சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை Khan11

சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை

5 posters

Go down

சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை Empty சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை

Post by *சம்ஸ் Sat 17 Aug 2013 - 9:57

சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை 2b4e6c16-628f-40ed-9647-de7700335f99_S_secvpf



பாதாம் பருப்புகள் என அழைக்கப்படும் வாதுமைக் கொட்டை சத்துமிக்க பருப்பு வகையைச் சேர்ந்தது. பருத்த நெல்மணிகள் போல தோற்றத்தில் காணப்படும் வாதுமைக் கொட்டை, மிக ருசியானது. அல்மாண்ட்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இதிலுள்ள சத்துப் பொருட்களை பார்க்கலாம்... 

* வாதுமைக் கொட்டைகள், எளிதில் ஜீரணம் ஆகும் நார்ச்சத்துக்களை ஏராளமாக கொண்டுள்ளது. அத்துடன் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், அத்தியாவசிய துணை ரசாயனங்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளன. 

* ஒற்றைப் பூரிதமாகாத கொழுப்பு அமிலங்கள் மிகுதியாக உள்ளது. ஆலியிக் அமிலம், பால்மிடோலியிக் அமிலம் ஆகியவை குறிப்பிடத்தக்க கொழுப்பு அமிலங்கள் ஆகும். இவை கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைத்து, எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்புகளை அதிகரிக்க உதவும். 

* கரோனரி தமனி பாதிப்பு, முடக்குவாதம் ஆகிய பாதிப்புகளில் இருந்து தற்பாதுகாப்பு தருவதிலும் இந்த கொழுப்பு அமிலங்கள் உதவுவதாக சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. 

* வாதுமைக் கொட்டைகளில் சிறப்பான அளவில் வைட்டமின்-இ உள்ளது. 100 கிராம் வாதுமைக் கொட்டையில் 25 கிராம் அளவில் வைட்டமின்-இ நிறைந்துள்ளது. இது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய ஆர்.டி.ஏ. அளவின்படி 170 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

* வைட்டமின்-இ, சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயலாற்றக் கூடியது. உடற்செல்களின் சவ்வு முழுமையான வளர்ச்சி பெறவும், ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதிலும் வைட்டமின்-இ, முக்கிய பங்கு வகிக்கிறது. 

* அல்மாண்ட்ஸ் பருப்பில், குளூடின் எனும் புரதப் பொருள் கிடையாது. (கோதுமையில் காணப்படும் தீங்கு தரும் புரதப்பொருள்தான் குளூடின். இது சிலருக்கு ஒவ்வாமையையும், பக்க விளைவுகளையும் உருவாக்கும்.) அரிசியை முக்கிய உணவுப் பொருளாகக் கொண்ட தமிழகத்தில் எப்படி ‘சுகர்பிரீ’ உணவுப் பொருட்களுக்கு மவுசு அதிகமோ, அதுபோல கோதுமையை முக்கிய உணவுப் பொருளாக கொண்ட பகுதிகளில் 'குளூடின்-பிரீ' உணவுப்பொருட்கள் பிரபலம். இப்படி தயாரிக்கப்படும் குளூடின்-பிரீ உணவுப் பண்டங்களில் முக்கிய இடம் வகிப்பது வாதுமைக் கொட்டைகள்தான். 

* பி-குழும வைட்டமின்களான ரிபோபிளேவின், நியாசின், தயாமின், பான்டோ தெனிக் அமிலம், வைட்டமின் பி-6 மற்றும் போலேட் ஆகியவை உள்ளன. இவை சுரப்பிகள் நன்கு செயல்பட துணைக் காரணியாக உதவுகின்றன. வளர்ச்சிதை மாற்றத்திலும் பங்கெடுக்கின்றன. 

* மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்ற அத்தியாவசிய தாதுப் பொருள்களும் வாதுமைப் பருப்பில் உள்ளன. 

பயன்பாடுகள் : 

வாதுமைக் கொட்டைகளை ஓடு நீக்கி அப்படியே கொறித்துத் தின்னலாம். உப்பு மற்றும் இனிப்பு சேர்த்து வறுத்து சுவைப்பது தனி ருசியைத் தரும். வாதுமைக் கொட்டைகளை அரைத்து தயாரிக்கப்படும் பால், இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் பரவலாக பருகப்படும் பானமாகும். 

சருமத்திற்கு வளவளப்புத் தன்மையைத் தரும் களிம்பு வகை வாதுமைக் கொட்டையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஈரான், துருக்கி போன்ற நாடுகளில் வாதுமைக் கொட்டையில் தயாரிக்கப்படும் எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். 

அழகுகலை மையங்களில் வாதுமைக் கொட்டையில் தயாரிக்கப்படும் நறுமண எண்ணெய், மசாஜ் செய்ய பயன்படுத்தப்படுகிறது. வறுத்து, பொறிக்கும் பல்வேறு உணவு வகைகளில் வாதுமைப் பருப்புகள் சேர்க்கப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை Empty Re: சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை

Post by ராகவா Sun 15 Dec 2013 - 3:48

பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை Empty Re: சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை

Post by கவிப்புயல் இனியவன் Sun 15 Dec 2013 - 10:27

பகிர்வுக்கு மிக்க நன்றி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை Empty Re: சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை

Post by பானுஷபானா Mon 16 Dec 2013 - 14:13

வாதுமை கொட்டைனா பாதாம் பருப்பா?

பகிர்வுக்கு நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை Empty Re: சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை

Post by rammalar Fri 20 Dec 2013 - 7:31

நூறு கிராம் பாதாம் பருப்பு (சாதா ரகம்) விலை ரூ 70 ஆகும்
-
இன்னும் கொஞ்சம் தரம் கூடினால் அதற்கேற்ற விலை...
-
விலை அதிகம் என்பதால் நடுத்தர மக்களால் 
விரும்பி வாங்கப்படுவதில்லை...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை Empty Re: சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum