சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு Khan11

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு

Go down

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு Empty ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு

Post by rammalar Tue 15 Nov 2016 - 5:58

ரூ.500, 1000 நோட்டுகள் நவ.24 வரை செல்லும்:

1. மெட்ரோ ரயில் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருந்தகங்கள் பெட்ரோல் நிலையங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

2. காஸ் சிலிண்டர் வாங்கலாம்.

3. ரயில்வே கேட்டரிங் சேவைக்கு பயன்படுத்தலாம்.

4. மின் கட்டணம், தண்ணீர் வரி செலுத்த பழைய நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.

5. வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.

6. நாடு முழுவதும் மைக்ரோ ஏடிஎம் மையங்கள் தொடங்க ஏற்பாடு.

7. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண ரத்து வரும் 18-ம் தேதி வரை நீட்டிப்பு.

இது குறித்து மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, "நிலைமையை ஆய்வு செய்து சுங்கக் கட்டண ரத்து உத்தரவை நீட்டித்துள்ளோம். இதனால் ஏற்படும் இழப்பை அரசே எதிர்கொள்ளும்" என்றார்.

சுங்கச்சாவடிகள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 24 வரை செல்லும் என பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் மேலும் சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பணத் தட்டுப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிறு இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) காலை பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் கூறும்போது, "அரசு பொது மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், சுங்கச்சாவடிகளில் ரூ.500, 1000 நோட்டுகள் இம்மாதம் 24 வரை செல்லும்" என்றார்.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் தலைமையிலான கூட்டத்துக்குப் பின்னர் வங்கிகளில் தற்போது பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ரூ.4,000 மாற்றி கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதேபோல ஏடிஎம் மையங்களில் தற்போது ரூ.2,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது.

வங்கிக் கணக்கில் இருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்படுகிறது. எனினும் அதிகபட்சம் வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே பணம் எடுக்க முடியும். இதற்கு முன்பு வாரத்துக்கு ரூ.20,000 மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், பெருகும் மக்கள் அதிருப்தியால் சுங்கச்சாவடிகள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவ. 24 வரை செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வங்கி விடுமுறையால் பாதிப்பு:

குருநானக் ஜெயந்தியை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கிகள் இன்று (திங்கள்கிழமை) இயங்கவில்லை. இதனால் மக்கள் ஏடிஎம் மையங்களில் பெருமளவில் குவிந்துள்ளனர். பணம் இருக்கும் ஒருசில ஏடிஎம் மையங்களில் விரைவாக பணம் காலியாகிவிடுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இரண்டு நாட்களில் ஏடிஎம்களில் ரூ.2000 நோட்டுகள்:

இன்னும் இரண்டு நாட்களில் நாடு முழுவதும் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் ரூ.2000 நோட்டு வழங்கப்படும். இதற்காக ஒரு சிறப்பு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.2000 நோட்டு வழங்குவதற்கான தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்களின் பணத் தேவையை கருத்தில் கொண்டு 'மைக்ரோ ஏடிஎம்கள் தொடங்கப்படும்' என அவர் தெரிவித்தார்.

அதேபோல் நாடு முழுவதும் உள்ள 1.3 லட்ச தபால் அலுவலகங்களுக்கான பணப் பட்டுவாடா விரைவில் மேம்படுத்தப்படும். பொதுமக்களுக்கு அவர்களுடைய பணம் கிடைப்பதற்கான அமைப்புகள் அத்தனையும் தடையின்றி இயங்க வழிவகை செய்யப்படும் என்றார்.

வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

பதற்றம் வேண்டாம்:

ரொக்கக் கையிருப்பு போதிய அளவில் உள்ளதால் மக்கள் பதற்றப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய சக்திகாந்த தாஸ் நிலைமை வெகு விரைவில் சீராகும் என்றார்.
-
தி இந்து
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» புதிய 100 ரூபாய் நோட்டு; அடுத்தாண்டு வெளியாகிறது
» புதிய 100 ரூபாய் நோட்டு; அடுத்தாண்டு வெளியாகிறது
» ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கமா?: மத்திய அரசு மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum