சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

இறுதி வரை உறுதி வேண்டும்! Khan11

இறுதி வரை உறுதி வேண்டும்!

2 posters

Go down

இறுதி வரை உறுதி வேண்டும்! Empty இறுதி வரை உறுதி வேண்டும்!

Post by ahmad78 Sun 5 Apr 2015 - 15:39

ஃபிட்னஸ் : முனைவர் : மு.ஸ்டாலின் நாகராஜன்

இறுதி வரை உறுதி வேண்டும்! Ht3408

கடந்த வாரம் மூத்த நண்பர்கள் மூவரோடு கோல்ஃப் ஆடிக் கொண்டிருந்தேன். மூவருமே 70 வயதைத் தாண்டியவர்கள். 3 மணி நேரம் எனக்கு  இணையாக ஆடிய அவர்களின் உடல் மற்றும் மன வலிமையைக் கண்டு ஆச்சரியம் தெரிவித்தேன். அந்த மூவரும் இணைந்து, குழந்தைகளால்  கைவிடப்பட்ட, ஒதுக்கித் தள்ளிய, அடித்து துரத்திய, வயோதிக பெற்றோருக்காக ‘இலவச முதியோர் இல்லம்’ அமைத்து, மாபெரும் சேவையை செவ்வனே செய்து வருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது!

எனது ஆச்சரியம் கண்ட அவர்களில் ஒருவர், ஒரு நீதிக் கதையோடு ஆரம்பித்தார்... ‘‘தலைசிறந்த, ஒழுக்கம் வாய்ந்த, படிப்பறிந்த, பணக்கார பெற்றோர்  தங்களின் குழந்தைகளை சீரும் சிறப்புமாக வளர்த்து, ஆளாக்குகிறார்கள். அனைத்துச் செல்வங்களையும் வழங்கி, திருமணம் செய்து வைத்து,  சொத்துகள் அனைத்தையும் எல்லோருக்கும் சமமாக பிரித்து கொடுத்து, பேரப்பிள்ளைகளைப் பார்த்து சந்தோஷம் அடைகிறார்கள். இனி தங்கள்  இருவரையும் பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை வந்த போதுதான் வயது முதிர்வு சைத்தானின் தாண்டவம் தொடங்கியது.

நோய்கள் வந்தன. உடல்நலம் குன்றியது. இனி பெற்றோரால் பயன் இல்லை என்று தெரிந்து கொண்ட பிள்ளைகளோ, அவர்களை வைத்து காப்பாற்ற  ஆர்வம் காட்டாமல், வெறுத்து ஒதுக்கி, ஒரு சிறிய வீட்டில் தனியே விட்டு விட்டனர். கடைசியில் பெற்றோர் இருவரும் உடல் நொந்து, மனம் வெந்து,  வெம்பி இறந்து விட்டனர். அவர்களின் அடக்கம் முடிந்த பின், ‘சனியன்களின் தொல்லை தீர்ந்தது’ என பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கும்  வேளையில், அந்த சிறிய வீட்டில் இருந்த தாத்தா-பாட்டியின் பொருட்களை பேரப்பிள்ளைகள் சேகரிக்கத் தொடங்கினார்கள்.

‘ஏன் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்’ எனக் கேட்ட போது, குழந்தைகள் நிதானமாக கூறினார்கள்... ‘நீங்கள் தாத்தா-பாட்டியை  ஒதுக்கி, தனியே வாழ வைத்தது போல, நாளை உங்களையும் நாங்கள் தனியே விடும் போது, இதையெல்லாம் கொடுக்கத்தான்!’ என்று’’ இந்த நீதிக் கதையை முடித்துவிட்டு, முதியோர் இல்லத்தில், கொடுமைகள் பல கண்ட ஒரு பெற்றோர் எழுதிய உருக்கமான கடிதத்தையும்  கொடுத்தார். அதன் சாராம்சம்...‘எங்களது பேரன்புக்குரிய பிள்ளைகளே!

நாங்கள் இருவரும் முதுமை அடைந்த பிறகு, முடிகள் பஞ்சு போல வெளுத்து, விழுந்து, பார்வை மங்கி, பல் எல்லாம் கொட்டி, தோல் சுருங்கி,  அருவெறுப்பான தோற்றத்தோடு, கை, கால், உடல், மனவலிமை அனைத்தையும் இழந்து, ஒவ்வொரு நோயாக எங்களை துவம்சம் செய்ததே...  எங்களின் வயோதிகத்தை, முதுமையின் முடிவை, குழந்தைகளாகிய நீங்கள் பொறுமையாக, அன்பாக, இயற்கையின் உண்மையாக புரிந்து கொள்வீர்கள்  என நம்பிய எங்கள் நம்பிக்கை சுக்கு நூறாகி விட்டதே!

இப்போது வேளாவேளைக்கு முன்பு போல பசி வருவதில்லை. அப்படி பசி வந்த நேரங்களில், நாங்கள் சாப்பிடும் போது கைகள் நடுங்கி சிதறும்  போதும், கழிவறைக்குப் போக முடியாமல், குளிக்கக்கூட தெம்பு இல்லாமல், உடை உடுத்த வலுவிழந்த போதும், உடை உடலில் நிற்காது விழுந்த  போதும், நீங்கள் எங்களை திட்டி, கத்திய வார்த்தைகள், இன்றும் காது கேட்காத காதில் ரீங்காரமிடுகிறது. இதே நிலையில் நீங்கள் குழந்தையாக  இருந்த காலகட்டத்தில், பேசத் தெரியாத  உங்களை பேச வைத்தோம். சாப்பிடத் தெரியாத உங்களை நிலவைக் காட்டி, இயற்கையைக் காட்டி, பஸ்,  கார்களை, சைக்கிள்களை காட்டி ஒவ்வொரு வேளைக்கும் 2 மணி நேரம் பொறுமையாக ஊட்டினோம்.

குளிக்க முடியாத, தெரியாத உங்களை வெதுவெது நீரில் குளிக்க வைத்து, விதவிதமான உடைகள் உடுத்தி, பவுடர் அடித்து திருஷ்டிப் பொட்டு  வைத்து அழகு பார்த்தோம். உங்களுக்கு நலக்குறைவுகள் வரும் போது, அதிகாலை, மதியம், மாலை, நடு இரவு என எந்நேரமானாலும் டாக்டர்களிடம்  ஓடி பணத்தை இறைத்து உயிர் காத்தோம். உயர் கல்வி அளித்தோம்.

உங்களது அனைத்து உரிமைகளுக்காகவும் உண்ணாமல், உறங்காமல் உங்களின் முன்னேற்றம் ஒன்றே எங்களின் குறிக்கோளாக கருதி, எங்களை  உங்களுக்காக அர்ப்பணித்ததை கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க கூடாதா? உங்கள் குடும்ப வாழ்க்கையில், குழந்தை வளர்ப்பில் ஏதாவது தவறு  இருந்தாலோ, தினசரி வாழ்க்கையின் அணுகுமுறையில் தவறுகள்  செய்யும் போது, ‘இது பின்னால் பேரழிவை ஏற்படுத்துமே’ என பயந்து, அறிவுரை செய்தோம்... ‘வயசான காலத்தில், சும்மா தொண தொணத்து சொன்னதையே சொல்லிக்கிட்டு எங்கள் உயிரை வாங்குகிறீர்கள்... எங்கேயாவது போய்  தொலைய வேண்டியதுதானே’ என்கிறீர்கள். நீங்கள் குழந்தையாக இருந்தபோது, உங்களை தூங்க வைக்கும் நேரம் சொன்ன கதையையே ஆயிரம்  தடவை கேட்ட ஞாபகம் இல்லையா, எங்களது அருமை குழந்தைகளே!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இறுதி வரை உறுதி வேண்டும்! Empty Re: இறுதி வரை உறுதி வேண்டும்!

Post by ahmad78 Sun 5 Apr 2015 - 15:40

நாங்கள் உங்களிடம் வேண்டுவதெல்லாம்...

எங்களை வெறுத்து ஒதுக்காதீர்கள்.
எங்கள் மேல் கோபம் கொள்ளாதீர்கள்.
உங்களுக்காகவே வாழ்ந்து, உடல்-மன வலிமை அனைத்தையும் இழந்து, வாழ மனம் இல்லாமல்,
மரணத்துக்காகக் காத்திருக்கும் வேளையில் ‘இதைச் செய், அதைச் செய்’ என கட்டாயப்படுத்தாதீர்கள்.
எங்களின் முதுமைக்கு, வயதுக்கு மரியாதை தாருங்கள்.
நாங்கள் உங்களோடு இருப்பதால் எங்களக் கண்டு கவலையோ, பரிதாபமோ அடைய வேண்டிய அவசியம் இல்லை. எங்களை புரிந்து கொண்டாலே  போதும்.
எங்களால் உங்களுக்கு இப்போது தர முடிவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... அது ‘எங்களின் ஆசீர்வாதங்கள்!’
கடிதத்தை படித்த முடித்து என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. எனது
கண்ணீரை துடைத்து விட்ட நண்பர் மேலும் கூறிய சில வார்த்தைகள்...

‘50 வயதை நெருங்கும் போதும், 50 வயதை தாண்டும் போதும், அனைவரும் உடல்நலத்தை அதிக அக்கறையுடனும் கவனத்தோடும் பேணிக்காக்க  வேண்டியது அவசியம். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும் பட்சத்தில், உங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகளை பார்த்துக் கொள்ள, பராமரிக்க,  பள்ளிக்கு கூட அனுப்பி பின்பு அழைத்து வர, சமைக்க, வீட்டுவேலைகள் செய்ய, காய்கறி, மளிகைக்கடை செல்ல, அவர்கள் சினிமா, கல்யாணம், விசேஷம், வெளியூர் செல்லும் போது வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள என அனைத்து வேலைகளுக்காகவும் உங்களை  வீட்டோடு வைத்துக் கொள்வார்கள்.

இதற்காக உங்கள் பிள்ளைகளிடையே ஒரு போட்டியே நடக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இல்லாவிட்டால் திண்ணையோ, வீட்டின் மூலையோ  முதியோர் இல்லமோதான். அதனால், டாக்டரின் அறிவுரைக்குப் பிறகு உடற்பயிற்சியை தொடங்காமல், இளமையில் தொடங்கி, நடுவயதில்  தொடர்ந்து, முதுமையில் உடற்பயிற்சியின் பளு அளவினை குறைத்து, தொடர்ந்து கொண்டே இருந்தால், இறுதி நாள் வரை மகிழ்ச்சியாக இருக்கலாம்’  எனக்கூறி எனது ஆச்சரியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எனது வயோதிக நண்பர்!

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3418


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இறுதி வரை உறுதி வேண்டும்! Empty Re: இறுதி வரை உறுதி வேண்டும்!

Post by Nisha Sun 5 Apr 2015 - 15:44

எங்களை வெறுத்து ஒதுக்காதீர்கள்.
எங்கள் மேல் கோபம் கொள்ளாதீர்கள்.
உங்களுக்காகவே வாழ்ந்து, உடல்-மன வலிமை அனைத்தையும் இழந்து, வாழ மனம் இல்லாமல்,
மரணத்துக்காகக் காத்திருக்கும் வேளையில் ‘இதைச் செய், அதைச் செய்’ என கட்டாயப்படுத்தாதீர்கள்.
எங்களின் முதுமைக்கு, வயதுக்கு மரியாதை தாருங்கள்.
நாங்கள் உங்களோடு இருப்பதால் எங்களக் கண்டு கவலையோ, பரிதாபமோ அடைய வேண்டிய அவசியம் இல்லை. எங்களை புரிந்து கொண்டாலே  போதும்.
எங்களால் உங்களுக்கு இப்போது தர முடிவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... அது ‘எங்களின் ஆசீர்வாதங்கள்!’

படித்ததும் கண்களில் கண்ணீர் தான் வருகின்றது. இப்படி ஒரு சிலர் அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்க.. 

பிள்ளைகள் கொடுக்கும் அன்பையும் பாசத்தையும் துச்சமென தூக்கிஎறிந்து வயதுக்கு மதிப்பின்றி  வலிக்க செய்பவர்களும் இவ்வுலகில் உண்டெனும் போது எங்கே போய்  முறையிடுவது என புரியவே இல்லை. 

நல்ல பதிவு முஹைதீன். நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இறுதி வரை உறுதி வேண்டும்! Empty Re: இறுதி வரை உறுதி வேண்டும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum