சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Today at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

கண்ணதாசனின் பாவமன்னிப்பு! Khan11

கண்ணதாசனின் பாவமன்னிப்பு!

Go down

கண்ணதாசனின் பாவமன்னிப்பு! Empty கண்ணதாசனின் பாவமன்னிப்பு!

Post by rammalar Wed 8 Aug 2018 - 17:29

கண்ணதாசனின் பாவமன்னிப்பு! 826859810153052581012795817281%20Kannadasan



கண்ணதாசனின் பாவமன்னிப்பு! 180251330153052581420700799132%20Paava%20Mannippu%20padathil%20Devika,%20%20Sivaji

‘பாவ­மன்­னிப்பு’,  தமிழ் திரை­யி­சை­யில் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­திய திரைப்­ப­டம். ‘பாவ­மன்­னிப்பு’, ‘பாச­ம­லர்’, ‘பாலும் பழ­மும்’  என்று 1961ல் அடுத்­த­டுத்து வந்த  படங்­க­ளில் அமைந்த பாடல்­கள், ஒரு புதிய மெல்­லிசை அலையை மட்­டு­மல்ல, ஒரு கண்­ண­தா­சன் அலை­யை­யும் ஏற்­ப­டுத்­தின.

ஐம்­ப­து­க­ளில் வந்த பெரும்­பா­லான படங்­க­ளில் ஒவ்­வொரு படத்­தி­லும் இரண்டு, மூன்று பாட­லா­சி­ரி­யர்­க­ளா­வது பாடல்­கள் எழு­து­வார்­கள். இதற்கு விதி­வி­லக்­கு­கள் இருக்­கத்­தான் செய்­தன: ‘அலி­பா­பா­வும் 40 திரு­டர்­க­ளும்’ படத்­தில் அ.மரு­த­காசி அனைத்­துப் பாடல்­க­ளை­யும் எழு­தி­னார்.

 ‘கல்­யாண பரிசு’ படத்­தில் எல்லா பாடல்­க­ளை­யும் பட்­டுக்­கோட்டை கல்­யா­ண­சுந்­த­ரம் எழு­தி­னார். ‘வீர­பாண்­டிய கட்­ட­பொம்­மன்’ படத்­தின் பாடல்­களை எல்­லாம் கு.மா. பால­சுப்­ர­ம­ணி­யம் எழு­தி­னார்.
ஆனால், கண்­ண­தா­ச­னைப் பொறுத்­த­வரை, ஐம்­ப­து­க­ளில் அவரே ‘மாலை­யிட்ட மங்கை’, ‘சிவ­கங்கை சீமை’ என்று படங்­கள் தயா­ரித்­த­போ­து­தான், அவற்­றின் அனைத்­துப் பாடல்­க­ளை­யும் எழு­த­மு­டிந்­தது! 

 அவரை பாடல் ஆசி­ரி­ய­ராக மதித்­த­வர் குறைவு. ‘பா’ வரி­சைப் படப்­பா­டல்­க­ளின் அமோ­க­மான வெற்­றிக்­குப் பிறகு, அத்­த­கைய வாய்ப்­பு­கள் அவ­ரைத் தேடி அலை­மோ­தின. அவரே கூட படங்­க­ளின் அனைத்­துப்­பா­டல்­க­ளை­யும் தானே எழு­தத்­தான் விரும்­பி­னார்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கண்ணதாசனின் பாவமன்னிப்பு! Empty Re: கண்ணதாசனின் பாவமன்னிப்பு!

Post by rammalar Wed 8 Aug 2018 - 17:29

பிறகு, அவர் 1981ல் மறை­யும் வரை அவ­ரு­டைய சினிமா பாடல்­கள் எழு­தும் வேலை­யில் பல ஏற்­றத்­தாழ்­வு­கள் இருந்­தன என்­பது உண்­மை­தான். ஆனால், அவர் இறந்து நாற்­பது வரு­டங்­கள் ஆகப்­போ­கும் இன்­றைய நிலை­யி­லும், இது­வரை திரைப்­பா­டல்­கள் எழு­தி­ய­வர்­க­ளில் அவ­ருக்­குத்­தான் முதல் ஸ்தானம் என்­ப­தில் எந்த மாற்­ற­மும் இல்லை! இந்த விஷ­யத்­தில் ஒரு சில­ருக்கு நிறைய ஏமாற்­றம் உண்டு!

அறு­ப­து­க­ளின் தொடக்க ஆண்­டு­க­ளில், வெற்­றி­யின் சந்­தோ­ஷத்­தில் குளித்­த­ப­டியே, திரைப்­பா­டல்­கள் குறித்­துக் கண்­ண­தா­சன் சொன்ன விஷ­யங்­க­ளில் முக்­கி­ய­மான ஒன்று -- ‘‘பாட்டு என்­பது வெறும் படத்­துக்­காக அல்ல, தனித்து நிற்க வேண்­டும்’’.

என்­னது, வெறும் படமா? படம் முக்­கி­யம் இல்­லையா? பாட்டு தனி­யாக நிற்­க­வேண்­டுமா? படத்­தோடு பாடல் இணைந்து போக­வேண்­டும் என்று சினிமா மேதை­கள் சொல்­லிக்­கொண்­டி­ருக்­கும் போது இந்­தக் கவி­ஞர் என்ன பாடல்­கள் தனி­யாக நிற்­க­வேண்­டும் என்­கி­றார்? இப்­ப­டி­யெல்­லாம் மன­தில் கேள்­வி­கள் எழ­லாம்.

அந்­தக் கேள்­வி­க­ளுக்­குப் பதில், பாடல் படத்­தோடு ஒட்­டா­மல் இருக்க வேண்­டும் என்று கவி­ஞர் சொல்­கி­றார் என்று எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டாது. காட்­சிக்­கும் கேரக்­ட­ருக்­கும் ஏற்­ற­படி எழு­தக்­கூ­டி­ய­வர் என்று அவர் புக­ழப்­பட்­டார்.  ஏதோ  காட்­சிக்­காக மட்­டும் பாடல் என்று நினைத்­துப் பாட­லை­யும் அதன் காட்­சிப்­ப­டுத்­த­லை­யும் தக்­கை­யாக விட்­டு­வி­டக்­கூ­டாது. பாட­லும் அதன் காட்­சி­யும் மிக­வும் முக்­கி­யம் என்று நினைக்க வேண்­டும் என்­கி­றார் கவி­ஞர்.

‘பாவ மன்­னிப்பு’ படத்­தைப் பார்த்­தால் பாடல்­கள் தனி­யாக நிற்­கும்­ப­டித்­தான் அமைந்­தி­ருக்­கின்­றன.
தன்­னு­டைய காதலி தங்­கத்­தைக் குறித்து, பல­வி­த­மான கற்­ப­னை­கள் செய்து, ராஜன் (ஜெமினி கணே­சன்) பூங்­கா­வில் பாடும் பாடல் -- ‘காலங்­க­ளில் அவள் வசந்­தம்’.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கண்ணதாசனின் பாவமன்னிப்பு! Empty Re: கண்ணதாசனின் பாவமன்னிப்பு!

Post by rammalar Wed 8 Aug 2018 - 17:30

கண்ணதாசனின் பாவமன்னிப்பு! 450956106153052583318841970433%20Maadhangalil%20Naan%20Maargazhi%20-%20Geethaiyil%20Kannanகண்ணதாசனின் பாவமன்னிப்பு! 136284666153052585410744455494%20Vandha%20Naal%20Mudhal%20Paadalin%20Moola%20Karuthai%20Thandha%20Kavi%20Pradeep

இஸ்­லா­மி­யர்­க­ளின் கொண்­டாட்­டப் பாட­லாக, ரஹீம் (சிவாஜி கணே­சன்) பாடும் பாடல், ‘எல்­லோ­ரும் கொண்­டா­டு­வோம்’.

ரஹீம் சைக்­கிளை மிதித்­த­படி, ரம்­மி­ய­மான இயற்கை சூழ­லில், மனி­த­கு­லம் இப்­ப­டி­யெல்­லாம் மாறி­விட்­டதே என்று வருந்­திப் பாடி வரும் பாடல், ‘வந்த நாள் முதல்’.
இரண்டு பெண்­கள் (சாவித்­திரி, தேவிகா), தங்­கள்  காத­லர்­களை நினைக்­கும் நிலை­யில் வெளிப்­ப­டும் பாடல், ‘அத்­தான், என்­னத்­தான்’.

ஆணின் ஹம்­மிங்­கு­டன் அமைந்த ஒரு காதல் டூயட், ‘பாலி­ருக்­கும் பழ­மி­ருக்­கும்’.
சோகத்­திற்­கும் மகிழ்ச்­சிக்­கும் இடையே ஊச­லா­டும் மன­து­டன் நாய­கன் ரஹீம் பாடு­வது, ‘சிலர் சிரிப்­பார் சிலர் அழு­வார்’.

இந்­தப் பாடல்­களை வெட்­டி­விட்­டா­லும், கதை நகர்ந்து கொண்­டு­தான் இருக்­கும். ஆனால், இந்­தப் பாடல்­க­ளுக்­கா­கவே படம் பார்க்க திரை அரங்­கம் செல்­லும் ரசி­கர்­கள், பாடல்­களை ஏன் வெட்­டி­னீர்­கள் என்று கலாட்டா செய்­வார்­கள்!

நாட­க­மே­டை­யில் ஒரு பாடலை பாடி­விட்டு இறந்து போவ­தாக நடிப்­ப­வர், ‘ஒன்ஸ் மோர்’ கேட்­டால், எழுந்து பாடலை பாடி­விட்டு மீண்­டும் செத்­துப்­போ­வார் என்று சொல்­வார்­கள்! திரை­ய­ரங்­கு­க­ளில் கூட இந்த ‘ஒன்ஸ்­மோர்’ கூக்­கு­ரல் இருந்­தி­ருக்­கி­றது. 

சுதந்­தி­ரப்­போ­ராட்­டக் காலத்­தில், தேச பக்­திப் பாடல்­கள் வரும் ரீல்­களை மீண்­டும் மீண்­டும் சுழற்றி திரும்ப திரும்ப போடு­வார்­க­ளாம். ‘அன்­பிற்­கும் உண்டோ அடைக்­கும் தாழ்?’ என்று கேட்­டார் திரு­வள்­ளு­வர். அதே போல், ஆர்­வத்­திற்­குத்­தான் கட்­டுப்­பா­டு­கள் உண்டா?

தன்னை வெற்­றிப்­ப­டி­யில் ஏற்­றிய ‘பாவ மன்­னிப்பு’ பாடல்­க­ளைப் பற்றி, கண்­ண­தா­சன் இன்­னொரு விஷ­ய­மும் கூறி­யி­ருக்­கி­றார். ‘‘இந்த இடத்­திற்கு இப்­ப­டித்­தான் கருத்­தி­ருக்க வேண்­டும் என்று நான் எந்த வரம்­பை­யும் வைத்­துக்­கொள்­வ­தில்லை. பல நேரங்­க­ளில் உற்­சா­க­மாக எனக்­குத்­தோன்­று­கிற பொதுப் பாடல்­க­ளைப் படங்­க­ளில் நுழைத்­தி­ருக்­கி­றேன். இதில் எனக்­குத் துணை­யாக இருந்­த­வர் பீம்­சிங் ஆவார்.

 ‘பாவ­மன்­னிப்பு’, ‘பாலும் பழ­மும்’ படங்­க­ளில் பெரும்­பா­லான பாடல்­கள் பொதுப்­பா­டல்­க­ளாக பிறந்த பாடல்­கள்­தான்.’’  தமிழ் படப்­பா­டல்­கள் பொது­வாக இந்த வகை­யைச் சேர்ந்­த­வை­தானோ?
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கண்ணதாசனின் பாவமன்னிப்பு! Empty Re: கண்ணதாசனின் பாவமன்னிப்பு!

Post by rammalar Wed 8 Aug 2018 - 17:30

இயக்­கு­ந­ரி­ட­மி­ருந்து இவ்­வ­ளவு சுதந்­தி­ரம் பெற்று, ‘பாவ­மன்­னிப்பு’ பாடல்­க­ளுக்­கான வரி­களை எழுத அமர்ந்த கண்­ண­தா­சன் மன­தில் எத்­தனை கற்­ப­னை­கள் சிற­க­டித்­தி­ருக்­க­வேண்­டும்!  

திரா­விட இயக்­கத்­தின் சொல்­ல­டுக்­கு­கள் திகட்­டிப்­போய், கண்­ண­னின் குழ­லி­சைக்கு கண்­ண­தா­சன் செவி­சாய்க்­கத் தொடங்­கி­யி­ருந்த நேரம் அது.  பக­வத் கீதை­யின் ‘விபூதி யோகம்’ என்ற பகு­தி­யில், கிருஷ்ண பர­மாத்மா அர்­ஜு­ன­னுக்கு விஸ்­வ­ரூ­பம் காட்­டு­கி­றார். ‘வானத்­தில் நான் சூரி­யன், மேகங்­க­ளில் நான் மழை மேகம், வேதங்­க­ளில் நான் சாம­வே­தம், மாதங்­க­ளில் நான் மார்­கழி’ என்­ப­து­போல் சிறப்­பா­ன­வற்றை வரி­சைப்­ப­டுத்தி, அவை­யெல்­லாம் பக­வா­னான என்­னு­டைய சிறப்­பைத்­தான் பிர­தி­ப­லிக்­கின்­றன” என்று பார்த்­த­னுக்கு எடுத்­து­ரைக்­கின்­றார்.

பக­வான் இந்த வகை­யில் வெளிப்­ப­டுத்­திய உத்­தியை, காத­லி­யைக் குறித்து காத­லன் பாடும் பாட்­டில் கண்­ண­தா­சன் பயன்­ப­டுத்­திக்­கொண்­டார்! ‘காலங்­க­ளில் அவள் வசந்­தம், கலை­க­ளில் அவள் ஓவி­யம், மாதங்­க­ளில் அவள் மார்­கழி, மலர்­க­ளிலே அவள் மல்­லிகை’ என்று எளி­மை­யான அழ­கு­டன் வரி­க­ளைத் தொடுத்­துச் சென்­றார் கண்­ண­தா­சன். இப்­ப­டியே பட்­டி­யல்­போட்­டுக்­கொண்­டு­போ­னால் சலிப்­புத்­த­ரும் அல்­லவா? அத­னால், தான் இப்­ப­டி­யெல்­லாம் அடுக்­கு­வ­தற்­கான கார­ணத்­தைக் கூறு­வ­து­போல், ‘அவள் கவி­ஞன் ஆக்­கி­னாள் என்னை’ என்று அற்­பு­த­மாக முடித்­தார்.

மத நல்­லி­ணக்­கத்­தைச் சொல்­வ­தாக நினைத்­துக்­கொண்டு, பீம்­சிங் ‘பாவ­மன்­னிப்பு’ படத்தை எடுத்­தி­ருந்­தார். அவ­ரு­டைய புத்தா பிலிம்ஸ் ஸ்தாப­னத்­தின், ‘புத்­தம் சர­ணம் கச்­சாமி’ என்ற பவுத்த பிர­க­ட­னத்­து­டன் படம்  தொடங்­கி­யது. ‘பாவ­மன்­னிப்பு’ என்ற படப்­பெ­யர் கிறிஸ்­தவ சமய பழக்­கங்­க­ளில் ஒன்­றைக் குறிப்­பிட்­டது. படத்­தின் மகா வில்­லன் (எம்.ஆர். ராதா), காமாட்சி, மீனாட்சி என்று பேசி பித்­த­லாட்­டம் செய்­யும் ஒரு கொலை­கா­ரன். 

படத்­தில் அவன் இந்து மதப் பிர­தி­நிதி!   ஜேம்ஸ் என்ற கிறிஸ்­த­வர் மிக­வும் நல்­ல­வர். ஊருக்கு உப­காரி. தன்­னி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட மாணிக்­கம் பிள்­ளை­யின் குழந்­தையை மேரி என்ற பெய­ரில் வளர்க்­கி­றார். ரஹீம் என்ற கதா­நா­ய­க­னின் வளர்ப்­புத் தந்­தை­யான இஸ்­லா­மி­யர், சேரி­யில் இருப்­ப­வர்­க­ளுக்கு வைத்­தி­யம் பார்க்­கும் உத்­த­மர். ‘பாவ மன்­னி’ப்­பில், இந்த வகை­யில் சம­யங்­கள் அடை­யா­ளம் காட்­டப்­பட்­டி­ருந்­தன.

‘பாரதி வைத்­தி­ய­சாலை’ என்ற பெயர் பொறிக்­கப்­பட்ட கூடை­யு­டன் கூடிய சைக்­கிளை,  பறந்த வெளி­க­ளுக்கு இடையே ரஹீம் ஓட்டி வரு­கி­றான். அப்­போது அவன் சிந்­த­னைச் சித­ற­லாக ஒலிக்­கிற பல்­ல­வி­யின் முக்­கிய வரி, ‘மனி­தன் மாறி­விட்­டான், அவன் மதத்­தில் ஏறி­விட்­டான்’. படம் வெளி­வந்த 1961ல், யாருக்கு மதா­பி­மா­னம் பெரி­தா­கப்­போய்­விட்­டது என்று பீம்­சிங்­கும் அவ­ரு­டைய பார்ட்­னர்­க­ளில் ஒரு­வ­ரான வச­ன­கர்த்தா சோலை­ம­லை­யும் கவ­லைப்­பட்­டார்­கள்? 

மதா­பி­மா­னத்­தால் பாரத தேசம் பிரிக்­கப்­பட்­டி­ருந்­தது. பாகிஸ்­தான் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆகஸ்ட் 17, 1947 அன்று கோல்­கட்­டா­வின் வீதி­க­ளில் வெடித்த வன்­முறை மூன்று நாட்­கள் தொடர்ந்து, 4,000 உயிர்­க­ளைக் காவு கொண்­டது.  நாட்­டின் பிரி­வி­னை­யின் போது பஞ்­சாப்­பி­லும் வங்­கா­ளத்­தி­லும் மொத்­தம் பத்து லட்­சத்­திற்கு  மேற்­பட்­ட­வர்­கள் கொல்­லப்­பட்­டார்­கள். 

இந்­தப் பின்­ன­ணி­யைக் கொண்ட ‘நாஸ்­திக்’ (1954) என்ற இந்தி திரைப்­ப­டத்­தில் கவி­ஞர் பிர­தீப் என்­ப­வர், தான் எழு­திய ஒரு பாடலை தன் குர­லி­லேயே பாடி­னார். பாகிஸ்­தா­னின் உரு­வாக்­கத்­தால் ஊரை­யும், உட­மை­க­ளை­யும், உற­வி­னர்­க­ளை­யும் இழந்து, ரயி­லில் இந்­தி­யாவை நோக்கி வரும் அக­தி­க­ளின் கூக்­கு­ர­லாக ஒலித்­தது அவர் எழு­திப்­பா­டிய, ‘தேக் தேரா இன்­ஸா­னுகா ஹாலத், கியா ஹோ கயா பக­வான், கித்னா பதல் கயா இன்­ஸான்’ என்ற பாடல்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கண்ணதாசனின் பாவமன்னிப்பு! Empty Re: கண்ணதாசனின் பாவமன்னிப்பு!

Post by rammalar Wed 8 Aug 2018 - 17:30


பாட­லின் சந்­தத்­தி­லேயே தர­வேண்­டும் என்­றால், அதன் கருத்தை, ‘படைத்த மனி­த­னின் நிலை­யைப் பாரு, என்­ன­தான் ஆச்சு இறைவா, மனி­தன், மாறிய கதையை சொல்­லவா?’என­லாம். இதைத் தொட­ரும் வரி­க­ளில், சூரி­ய­னும் மாற­வில்லை, சந்­தி­ர­னும் மாற­வில்லை, வான­மும் மாற­வில்லை, மனி­தன் மாறி­விட்­டான் என்று பொருள்­பட கவி பிர­தீப் எழு­தி­னார்.

இந்த விஷ­யங்­கள்­தான், ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை, வானம் மாற­வில்லை, வான் மதி­யும் மீனும் கடல் காற்­றும், மல­ரும் மண்­ணும் கொடி­யும் சோலை­யும்’ என்று இசை­ய­மைப்­பா­ளர்­கள் விஸ்­வ­நா­தன் – ராம­மூர்த்தி தந்த சந்­தத்­திற்கு ஏற்­ற­வாறு, கண்­ண­தா­சன் வார்த்­தை­களை அடுக்­கி­னார்.
இந்­திப் பாட­லில், ‘ஆயா ஸமய் படா பேடங்கா, ஆஜ் ஆத்மி பனா லபங்கா’ என்று கவி பிர­தீப் தொடர்ந்­தார்.   

அதன் பொருள் -- மிக மோச­மான காலம் வந்­தது, மனி­த­ரின் தீய கோலம் வந்­தது. இதைத்­தான், ‘நிலை மாறி­னால் குணம் மாறு­வான்’ என்று எழு­தி­னார் கண்­ண­தா­சன். ஒன்­றி­லி­ருந்து ஒன்று வந்­தது என்று இசைக்­கும் மெட்­டுக்­கும் எம்.எஸ். விஸ்­வ­நா­தன் கூறு­வார். இந்­தப் பாட­லைப் பொறுத்­த­வரை, பாடல் வரிக்­கும் அது பொருந்­திப்­போ­னது!

‘கல்­லைத்­தான் மண்­ணைத்­தான் காய்ச்­சித்­தான் குடிக்­கத்­தான் கற்­பித்­தானா’ என்று ராமச்­சந்­திர கவி­ரா­யர் என்ற கவி­ஞர், தான் படும் வயிற்­றுப்­ப­சி­யின் பாட்டை ‘தான்’ போட்டு தாளித்­தார். ‘தானை’ தொடர்ந்து பயன்­ப­டுத்­தும் உத்­தியை இந்­தப் பாட்­டி­லி­ருந்து எடுத்­துக்­கொண்ட கண்­ண­தா­சன், ‘அத்­தான், என்­னத்­தான், அவர் என்­னைத்­தான், எப்­ப­டிச் சொல்­வே­னடி’ என்று வெளியே கூற­மு­டி­யா­ததை அழ­கா­கக் கூறா­மல்­தான் விட்­டார்!

எத்­த­னையோ புல்­லாங்­கு­ழல் மேதை­கள் வாசித்­தா­லும் மாலி­யின் குழ­லி­சை­யில் ஒரு தனி ஜீவன் இருக்­கும். எல்லா ஓசை­க­ளும் அடங்­கிய பின்­னர் வரும் இன்­னி­சை­யாக அது மட்­டும் ஒலிக்­கும். ‘அத்­தான்’ பாட­லும் அப்­ப­டித்­தான். என்­னடா இது பொத்­தான் பாடல் என்று நினைத்­த­வர்­களே இதை சத்­தான பாடல் ஆக்­கி­விட்­டார்­கள்! நிசப்­த­மான நீள்­வா­னில் கண்­சி­மிட்­டும் நித்­தி­லங்­கள் போல், அது அமை­தி­யாக இசை அலை­க­ளை­யெ­ழுப்­பிக்­கொண்­டி­ருக்­கி­றது! 

அக்­கார்­டி­ய­னின் அழ­கான நாதத்­திற்­கும் ‘தானின்’ எழில்­கோ­லத்­திற்­கும் மெல்­லி­சை­யின் ரம்­மி­ய­மான புது தொனிக்­கும் இந்­தப் பாட்டு ஒரு எடுத்­துக்­காட்டு. கண்­ண­தா­சன் அங்­கி­ருந்து எடுத்­தார், இங்­கி­ருந்து எடுத்­தார் என்று கூறு­வ­தல்ல இதன் நோக்­கம்...எவ்­வ­ளவு அழ­கா­கத் தொடுத்­தார் என்று காட்­டு­வ­து­தான்!
கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 134
நன்றி- தினமலர்-நெல்லை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கண்ணதாசனின் பாவமன்னிப்பு! Empty Re: கண்ணதாசனின் பாவமன்னிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum