்னைப் பார்த்ததும்..உன்னை என் தோழனாக நினைத்து விட்டேன்..நண்பனுக்கு ஆபத்து வந்தால் காப்பவன் நண்பன் அல்லவா..உயிர் காப்பான் தோழன் ஆயிற்றே..சரி..உனக்கு ஒன்று சொல்கிறேன்..வேடன் ஒருவன் வலைவீசி உன்னைப் பிடித்தால் உனக்கு வருத்தம் ஏற்படாதா ...? அதே போன்று தானே..நீ என்னைத் தின்றால் நானும் வருத்த மடைவேன்.

நல்ல கேள்வி!  படிப்பினை தரும் கதை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள்  - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள் Empty Re: எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள் - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள்

Post by Nisha Fri 30 Jan 2015 - 18:39

அதற்கு முருகன் ..'ஒருவர் செய்த தீங்கை மணலில் எழுதினால் ...அதை அடுத்த நிமிடம் காற்று கலைத்துவிடும்...அதே வேளையில் செய்த நன்மையை கல்லில் எழுத ..அது அழியாமல் என்றும் நிற்கும்'என்றான்.

மகிழ்ச்சி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள்  - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள் Empty Re: எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள் - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள்

Post by சே.குமார் Sat 31 Jan 2015 - 9:40

படித்ததில் பிடித்த குட்டிக் கதைகள் இரண்டும் அருமை சுறா அண்ணா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள்  - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள் Empty Re: எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள் - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள்

Post by சுறா Sun 1 Feb 2015 - 20:09

சே.குமார் wrote:படித்ததில் பிடித்த குட்டிக் கதைகள் இரண்டும் அருமை சுறா அண்ணா...

நன்றி தம்பி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள்  - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள் Empty Re: எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள் - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள்

Post by சுறா Sun 1 Feb 2015 - 20:10

செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள்

எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள்  - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள் Stone+cutter

பரந்தாமன் கல் உடைப்பவன்.கல் உடைப்பதைவிட நல்ல வேலை கிடைக்கக் கடவுளை வேண்டினான்.

ஒரு நாள் அவன் முன்னால் கடவுள் தோன்றி 'உனக்கு என்ன வேண்டும்' என்றார்'.

'சூரியன் உலகம் முழுக்கத் தெரியும்..நானும் அவ்வாறு தெரிய ஆசைப்படுகிறேன் எனவே'சூரியனாக வேண்டும் ' என்றான்.

கடவுள் சம்மதம் தெரிவிப்பதற்குள் சூரியனை மேகம் மறைத்தது . உடனே 'மேகம் ஆக வேண்டும்' என்றான்.

மேகத்தை மழை மேகங்கள் மறைக்க ..தான்' மழை மேகமாக' ஆக வேண்டும் என்றான்.

மேகம் மழையாகப் பெய்தபின் 'மழையாக' வேண்டும் என்றான்.

மழைநீர் நதியாக ஓடியதைப் பார்த்து 'நதியாக மாறவேண்டும்' என்று ஆசைப்பட்டான்.

ஓடி வந்த நதியை ஒரு பெரிய பாறாங்கல் தடுத்ததைப் பார்த்து 'கல்லாக வேண்டும்'என்றான்.

உடனே கடவுள் அந்தக் கல்லையே உடைக்கும் நீ சிறந்தவன் தானே..என்றார்.சற்று சிந்தித்த பரந்தாமன் ஆமாம்..ஆமாம்..என்றான்.

சிரித்த கடவுள்

'இருக்கும் இடமே சொர்க்கம்'
'இருக்கும் நிலையே நல்ல நிலை'
'செய்யும் தொழிலே சிறந்த தொழில்'

என்பதை அனைவரும் உண்ர்ந்து கொள்ள வேண்டும் என்றார். 


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள்  - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள் Empty Re: எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கதைகள் - செய்யும் தொழிலே சிறந்தது - கடவுள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum