சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35

» பல்சுவை
by rammalar Yesterday at 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா..? Khan11

மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா..?

2 posters

Go down

மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா..? Empty மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா..?

Post by *சம்ஸ் Wed 10 Nov 2010 - 22:45

மழைத்துளிகள் என்றாலே ஒரு வித பரசவம் மனதில் எழுவது இயல்பு. இயற்கை அன்னையின் அந்த சவரில் (shower) குளிக்க விரும்பாத ஜென்மங்களே இருக்க முடியாது எனலாம்.

அந்த மழைத்துளிகள், வளிமண்டலத்தில் உள்ள நீராவி வெப்ப நிலைக் குறைவால்.. தூசித்துணிக்கைகளில் படிந்து முகிலாக அந்த முகில்கள் மேலும் குளிர்ச்சியடையும் போது நீர்த்துளிகளாகி நிறை அதிகரிப்பின் விளைவாக பூமியை நோக்கி விழுகின்றன.

அவ்வாறு விழும் நீர்த்துளிகள் கோளமாக வெவ்வேறு அளவுகளில் இருப்பதை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே காணலாம். ஏன் அவை அப்படி இருக்கின்றன என்பதை விஞ்ஞானிகளும் ஆராயத் தவறவில்லை.

வளிமண்டலத்தில் உள்ள காற்றின் கூறுகள் மழைத்துளிகளின் பூமி நோக்கிய இயக்கத்தை எதிர்ப்பதால் மழைத்துளிகளுக்கும் காற்றுத் துணிக்கைகளுக்குமிடையே உராய்வு உருவாகி ஒன்றின் பயணத்தை மற்றையது இடையூறு செய்ய முற்படுவதால் அந்த உராய்வைக் குறைக்கும் நோக்கோடு மழைத்துளிகள் சாத்தியமான சிறிய மேற்பரப்பை உருவாக்கும் வகையில் கோள அமைப்பைப் பெறுவதாகவும் இதற்கு நீரின் மேற்பரப்பு இழுவிசை (Surface tension) உதவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

அப்போ ஏன் மழைத்துளிகள் ஒரு சீராக இன்றி வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன என்று கேட்டால் அதற்கு மழைத்துளிகள் விழும் போது ஒன்றை ஒன்று முட்டி மோதி சேர்வதும் பிரிவதும் நிகழ்வதால் அவற்றின் பருமன் மாறுபடுகின்றன என்றும் கூறினர் விஞ்ஞானிகள்.

"குறிப்பிட்ட அளவு பருமனுடைய மழைத்துளிகள் காற்றில் பயணிக்கும் போது அடையும் உருவ மாற்றங்கள்."ஆனால் விஞ்ஞானிகள் மழைத்துளிகளின் பருமன் வேறுபடுவதற்கு அளித்த விளக்கம் அத்துணை சரியானதல்ல. மழைத்துளிகளின் பருமன் மாறுபட அவை வளிமண்டலத்தினூடு வேகமாக பயணிக்கும் போது ஏற்படும் காற்றுத் துணிக்கைகளுடனான மோதல் செல்வாக்கால் அவை அடையும் உருமாற்றங்களும் அதனால் ஏற்படும் சிதறல்களுமே காரணம் என்று தற்போது கண்டறிந்துள்ளனர்.

இதைக் கண்டறிய அதி வேக கமரா ஒன்றை விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர். இந்தக் கமரா கொண்டு விநாடிக்கு 600க்கும் மேற்பட்ட சொட்களை (shots) எடுக்க முடியும். இதனை கொண்டு முகிலில் இருந்து விழும் மழைத்துளியைப் படம்பிடித்த போதே இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும்.. இது எப்போதும் எங்கும் சரியாக அமையுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்த விளக்கம் குறிப்பிடத்தக்க அளவு பருமனுடைய பெரிய மழைத்துளிகளுக்கு பொருந்துகின்ற போதும் சிறிய மழைத்துளிகளுக்கு பொருந்துவதாக இல்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா..? Empty Re: மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா..?

Post by kalainilaa Thu 11 Nov 2010 - 22:30

மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா..? 930799 மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா..? 930799
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum