சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

தமிழ் அகராதி - " ஒ " Khan11

தமிழ் அகராதி - " ஒ "

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:39

ஒ - போன்றிரு; தகுதியாயிரு; சமமாகு; ஒழுக்கத்துடனிரு; ஒற்றுமைப்படு [ஒத்தல்]
ஒக்க - சமமாக; ஒரு சேர
ஒக்கப்பாடு - பிறன் கூறுவதை ஆதரித்துக் கூறு [ஒக்கப்படுதல்]
ஒக்கல் - சுற்றத்தார்; இரு துண்டுகளைத் தைத்தல்
ஒகரம் - 'ஒ' என்ற எழுத்து; மயில்

ஒசி - முறிந்து போ; பளுவினால் வளைவாகு; நாணமடை; சோர்வுறு; வருந்து [ஒசிதல், ஒசித்தல்]
ஒட்ட - அடியோடு; இறுக; போல
ஒட்டகம், ஒட்டகை - ஒரு விலங்கு
ஒட்டடை - நூலாம் படை; சிலந்திக் கூடு; ஒருவகை நெல்
ஒட்டம் - பந்தயப் பொருள்; மண்வெட்டும் பொழுது விடும் அளவுத் திட்டு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:39

ஒட்டல் - சேர்தல்; உள்ளொடுங்குதல்; உடன்பாடு
ஒட்டலன் - பகைவன்
ஒட்டன் - மண்தோண்டும் வேலை செய்யும் ஒரு சாதியான் 
ஒட்டார் - பகைவர்
ஒட்டியாணம் - மாதரிடையணி; யோகப்படை

ஒட்டு - பசையினால் ஒன்று சேர்; சார்ந்திரு; நெருங்கிச் செல்; சம்மதம் கொடு; நட்பாக்கு; உள்ளொடுங்கு; பொருத்தமாகு; பந்தயம் வை; சபதம் கூறு; மன உறுதி கொள்; தாக்குதல் செய்; சிருட்டித்தல் செய் [ஒட்டுதல்]
ஒட்டுவித்தை - ஆட்களை இடத்தை விட்டுப் பெயராதிருக்கச் செய்யும் மாய வித்தை
ஒட்டு வியாதி - தொற்று நோய்
ஒட்பம் - அறிவு
ஒடி - முறிதல் செய்; முறித்தல் செய்; இடையறு; அழிவுறு; அழித்தல் செய் [ஒடிதல், ஒடித்தல்]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:39

ஒடுக்கம் - குறுகிய தன்மை; அடங்கிய தன்மை; தனியிடம்; பதுங்கித் தருணம் பார்த்திருத்தல்; ஒன்று மற்றொன்றில் அடங்குதல்; முடிவு
ஒடுக்கு - அடக்கு; வருத்து; சுருங்கச் செய்; மற்றொன்றில் அடங்கச் செய் [ஒடுக்குதல்]
ஒடுங்கு - அடங்கியிரு; சுருங்கு; குறைவாகு; மறைந்திரு; சோம்பியிரு; குவிதல் செய்; சோர்வுறு; மற்றொன்றில் அடங்கு [ஒடுங்குதல்]
ஒண்டி - தனியானது; கலப்பையில் ஓர் ஆணி
ஒண்டு - சார்ந்திரு; பதுங்கு; ஒளிந்திரு [ஒண்டுதல்]

ஒண்மை - பிரகாசம்; அழகு; நல்லறிவு; செழிப்பு; ஒழுங்கு;
ஒத்தது - தக்கது
ஒத்தபடி - ஏற்றவாறு
ஒத்தாங்கு - ஏற்றவாறு
ஒத்திகை - சரி பார்த்தல்; நாடகம் முதலியன நடித்துப் பார்த்தல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:39

ஒத்திருத்தல் - போன்றிருத்தல்; பொருந்தியிருத்தல்
ஒத்து - இசையில் தாளம்; ஓர் ஊது குழல்; ஒருவகைக் கைவளை
ஒத்துக்கொள் - இணங்கு; தக்கதாகு [ஒத்துக்கொள்ளுதல்]
ஒத்துப்பாடு - பிறர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள் [ஒத்துப் பாடுதல்]
ஒத்து வருதல் - இணங்குதல்

ஒத்துழைப்பு - பலர் கூடி ஒரு காரியம் செய்தல் 
ஒதி - ஒருவகை மரம்
ஒதுக்கம் - தனிமை; பின் செல்லல்; இருப்பிடம்; பதுங்குதல்; நடை; இசையில் ஓர் அபசுரம்
ஒதுக்கு - விலகச் செய்; மறைத்து வை; ஒரு குழுவிலிருந்து விலக்கு [ஒதுக்குதல்]
ஒதுங்கு - விலகு; பின்னடை; நட; சரண் புகு [ஒதுங்குதல்]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:40

ஒப்ப - ஓர் உவம உருபு
ஒப்படி - ஊரார் திரட்டும் ஒரு பொது நிதி; நிலத்தில் அறுவடை
ஒப்படை - ஒப்புவி; ஈடாகக் கொடு [ஒப்படைத்தல்]
ஒப்பந்தம் - உடன்படிக்கை; சமமான தன்மை
ஒப்பம் - போன்றிருந்தல்; ஒன்றாம் தன்மை; மெருகு; அலங்காரம்; கையொப்பம்; அதிகார பத்திரம்

ஒப்பனை - உவமை; எடுத்துக்காட்டு; சாட்சியம்; சமமான தன்மை; அலங்காரம்
ஒப்பாதல் - சமமாதல்
ஒப்பாரி - ஒப்பு; போலி; அழுகைப்பாட்டு
ஒப்பிடு - உவமி; ஒப்பிட்டுச் சரி பார் [ஒப்பிடுதல்]
ஒப்பு - போன்றிருந்தல்; அழகு; ஒரு தன்மை; தக்கது; கவனம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:40

ஒப்புக்கு - மனம் ஈடுபடாமல்
ஒப்புக்கொள் - ஏற்றுக்கொள்; ஒத்துக் கொள் [ஒப்புக் கொள்ளுதல்]
ஒப்புமை - சமமாயிருத்தல்
ஒப்புரவு - உலக ஒழுக்கம்; உபகாரம்; ஒற்றுமை; சமமான தன்மை
ஒப்புவி - ஏற்கச் செய்; நிரூபி; உதாரணங் கொடு [ஒப்புவித்தல்]

ஒய்யாரம் - ஆடம்பரம்; உல்லாச நடை
ஒயில் - அழகிய தோற்றம்; அழகிய நடை; ஒருவகைக் கூத்து
ஒரால் - நீங்குதல்
ஒரு - ஒன்று; ஒப்பற்றது; ஆடு
ஒருக்கணி - ஒருபக்கமாகச் சாய்; சிறிது மூடு [ஒருக்கணித்தல், ஒருக்கணிப்பு]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:41

ஒருகால் - ஒரு தடவை; ஒரு வேளை; சில சமயம்
ஒருகாலும் - எந்தக் காலத்திலும்
ஒருங்கு - ஒன்று கூடு; படிப்படியாகக் குறைவாகு; அழிந்து போ [ஒருங்குதல்]
ஒருங்கே - முழுதும்; ஒரு சேர
ஒரு சேர - ஒருமிக்க

ஒருத்தல் - புலி, யானை முதலிய சில விலங்குகளின் ஆண் 
ஒருத்தன் - ஒருவன்; ஒப்பற்றவன்; [பெண்பால் - ஒருத்தி]
ஒருதலை - ஒரு பக்கமாம் தன்மை; நிச்சயம்
ஒருப்படு - ஒரு நினைவாகு; துணிவு கொள்; சம்மதி; ஒன்றுகூடு; தோன்று [ஒருப்படுதல், ஒருப்பாடு, ஒருப்படுத்துதல்]
ஒருபடி - ஒரே விதம்; ஒருவாறு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:41

ஒருமனப்படு - ஒரே மனமாகு; ஒரே விஷயத்தில் மனத்தைச் செலுத்து [ஒருமனப்படுதல், ஒருமனப்படு]
ஒருமா - 'இருபதில் ஒன்று' என்ற பின்னம்
ஒரு மாதிரி - ஒருவிதம்; தனிக் குணமுள்ள; இயல்பு வேறான
ஒருமித்தல் - ஒன்று சேர்தல் [ஒருமிக்க, ஒருமிப்பு]
ஒருமை - தனிமை; ஒற்றுமை; ஒரே தன்மை; தீர்மானம்; மெய்ம்மை; ஒரு பிறப்பு; வீடுபேறு (இலக்கணம்) ஓர் எண்

ஒருமைப்படு - ஒற்றுமைப்படு; மனம் ஊன்று [ஒருமைப்படுதல், ஒருமைப்பாடு]
ஒருவண்ணம் - ஒருவாறு
ஒருவந்தம் - நிச்சயம்; நிலைப்பு; தனியிடம்; சம்பந்தம்
ஒருவர் - ஒருவன் அல்லது ஒருத்தியின் சிறப்புப் பன்மைப் பெயர்
ஒருவன் - ஓர் ஆண் மகன்; ஒப்பற்றவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:41

ஒருவாமை - மாறுபடாமை; பிறழாமை; நிலைப்பு
ஒருவாற்றான், ஒருவாறு - ஒரு விதமாக; ஒருசேர
ஒருவு - விட்டு நீங்கு; ஒத்திரு; தப்பிச் செல்; தவிர் [ஒருவுதல்]
ஒருவேளை - ஒருகால்; ஒரு தடவை
ஒரூஉ - நீங்குதல்

ஒரோவழி - சிறுபான்மையாக
ஒல்கு - சோர்வுறு; மெலிவுறு; மெலிந்து வளை; குழை வாகு; ஒதுங்கு; சாய்; நட; சுருங்கு; வறுமையுறு; மன மடங்கு; மேடுறு; எதிர்கொள் [ஒல்குதல்]
ஒல்லார் - பகைவர்
ஒல்லி - மெலிந்தவர்; மென்மை; துடைப்பம்
ஒல்லு - செய்யக்கூடியதாகு; உடன்படு; தக்கதாகு; பொருந்து; நிகழ்தல் செய் [ஒல்லுதல், ஒல்லல்]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:41

ஒல்லை - விரைவாக; சிறிது நேரத்தில்; பழமை
ஒலி - தழைத்தல் செய்; ஓசை; சொல்; காற்று; (ஆடை) வெளுத்தல் செய்; தூய்மை செய் [ஒலித்தல், ஒலிப்பு]
ஒலியல் - தழைத்தல்; தளிர்; பூமாலை; ஈயோட்டு கருவி; ஆடை; தால்; தெரு; நதி
ஒவ்வாமை - ஒப்பு ஆகாத தன்மை; பொருந்தாமை
ஒவ்வுதல் - பொருந்துதல்; ஒத்திருத்தல்

ஒவ்வொன்று - ஒன்று வீதம்; சில
ஒழி - முடிவுறு; அழிந்து போ; இற; தீர்மானமாகு; தங்கு; விட்டு நீங்கு; வெறுமையாகு [ஒழிதல், ஒழித்தல்]
ஒழிந்தார் - மற்றவர்; பிறர்
ஒழிப்பு - விலக்கு
ஒழிபு - எச்சம்; எஞ்சிய பொருள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:42

ஒழிய - தவிர
ஒழிவு - ஒழிதல்; முடிவு; மிச்சம்; அவகாசம்
ஒழுக்கம் - நடத்தை; சீலம்; நல்லொழுக்கம்; செல்லுதல்; வழி; குலம்
ஒழுக்கல் - திரவம் சொட்டுகை; பொருந்துதல்; வரிசையாக வைத்தல்; ஊற்றுதல்
ஒழுக்கு - செட்டுச் சொட்டாக விழச் செய்; நடக்கச் செய்; கம்பியாக இழு [ஒழுக்குதல்]

ஒழுகல் - ஒழுக்கு; (நீர்) பாய்தல்; நீளம்; உயரம்; நடத்தை
ஒழுகலாறு - நல்லொழுக்க நெறி
ஒழுகு - பாய்தல் செய்; சொட்டுதல் செய்; முறையாக நடத்தல் செய்; வரிசையாக அமைந்திரு; பரந்திரு; வளர்; அதிகரி; அமிழ்; இளகு; நிலக்கணக்கு; கோயில் விவரக்கணக்கு [ஒழுகுதல்]
ஒழுகை - வண்டி; வண்டி வரிசை
ஒழுங்கீனம் - குழப்பம்; சீர்கேடு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:43

ஒழுங்கு - வரிசை; முறை; நன்னடத்தை; விதி
ஒழுங்கை - இடுக்கு வழி; கட்டட முகப்பு
ஒள்ளியன் - அறிவுடையவன்; நல்லவன்
ஒளி - வெளிச்சம்; காந்தி; சூரியன் முதலிய ஒளிக்கோலம்; நெருப்பு; விளக்கு; கண் ஆகிய புலன்; புகழ்; ஞானம்; மறைந்துகொள்; மறைத்தல் செய்; தவிர்தல் செய்; மனத்தில் அடக்கு [ஒளித்தல், ஒளிதல், ஒளிப்பு]
ஒளிர் - ஒளிவிடு [ஒளிர்தல், ஒளிர்வு]

ஒளிறு - பளபளப்பாயிரு; விளங்கு [ஒளிறுதல்]
ஒற்கம் - வறுமை; வலிமைக் குறைவு; குறைவு; அடக்கம்
ஒற்றடம் - வெப்பம் படுமாறு ஒற்றுதல்
ஒற்றளபு, ஒற்றளபெடை - மெய்யெழுத்து மாத்திரையளவில் நீளுதல்
ஒற்றன், ஒற்றான் - வேவுகாரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:43

ஒற்றி - சொத்தை அனுபவிக்கும் உரிமை கூடி அடைமானம்
ஒற்றிவைத்தல் - அடைமானம் வைத்தல்
ஒற்று - தொடு; அழுத்து; அடித்தல் செய்; துடைத்தல் செய்; தள்ளு; இழு; வீழ்த்து; நெருங்கிச் செய்; எய்தல் செய்; தீர்மானி; உளவறி; ஒட்டிக்கொள்; ஒற்றம் போடு; நினைத்தல் செய்; மறைதல் செய் [ஒற்றுதல்]
ஒற்றுமை - கூடியிருக்கும் (ஒன்றியிருக்கும்) தன்மை; மன ஒருமை; ஒற்றரின் இயல்பு
ஒற்றை - ஒன்று; தனிம; ஒற்றைப் படை எண்; ஒப்பில்லாத தன்மை; ஓர் இசைக் கருவி

ஒறு - தண்டித்தல் செய்; இகழ்தல் செய்; வெறு; அழித்தல் செய்; அடக்கு; வருத்து; ஊனமாகு; குறைவாகு [ஒறுத்தல், ஒறுப்பு]
ஒன்பது - ஓர் எண்
ஒன்பான் - ஒன்பது
ஒன்ற - ஓர் உவம உருபு
ஒன்றன்பால் - அஃறினை ஒருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:44

ஒன்றா(தல்) - முதலாதல்; ஐக்கியப்படுதல்
ஒன்றாக - நிச்சயமாக
ஒன்றாமை - பகைமை
ஒன்றார் - பகைவர்
ஒன்றி - தனிமை; தனி ஆள்

ஒன்றிப்பு - ஐக்கியம்
ஒன்று - ஓர் எண்; மதிப்புக்குரியது; ஒற்றுமை; வாய்மை; ஒப்பற்றது
ஒன்னலன் - பகைவன்
ஒன்னாதோர், ஒன்னார் - பகைவர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:44

ஒஃகல், ஒஃகுதல் - ஒதுங்குதல் : பின்வாங்குதல்.
ஒக்கடித்தல் - தாளங்கொட்டுதல் : செப்பனிடுதல்.
ஒக்க நோக்குதல் - சரியாகப் பார்த்தல்.
ஒக்கப்பாடுதல் - பிறன் கூற்றுக்கு ஒத்துக் கூறுதல்.
ஒக்கம் - ஓமம் : ஊர் : எழுச்சி : கரை : பட்டினம்.


ஒக்கலிடுதல் - இனங்கூட்டல்.
ஒக்கலித்தல் - ஆவலங் கொட்டுதல் : உறவினரோடு கலந்து பேசுதல் : சமாதானமாதல்.
ஒக்கலை - இடுப்பு : மருங்கின் பக்கம் : ஒவ்வாய் : சுற்றத்தான் : சுற்றத்தாள்.
ஒக்காதிக்கொடி - புலி நகக் கொன்றை.
ஒக்கிடுதல் - செப்பனிடுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:44

ஒக்குதல் - கொப்புளித்தல் : சமாதானமாதல்.
ஒக்கோலை - அம்பர் : கடல்படுபொருள் : ஒரு வாசனைப் பண்டம்.
ஒசிதம் - கற்றாளை.
ஒசிதல் - அசைதல் : துளவல் : ஒடிதல் : முரிதல் : ஒதுங்குதல் : சாய்தல் : முறுகல் : நாணுதல் : 
அடங்குதல் : வருந்துதல் : ஓய்தல்.
ஒசித்தல் - முறித்தல் : அசைத்தல் : ஒடித்தல்.


ஒசிந்தநோக்கு - ஒதுங்கிப் பார்க்கும் பார்வை.
ஒசிய - வருந்த.
ஒசியல் - கிளை முறிக்கப்பட்ட மரம்.
ஒசிவு - அசைவு : முரிவு : வருத்தம்.
ஒச்சந்தம் - குறைந்திருக்கை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:44

ஒச்சம் - நாணம் : கவனித்தல் : பழுது : குறைவு.
ஒச்சிந்தல் - வெட்கப்படுதல் : நாணுதல்.
ஒச்சியம் - கூச்சம் : சரச மொழி : நிந்தை.
ஒச்சை - உற்றுக் கேட்டல் : காந்தற் சோறு.
ஒஞ்சட்டை - ஒல்லி : ஒச்சட்டை.


ஒஞ்சரித்தல் - ஒரு பக்கம் சார்தல் : கதவை ஒரு பக்கம் சார்த்துதல்.
ஒஞ்சி - முலை : முலைக்காம்பு : மார்பு : வெட்கப்படு : நாணு.
ஒடிகை - முரிகை.
ஒடிசில் - கவண் : கவணை : குணில் : குளிர்.
ஒடிதல் - முறிதல் : கெடுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:45

ஒடித்தல் - முறித்தல் : அழித்தல் : ஒளி செய்தல்.
ஒடிபு - இடை முறிபட்டது.
ஒடியல்மா - பனங்கிழங்கின் மா.
ஒடியெறிதல் - காட்டுப் புதர்களை வெட்டல் : மரக் கொம்பைப் பாதி குறைத்தல்.
ஒடிவு - முறிவு : கெடுகை : குறைவு : தவிர்தல்.


ஒடிவை - இடையறவு.
ஒடு - முதுபுண் : நிலப்பாலை : ஒரு மரம் : உருப்பை : ஓர் உருபு : இடைச் சொல்.
ஒடுகமரம் - குடைவேல மரம் : ஓடை மரம்.
ஒடுக்கட்டி - அக்குட் புண் : கழலைக் கட்டி.
ஒடுக்கத்தம்பிரான் - சைவ மடாதிபதிக்கு உட்காரியம் பார்க்கும் தம்பிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:45

ஒடுக்கிடம் - மறைவிடம் : சுருக்கமான இடம்.
ஒடுக்குதல் - அடக்குதல் : இறையிறுத்தல் : உடம்பை யொடுக்கல் : குறைத்தல் : சுருங்கப் பண்ணுதல்.
ஒடுக்குப்படி - ஒரு பழைய வரி.
ஒடுக்குவாய் - ஒடுங்கின வாய் : கோணல் வாய்.
ஒடுக்கெடுத்தல் - நெளிவெடுத்தல்.


ஒடுங்க - ஓர் உவம உருபு.
ஒடுங்கல் - அடங்கல் : அமைதல் : ஒதுங்கல் : ஒளி மங்கல் : கீழ்ப்படிதல் : சுருங்கல் : குவிதல் : 
செறிதல் : சோர்தல் : பதுங்கல் : முடிதல் : தடை.
ஒடுங்கி - ஆமை.
ஒடுங்குதல் - தங்குதல் : அடங்குதல் : குறைதல் : கீழ்ப்படிதல் : பதுங்கல்.
ஒடுத்தங்குதல் - புண்ணில் சீத்தங்குதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:47

ஒடுவடக்கி - குப்பைமேனி : திராயமரம்.
ஒடுவை - ஒருவகை மரம்.
ஒடை - ஒடைமரம் : குடைவேல மரம்.
ஒட்டங்காய்ப்புல் - ஆடையில் ஒட்டும் ஒருவகைப் புல்.
ஒட்டங்கி - கன்னார் கருவிகளுள் ஒன்று : உலையாணிக் கோல்.


ஒட்டச்சி - பூவழலை.
ஒட்டணி - உவமையால் உவமேயத்தைப் பெறவைக்கும் அணி.
ஒட்டப்போடுதல் - தன்னைத் தானே பட்டினி போடுதல்.
ஒட்டரம் - இஃதொருநாடு : இதனை ஒரிசா என்பர்.
ஒட்டர் - ஒட்ட நாட்டார் : மண்வேலை செய்வோர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:47

ஒட்டலர் - பகைவர் : உடன்பாடில்லாதவர்.
ஒட்டறை - புகைப்பற்று.
ஒட்டற்காது - சுருங்கற் காது : ஒட்ட வைத்த காது.
ஒட்டாக்கற்றி - கன்றை அணுகவிடாத பசு.
ஒட்டாக்கொற்றி - அன்பில்லாதவள் : கன்றை அணுகவிடாத பசு.


ஒட்டாம்பரை - ஒட்டகப் பாரைமீன்.
ஒட்டாரம் - முரட்டுத்தனம் : பிடிவாதம்.
ஒட்டி - துணிந்து : ஒட்டொட்டிப் பூண்டு : ஒரு மீன் : வஞ்சினங்கூறி : ஒட்டி நிற்கும் பொருள்.
ஒட்டிக்கிரட்டி - ஒன்றுக்கு இரண்டு பங்கு.
ஒட்டியம் - ஒரு நாடு : ஒரு மந்திர வித்தை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:47

ஒட்டியர் - ஒட்டிய நாட்டார்.
ஒட்டிரட்டி - ஒற்றைக்கு இரட்டை.
ஒட்டுக்கணவாய் - மீன் வகை.
ஒட்டுக்காய்ச்சல் - தொற்றுச் சுரம்.
ஒட்டுக் குடி - பிறரை அண்டியிருக்குங் குடி.


ஒட்டுக்குடுமி - உச்சிச் சிறுகுடுமி.
ஒட்டுக்கும் - முழுவதும்.
ஒட்டுக் கேட்டல் - பிறர் பேசுதலை ஒளித்து நின்று கேட்டல்.
ஒட்டுக் கொடுத்தல் - உறுதி பண்ணித் தருதல்.
ஒட்டுச் சல்லடம் - குறுங்காற்சட்டை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:47

ஒட்டுடந்தை - ஒட்டுப் பற்று : சிறு தொடர்பு.
ஒட்டுதல் - உடன்படுதல் : அடைகொடுத்தல் : வற்றல் : சார்தல் : கூட்டுதல் : கிட்டுதல் : பதுங்கி நிற்றல் : 
கருங்கல் : சேர்த்தல் : பொருத்துதல்.
ஒட்டுத்தரவு - சுற்றறிக்கை.
ஒட்டுநர் - நண்பர்.
ஒட்டுப்பழம் - ஒட்டு மரத்தின் பழம்.


ஒட்டுப்பற்று - ஆசாபாசம் : சிறு உறவு : ஒட்டுடந்தை : ஒட்டுரிமை.
ஒட்டுப்பார்த்தல் - உளவு பார்த்தல்.
ஒட்டுப்பிசின் - ஒட்டவைக்கும் பசை.
ஒட்டுப்புதவம் - இரட்டைக் கதவு.
ஒட்டுமொத்தம் - முழுமொத்தம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:47

ஒட்டுரிமை - ஒட்டு : சிறு தொடர்பு : நட்பு.
ஒட்டுவாரொட்டி - ஒட்டு நோய் : தொற்று நோய்.
ஒட்டை - ஒட்டகம் : ஒட்டைச் சாண் : [ அது பத்துவிரற்கிடை.]
ஒட்டொட்டி - ஒரு செடி.
ஒட்டோலக்கம் - பெருங்கூட்டம் : ஆடம்பரம் : வெற்றி.


ஒண் - ஒண்ணு : பொருந்து.
ஒண்டன் - ஆண்நரி : சம்புகம் : ஊளன் : ஒரி.
ஒண்டுதல் - சார்தல் : பதுங்குதல் : சரண் புகுதல்.
ஒண்டொடி - ஒள்ளிய வளையல் : பெண்.
ஒண்ணல் - கூடுதல் : பொருந்துதல் : தகுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:48

ஒண்ணாதது - ஒவ்வாதது : பொருந்தாதது.
ஒண்ணாப்பு - இயலாப்பு : கூடாத தன்மை.
ஒண்ணாமை - இயலாமை : கூடாமை : தகாமை : பொருந்தாமை.
ஒண்ணுதல் - இயலுதல் : கூடுதல் : ஒள்ளிய நெற்றியையுடைய பெண்.
ஒதளை - காசுக்கட்டி : ஒரு மருந்து.


ஒதி - ஒதியமரம் : உதயமரம் : உதிர மரம்.
ஒதுக்கல் - ஒதுங்கச் செய்தல் : கணக்கு வழக்குத் தீர்த்தல்.
ஒதுக்கிடம் - ஒதுங்கும் இடம் : துச்சில் : புகலிடம் : மறைவிடம்.
ஒதுக்கிப்போடுதல் - தீர்த்து விடுதல் : சாதியினின்று நீக்கிவிடுதல் : விசாரணையைத் தள்ளி வைத்தல் : 
சொத்தை மறைத்து வைத்தல்.
ஒதுக்குதல் - ஒதுங்கச் செய்தல் : மறைத்தல் : தனியாகச் செய்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum