சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Khan11

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 8:17

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? 10388182_293258424179587_6363492930019748471_n
இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? 10354689_293258440846252_9217294284162687102_n
இது மாம்பழ சீசன். விதவிதமான மாம்பழங்களை கடைகளில் அடுக்கி வைத்திருக்கிறார்கள். வாங்கி சாப்பிட ஆசையாக இருந்தாலும், பயமாக இருக்கிறது. காரணம், 'ஒரு வேளை கல் (கார்பைட்) வைத்து பழுக்க வைத்ததாக இருக்குமோ’ என்கிற அச்சம்தான். இயற்கைக்கு மாறாக, கல் பயன்படுத்தி பழுக்க வைத்த மாம்பழங்கள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னையைக் கிளப்பி விடுகிறது. அதன் காரணமாக, இப்படி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அவ்வப்போது அரசு அதிகாரிகள் பறிமுதலும் செய்து வருகிறார்கள். 'இத்தகையப் பழங்களைச் சாப்பிடக்கூடாது' என்கிற விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், 'எதற்காக கல் வைத்து பழுக்க வைக்க வேண்டும்... இயற்கை முறையிலேயே பழுக்க வைப்பது எப்படி?' என்பது போன்ற கேள்விகளுடன் பெரியகுளம், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள திராட்சை ஆராய்ச்சி நிலையம், மா ஆராய்ச்சி (பொறுப்பு) துறையின் பேராசியர் மற்றும் தலைவர் முனைவர். செல்வராஜை சந்தித்தோம்.''விவசாயிகள் யாரும் கல் வைத்து பழுக்க வைப்பதில்லை. தோப்புகளை குத்தகைக்கு எடுக்கும் வியாபாரிகள், அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு, காய்கள் 100% முதிர்ச்சி அடைவதற்கு முன்பாகவே, அதாவது 70 அல்லது 80% அளவுக்கு மட்டுமே முதிர்ந்த காய்களை அறுவடை செய்து விடுகிறார்கள். இந்தக் காய்கள், இயற்கையாகவே பழுக்காது, அதனால்தான் கல் வைத்து பழுக்க வைக்கிறார்கள். இதை சாப்பிடும் மனிதர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அத்துடன் கல் வைத்து பழுக்க வைக்கும் பழங்களில் இயற்கையானச் சுவை, தரம், நிறம் எதுவும் இருக்காது. இந்தப் பழங்களை அதிக நாள் இருப்பு வைக்கவும் முடியாது, ஆனால், இயற்கையாகவே முதிர்ந்து பழுத்த பழங்கள் நல்ல சுவை, நிறம், தரத்துடன் இருக்கும், நீண்ட நாட்களுக்கு இருப்பு வைக்கவும் முடியும்'' என்று கல் வைப்பதற்கான காரணங்களை அடுக்கிய செல்வராஜ், இயற்கை முறையில் பழுக்க வைப்பது பற்றி ஆரம்பித்தார்.

காய்களை கவனமாக கையாள வேண்டும் :
''இயற்கை முறையில் பழுக்க வைக்க, அறுவடையில் இருந்தே கவனமாக இருக்க வேண்டும். முதலில் நன்றாக விளைந்த, முற்றியக் காய்களை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும். நன்கு முதிர்ந்த காய்களின் காம்பு அருகே லேசாக ஒரு குழி ஏற்படும். இதை கவனித்து இந்தக் காய்களை மட்டும் அறுவடை செய்தால், அடுத்த நாளே பழுத்து விடும்.அறுவடை செய்யும்போது மரத்தை உலுக்கி, காய்களை உதிர வைத்து அறுவடை செய்கிறார்கள். இது தவறான முறை. இப்படிச் செய்யும்போது காய்களில் அடிபட்டு, அந்த இடங்களில் பழம் அழுகி விடும். அறுவடை செய்த காய்களை மொத்தமாகக் கட்டி கீழே தூக்கி போடுவது போன்ற செயலையும் செய்யக்கூடாது. காயும் ஒரு உயிருள்ள பொருள் என்ற எண்ணத்தோடு கையாள வேண்டும்.
தற்போது, காய்களை அடிபடாமல் அறுவடை செய்வதற்காக காய்கள் பறிக்கும் வலை கிடைக்கிறது. இதை பயன்படுத்தி அறுவடை செய்யலாம். பெரியத் தோப்புகளில் அறுவடை செய்வதற்கு கிரேன் இயந்திரம்கூட இருக்கிறது. பழுக்க வைக்கும்போது, அடிபட்ட, முற்றாத காய்களை ஒதுக்கிவிட்டு, தரமான காய்களை மட்டும் பழுக்க வைத்தால், விரைவில் பழுத்து விடும்.

பால் படக்கூடாது :
காய்களைக் கையாளும் போது, கையுறை அணிந்து கொள்ள வேண்டும். விரல்களில் நீளமாக நகம் இருக்கக்கூடாது. அறுவடை செய்த காய்களில் வழியும் பால் மற்ற காய்களில் படக்கூடாது. மாங்காய்களை அறுவடை செய்யும்போது, 10 செ.மீ அளவுக்கு காம்புடன் அறுவடை செய்தால், பால் விழுவதைத் தவிர்க்கலாம்.
பிறகு, மொத்தமாக ஓரிடத்தில் வைத்து, காம்பின் அளவை ஒரு செ.மீ. அளவுக்கு விட்டுவிட்டு, மீதியை வெட்டிவிட வேண்டும். பின்பு, பழைய பேப்பரை கீழே விரித்து அதில் காம்புகள் தரையில் படுமாறு காய்களைத் தலைகீழாக அடுக்கி வைத்தால்... பால் முழுவதும் வடிந்து விடும். பிறகு, இதை எடுத்து தண்ணீரில் கழுவி, மறுபடியும் வரிசையாக அடுக்கி, ஈரம் காய்ந்ததும் அதன் மேல் சணல் சாக்கை போட்டு மூடி வைத்து விட்டால், ஒன்று அல்லது இரண்டு நாளில் பழுத்து விடும். பழங்களை தனித்தனியாக காகிதத்தில் சுற்றி விற்பனைக்கு அனுப்பலாம்'' என்று தெளிவாக விளக்கங்களைத் தந்தார்.

வைக்கோலில் பழுக்க வைக்கலாம் :
அவரைத் தொடர்ந்து பேசிய அதே துறையின் உதவி பேராசிரியர் முனைவர் சுப்பையா, ''இயற்கையாக பழுக்க வைக்க இன்னும் சில முறைகளும் இருக்கின்றன. நாள்பட்ட வைக்கோலைப் பரப்பி, அதன் மீது காய்களை அடுக்கி, வைக்கோலால் மூடி விடவேண்டும். வைக்கோலில் கிளம்பும் வெப்பத்தினால் காய்கள் ஓரிரு தினங்களில் பழுத்து விடும்.இருட்டு அறைக்குள் காய்களை அடுக்கி வைத்து, அறையை மூடி எலுமிச்சைப் புல்லை (லெமன் கிராஸ்) எரித்து, புகையை உண்டாக்க வேண்டும். இந்தப் புகையினால் காய்கள் பழுத்து விடும். ஆனால், இம்முறையில் பழுக்க வைக்கும்போது, இயற்கையான நிறம் கிடைக்காது.சூரிய ஒளி புகாத இருட்டு அறையில் காய்களை அடுக்கி வைத்தால், அறை வெப்பம்கூடி, புழுக்கம் உண்டாகும். இதன் காரணமாகவும் காய்கள் பழுத்து விடும்.
பழுக்க வைக்கும் முன்பாக காய்களை மிதமான சுடுதண்ணீரில் அமிழ்த்தி எடுத்து, ஈரத்தைத் துணியால் துடைத்து விட்டு பழுக்க வைத்தால், விரைவில் பழுத்து விடும். கடினமானத் தோல் உள்ள ரகத்தை மட்டுமே சுடுதண்ணீரில் அமிழ்த்த வேண்டும். லேசான தோல் உள்ளவற்றை இப்படி அமிழ்த்தக்கூடாது. வேப்பம் இலை, ஆவாரம் இலை என்று ஒவ்வொரு பகுதியிலும் இயற்கையாகக் கிடைக்கும் இலை, தழைகளைப் பயன்படுத்தியும் பழுக்க வைப்பது விவசாயிகளிடம் வழக்கத்தில் இருக்கிறது. இம்முறைகளும் ஏற்றவையே.கொய்யா, வாழை போன்றவற்றையும் இயற்கை முறையில் பழுக்க வைக்க மேலே சொன்ன முறைகளையே கையாளலாம்'' என்றவரிடம், சமீபகாலமாக எத்திலீன் வாயுவைச் செலுத்தி, செயற்கை முறையில் வாழையைப் பழுக்க வைக்கும் முறை வழக்கத்தில் இருப்பது பற்றிக் கேட்டோம்.

இது செயற்கை முறைதான் என்றாலும், இதன் காரணமாக உடல் நலனுக்கு தீமை எதுவும் ஏற்படாது. ஆனாலும், இயற்கை முறையில் பழுக்க வைப்பதுதான் மிகமிகச் சரியானது.

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by Nisha Sat 23 Aug 2014 - 11:17

மாம்பழம் சாப்பிடவே இப்பவெல்லாம் பயம் தான்பா!

என்ன இருந்தாலும் நமூரில் வீட்டு முற்றத்தில் காய்த்து குலுங்கி வாசனையோடு அணிலும் கிளியும் கொத்தியது போல மீந்ததாய் நமக்கு கிடைக்கும் பிளாட், மல்கோவாவுக்கும், கறுத்தகொழும்பானுக்கும் நிகர் இல்லை தானே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 11:28

Nisha wrote:மாம்பழம் சாப்பிடவே இப்பவெல்லாம் பயம் தான்பா!

என்ன இருந்தாலும் நமூரில்  வீட்டு முற்றத்தில் காய்த்து குலுங்கி வாசனையோடு அணிலும் கிளியும் கொத்தியது போல  மீந்ததாய் நமக்கு கிடைக்கும் பிளாட்,  மல்கோவாவுக்கும்,  கறுத்தகொழும்பானுக்கும்  நிகர்  இல்லை தானே!

அதன் ரகமே தனி அக்கா எனது மனைவியின் ஊரில் மலிவாகக் கிடைக்கும் காசுகொடுத்து வாங்க வேண்டிய தேவையில்லை அந்தளவு மரங்கள் நிறைந்து காணப்படும்

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by Nisha Sat 23 Aug 2014 - 11:46

ஆமாம்! இப்போது எங்கள் வீட்டிலும் பிளாட் மாமரம் நிரம்ப காய்த்து தொங்கும். எனக்கு பழமுமில்லா காயுமில்லா பருவத்தில் மாங்காய்ப்பழம் சாப்பிட ரெம்ப பிடிக்கும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 12:03

Nisha wrote:ஆமாம்! இப்போது எங்கள் வீட்டிலும் பிளாட் மாமரம் நிரம்ப காய்த்து தொங்கும்.  எனக்கு  பழமுமில்லா காயுமில்லா பருவத்தில் மாங்காய்ப்பழம் சாப்பிட ரெம்ப பிடிக்கும்!

இந்த தடவை நீங்க என்ன சொன்னாலும் நான் போவேன் போய் மாம்பழமெல்லாம் வாங்கி சாப்பிடுகிறேன் 
நிஷா அக்காவின் தம்பி என்று அறிமுகம் செய்கிறேன் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by பானுஷபானா Sat 23 Aug 2014 - 12:44

மாம்பழ சீசன் முடிந்து விட்டதே:(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by Nisha Sat 23 Aug 2014 - 12:59

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:ஆமாம்! இப்போது எங்கள் வீட்டிலும் பிளாட் மாமரம் நிரம்ப காய்த்து தொங்கும்.  எனக்கு  பழமுமில்லா காயுமில்லா பருவத்தில் மாங்காய்ப்பழம் சாப்பிட ரெம்ப பிடிக்கும்!

இந்த தடவை நீங்க என்ன சொன்னாலும் நான் போவேன் போய் மாம்பழமெல்லாம் வாங்கி சாப்பிடுகிறேன் 
நிஷா அக்காவின் தம்பி என்று அறிமுகம் செய்கிறேன் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்

போங்களேன்! ஸ்கூலுக்கு நேர் எதிரில் தான் வீடு. ஸ்கூல் வாசலும் எங்கள் வீட்டு வாசலும் எதிர் எதிர் தான். கடையும் இருக்கும் கடையின் பெயர் கப்ரியேல் பெயர்தான். வீட்டின் பெயர் எப்சி பெயர் தான். போயிட்டு கடையில் ஐஸ்கிரிம் வாங்கி சாப்பிட்டு விட்டு வந்தால் பிழைச்சிங்க!

நான் நிஷாக்கா தம்பி கிம்பின்னிங்க.. நீங்க அங்கே இருக்கும் என் கடைசிதங்கைக்கு எதிரி ஆகிருவிங்க.. நான் இப்ப அவங்க கூட பேசாமல் இருப்பது சுரேஷ் அண்ணாவால் தான் என அவரோட சண்டை போட்டு முடித்து விட்டாள். நீங்கள் போய் வாங்கிக்கட்டுங்க.. யார் வேண்டாம் என்றாங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by பானுஷபானா Sat 23 Aug 2014 - 13:02

Nisha wrote:

இருந்தாலும் நீங்க இப்படி பயமுறுத்தக் கூடாது... ஆனா என்ன பயம் காட்டினாலும் ஹாசிம் தம்பி சிங்கம்ல ஒரு உறுமு உறுமினா கடை, வீடு அலறும் தெரியும்ல  *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by Nisha Sat 23 Aug 2014 - 13:11

அதை சொல்லிட்டு நீங்கள் ஏன் ஓடுறிங்கப்பா!

அது என்னமோ பானு! எனது இந்த அண்ணன் தம்பி உறவுகள் குறித்து என் தங்கைகளிடம் பெரிய டிஸ்கஸே நடக்கும் போல.. நான் இப்ப அவங்களுக்கு உதவாதது, பேசாததுன்னு பெரிய குழப்பம்.

நான் இந்தியா வந்தபோ சுரேஷ் அண்ணா வீட்டில் தான் நின்றேன் அம்பத்தூரில்.

என் தங்கை அண்ணா நகரில் இருந்தா. அவ வீட்டுக்கு இரண்டு நாள் நிற்க போன் நேரம் நல்ல காய்ச்சல் வந்து விட்டது.

சுரேஷ் அண்ணா தம்பி ரமேஷும் என்னிடம் அக்கா அக்கா என கொஞ்சம் பொசிசிவ்தான். எனக்கு காய்ச்சல் என்றதும் நான் உடனே வந்து அக்காவை வீட்டுக்கு கூட்டி போறேன் அம்மா ரசம் வைச்சு கொடுத்து நல்லா பார்த்துப்பா என சொல்லி இருக்கான்.. இவள் உடனே என் அக்காவை பார்த்துக்க இவங்க யாரு? அது இதுன்னு சண்டைன்னால் பாருங்களேன்! இருந்தும் அவனும் விட்டு கொடுக்காமல் வீட்டுக்கு கூட்டிப்போய் உடனே டாகடரிடம் போய் மருந்து வாங்கினு கவனித்தான்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் பானு. என்னுடன் பிறந்தோருக்கு புரியாத என் அன்பு என்னுடன் பிறக்காமல் என்னுடன் பிறப்பாய் ஆன தம்பிகளுக்கு புரிந்து இன்று வரை என்னை தாங்கி என் அன்பை இழக்காமல் நான் என்ன சொன்னாலும் திட்டினாலும் சகித்து போவது ரெம்ப பெரிய விடயம் பானு.

இவர்களிடம் கிடைக்கும் புரிதலில் பத்தில் ஒரு பங்கு கூட அங்கே இல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by பானுஷபானா Sat 23 Aug 2014 - 13:38

Nisha wrote:அதை சொல்லிட்டு  நீங்கள் ஏன் ஓடுறிங்கப்பா!

உற்றார் காட்டாத அன்பை ஊரார் காட்டும் போது என்ன உறவு என மனம் சலிக்கத் தான் செய்யும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 14:13

பானுஷபானா wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:ஆமாம்! இப்போது எங்கள் வீட்டிலும் பிளாட் மாமரம் நிரம்ப காய்த்து தொங்கும்.  எனக்கு  பழமுமில்லா காயுமில்லா பருவத்தில் மாங்காய்ப்பழம் சாப்பிட ரெம்ப பிடிக்கும்!

இந்த தடவை நீங்க என்ன சொன்னாலும் நான் போவேன் போய் மாம்பழமெல்லாம் வாங்கி சாப்பிடுகிறேன் 
நிஷா அக்காவின் தம்பி என்று அறிமுகம் செய்கிறேன் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்

போங்களேன்! ஸ்கூலுக்கு  நேர் எதிரில் தான் வீடு. ஸ்கூல் வாசலும் எங்கள் வீட்டு வாசலும்  எதிர் எதிர் தான். கடையும் இருக்கும்  கடையின் பெயர் கப்ரியேல் பெயர்தான். வீட்டின் பெயர் எப்சி பெயர் தான்.  போயிட்டு கடையில் ஐஸ்கிரிம் வாங்கி சாப்பிட்டு விட்டு வந்தால் பிழைச்சிங்க!

நான் நிஷாக்கா தம்பி கிம்பின்னிங்க.. நீங்க  அங்கே இருக்கும் என் கடைசிதங்கைக்கு எதிரி ஆகிருவிங்க..  நான் இப்ப அவங்க கூட பேசாமல் இருப்பது சுரேஷ் அண்ணாவால்  தான் என அவரோட சண்டை போட்டு முடித்து விட்டாள்.  நீங்கள் போய் வாங்கிக்கட்டுங்க.. யார் வேண்டாம் என்றாங்க!

இருந்தாலும் நீங்க இப்படி பயமுறுத்தக் கூடாது... ஆனா என்ன பயம் காட்டினாலும் ஹாசிம் தம்பி சிங்கம்ல ஒரு உறுமு உறுமினா கடை, வீடு  அலறும் தெரியும்ல  *# 
அது............. சும்மா அதிருமில்ல

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 14:15

Nisha wrote:அதை சொல்லிட்டு  நீங்கள் ஏன் ஓடுறிங்கப்பா!

அது என்னமோ பானு! எனது இந்த அண்ணன் தம்பி  உறவுகள் குறித்து என் தங்கைகளிடம் பெரிய டிஸ்கஸே நடக்கும் போல..  நான் இப்ப அவங்களுக்கு உதவாதது,  பேசாததுன்னு பெரிய  குழப்பம்.

நான் இந்தியா வந்தபோ சுரேஷ் அண்ணா வீட்டில் தான் நின்றேன்  அம்பத்தூரில்.

என் தங்கை அண்ணா நகரில் இருந்தா. அவ வீட்டுக்கு இரண்டு நாள் நிற்க போன் நேரம் நல்ல காய்ச்சல் வந்து விட்டது.  

சுரேஷ் அண்ணா தம்பி ரமேஷும் என்னிடம் அக்கா அக்கா என கொஞ்சம் பொசிசிவ்தான்.  எனக்கு காய்ச்சல் என்றதும் நான் உடனே வந்து அக்காவை வீட்டுக்கு கூட்டி போறேன் அம்மா ரசம் வைச்சு கொடுத்து நல்லா பார்த்துப்பா என  சொல்லி இருக்கான்.. இவள் உடனே என் அக்காவை பார்த்துக்க இவங்க யாரு? அது இதுன்னு  சண்டைன்னால் பாருங்களேன்!  இருந்தும்  அவனும் விட்டு கொடுக்காமல்   வீட்டுக்கு கூட்டிப்போய் உடனே டாகடரிடம்  போய் மருந்து வாங்கினு  கவனித்தான்.

ஆனால் ஒன்று  மட்டும் நிச்சயம் பானு.  என்னுடன் பிறந்தோருக்கு புரியாத என் அன்பு என்னுடன் பிறக்காமல் என்னுடன் பிறப்பாய் ஆன தம்பிகளுக்கு புரிந்து  இன்று வரை என்னை தாங்கி என் அன்பை இழக்காமல் நான் என்ன சொன்னாலும் திட்டினாலும் சகித்து போவது  ரெம்ப பெரிய விடயம் பானு.

இவர்களிடம் கிடைக்கும்  புரிதலில் பத்தில் ஒரு பங்கு கூட அங்கே இல்லை!
இதை நானும் உணர்ந்திருக்கிறேன் அக்கா நாம் பாசத்திற்காய் ஏங்கும்போது அணுவளவு கூட எமக்கு எம் உறவுகளிடமிருந்து கிடைப்பதில்லை அவர்களின் எதிர்பார்ப்புக்கான அன்பு மாத்திரம் எம்மை நோக்கி நோக்கத்திற்காக வைக்கிறார்கள்

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 14:17

பிரதான வீதியில் இருக்கும் பாடசாலைதானே கோட்டைக் கல்லாறில் இருப்பதுதானே பாடசாலைக்கு முன் கண்டிப்பாக முயற்சி்க்கிறேன்

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by Nisha Sat 23 Aug 2014 - 14:21

நேசமுடன் ஹாசிம் wrote:பிரதான வீதியில் இருக்கும் பாடசாலைதானே கோட்டைக் கல்லாறில் இருப்பதுதானே பாடசாலைக்கு முன் கண்டிப்பாக முயற்சி்க்கிறேன்

ஹைய்யோ ஹைய்யோ! ஆமிக்காரன் வீட்டுக்கு முன்னாடி போய் நிற்கப்போகின்றான்! கோட்டைகல்லாறு எங்கே இருக்கிறது ஹாசிம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by Nisha Sat 23 Aug 2014 - 14:22

கோட்டைகால்லாறு போயிட்டு ஏதாவது கடையில் போய் நிஷாக்கா ஒரு கிலோ என கேளுங்க.. தருவாங்க.. கூடவே கறுப்புகண்ணாடி ஒன்றும் மாட்டிக்கோங்க!  _* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 14:25

Nisha wrote:கோட்டைகால்லாறு போயிட்டு   ஏதாவது கடையில் போய் நிஷாக்கா ஒரு கிலோ என கேளுங்க.. தருவாங்க.. கூடவே கறுப்புகண்ணாடி ஒன்றும் மாட்டிக்கோங்க!  _* 
எதுக்கு கறுப்புக் கண்ணாடி 

அக்கா ஆளவச்சி இந்த அப்பாவிய தூக்கிடாதிங்க 

அது பேசுறமாதிரி பேசி பழகிறமாதிரி பழகினா எல்லாரும் உறவாகுவாங்க அக்கா

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 14:26

அக்கா வாகரை கேள்விப்பட்டிருப்பிங்க அங்கு எனக்கு ஒரு மிக நெருக்கமான உறவொன்றை தேடிக்கொண்டேன் எப்படி என்று தெரியுமா 
நீங்க கேட்டாத்தான் சொல்வன்

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by Nisha Sat 23 Aug 2014 - 14:29

எப்படின்னு சொல்லுங்க? அதுக்கு முன் அது யாரு நெருக்க மான உறவு என சொல்லுங்க?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 14:31

Nisha wrote:எப்படின்னு  சொல்லுங்க? அதுக்கு முன் அது யாரு நெருக்க மான உறவு என சொல்லுங்க?
நெருக்கமின்னா உடனே தப்பாவெல்லாம் முடிவெடுக்கப்டடாது

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by Nisha Sat 23 Aug 2014 - 14:31

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:கோட்டைகால்லாறு போயிட்டு   ஏதாவது கடையில் போய் நிஷாக்கா ஒரு கிலோ என கேளுங்க.. தருவாங்க.. கூடவே கறுப்புகண்ணாடி ஒன்றும் மாட்டிக்கோங்க!  _* 

எதுக்கு கறுப்புக் கண்ணாடி 

அக்கா ஆளவச்சி இந்த அப்பாவிய தூக்கிடாதிங்க 

அது பேசுறமாதிரி பேசி பழகிறமாதிரி பழகினா எல்லாரும் உறவாகுவாங்க அக்கா

ஹாஹா! தூக்கிறதா? அமுக்கிர மாட்டோம் ! எம்பூட்டு நம்பிக்கை உங்க அக்கா மேல ஹாசிம்!

Last edited by Nisha on Sat 23 Aug 2014 - 14:39; edited 2 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by பானுஷபானா Sat 23 Aug 2014 - 14:38

நேசமுடன் ஹாசிம் wrote:அக்கா வாகரை கேள்விப்பட்டிருப்பிங்க அங்கு எனக்கு ஒரு மிக நெருக்கமான உறவொன்றை தேடிக்கொண்டேன் எப்படி என்று தெரியுமா 
நீங்க கேட்டாத்தான் சொல்வன்

எப்படி சொல்லுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 14:43

நான் மனைவி அதிகமாக மோட்டார் வண்டியில் அவரது ஊருக்கு செல்வது வளக்கம் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்று நினைக்கிறேன் ஒரு முறை வரும் போது திருக்கோண மலையிலிருந்து வாகரை வழியாக செல்லலாம் என்று முடிவெடுத்து வந்து கொண்டிருந்தபோது அப்போதுதான் சற்று பிரச்சினைகள் ஓய்ந்து இருந்த நேரம் அந்த வழியில் பயணிப்பது பயங்கரம் என்று நினைத்திருந்த காலம் வாகரையில் எதேற்சையாக ஒரு வீட்டில் நிறுத்தினோம் யாரென்றே தெரியாது அன்றுத்தான் கண்ட உறவு எங்களை வரவேற்று உறவாடினார்கள் ஒரு 35வயது தாண்டிய பெண்மணி அவருக்கு இரு குழந்தை அவரது கணவர் குவைத்தில்  மிகவும் அன்யோன்யமாக பழகினார்கள் நன்றாக உபசரித்தார்கள் அன்றிலிருந்து இன்றுவரை எங்கள் குடும்பத்துடன் மிகவும் நெருங்கிய உறவாகிவிட்டார்கள் எப்போது நாங்கள் போனாலும் அவர்களின் வீட்டுக்கு செல்லாது வருவதில்ல அவரது கணவரும் என்னுடன் ஸ்கைப்பில் பேசுவார் எங்களது வீட்டுக்கும் வருவார்கள் மிகவும் தூரம் இருந்தும் பொருட்படுத்தாது வருவார்கள் உறவு பலமடைந்து பாசத்துடன் தொடர்கிறது இப்போதும் போணில் பேசுவதுண்டு 

அதனால்தான் நான் எதை சொல்ல வந்தேனென்றால் அனைவரிடமும் நல்ல உணர்வுகள் இருக்கிறது நாம் எற்படுத்தும் தொடர்புகளின் வாயிலாக நாம் அனைவரையும் கவர்ந்திடலாம் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 14:45

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:கோட்டைகால்லாறு போயிட்டு   ஏதாவது கடையில் போய் நிஷாக்கா ஒரு கிலோ என கேளுங்க.. தருவாங்க.. கூடவே கறுப்புகண்ணாடி ஒன்றும் மாட்டிக்கோங்க!  _* 

எதுக்கு கறுப்புக் கண்ணாடி 

அக்கா ஆளவச்சி இந்த அப்பாவிய தூக்கிடாதிங்க 

அது பேசுறமாதிரி பேசி பழகிறமாதிரி பழகினா எல்லாரும் உறவாகுவாங்க அக்கா

ஹாஹா! தூக்கிறதா? அமுக்கிர மாட்டோம் ! எம்பூட்டு நம்பிக்கை உங்க அக்கா மேல ஹாசிம்!
நீங்கள் நினைப்பதை விட அளவுக்கு மீறிய நம்பிக்கை உண்டு அக்கா அதனால்தான் நாம் நேரில் இருந்து பேசுவதுபோல் எமது அத்தனை விடயங்களையும் பேசிக்கிட்டிருக்கிறோம்

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by Nisha Sat 23 Aug 2014 - 15:01

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:எப்படின்னு  சொல்லுங்க? அதுக்கு முன் அது யாரு நெருக்க மான உறவு என சொல்லுங்க?
நெருக்கமின்னா உடனே தப்பாவெல்லாம் முடிவெடுக்கப்டடாது

நான் என்ன முடிவெடுத்தேன் என உங்களுக்கு எப்படித்தெரியுமாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 15:03

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:எப்படின்னு  சொல்லுங்க? அதுக்கு முன் அது யாரு நெருக்க மான உறவு என சொல்லுங்க?
நெருக்கமின்னா உடனே தப்பாவெல்லாம் முடிவெடுக்கப்டடாது

நான் என்ன முடிவெடுத்தேன் என உங்களுக்கு எப்படித்தெரியுமாம்?
அது சும்ம்ம்மா....................

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ? Empty Re: இயற்கை யுக்திகள் இருக்க " கார்பைட் கல் " எதற்கு ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum