சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

ஸ்ட்ராபெர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள் Khan11

ஸ்ட்ராபெர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள்

2 posters

Go down

ஸ்ட்ராபெர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள் Empty ஸ்ட்ராபெர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள்

Post by ஷஹி Sun 17 Jul 2011 - 15:52

‘பெரி’ குடும்பத்தின் ‘ராணி’ எனப்படும் இந்த சிவந்த நிறப் பழங்கள் ‘வைட்டமின் சி’ சத்து மிகுந்தது. இரும்புச் சத்தும் மிகுந்துள்ளது. பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மையும் இருப்பதால் மருத்துவ குணம் கொண்டது எனப் போற்றப்படுகின்றது.
ஸ்ட்ராபெர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள் Strawberry21கோடைகாலத்தில் வெயிலை விட பழங்களின் விலை கடுமையாக உயர ஆரம்பிக்கும். ஏனெனில் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்துள்ள பழங்களே நமக்கு பெரிதும் உதவுகின்றன.

*

பழங்களில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை பிரி ரேடிக்கல் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன. ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை சில குறிப்பிட்ட பழங்களிலேயே அதிகமாக காணப்படுகின்றன. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும் பாலும் ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும்.

*

நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும். உதாரணமாக பிற உணவுகளில் குறைந்தளவே காணப்படும் அல்லது அரிதாக காணப்படும் வைட்டமின்-பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்து, ரத்த செல்களை ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள்சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப் பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன. இவை குறைபாடாக நமக்கு கிடைப்பதால் பலவித பற்றாக்குறை நோய்கள் உண்டாகின்றன. ஆகவே நாம் இது போன்ற சிறப்பான சத்துகள் நிறைந்த பழங்களை அடிக்கடி உட் கொண்டால் பலவிதமான நோய்கள் நம்மை அணுகாமல் காத்துக் கொள்ளலாம்.

*

ஏராளமான வைட்டமின்களையும், பலவகையான தனிக சத்துக்களையும், ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ள வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் உயர்ந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள், கோடைக்காலத்தில் பெருமளவு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் மருத்துவ குணத்திற்காக இவை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. சுகந்த மணத்தையும், கருஞ்சிவப்பு நிறத்துடன், கண்களை பறிக்கும் அழகுடன் காணப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுவதும் பயிர் செய்யப்படுகின்றன. தரம் உயர்ந்த இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்ட ஸ்ட்ராபெர்ரி பழங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.ஸ்ட்ராபெர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள் Food009பெரோஜிரியா அனானாசா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன.

*

5 பழங்களில் 250மிலி அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும் நமக்கு கிடைக் கின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவு னூட்டியாகவும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.

*

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் 10, உரித்த ஆரஞ்சு சுளைகள் 10, பழுத்த, உரித்த நாட்டு வாழைப்பழம் 4, சீனி அல்லது நாட்டுச்சர்க்கரை 50 கிராம் ஆகியவற்றை எடுத்து தேவையெனில் நெல்லிக்காய் சாறு 100 மிலி சேர்த்து நன்கு அரைத்து பழச்சாற்றை பிழிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவையெனில் சற்று நீர் சேர்த்து இளக்கமாக அரைக்கலாம். ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த பழச்சாறு ஒரு சிறிய குடும்பத்திற்கு போதுமானதாகும். கோடைகாலத்தில் அடிக்கடி இந்த பழச்சாற்றை குடித்து வந்தால் தோல் வறட்சி நீங்குவதுடன், வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட குளிர்பானங்களை உட்கொண்டு பல் எனாமல் தேய்ந்து, பற்களில் கறை ஏற்படுவதையும் தவிர்க்கலாம். மேலும் ஸ்ட்ராபெர்ரியிலுள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.


*

இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.

*

அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. பருவப் பெண்கள் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க தங்கள் உணவில் இப்பழங்களைச் சேர்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும்.

*

சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் தன்மை இப்பழங்களுக்கு உண்டு. அதனால் முகத்திலுள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச் செய்யும் குணம் கொண்டது. வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பிலிருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

ஸ்ட்ராபெர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள் Empty Re: ஸ்ட்ராபெர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள்

Post by முனாஸ் சுலைமான் Sun 17 Jul 2011 - 15:54


வாழ்த்துக்கள் ஜஃபாயிர் ஆழமான மருத்துவக்குறிப்புக்களை அள்ளி வழங்கியுள்ளீர்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum