Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கைக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்: 334 ரன்களை 'சேசிங்' செய்து இந்திய அணி அபார வெற்றி
2 posters
Page 1 of 1
இலங்கைக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்: 334 ரன்களை 'சேசிங்' செய்து இந்திய அணி அபார வெற்றி
பர்மிங்காம், ஜுன் 2-
இலங்கைக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் 334 ரன்கள் இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக துரத்திபிடித்தது. கோலி, தினேஷ் கார்த்திக் சதம் அடித்து அசத்தினர்.
'மினி உலக கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 6-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. டாப்-8 அணிகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் விளையாடுகிறது. இதில் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை பர்மிங்காம் நகரில் நேற்று சந்தித்தது. பயிற்சி ஆட்டத்தை பொறுத்தவரை இரண்டு அணியும் தலா 15 வீரர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது களத்தில் 11 பேர் நின்றாலும், அவர்களை அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம். பேட்டிங்கின் போது, பீல்டிங்குக்கு வராத வீரர்களையும் களம் இறக்க முடியும்.
டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தார். 22 வயதான குசால் பெரேராவும், 36 வயதான தில்ஷனும் இலங்கை அணியின் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி இலங்கை அணிக்கு வலுவான அஸ்திரவாரம் அமைத்து கொடுத்தது.
இர்பான் பதானின் ஒரே ஓவரில் தில்ஷன் 3 பவுண்டரிகள் விளாச, இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் குசால் பெரேரா 2 சிக்சர்களை பறக்க விட்டார். இப்படி தொடக்கத்தில் இருந்தே பந்தை நாலாபுறமும் ஓட விட்டு அதிரடி காட்டிய இந்த ஜோடியை பிரிக்க இந்திய கேப்டன் டோனி 7 பவுலர்களை பயன்படுத்தியும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
தில்ஷன் 68 ரன்களில் இருந்த போது, அஸ்வின் பந்து வீச்சில் இறங்கி வந்து அடிக்க முயற்சித்த போது பந்து ஏமாற்றியது. ஆனால் விக்கெட் கீப்பர் டோனி மிக எளிதான ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவ விட்டார். இறுதியில் இவர்கள் இருவரும் பின்வரிசை வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆகி வெளியேறினர்.
26 ஓவர்களில் 160 ரன்களை எட்டிய போது, குசால் பெரேரா 82 ரன்னிலும் (94 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), தில்ஷன் 84 ரன்னிலும் (78 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினர்.
அணியின் ரன்ரேட் விகிதம் 6 ரன்களுக்கு குறையாமல் சென்று கொண்டிருந்தது. அடுத்து வந்த பேட்ஸ் மேன்களும் அதை சரியாமல் பார்த்துக் கொண்டனர். முன்னாள் கேப்டன்கள் மஹேலா ஜெயவர்த்தனே 30 ரன்களும், சங்கக்கரா 45 ரன்களும் (32 பந்து, 7 பவுண்டரி), துணை கேப்டன் சன்டிமால் 46 ரன்களும் (48 பந்து) விளாசினர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை என்றாலும், நமது வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினார்களே தவிர, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
பின்னர் 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு தொடக்கம் மோசமாக இருந்தது. ஷிகர் தவான் ஒரு ரன்னில் ரன்-அவுட் ஆனார். முரளிவிஜய் (18 ரன்), ரோகித் ஷர்மா (5 ரன்), சுரேஷ் ரெய்னா (34 ரன், 31 பந்து, 4 பவுண்டரி) ஆகியோரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.
110 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (20.3 ஓவர்) இழந்ததால் இந்திய அணியை குறைந்த ரன்னுக்குள் சுருட்டி விடலாம் என்று இலங்கை வீரர்கள் கணக்கு போட்டனர். ஆனால் 5-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த விராட் கோலியும், தினேஷ் கார்த்திக்கும் நிலைமையை தலைகீழாக மாற்றினர். அவசரமின்றி ஏதுவான பந்துளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்த இந்த ஜோடி ஸ்கோரை படிப்படியாக உயர்த்தியது.
அணிக்கு நம்பிக்கையூட்டிய இந்த கூட்டணியை உடைக்க 9 பந்து வீச்சாளர்களை இலங்கை பயன்படுத்தி பார்த்தும் அவ்வளவு சீக்கிரத்தில் அசைக்க முடியவில்லை. கலக்கலாக ஆடிய விராட் கோலி சதம் அடித்தார். சதத்திற்கு பிறகு மேலும் துரிதம் காட்டிய அவர் 144 ரன்களில் (120 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். கோலி-தினேஷ் கார்த்திக் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேகரித்தது.
இதைத் தொடர்ந்து கேப்டன் டோனி களம் இறங்கினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய தினேஷ் கார்த்திக்கும் சதத்தை தொட்டார். அத்துடன் வெற்றிக்கான ரன்னை அவர் பவுண்டரி அடித்து கொண்டு வந்தார். முடிவில் இந்திய அணி 49 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் 106 ரன்களுடனும் (81 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்), டோனி 18 ரன்களுடனும் (17 பந்து, 2 பவுண்டரி) களத்தில் இருந்தனர். தினேஷ் கார்த்திக்குக்கு நேற்று 28-வது பிறந்த நாளாகும். பிறந்த நாளில் செஞ்சுரி கண்டதால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்தார்.
இந்திய அணி தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் வருகிற 4-ந்தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கைக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்: 334 ரன்களை 'சேசிங்' செய்து இந்திய அணி அபார வெற்றி
வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு
Similar topics
» வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி
» டில்சன் அபார சதம்: சொந்த மண்ணில் இலங்கைக்கு முதல் வெற்றி
» தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி
» வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்திய அரசு தயங்குவது ஏன்?: ஜி.கே.மணி கேள்வி
» டில்சன் அபார சதம்: சொந்த மண்ணில் இலங்கைக்கு முதல் வெற்றி
» தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி
» வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்திய அரசு தயங்குவது ஏன்?: ஜி.கே.மணி கேள்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum