சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Today at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

மாவீரன் கர்கரேயைக் கொன்றது யார்? Khan11

மாவீரன் கர்கரேயைக் கொன்றது யார்?

2 posters

Go down

மாவீரன் கர்கரேயைக் கொன்றது யார்? Empty மாவீரன் கர்கரேயைக் கொன்றது யார்?

Post by Muthumohamed Tue 19 Feb 2013 - 20:25

மாவீரன் கர்கரேயைக் கொன்றது யார்?

26/11 மும்பையில் அப்பாவிகளை கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காக்கும் காவல் பணியில் ஈடுப்படும்போது தன் உயிரை இந்தியாவிற்க்காக தந்த மராத்திய மாவீரன்.

மாலேகான்குண்டுவெடிப்பில் இந்த தேசத்தின் மிகப்பழமையானஒரு பயங்கரவாத
அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக அம்பலப்படுத்திய மராட்டிய மாநில தீவிரவாத
தடுப்புப்படையின் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே காமா மருத்துவமனைக்கு
வேண்டுமென்றே வரவழைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுகிறார் அவரைப்போன்று
இரண்டு துணிச்சலான காவல்துறை உயர் அதிகாரிகளும் இதே நாளில் வேறு
வேறுஇடங்களில் சுட்டுக்கொல்லப்படு கிறார்கள்.

ஹேமந்த் கர்கரே
அணிந்து இருந்த குண்டு துளைக்காத சட்டை எங்கே அவர் அதனை சம்பவம்
நிகழும்போது அணிந்துதான் இருந்தார் இருப்பினும் அவர் மார்பில் குண்டு
பாய்ந்து அவர் உயிரைக்குடித்த்து எப்படி ? அந்த குண்டு துளைக்காத சட்டை
எங்கே ? தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி இந்த வினாவினை எழுப்பிய போது
கிடைத்த பதில் என்ன ? இது போன்ற ஏராளமான விடை தெரியாத கேள்விகளுக்கு தீர்வு
எப்போது ? அவை வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டதன் பின்னணியில் ஓர்
அப்பட்டமான அரசியல் சதி காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் கலந்த கவலை இந்திய
மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் எழுந்தது.

குறிப்பாக மும்பை மீது
பயங்கரவாதிகள் தாக்குதல் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே தீவிரவாதத்
தடுப்புப் படையின் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே, விஜய்
சாலஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.

மாவீரன்
கர்கரேயின் மரணம் குறித்து இந்தியாவே அதிர்ச்சி யில் ஆழ்ந்த போது சில
சக்திகள் மட்டும் குதூகலத்துடன் கும்மாளமிட்டன. மாலே கான் குண்டுவெடிப்பு
சதி குறித்த உண்மைகள் இனி வெளிவருமா? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா?
என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழத் தொடங்கியது.

இந்நிலையில் கர்கரேயை படுகொலை செய்தது யார்? என்பது குறித்த மர்மங்கள்
மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் சுதந்திர உணர்வுள்ள புலனாய்வு நிபுணர்
கள் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது.

கர்கரேயின் மரணம் குறித்த
மர்மம் நீடித்த நிலையில், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரும்,
மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் அமைச்சருமான அப்துல் ரஹ்மான் அந்துலே நாடு
தழுவிய நியாயமான சந்தேகத்தை சதிகாரர்கள் உள்ளம் அதிர உரத்து முழங்கினார்.
“கர்கரேயின் படுகொலையில் சந்தேகம் இருக்கிறது, கர்கரேயைக் கொன்றது யார்?
ஹிந்துத்துவ தீவிரவாதத்தை நேர்மையுடன் வெளியுலகிற்கு அம்பலப் படுத்திய அந்த
நேர்மையான அதிகாரியை காமா மருத்துவமனைக்கு செல்லுமாறு தவறாக வழிநடத்தியது
யார்? பயங்கர வாதிகள் குண்டு மழை பொழிந்த தாஜ் ஹோட்டலுக்கோ, டிரைடன்ட்
ஓபராய் ஹோட்டலுக்கோ, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கோ, நரிமன்
இல்லத்திற் கோ செல்லவிடாமல் காமா மருத்துவ மனைக்கு செல்வதற்கு அவரை தவறாக
தகவல் கூறி வழிநடத்தியது யார்?’’ என்ற அதிரடி வினாக்களை வீசி நாடாளு மன்ற
அவையினைத் திணறடித்தார்.

கர்கரே மிகச்சிறந்த நேர்மையான அதிகாரி.
அவரது மரணத்தில் மர்மம் உள்ளது, கர்கரேயை படுகொலை செய் தது யார்? என்பது
குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என அந்துலே தெரிவித்த கருத்துக்கு
பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்துர் ரஹ்மான் அந்துலேயின்
உரைக்கு கடும் இடையுறு விளைவித்தனர். இது அந்துலேயின் பாகிஸ்தானுக்கு சாதக
மான வாதம் எனக் கூறும் அளவுக்கு தங்கள் நிலையை தாங்களே தாழ்த்திக்
கொண்டனர். ஒரு நேர்மையான நெஞ் சுரம் மிக்க ஓர் அதிகாரியை இந்த தேசம்
இழந்துவிட்டதே என்ற வேதனை கொஞ் சமும் இல்லாத பாஜக கும்பலின் வெற்றுக்
கூச்சல் இந்திய மக்களின் மத்தியில் அவர்களுக்கு இழிவைத் தேடித்தந்தது.

மும்பை பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் படுகொலை செய்யப் பட்ட கர்கரேயின்
விஷயத்தில் மகாராஷ் டிர அரசு எவ்வித ஆர்வமும் காட்டவில்லை எனத் தெரிகிறது.
கர்கரே படுகொலை குறித்து தனியாக விசாரணை ஏதும் செய்யப்பட்ட மாட்டாது என
மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் வர்த்தக
தலைநகரத்தில் ஏற்பட்ட தாக்குதல் குறித்த தகவல் தெரிந்த உடனேயே உயிரை
துச்சமென நினைத்து சிங்கமென பாய்ந்து சென்ற ஒரு கடமை வீரன் குண்டு
துளைக்காத சட்டை அணிந்தும் கூட மார்பில் சுடப்பட்டு
கொல்லப்பட்டிருக்கிறார். காமா மருத்துவ மனைக்கு காரில் கடத்திச்
செல்லப்பட்டு சிறிது நேரத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பரவலாக
எழுகிறது.

கர்கரேயை படுகொலை செய்த பயங் கரவாதிகள்
அம்பலப்படுத்தப்படுவது எப்போது என்பதுதான் மக்கள் மனதில் உள்ள
கேள்விஒவ்வொரு பயங்கரவாத சம்ப வங்கள் நடக்கும் போதும் இதுகுறித்து தனக்கு
முன்பே தெரியும் என்றும் மோடி சொல்லி வருகிறார். ஆனால் இதுவரை மோடி மீது
விசாரணைக் கணைகள் பாயாமல் இருப்பது ஏன்? மோடியை விசாரணைக்கு உட்படுத்து
வதில் என்ன பிரச்சினை?

தீவிரவாத தடுப்பு படை தலை வர் ஹேமந்த்
கர்கரே சங்பரிவார் அமைப்பினரால் தனக்கு மிரட்டல்கள் வந்ததையும், அவர்கள்
தன்னை தவறாக சித்தரித்ததையும் குறித்து வேதனை தெரிவித்த கர்கரே, பிரத மரை
சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். இதுகுறித்து தனக்கு வந்த கொலை மிரட்டல்
குறித்து பிரதமரிடமோ, உள்துறையிடமோ கர்கரே கடிதம் மூலம் ஏதேனும்
தெரிவித்திருக்கிறாரா?

முதல் நாள் டெக்கான் முஜாஹி தீன்
இயக்கம்தான் இதற்குக் காரணம் என ஊடகங்கள் பரபரப்பாக அறிவித் தன. இத்தகவலை
இவர்களுக்கு தெரிவித்தது யார்?

இரண்டாவது நாள் லஷ்கரே தொய்பா தான்
காரணம் என பெரும் பாலான ஊடகங்கள் அறிவித்தன. லஷ்கரே தொய்பாதான் காரணம் என
இவர்களுக்கு யார் சொன்னார்கள்? இல்லையெனில், `டெக்கான் முஜாஹி தீன்
காரணமில்லை, அந்தப் பெயரை இரண்டாவது நாள் குறிப்பிட வேண் டாம்’ எனக்
கூறியது யார்? ஆனால் செய்திகளின் போக்கை கணிக்காமல் பெரிய அறிவாளித்தனமாக
இன்ன மும் `டெக்கான் முஜாஹிதீன்தான் காரணம்’ என செய்தி கூறிக் கொண்
டிருக்கும் சன் தொலைக்காட்சிக்கு மட்டும் முக்கியத் தகவல்களைக் கொடுத்தது
யார்?

டெக்கான் முஜாஹிதீன் ஆயிற்று, லஷ்கர்-இ-தொய்பா போயாச்சு,
மூன்றாவது நாள், `தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு இருப்பதாக’ கூறப்பட்டது.
அப்படியானால் மேற் கூறப்பட்ட இரண்டு பயங்கரவாத அமைப்புகளையும் காப்பாற்றி
வேறொரு நபரைப் பற்றி குறிப்பிடப்படுகிறது என்றால், இடையில் என்ன மாற்றம்
அல்லது குழப்பம் நிகழ்ந்தது?

பயங்கரவாதிகள் போர்பந்தரில்
இருந்துதான் வந்திருக்கிறார்கள் என் றால், இதற்கு குஜராத் அரசின்
கையாலாகத்தனம்தான் முக்கியக் காரணமாக இருக்க முடியும். ஆனால் இதுகுறித்து
மோடி அரசை விசாரிக் காமல் காலம் தாழ்த்துவது ஏன்? இதுகுறித்து எந்த
புண்ணியவானும் (!) வாய் திறக்கவில்லையே ஏன்?

இவ்வளவு ஆயுதங்களுடன்
சதிகாரர்கள் ஊடுருவ முடிந்தது என்றால் பாஜகவுக்கு நெருக்கடியான
சூழ்நிலையில் குண்டுகள் வெடிக்கின் றன. இவ்வாறு கூறியவர் மத்தியப் பிரதேச
முன்னாள் முதலமைச்சர் திக்விஜய்சிங். தற்போதும் சட்டமன் றத் தேர்தல்கள்
நடைபெற்றுவரும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில்
பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என செய்திகள் வெளிவந்த சூழ்நிலையில்
இந்த பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றிருப்பது பலத்த சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எந்த புலனாய்வு அமைப்பும் ஊடகங்களும்
வாய்திறக்கவில்லையே ஏன்?

தீவிரவாதிகள் பஞ்சாபி மொழி பேசியதாக
முதலில் ஊடகங்கள் குறிப்பிட்டன. உருதுமொழி பேசிய தாகக் கூட பல ஊடகங்கள்
குறிப்பிட் டன. மராத்திய மொழியில் பேசியதாக மராட்டிய டைம்ஸ்
குறிப்பிடுகிறது. அவ்வாறெனில், அவர்கள் யார்? என்பது தெளிவுபடுத்தப்பட
வேண்டும்.

மோடிக்கு இந்த சம்பவத்தில் கண்டிப்பாக தொடர்பு இருப்பது
பத்திரிக்கைகளுக்கு தெரிந்து இருந்தும் ஏன் சுட்டி காட்டவில்லை என்பது
சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மோடி, ஓபராய் ஹோட்டலுக்குச் சென்று
பார்வையிடு வது போல சென்றதை பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டை நடத்திய கமாண்டோ
படையினர் கோபத்துடன் குறிப்பிட்டதாக பத்திரிகைகள் செய்தி
வெளியிட்டன.கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டிய லிஸ்ட்டில் உள்ள மோடி
எந்த பயமும் இல்லாமல் நாடகமாடியது பல்வேறு சந்தேகங்களை
ஏற்படுத்தியஆனால்பயங்கர வாதம் நடந்தபோதுமராட்டிய மாநில முதல மைச்சர்
முறையான உத்தர வுகளை பிறப்பிக்கவே இல்லை என்கிறார்கள்.

இது
ஒன்றும் மன்னர் காலம் அல்ல. மன்னர் காலத்தைப் போல் தளபதிகள் படையினை
வழிநடத்திச் செல்வதைப் போன்ற ஓர் அவசியம் இல்லை. வீரர்களை சிப்பாய்களை
அனுப்பி அவர்களை களத்திலே நிறுத்தி பின்னால் இயக்கி வெற்றி பெறு வது இன்றைய
உலகின் வழமை. ஆனால் நிலைமையை நேர் மாறாக்கி விட்டிருக்கிறார்கள்.

ஹேமந்த் கர்கரே, சாலஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ
இடத் திற்குச் சென்றதோடு ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே கொடூரமாக
கொல்லப்பட்டிருக் கிறார்கள். இது எதிரிகள் தீட்டிய சதியின் வெற்றியா?
நம்மவர் களின் மதியின் தோல்வியா? வெறும் பத்து பேர்கள்தான் இந்த
பயங்கரவாதத்திற்கு காரணமா? என்பதை நம்ப முடியவில்லை. பல்வேறு முரண்பாடான
தகவல்கள் ஏற்கனவே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் மக்களை குழப்பத்தில்
ஆழ்த்துகின்றன.

இதுவரை நடைபெற்று வந்த பயங்கரவாத நிகழ்வுகள்
குறித்த வழக்குகளில் மர்மமான ஒரு போக்கை இதுவரை இந்நாடு பார்த்திருக்கிறது.
சம்பந்தமே இல்லாமல் யாரையாவது கைது செய்வது பின்னர் அதுகுறித்த எந்த
ஆதாரப்பூர்வ தகவல்களும் வெளிவராமல் மர்மத்தை பாதுகாத்துக் கொண்டே இருப்பது
என்ற நிலை. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் போக்கு அவ்வாறு இருக்கவில்லை.
முறையாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு பின்னர் அவை ஆதாரப்பூர்வமான
குற்றச்சாட்டுக்காளக மாறிய பின்னரேமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு
விசாரிக்கப்பட்டிருக்கிறது.

ராணுவத்தில் பணியாற்றிய கர்னல்
புரோஹித்தை விசாரிக்கத் தொடங்கி பல வாரங்களாயின. ஆனால் அவர் வீட்டில்
இதுவரை சோதனை போட தீவிரவாத தடுப்புப் படை செல்லவே யில்லை. வீட்டுக்கு
செல்லா மலே தீவிரவாத தடுப்புப் படையினருக்கு தேவை யான ஆதாரங்கள் கிடைத்து
விட்டன.

தெளிவாக சதிகாரர்களை அடையாளம் காட்டும் வழக்கிலேயே
இவ்வளவு சுனக்கத்துடன் செயல்பட்ட போது, இதுவரை நிகழ்ந்த அசம்பாவிதங்களில்
முதலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வீட்டைத்தான் முதலில் தட்டு வார்கள்.
அப்புறம் ஆளை தட்டுவார்கள். சரியான ஆளை தப்பிக்கவிட்டு தப்புத் தப்பாக
எல்லாமே செய்வார்கள். தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் விதம் அதிர்ச்சியளிக் கக்
கூடியதாகவே இருக்கிறது.

இந்நிலையில் உள்நாட்டு தீவிரவாதம்
வெளிநாட்டு பயங்கரவாதம் என வகையாய் பிரச்சாரம் செய்வது மட்டும் போதாது.
இந்திய மக்கள் அனைவரின் நம்பிக் கையைப் பெறும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு
நடவடிக்கையில் உறுதி காட்ட வேண்டும்.

நாட்டில் எத்தனையோ
விசாரணைகள் குறித்து கவலைப்படாத பாஜக தலைவர் அத்வானி, பெண் சாமியார்
கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறி மிகப் பெரிய அழுகுணி ஆட்டமே ஆடினார்.
இதற்காக நாம் அத்வானியைக் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அதற்கு பணிந்து நடந்த
மன்மோகன்சிங் மீதுதான் நமது ஆதங்கம் அதிகரிக்கிறது. அத்வானி போன்றவர்களின்
அதீத ஆர்வம் மாலேகான் வழக்கின் கதி இனி என்ன ஆகும் என்ற கேள்வியையும்,
மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள்
தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட
அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட பயங்கரமும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது.
இதுவும் நாட்டு மக்கள் ஏராள மானவர்களுக்கு பல்வேறு சந்தேகங் களை
எழுப்பியுள்ளது.

இந்நிலையில் மும்பை பயங்கரவாதிகளின் பிடியில்
சிக்கிய அதிர்ச்சி செயல் நம் மனதை வெகுகாலம் வேதனைப்படுத்திக்
கொண்டிருக்கக் கூடும். வெளிநாட்டு தீவிரவாதமோ உள்நாட்டுத் தீவிர வாதமோ
எதுவாக இருப்பினும் அதனை எதிர்கொள்ள வேண்டிய கடமை ஒவ் வொரு இந்தியனுக்கும்
உண்டு. இந் நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி வரை ராணுவத்திற்கென
செலவழிக்கப் படுகிறது. காவல்துறைக்கும் கோடி கோடியாக கொட்டப்படுகிறது.
ஆனால் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடும்போது 10 மணி நேரம் கழித்தே
நடவடிக்கையில் இறங்கும் அவல நிலையே நாம் காணும் காட்சியாகியிருக்கிறது.

ராணுவத்தில் ஆகட்டும், என்.எஸ்.ஜி. என்ற தேசிய கமாண்டோ படையிலும் மற்றும்
பல பாதுகாப்பு படைகளிலும், ரா உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளிலும்அனைத்து
தரப்பு மக்களை அதிக அளவு சேர்க்க வேண்டும். அரசுகள் பயங்கரவாதத்தை
எதிர்கொண்ட விதம் பரிதாபத்தை வரவழைத்தது.

எனவே நாட்டை
அச்சுறுத்தும் நிஜமான பயங்கரவாதத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த
அனைத்து மாணவர் களுக்கும் பள்ளி இறுதி படிப்பு காலத்தி லேயே இரண்டு அல்லது
மூன்று வருடங்கள் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்க இந்திய அரசு முன்வர வேண்
டும். அதற்கான முதற்கட்ட முன்னேற் பாடுகளைத் தொடங்க வேண்டும்.


அப்போதுதான் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதம் குறித்து பயங்கரமாக
கட்டுக்கதைகள் பரப்பும் சக்திகளையும், தாங்களே சதிகளை செய்து அப்பாவிகள்
மீது பழிபோடும் பயங்கரவாத சதிக் கும்பலையும், வெளிநாட்டு சதி என்று
கூப்பாடு போட்டுக் கொண்டு நம்நாட்டில் - நமது வரிப் பணத்திலே டேரா போட்டு
காலத்தைத் தள்ளலாம் என திட்டமிட்டுக் கொண்டிருக்கும் மாடி வீட்டு பிச்சைக்
காரனின் (!) பயங்கரவாதத்தையும் அம்பலப்படுத்தி அழித்தொழிக்க முடியும்.

மறைக்கப் பட்ட உண்மை என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும். அன்றைய நாள்
உண்மயான பயங்கரவாதிகளும் பயங்கரவாதமும் இணைத்து நசுக்கப்படும். உண்மை
நீண்டநாள் உறங்காது; இறுதியில் சத்தியமே வெல்லும்; நீதி நிலைபெறும்.

நன்றி - இனியவன்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மாவீரன் கர்கரேயைக் கொன்றது யார்? Empty Re: மாவீரன் கர்கரேயைக் கொன்றது யார்?

Post by ansar hayath Tue 19 Feb 2013 - 21:57

இறுதியில் சத்தியமே வெல்லும் @. :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» ஜொள்ளு கலந்த அரட்டை யார் யார் உள்ளே வாரிங்க....
» ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum