சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon 20 May 2024 - 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon 20 May 2024 - 10:55

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…? Khan11

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…?

Go down

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…? Empty மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…?

Post by rammalar Wed 23 Nov 2016 - 12:24

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…? 1_16105
-
இப்போதெல்லாம் பெண்கள் சிறு வயதிலேயே 
பருவமடைந்துவிடுகிறார்கள். 

பள்ளிகளில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அதை, 
தன்னுடன் இருக்கும் தோழிகளிடம்கூடப் பகிர்ந்து
கொள்வதில் தயக்கம் காட்டுவார்கள். மாதவிடாய் சுழற்சியை, 
பெரும்பாலும் பள்ளியில் இருக்கும் காலத்தில் சரியாக 
எந்தப் பெண்ணும் தெரிந்துகொள்வதில்லை. 

இதனால், மாதவிடாய் ஏற்படும்போது… அவர்களுக்குத் 
தேவைப்படும் நாப்கின்களை அவர்கள் வைத்திருப்பதற்கு 
வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. 

இதை, எங்கு… யாரிடம் கேட்பது என்று புரியாமல் இருப்பார்கள். 
இதை உணர்ந்த ஹெச்.எல்.எல். லைஃப் கேர் என்கிற நிறுவனம் 
நாப்கின்களை எடுக்கும், எரிக்கும் இயந்திரங்களை 
அறிமுகப்படுத்தியுள்ளது. கேரளா, திருவனந்தபுரம் மாவட்டத்தில் 
இருக்கும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் இந்த வசதியை 
அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்த நிறுவனம்.

ஹெச்.எல்.எல். லைஃப் கேர் லிமிடெட்!

ஆணுறை தயாரிக்கும் நிறுவனமான ஹெச்.எல்.எல். லைஃப் கேர் 
லிமிடெட், இப்போது அரசு மற்றும் அரசு சார்ந்து இருக்கும் 
150 பள்ளிகளில், பணத்தைச் செலுத்தினால் நாப்கின்கள் வரும்படி 
ஓர் இயந்திரத்தை பொருத்தியுள்ளது. 

‘வெண்டிகோ’ என்று பெயரிடப்பட்ட இந்த இயந்திரத்தில், 
பணத்தைச் செலுத்தினால் 3 நாப்கின்கள் வரும். இது தவிர, 
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைச் சுகாதாரமான முறையில் 
அகற்ற, ‘எரியூட்டு’ (incinerators) என்கிற இயந்திரத்தையும் 
அந்த நிறுவனம் பொருத்தியுள்ளது. 

இந்த நாப்கின்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள், 
கர்நாடகா மாநிலம் பெல்காம் என்ற ஊரில் இருக்கும் நிறுவனத்தில் 
தயாரிக்கப்படுகின்றன.

ஹெச்.எல்.எல். நிறுவனம், சுகாதார மற்றும் குடும்பநலத் துறை 
அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. அந்த நிறுவனம், 
மேலும் இதுபோன்று 700-க்கும் மேற்பட்ட இயந்திரங்களை 
திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொருத்தியிருக்கிறது.
-

ஸ்வச் பாரத் நகர்ப்புற மற்றும் நகர அபிவிருத்தி, 
குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அமைச்சகத்தின் 
அனுமதியோடு… 
பள்ளிகளில் இந்த நாப்கின் வசதிகளும், எரியூட்டு 
வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
-
-----------------------------


Last edited by rammalar on Wed 23 Nov 2016 - 12:27; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24233
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…? Empty Re: மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…?

Post by rammalar Wed 23 Nov 2016 - 12:26

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…? 2_16270

விழிப்பு உணர்வு குறைவு!

‘‘நாப்கின்கள், பெண்களுக்குத் தேவைப்படும் 
அத்தியாவசியமான ஒன்று. அது, அவர்களைச் சுகாதாரமாக 
வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. ஆனால், இந்தியாவில் 
மற்ற வளர்ச்சி அடையும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, 
இதற்கான விழிப்பு உணர்வு குறைவாகவே உள்ளது. 

இன்றும் பல கிராமங்களில் பெண்கள் அவர்களுக்குத் 
தேவையான நாப்கின்களைக் கடைகளுக்குச் சென்று 
கேட்பதில்கூடத் தயக்கம் காட்டுகிறார்கள்” என்றார் 
ஹெச்.எல்.எல் தலைவர் ஆர்.பி.கந்தல்வால்.

ஹெச்.எல்.எல் நிறுவனம், கர்நாடகா பெல்காம்-ல் உள்ள 
நிறுவனத்தில் வருடத்துக்கு 400 லட்சம் நாப்கின்களைத் 
தயாரிக்கின்றன. மேலும், டெல்லி, மத்தியப் பிரதேசம், 
ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும்… இதேபோல 
பள்ளிகளில் பெண்களுக்குப் பயன்படும் விதமாக நாப்கின்
 மற்றும் எரியூட்டு இயந்திரங்களைப் பொருத்தியுள்ளது.

பெண்களுக்குத் தேவையான பல வசதிகளை அரசு செய்து
கொண்டிருக்கிறது. ஆனால், பல வசதிகள் இருப்பதை 
அவர்களுக்குத் தெரியப்படுத்தத் தவறிவிடுகிறது. இன்றும் 
பெண்கள் பலர், மாதவிடாய் மற்றும் அதைச் சார்ந்த விஷயங்கள்
 பற்றி வெளியில் பேசத் தயங்குகிறார்கள். கடைக்குச் சென்று 
நாப்கின் போன்றவற்றை வாங்கி வரும்போதுகூட பல 
பேப்பர்களைக்கொண்டு மறைத்து வாங்கி வருகிறார்கள். 

ஆண்கள், பெண்களின் மாதவிடாய் பற்றி அறியாமல் இல்லை. 
அனைவருக்கும் தெரிந்த விஷயங்களை எதற்காக மறைத்து
வைக்க வேண்டும்? இனியாவது பெண்கள், ‘மாதவிடாய்’யை 
மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணரவேண்டும்.
-
---------------------------------------
நன்றி- விகடன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24233
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum