சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

தென்கிழக்குக் கடலில் தாழமுக்கம்; நாடெங்கும் மழை  Khan11

தென்கிழக்குக் கடலில் தாழமுக்கம்; நாடெங்கும் மழை

Go down

தென்கிழக்குக் கடலில் தாழமுக்கம்; நாடெங்கும் மழை  Empty தென்கிழக்குக் கடலில் தாழமுக்கம்; நாடெங்கும் மழை

Post by *சம்ஸ் Sat 24 Dec 2011 - 6:39

வடக்கு, கிழக்கில் வெள்ளம்; குளங்களின் வான் கதவுகள் திறப்பு; கிளிநொச்சியில் கடும் பாதிப்பு
லக்ஷ்மி பரசுராமன்
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கடலில் தாழமுக்கம் உருவெடுத்திருப்பதுடன் இது இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் வங்காளவிரிகுடாவில் நிலைகொண்டிருப்பதால் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக கடும் மழையை எதிர்பார்க்க முடியுமெனவும் வானிலை அவதான நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். வடக்கில் மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங் களிலும் கிழக்கில் நிந்தவூர், தம்பலகாமம், மூதூர், தோப்பூர், திருமலை பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகள் ஆகியனவும் கடும் மழையினால் நீரில் மூழ்கியுள்ளன.

இவற்றைத் தவிர பொலன்னறுவை, அநுராதபுரம், மாத்தளை, கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல குடும்பங்களும் மழை வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளன.

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்த அடை மழை காரணமாக நேற்று வரையில் 9,540 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 833 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் 738 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 759 பேர் இடம்பெயர்ந்து 25 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 21 தற்காலிக முகாம்களில் 679 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 520 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கண்டாவளை, கராச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய இடங்களே நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடம்பெயர்ந்தவர்களுக்கும் கிளிநொச்சி அரச அதிபர் அலுவலகத்தினால் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 975 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 994 பேர் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 17 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் தற்காலிக இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கொடிப்பிலி கூறினார்.

மரியம்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், துணுக்காய் ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் கடந்த திங்கட்கிழமை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் 3 ஆயிரத்து 511 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 454 பேர் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளனர். இவர்களில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் வெற்றியைக் கேணியில் அமைந்துள்ள பரமேஸ்வரா பாடசாலையில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். மருதங்கேணி, காரைநகர், நல்லூர், வேலணை ஆகிய பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

கொழும்பு இரத்மலாணை பிரதேசங்களில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கடுங்காற்றினால் பாதிப்படைந்துள்ளனர் எனவும் கொடிப்பிலி தெரிவித்தார்.

நுவரெலியாவில் மழை பெய்து வரும் அதேவேளை பனி மூட்டம் அதிகரித்தும் காணப்படுகிறது.

அத்துடன் தற்போது வங்காள விரிகுடாவில் உருவாகியிருக்கும் தாழமுக்கத்தினால் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த வடமத்திய, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சுமார் 100 மில்லி மீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பெய்யக் கூடுமெனவும் வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

கடலில் அனைத்து திசைகளிலும் மழை பெய்யக் கூடும் என்பதுடன் தென்கடலில் வடமேற்காகவும் தென்மேற்காகவும் மணித்தியாலத்திற்கு சுமார் 40-50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடிய காற்று மணித்தியாலயத்திற்கு 60 தொடக்கம் 70 வரை அதிகரிக்க முடியுமென்பதினால் கடற்படை வீரர்களும், மீனவர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவதான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

கிழக்கில் பாதிப்பு

சாய்ந்தமருது குறூப், புதிய காத்தான்குடி தினகரன், பட்டிப்பளை, கல்முனை மத்திய குறூப், மணல் சேனை ஓட்டமாவடி தினகரன், அம்பாறை தினகரன் நிருபர்கள்

கிழக்கு மாகாணத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வீடுகளுக்கு ள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் ஆறு, குளங்கள் என்பன மழை நீரினால் நிரம்பி வழிகின்றன. தாழ் நிலப் பிரதேசங்கள் யாவும் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளன. வீதிகளிலும் வெள்ள நீர் தேங்கி நிற்கின்றது.

மழை காரணமாக உணவுப் பண்டங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடலுணவு, மரக்கறி என்பனவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலைகளும் அதிகரித்துள்ளன.

மழை நீரினால் வயல் நிலங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. தாழ் நில பிரதேசங்களில் உள்ள மக்கள் மேட்டு நிலப் பிரதேசத்தை நோக்கி நகர்கின்றனர்.

இடைக்கிடையே கடும் காற்றும் வீசுகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

மட்டு. மாவட்டம்
பட்டிப்பளை நிருபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணி தொடக்கம் இன்று காலை 5.30 வரையான 21 மணி நேரத்தில் 51.7 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய கடமை நேர அதிகாரி எஸ். ரமேஸ் தெரிவித்தார்.

இவ்வருடம் இன்று காலை 5.30 வரை 3370.5 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாகவும், இது வருடாந்த மட்டக்களப்பு மாவட்ட மழை வீழ்ச்சியின் இரு மடங்கை விட அதிகம் எனவும் சுட்டிக்காட்டினார்.

பெருவெள்ளம்
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைக்சேனை, செங்கலடி, ஓட்டமாவடி, காத்தான்குடி, ஏறாவூர், வவுணதீவு, வெள்ளாவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

பலரின் வீடுகளுக்குள் வெள்ளம் ஏறியதால் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதுடன் சிலர் தமது வீடுகளுக்குள் உயரமான கட்டில்கள், பலகைகளை போட்டு இருந்து வருகின்றனர்.

காத்தான்குடி பிரதேச செயலர் பிரிவில் புதிய காத்தான்குடி, விளையாட்டு மைதான வீதி தாறுஸ்ஸலாம் பகுதி, தோனாவை அண்மித்த பிரதேசம், நூரானிய்யா மாவத்தை என்பன வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் வெள்ளிக்கிழமை காலை வரை 82.2 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பாளர் சிவதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் தோறும் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் விபரங்கள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் கோரப்பட்டுள்ளன.

வான் கதவுகள் திறப்பு
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

கிழக்கில் பெய்து வரும் மழையினால் கிழக்கிலுள்ள குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நேற்று (வெள்ளிக்கிழமை) இக்குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சைக்குளத்தின் மூன்று வான் கதவுகள் திறந்து விடப்பட்டு நான்கு அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

உறுகாம குளத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டு 2 அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதேபோன்று வாகனேரிக்குளம், வடமுனை வெலிக்கா கண்டி குளங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டு நீர்திறந்து விடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குளங்களின் நிலைமை நீர்ப்பாசன அதிகாரிகளினால் அவதானிக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டம்

கல்முனை மத்திய குறூப் நிருபர், மணல்சேனை நிருபர்கள்

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகத்தில் செய்கை பண்ணப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மைப் பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

வீதிகளில் வெள்ள நீர்வழிந்தோடுவதால் பாதசாரிகள் பயணிப்பதில் பல்வேறு அசெளகரியங்களை அனுபவிக்கின்றன.

தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதனால் மரக்கறிவகைகளுக்கும், பச்சை மிளகாய்க்கும் தட்டுப்பாடு நிலவுவதுடன் விலையும் அதிகமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்றில் இருந்து நாவிதன் வெளிப்பிரதேசத்தினையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாலும் நீர்பாய ஆரம்பித்துள்ளமையினால் இதனூடாக போக்குவரத்தும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை வெல்லா வெளிப் பிரதேச செயலகப் பிரவில் மூங்கிலாறு பெருக்கெடுத்து பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் தோன்றியுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum