Latest topics
» பூக்கள்by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
பங்குச்சந்தைகளை ஆட்டி பார்க்கும் கிரீஸ் பிரச்னை முடிந்தபாடில்லை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பங்குச்சந்தைகளை ஆட்டி பார்க்கும் கிரீஸ் பிரச்னை முடிந்தபாடில்லை
"கிரீஸ் தனது கடன் சுமையில் இருந்து வெளியே வரவேண்டுமானால், முறையான வரி விதிப்பு மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்' என சர்வதேச நிதியமைப்பு (ஐ.எம்.எப்.,) கூறியுள்ளது. இந்நிலையில், கிரீசின் பொருளாதார நிலை மீதான சந்தேகத்தால் நேற்றும் ஐரோப்பிய, ஆசிய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டது. அக்டோபர் 15ம்தேதிக்குப் பின் அன்றாடச் செலவுக்கே திண்டாட வேண்டிய நிலையில் உள்ளதாக அறிவித்த கிரீஸ், மேலும் அதிக நிதியுதவிக்காக, ஐ.எம்.எப்., ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய யூனியன் ஆகிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே நடந்த ஐரோப்பிய நிதியமைச்சர்கள் மாநாட்டில் கிரீசுக்கு இம்மாதம் வழங்கப்பட இருந்த 11 பில்லியன் டாலர் நிதியுதவி, அடுத்த மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெற்ற நிதியுதவிகளுக்கான 15 நிபந்தனைகளை கிரீஸ் நிறைவேற்றினால் தான், இந்த மூன்றாவது நிதியுதவி கிடைக்கும் என ஐ.எம்.எப்., உள்ளிட்ட மூன்று அமைப்புகளும், அந்நாட்டிற்கு அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், சொத்துக்கள் மீது கூடுதல் வரி விதிப்பது குறித்து கிரீஸ் ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து, கிரீசுக்கான ஐ.எம்.எப்., பிரதிநிதி பாப் ட்ரா கூறுகையில்,"இதுபோன்ற கடுமையான அதிகளவு வரி விதிப்பு கிரீசுக்கு நல்லதல்ல. செலவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், வருமானத்தைப் பெருக்கினால் தான் கிரீசால் கடனில் இருந்து மீள முடியும்' என்றார். இதற்கிடையில், கிரீஸ் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்த தகவல்களால், நேற்று ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டது. சமீபத்தில் நடந்த ஆய்வின்படி, 65 சதவீத பொருளாதார நிபுணர்கள் கிரீஸ் திவாலாகி விடும் என, உறுதியாகத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. "யூரோ' பயன்படுத்தும் நாடுகளின் கடன் சுமையைக் குறைப்பது குறித்து, இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா நான்கு நாடுகளின் ("பிரிக்' கூட்டமைப்பு) நிதியமைச்சர்கள் கூட்டம் இவ்வார இறுதியில் நடக்க உள்ளது.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» புருசனை ஆட்டி வைப்பவள் பொண்டாட்டி!
» கிரீஸ் திவாலான கதை!
» 30 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது கிரீஸ்
» கிரீஸ் பிரதமர் பதவி விலகுகிறார்; பிப்ரவரியில் பொது தேர்தல்!
» குழப்பத்திற்கு பின்னர் கிரீஸ் நாட்டில் புதிய பிரதமர்
» கிரீஸ் திவாலான கதை!
» 30 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது கிரீஸ்
» கிரீஸ் பிரதமர் பதவி விலகுகிறார்; பிப்ரவரியில் பொது தேர்தல்!
» குழப்பத்திற்கு பின்னர் கிரீஸ் நாட்டில் புதிய பிரதமர்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|