Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் ராகுல்காந்தியை தேர்வு செய்துள்ளனர்.
2 posters
Page 1 of 1

ராகுல்காந்தி அடுத்த பிரதமர்: கருத்துக் கணிப்பில் தகவல்
அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் ராகுல்காந்தியை தேர்வு செய்துள்ளனர்.
இந்திய அரசியலில் புகழ் பெற்றவர்கள் என்ற தலைப்பில் சி.என்.என். ஐ.பி.என். மற்றும் சின்பிசி - டி.வி. 18 ஆகிய தொலைக்காட்சி சனல்கள் ஒருங்கிணைந்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
19 மாநிலங்களில் சுமார் 39 ஆயிரம் பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டன. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு வெறும் 6சதவீத ஆதரவையே பெற்றிருந்த ராகுல்காந்தி தற்போது பிரதமர் பதவி தேர்வில் முதல் இடத்துக்கு வந்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக மன்மோகன்சிங், சோனியாகாந்தி இருவருக்கும் தலா 10 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரது செல்வாக்கும் மக்களிடம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 1999ம் ஆண்டு முதல் 2008 வரை சோனியா காந்தி தான் பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது.
தற்போது சோனியாவுக்கு அந்த அளவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. பா.ஜ.க. தலைவர்களுக்கு மக்கள் மனதில் அதிக இடம் இல்லை என்பதும் கருத்துக் கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. 2009ம்ஆண்டு அத்வானிக்கு மக்களிடம் 15 சதவீதம் ஆதரவு இருந்தது. தற்போது அது 4 சதவீதமாக குறைந்து விட்டது.
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 2009ல் 2 சதவீதம் பேர்தான் கூறி இருந்தனர். ஆனால் தற்போது நரேந்திர மோடிக்கு 5 சதாவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரதமர் பதவியில் மன்மோகன்சிங்கின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு 56 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த 2009ல் மக்களில் 70 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்திருந்தனர். தற்போது அது குறைந்துள்ளதால், பிரதமர் மன்மோகன் சிங் மீது அதிருப்தி அதிகமாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
மன்மோகன்சிங் செயல்பாடுகளில் அதிருப்தியுடன் உள்ளதாக 2007ல் 16சத வீதம் பேரும், 2009ல் 17சதவீதம் பேரும் கூறி இருந்தனர். அந்த அதிருப்தி தற்போது 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பிரதமர் பதவியில் மன்மோகன்சிங் நீடிக்க வேண்டுமா, கூடாதா என்ற கேள்விக்கு 33 சதவீதம் பேர் அவரை உடனே மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். 22 சதவீதம் பேர்தான் மன்மோகன்சிங் பிரதமர் பதவியில் நீடிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். மன்மோகன்சிங் பிரதமர் பதவியில் இருந்துவிட்டு போகட்டும் என்று காங்கிரஸ்காரர்களில் 33 சதவீதம் கூறியுள்ளனர். ஆனால் கூட்டணி கட்சிக்காரர்களில் 25 சதவீதம் பேர் பிரதமர் பதவிக்கு மன்மோகன்சிங் சரியானவர் அல்ல என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மன்மோகன்சிங் பிரதமர் பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் அடுத்து யாரை பிரதமராக்க வேண்டும் என்று கருத்துக்கணிப்பில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 42 சதவீதம் பேர் ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்க ளித்துள்ளனர்.
இதன் மூலம் அடுத்த பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தியை பெரும்பாலானவர்கள் விரும்புவது தெரியவந்துள்ளது. பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம் இருவருக்கும் தலா 7 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித் துள்ளனர். என்றாலும் பிரதமர் மன் மோகன்சிங் நல்ல மனிதர், ஊழலை கட்டுப்படுத்த அவர் முயற்சி செய்து கொண்டிருப்பதாக 27 சதவீதம் பேர் கூறி உள்ளனர். ஆனால் ஊழலை ஒழிக்க மன்மோகன்சிங் எதுவும் செய்யவில்லை என்று 31 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க. வுக்கு தலைமை ஏற்க தகுதியானவர் யார்? என்று ஒரு கேள்வி மக்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு 19 சதவீம் பேர் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளனர். பா.ஜ.க. தொண்டர்களிலும் 33 சதவீதம் பேர் மோடியைத்தான் விரும்புவது தெரிய வந்துள்ளது. நரேந்திர மோடிக்கு அடுத்த இடத்தில் சுஷ்மா சுவராஜ் 15 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ராஜ்நாத் சிங்குக்கு 7 சதவீதம், அருண்ஜெட்லிக்கு 4 சதவீத ஆதரவு உள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் ராகுல்காந்தியை தேர்வு செய்துள்ளனர்.
தல நானும் பதிந்து உள்ளேன் .பார்க்கவில்லை போலும் .
நல்லது நான் அதை எடுத்து விடுகிறேன் .
நல்லது நான் அதை எடுத்து விடுகிறேன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் ராகுல்காந்தியை தேர்வு செய்துள்ளனர்.
கருத்துக்கள் மாறி மாறி இருந்தது மாஸ்டர் மேலோட்டமாக படித்தேன் மன்னிக்கவும் மாஸ்டர்kalainilaa wrote:தல நானும் பதிந்து உள்ளேன் .பார்க்கவில்லை போலும் .
நல்லது நான் அதை எடுத்து விடுகிறேன் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நம்பர் 1 யார், நம்பர் 2 யார் என்ற கேள்விக்கு இதுவரை விடை இல்லை
» தமிழகத்தில் 52 சதவீதம் பேர் கிராமவாசிகள்-மொத்த மக்கள் தொகை 7,21,38,958
» அடுத்த புன்னகை அரசி யார் - (சிநேகாவுக்கு பிறகு)
» செவ்வாய் கிரகத்தில் குடியேற 1,058 பேர் தேர்வு
» ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதன்மை தேர்வு சென்னையில் 754 பேர் எழுதினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|