Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
+9
இராமஜெயம்
றஸ்ஸாக்
நேசமுடன் ஹாசிம்
Nisha
கவிப்புயல் இனியவன்
ந.க.துறைவன்
பானுஷபானா
ராகவா
rammalar
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
First topic message reminder :
‘அன்பால்
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே!
எப்பொழுதாவது
உன்னைப் பார்க்கும்போது
உன்னுடனேயே
வந்துவிடத் தோன்றுகிறது
தாலிக்கயிறு
முன்னால் வந்து
திருமணமானதை நியாபகப்படுத்திவிடுகிறது
பல நூறு காதல் கடிதம்
பிரிந்துவிடுவோம் என்ற
ஒரு தோல்வி செய்தி
திருமண அழைப்பிதழ் கூட
வந்து சேர்ந்தது
விவாகரத்தை
ஏன் தெரியப்படுத்தவில்லை?
‘அன்பால்
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே!
எப்பொழுதாவது
உன்னைப் பார்க்கும்போது
உன்னுடனேயே
வந்துவிடத் தோன்றுகிறது
தாலிக்கயிறு
முன்னால் வந்து
திருமணமானதை நியாபகப்படுத்திவிடுகிறது
பல நூறு காதல் கடிதம்
பிரிந்துவிடுவோம் என்ற
ஒரு தோல்வி செய்தி
திருமண அழைப்பிதழ் கூட
வந்து சேர்ந்தது
விவாகரத்தை
ஏன் தெரியப்படுத்தவில்லை?
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி... எனக்கு இந்த மாசம் தான் நம் தளம் அறிமுகமானது... உடனே நானும்... ந.க. துறைவன் அவர்களும் சேர்ந்து விட்டோம்... இன்னும் மூவரைச் சேர்க்க வேண்டும்...
வாங்க வாங்க!
எப்படி இருக்கின்றீர்கள்! சில நாட்களாக காணவில்லையே என நினைத்தேன்!
நலம் தானே கவியருவி சார்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கவியருவி ம. ரமேஷ் wrote:உன் கண்கள்
என் திசையை மாற்றிய
வழிகாட்டி மரம்
என் காதல்
உயிரினும் மேலானது
என்பதைக் காட்ட
ஒன்றாகச் சேர்ந்து
சாகக்கூடத் தயாராக இருக்கும் நான்
நீ, வா என்றதும்
ஓடி வந்துவிட முடியாது!
இக்கவிதைகள்
நோவாவின் பேழை
காதல் பிரளயத்தில் தப்பிக்க
எல்லோரும்
ஏறிக்கொள்ளலாம்
ம் உங்க கவிதைகள் எனக்கு இங்கே சேனையில் தான் படிக்கிறேன்!
என் காதல்
உயிரினும் மேலானது
என்பதைக் காட்ட
ஒன்றாகச் சேர்ந்து
சாகக்கூடத் தயாராக இருக்கும் நான்
நீ, வா என்றதும்
ஓடி வந்துவிட முடியாது!
அருமை சார்! ஆனால் இந்த கவிதையின் கோணம் காதலனை நோக்கி காதலி சொல்வதையும் தாண்டி வேறுதும் மறைபொருளை குறிக்குமா என அறிய ஆர்வம் வருகிறது. நீங்கள் எந்த கோணத்தில் எழுதினீர்கள் சார்?
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
பெற்றவர்களே காதலிக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் கவிதை இது.
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
இறைவா!
என் காதல்
கை கூடியிருந்தால்
உன்னை
கை கழுவி விட்டிருப்பேன்
காதலியின்
கட்டளைகளால்
என் உலகம்
சுருங்கிப்போனது
அன்று
எத்தனை பிரச்சினைகள்
இருந்தபோதும்
மகிழ்ச்சி மட்டுமே
நம் மனத்திற்கு வாய்த்திருந்திருக்கிறது
என் காதல்
கை கூடியிருந்தால்
உன்னை
கை கழுவி விட்டிருப்பேன்
காதலியின்
கட்டளைகளால்
என் உலகம்
சுருங்கிப்போனது
அன்று
எத்தனை பிரச்சினைகள்
இருந்தபோதும்
மகிழ்ச்சி மட்டுமே
நம் மனத்திற்கு வாய்த்திருந்திருக்கிறது
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
காலம் நேரம் தெரியாமல்
பேசிக்கொண்டிருப்போம்
இன்று
ஒரு வார்த்தையைக் கூட
நீ கேட்க தயாராக இல்லை
வந்த வழியே செல்கிறாய்
இதயத்தில்
புதியதாய்
ஒரு வலி உண்டாகிறது
காதலில்
வரமே சாபங்களாகிறது!
பேசிக்கொண்டிருப்போம்
இன்று
ஒரு வார்த்தையைக் கூட
நீ கேட்க தயாராக இல்லை
வந்த வழியே செல்கிறாய்
இதயத்தில்
புதியதாய்
ஒரு வலி உண்டாகிறது
காதலில்
வரமே சாபங்களாகிறது!
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
காதல் கைகூடாததால் இறைவனை தேடுகின்றார்கள்.
நிஜம் தான் !
அதிகம் பேசியதால் பேச்சுக்கூட சலித்து போகுமோ!
நன்று சார்!
தொடருங்கள்.
நிஜம் தான் !
அதிகம் பேசியதால் பேச்சுக்கூட சலித்து போகுமோ!
நன்று சார்!
தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
இறைவா!
நீ
எந்தக் கதவைத் தட்டினாலும்
திறக்கிறாய்
நீ
அதிசய நிலவு
என் நினைவுகள்
உன்னில்
வளர்வதேயில்லை
நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட
தாலிக்கயிறு?
நீ
எந்தக் கதவைத் தட்டினாலும்
திறக்கிறாய்
நீ
அதிசய நிலவு
என் நினைவுகள்
உன்னில்
வளர்வதேயில்லை
நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட
தாலிக்கயிறு?
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
நீ பாதை
நான் பயணி
காதல் பாதை
எவ்விடத்தில் முடியும்?
காதலின் நிழல்
சோகம்
எல்லோரும்
அங்கேதான்
இளைப்பாற வேண்டும்
கை நழுவிப் போனவளே!
வா,
புதுப் பாதையில்
விரல் கோர்த்து
நடப்போம்
நான் பயணி
காதல் பாதை
எவ்விடத்தில் முடியும்?
காதலின் நிழல்
சோகம்
எல்லோரும்
அங்கேதான்
இளைப்பாற வேண்டும்
கை நழுவிப் போனவளே!
வா,
புதுப் பாதையில்
விரல் கோர்த்து
நடப்போம்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
உன் பக்கம்
நியாயங்கள் இருக்கலாம்
என் பக்கம்
சிறு தவறும் இல்லை
உன்னை இழந்தது
சோகம்தான்
பரவாயில்லை
ஒன்றை இழந்துதான்
இன்னொன்றைப்
பெற முடியும்
இறைவா!
என் நினைவுகள்
அவனுக்கு
மகிழ்ச்சியை மட்டுமே
தர வேண்டும்
நியாயங்கள் இருக்கலாம்
என் பக்கம்
சிறு தவறும் இல்லை
உன்னை இழந்தது
சோகம்தான்
பரவாயில்லை
ஒன்றை இழந்துதான்
இன்னொன்றைப்
பெற முடியும்
இறைவா!
என் நினைவுகள்
அவனுக்கு
மகிழ்ச்சியை மட்டுமே
தர வேண்டும்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பு அன்பிலும் வாழ்விலும் இன்றியமையாதவை ...
Last edited by றஸ்ஸாக் பாலமுனை on Thu 24 Apr 2014 - 22:29; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கவியருவி ம. ரமேஷ் wrote:உன் பக்கம்
நியாயங்கள் இருக்கலாம்
என் பக்கம்
சிறு தவறும் இல்லை
உன்னை இழந்தது
சோகம்தான்
பரவாயில்லை
ஒன்றை இழந்துதான்
இன்னொன்றைப்
பெற முடியும்
இறைவா!
என் நினைவுகள்
அவனுக்கு
மகிழ்ச்சியை மட்டுமே
தர வேண்டும்
என் நினைவுகள் அவனுக்கு மகிழ்ச்சியை மட்டுமே தர வேண்டும்! ~/
நீ அழுதால் நானும் அழுவேன்!
உன் மௌனம் என்னை கலங்க வைக்க்கிறதே!
நட்பில் மட்டுமே கிடைக்கும் உயரிய உணர்வு இது.
ஆனாலும் அதெப்படி சார்.. உன் பக்கம் நியாயம் இருக்கும் என் பக்கம் தவறே இல்லைன்னு சொல்ல முடியும். நான் தவறே சொல்லவில்லை என சொல்லி விட்டு தப்பிச்சுவோமா.. அப்படி சொல்லி விட்டால் என் நினைவு அவனுக்கு அப்படி மகிழ்ச்சியை தருமாம்.
கவியரசு சார்! சூப்பராக இருக்கிறது. தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கவியரசு பட்டம் கிடைச்சிருக்கு இரமேஷ் பாராட்டுக்கள்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
பட்டம் மட்டுமல்ல உங்கள் நோக்கு சமூகாகவே இருக்கட்டும் வாழ்த்துகிறேன் வளம்பெற ....
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
விரிவான கருத்துரைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்... கவிதைகளை எப்படியும் விரித்துக்கொள்ளலாம் என்பதை தங்கள் கருத்துரை எடுத்துக்காட்டுகிறது... பாராட்டுகள்Nisha wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:உன் பக்கம்
நியாயங்கள் இருக்கலாம்
என் பக்கம்
சிறு தவறும் இல்லை
உன்னை இழந்தது
சோகம்தான்
பரவாயில்லை
ஒன்றை இழந்துதான்
இன்னொன்றைப்
பெற முடியும்
இறைவா!
என் நினைவுகள்
அவனுக்கு
மகிழ்ச்சியை மட்டுமே
தர வேண்டும்
என் நினைவுகள் அவனுக்கு மகிழ்ச்சியை மட்டுமே தர வேண்டும்! ~/
நீ அழுதால் நானும் அழுவேன்!
உன் மௌனம் என்னை கலங்க வைக்க்கிறதே!
நட்பில் மட்டுமே கிடைக்கும் உயரிய உணர்வு இது.
ஆனாலும் அதெப்படி சார்.. உன் பக்கம் நியாயம் இருக்கும் என் பக்கம் தவறே இல்லைன்னு சொல்ல முடியும். நான் தவறே சொல்லவில்லை என சொல்லி விட்டு தப்பிச்சுவோமா.. அப்படி சொல்லி விட்டால் என் நினைவு அவனுக்கு அப்படி மகிழ்ச்சியை தருமாம்.
கவியரசு சார்! சூப்பராக இருக்கிறது. தொடருங்கள்.
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
உன்
காதோர ரோஜா
எந்தக் காதலை
முணுமுணுக்கிறது?
மணல் வீட்டை
அலை சிதைத்துவிட்டுச்
சென்றதுபோல
நீ
என் இன்ப வீட்டை
பாழாக்கிவிட்டுப் போனாய்
காதல்
கிணற்றுத் தவளை
உன்னைவிட
எனக்கு
வேறு உலகமில்லை
காதோர ரோஜா
எந்தக் காதலை
முணுமுணுக்கிறது?
மணல் வீட்டை
அலை சிதைத்துவிட்டுச்
சென்றதுபோல
நீ
என் இன்ப வீட்டை
பாழாக்கிவிட்டுப் போனாய்
காதல்
கிணற்றுத் தவளை
உன்னைவிட
எனக்கு
வேறு உலகமில்லை
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
உன்னை விட
விழிப்பு தட்டும் நேரத்தில்
வந்து செல்லும்
உன் கனவுகள்
கொடுமையானது
உன் பிரிவு
கோடைகாலப் போர்வை
நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன் பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது
விழிப்பு தட்டும் நேரத்தில்
வந்து செல்லும்
உன் கனவுகள்
கொடுமையானது
உன் பிரிவு
கோடைகாலப் போர்வை
நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன் பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
புல்மேல் பனித்துளி
உன்மேல் அழகு
காதல் என்னும்
அகல் விளக்கில்
ஒவ்வொருவரும்
கண்ணீரை ஊற்றி
விளக்கேற்றி வைக்கிறார்கள்
படுக்கையறையில்
உன்
காதல் கவிதைகளால்
என் காதல்
முழுமைப் பெற்றது
உன்மேல் அழகு
காதல் என்னும்
அகல் விளக்கில்
ஒவ்வொருவரும்
கண்ணீரை ஊற்றி
விளக்கேற்றி வைக்கிறார்கள்
படுக்கையறையில்
உன்
காதல் கவிதைகளால்
என் காதல்
முழுமைப் பெற்றது
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கவியருவி ம. ரமேஷ் wrote:உன்னை விட
விழிப்பு தட்டும் நேரத்தில்
வந்து செல்லும்
உன் கனவுகள்
கொடுமையானது
ஆமாம் ! நிஜமும் தான் ! நான் நேசிப்பவர்களை விட அவர்கள் நினைவுகள் வரும் நேரம் தான் கொடுமையானது.
பகிர்வுக்கும் படைப்புக்கும் ~/
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
நீ
பிரிந்தபோது
என் எதிர்காலமும்
கையை விட்டு
நடந்து போய்விட்டது
மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
உன்னைப் புதைப்பார்கள்
என்னை எரிப்பார்கள்
சேர்த்து வைத்த
ஆசைகள்
இனி
மதுக்கோப்பையில்
வழிந்தோடும்
பிரிந்தபோது
என் எதிர்காலமும்
கையை விட்டு
நடந்து போய்விட்டது
மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
உன்னைப் புதைப்பார்கள்
என்னை எரிப்பார்கள்
சேர்த்து வைத்த
ஆசைகள்
இனி
மதுக்கோப்பையில்
வழிந்தோடும்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கவியருவி ம. ரமேஷ் wrote:நீ
பிரிந்தபோது
என் எதிர்காலமும்
கையை விட்டு
நடந்து போய்விட்டது
மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
உன்னைப் புதைப்பார்கள்
என்னை எரிப்பார்கள்
சேர்த்து வைத்த
ஆசைகள்
இனி
மதுக்கோப்பையில்
வழிந்தோடும்
மரணத்தில் கூட இணைய முடியாது சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
நான்
ஒரு நாள்
கடவுளின் தலைவிதியைப்
பகிரங்கமாகப்
படித்துப் பார்த்து விட்டேன்
நீ
கெட்ட கனவு
விழித்தெழுந்து படுத்தாலும்
தொடர்ந்து வருகிறாய்
வா,
கோயில்களே
இல்லாத ஊரில்
குடிபுகுவோம்
இறைவன்
அங்கு
தனித்து இருக்கிறான்
ஒரு நாள்
கடவுளின் தலைவிதியைப்
பகிரங்கமாகப்
படித்துப் பார்த்து விட்டேன்
நீ
கெட்ட கனவு
விழித்தெழுந்து படுத்தாலும்
தொடர்ந்து வருகிறாய்
வா,
கோயில்களே
இல்லாத ஊரில்
குடிபுகுவோம்
இறைவன்
அங்கு
தனித்து இருக்கிறான்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
» ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்
» ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
» கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ
» ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்
» ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
» கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum