சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

கணவன் மனைவி உறவு வலுப்பெற Khan11

கணவன் மனைவி உறவு வலுப்பெற

Go down

கணவன் மனைவி உறவு வலுப்பெற Empty கணவன் மனைவி உறவு வலுப்பெற

Post by ahmad78 Thu 24 Jul 2014 - 11:15

கணவன் மனைவி உறவு வலுப்பெற Ht2606
எதற்கெடுத்தாலும் துணையின் அனுமதி வேண்டி நிற்போர்...எதற்குமே துணையின் அனுமதியையோ, ஆலோசனையையோ எதிர்பார்க்காதவர்... என  தம்பதியர் இரண்டு ரகம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு அணுகுமுறை உண்டு. எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா விஷயங்களையும்  துணையின் சம்மதம் பெற்றே செய்வதென்பது சாத்தியப்படாது. அது போன்ற தருணங்களில் நீங்களாக சில விஷயங்களை செயல்படுத்துவது உங்கள்  உறவு சிறக்க உதவும்.

உங்கள் கணவர் ஒரு ஐபேடு வைத்திருக்கிறார். உங்களுக்கும் அப்படியொன்று தேவைப்படுகிறது. ‘நீங்க மட்டும் வாங்கிட்டீங்களே... எனக்கு வாங்கித்  தரணும்னு தோணுச்சா?’ என்றோ, ‘எனக்கு எப்போ வாங்கித் தரப் போறீங்க?’ என்றோ கணவரை நச்சரிக்கத் தேவையில்லை. உங்களின் பொருளாதார  சுதந்திரம் அனுமதிக்கிற பட்சத்தில், உங்களுக்குத் தேவையெனப்படுகிற அந்தப் பொருளை நீங்களே வாங்கிக் கொள்ளலாம். கணவரிடம் கேட்டால்  முதலில் வேண்டாம் எனச் சொல்லியிருக்கலாம். ஆனால், நீங்களாக வாங்கிய பிறகு அவர் பெரிதாக அதை மறுக்கவோ, எதிர்க்கவோ மாட்டார்.

பெரும்பாலான விஷயங்களில் இப்படித்தான் நடக்கும்.தானாக முடிவெடுக்கும் இந்த அணுகுமுறையில் அப்படி என்ன நன்மை நடந்துவிடும்  என்கிறீர்களா?
 
ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் இருவருக்கும் இடையில் ஏற்படுகிற விவாதத்தைத் தவிர்க்கலாம். அந்த விவாதம், ஒரு பெரிய சண்டைக்கான  தொடக்கமாவதையும் தவிர்க்கலாம்.

‘என்னைக் கவனிக்கலை... என் மேல அக்கறையில்லை...’ என்கிற புலம்பலை யும் சுய பச்சாதாபத்தையும் தவிர்க்கலாம்.  சரியா, தவறா என்கிற  வாக்குவாதத்துக்கும் இடமில்லாமல் போகும்.

உங்களுக்கு என்ன தேவை என்பது உங்களுக்கு மட்டுமே சரியாகத் தெரியும். நீங்கள் அதீத மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்றால், அதிலிருந்து  மீள என்ன மாற்றம் வேண்டும் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். அதை வேறு யாரும் கண்டு பிடித்துச் செய்ய முடியாது. எனவே, இது போன்ற தருணங்களில் நீங்களாக முடிவெடுப்பதுதான் நல்ல தீர்வாக இருக்கும்.

எல்லா தேவைகளுக்கும், எல்லா முடிவுகளுக்கும் துணையை நாடியிருக்கிற வருத்தம் கலந்த உணர்விலிருந்து வெளியே வருவீர்கள். உங்களாலும்  சில விஷயங்களுக்கு முடிவெடுக்க முடியும் என்கிற அந்த உணர்வே உங்களுக்குள் ஒருவித தன்னம்பிக்கையையும் தன்னிறைவையும் தரும்.

உங்களைப் பற்றி உங்களுக்கும், உங்கள் துணைக்கும் மரியாதையான ஒரு பிம்பம் உருவாகும். உங்களுடைய ஆற்றல், திறமைகள் பற்றி இருவரும்  உணரத் தொடங்குவீர்கள். அரவிந்தும் பூஜாவும் கணவன்-மனைவி. திருமணத்துக்கு முன் பூஜா, தனக்குப் பிடித்த உடை வடிவமைப்புத் துறையில்  ஆர்வமாக இருந்திருக்கிறார். தனக்கும், தோழிகளுக்குமான உடைகளை அவரே வடிவமைத்து, தைத்திருக்கிறார்.

திருமணத்துக்குப் பிறகு குழந்தைகள், குடும்ப வேலை என பொறுப்புகள் கூடிப் போனதில், உடை வடிவமைப்பு பக்கம் திரும்பாமலே இருந்தார். அதைப்  பற்றிக் கணவரிடம் பேசும் போதெல்லாம் அரவிந்த் பெரிதாகக் கண்டு கொண்டதில்லை. ஊக்கப்படுத்தியதுமில்லை. எப்போதோ தன் தோழிக்கு அவர்  வடிவமைத்துக் கொடுத்திருந்த உடையைப் பற்றி சிலாகித்து அந்தத் தோழி, பூஜாவுக்கு ஃபேஸ்புக்கில் பாராட்டுப் பத்திரம் வாசிக்க, மறுபடி பூஜாவின்  காஸ்ட்யூம் டிசைனிங் ஆர்வம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

‘இதெல்லாம் எதுக்கு...’ என அரவிந்த், தனது ஆர்வமின்மையை மறைமுகமாக வெளிப்படுத்தினாலும், பூஜா அதைப் பெரிதுப்படுத்தவில்லை. அடுத்த  சில நாட்களில், பரபரப்பான டிசைனரானதுடன், பெரிய நிறுவனங்கள் தேடும் அளவுக்குப் பிரபலமாகவும் ஆனார். தனது மனைவி சமூகம் கவனிக்கிற,  பாராட்டுகிற ஒரு இடத்தில் இருப்பது அரவிந்துக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. இன்று பூஜா செய்கிற ஒவ்வொரு விஷயத்தையும் பாராட்டி, ஊக்கப்  படுத்தி, பக்கபலமாக நிற்பவரும் அவரே.

பெரிய சுவாரஸ்யம் எதுவுமின்றி போய்க் கொண்டிருந்த இவர்களது தாம்பத்திய உறவிலும் புதிதாக ஒரு அன்னியோன்யம் மலர்ந்திருப்பதை  இருவருமே உணர்கிறார்கள். எனக்கு மிகவும் தெரிந்த ஒரு நண்பர் குடும்பத்தில் நடந்த நிஜமான சம்பவம் இது. இதுதான் யதார்த்தம். இப்படி சுயமாக  முடிவெடுக்கும் போது, கணவன்-மனைவிக்கிடையே அவர்கள் நினைத்து பயப்படுகிற மாதிரி பெரிய பிரச்னைகள் வருவதில்லை. எடுக்கப்படும்  முடிவானது, துணையால் ஏற்றுக் கொள்ளவே படுகிறது.

சில குடும்பங்களில் துணை இப்படி தானாக முடிவெடுக்கும் போது, இன்னொருவர் தற்காலிகமாக எரிச்சலடையலாம். அது காலப் போக்கில் தானாக  மாறும். தானாக முடிவெடுக்கும் நபர், அந்த முடிவை திறமையாக, தெளிவாகக் கையாளும் திறமை பெற்றவராக இருந்தால், இது நிச்சயம் சாத்தியம்.  இன்னும் சில குடும்பங்களில் தினசரி என்ன சமைப்பது என்பதில் தொடங்கி, வீட்டுக்கு என்ன கலர் பெயின்ட் அடிப்பது என்கிற வரை  எல்லாவற்றுக்கும் கணவரே முடிவெடுப்பது என்கிற அதிகாரம் காலங்காலமாகப் பழக்கப்பட்டிருக்கும்.

அது போன்ற குடும்பங்களில் திடீரென மனைவி முடிவெடுக்கும் போது, தனது அதிகாரம் பறிக்கப்பட்டதாக கணவர் நினைக்கலாம். மனைவி தன்னை  ஓவர்டேக் செய்வதாக பயப்படலாம். அவர்மீது கோபப்படலாம். அவர் அப்படி நடந்து கொள்வது மனைவிக்கு எரிச்சலைத் தரலாம். இதற்கெல்லாம்  பயந்து, மனைவி தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. கணவரின் நடவடிக்கைகளுக்காக அவருடன் சண்டை போட வேண்டிய  அவசியமும் இல்லை. அவரை அவர் போக்கில் சிந்திக்க விடுவதுதான் சிறந்தது. காலப் போக்கில் அவரது பார்வையில் நிச்சயம் மாற்றம் வரும்.  அதையும் மீறி அவர் கோபப்பட்டால் அது அவரது பிரச்னை என விட்டு விட வேண்டும்.

சுயமாக முடிவெடுக்கும் இந்த அணுகுமுறை திருமண உறவில் ஏற்படக் கூடிய இரண்டு பிரச்னைகளைத் தீர்ப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

‘என்னிடம் என் துணை அன்பாக, நெருக்கமாக இருப்பதில்லை’ என்கிற உணர்வு உங்களை விட்டுப் போகும்.

‘எல்லா விஷயங்களுக்கும் துணையே முடிவெடுக்கிறார்... என்னைக் கலந்தாலோசிப்பதில்லை’ என்கிற விரக்தியும் நீங்கும்.

உங்கள் துணை உங்களிடம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அப்படியெல்லாம் அவரிடம் இருக்க நீங்களாகவே முதல்  அடியை எடுத்து வையுங்கள். அவர் மீது அன்பு காட்டுங்கள். காதலுடன் பேசுங்கள். கட்டியணையுங்கள். முத்தமிடுங்கள். பதிலுக்கு அவர் என்ன  செய்கிறார் என்று மட்டும் எதிர்பார்க்காதீர்கள்.
 
உங்கள் தோற்றத்தை, சமையலை, குழந்தை வளர்ப்பை, கைத்திறனை, இன்ன பிற திறமைகளை உங்களவர் கண்டுபிடித்துப் பாராட்ட வேண்டும் என  எதிர்பார்க்காமல், அத்தனை விஷயங்களையும் உங்கள் கணவரை நோக்கி நீங்கள் செய்து பாருங்கள்.

ஆரம்பத்தில் உங்களுடைய இந்த அணுகுமுறை கொஞ்சம் முட்டாள்தனமாகக் கூடத் தோன்றலாம். ஆனால், போகப் போக இருவருக்குள்ளும்  உண்டாகிற நெருக்கமும், தினசரி உணர்கிற த்ரில்லும் உங்கள் இருவருக்குமான அன்னியோன்யத்தை அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்தும். இன்றே  தொடங்குங்கள் அந்தச் சோதனை முயற்சியை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி உறவு வலுப்பெற Empty Re: கணவன் மனைவி உறவு வலுப்பெற

Post by ahmad78 Thu 24 Jul 2014 - 11:16

கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள்...

முடிவெடுக்க வேண்டிய பிரச்னையைப் பற்றி உங்களுக்கே தெளிவான ஒரு பார்வை இல்லாத போது, அது குறித்து எந்த முடிவையும் எடுக்க  வேண்டாம்.

அந்த விஷயம் ஏற்கனவே உங்கள் இருவராலும் விவாதிக்கப்பட்டு, தீர்க்கப்படாமல் இருந்தாலோ, அது உங்கள் துணை அல்லது வேறு யாரையோ  பாதிக்கும் என நினைத்தாலோ, முடிவெடுக்காதீர்கள்.

உங்களுடைய தேவை என்ன எனத் தெரியாத போதும் ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்க வேண்டாம். உங்கள் துணையின் வார்த்தைகளை  அலட்சியப்படுத்திவிட்டு, நீங்கள் முடிவெடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர் அப்படிச் சொல்வதன் பின்னணி என்ன என அவர்  இடத்திலிருந்து பாருங்கள்.

பொறாமை, வெறுப்பு, கோபம் என எந்த நெகட்டிவான விஷயத்தையும் அவர் வார்த்தைகளுக்கான பின்னணியாகக் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.  உங்களுடைய முடிவு சரியாக இருக்கும் என நினைத்தால் உறுதியாக இருங்கள்.

ஒரு பயிற்சி


உங்களுக்கு இருப்பதாக நினைக்கிற அத்தனை பிரச்னை களையும் பட்டியலிடுங்கள். தாமாக முடிவெடுக்கும் அணுகுமுறையின் மூலம் இந்தப்  பிரச்னைகளில் ஒருசிலதையாவது தீர்க்க முடியுமா என யோசியுங்கள். எதிர்பார்ப்புகள் அற்ற அன்பைத் துணைக்கு வாரி வழங்குங்கள். அன்பைக்  காட்டுவதில் நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள், அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என குறிப்பு எழுதுங்கள்.

உங்கள் துணையிடம் பாராட்டக் கூடிய அளவுக்கு என்னென்ன விஷயங்கள் உள்ளன எனக் கண்டுபிடியுங்கள். மறக்காமல் அந்த விஷயங்களைப்  பாராட்டுங்கள். அந்த அனுபவங்களையும் குறிப்பாக எழுதி வையுங்கள். உங்கள் துணையை நேருக்கு நேர் பார்க்கிற ஒவ்வொரு முறையும் புன்னகை  புரியுங்கள். பதிலுக்கு அவர் சிரிக்காவிட்டாலும் பரவாயில்லை.

(வாழ்வோம்!)

நன்றி : தினகரன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum