சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

மாகவி பாரதியின் வாழ்க்கை - சில விவரங்கள் Khan11

மாகவி பாரதியின் வாழ்க்கை - சில விவரங்கள்

Go down

மாகவி பாரதியின் வாழ்க்கை - சில விவரங்கள் Empty மாகவி பாரதியின் வாழ்க்கை - சில விவரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 8 Oct 2011 - 17:15

(நன்றி: வானதிப் பதிப்பகத்தின் "பாரதியார் கட்டுரைகள்" என்ற நூலிலிருந்து)

1882 ஆங்கில மாதம் டிசம்பர் 11ஆம் நாள், சித்ரபானு கார்த்திகை 27ஆம் நாள் எட்டையபுரத்தில் பாரதி பிறந்தார். தந்தை சின்னசாமி அய்யர். தாய் இலட்சுமி அம்மாள். பெற்றோர் வைத்த பெயர் சுப்ரமணியமன். செல்லப்பெயர் சுப்பையா.

1887 - தாய் மரணம். அப்போது பாரதிக்கு அகவை ஐந்து.

1889 - தந்தைக்கு மறுமணம். பாரதிக்கு உபநயனம் என்ற பூணூல் அணிவித்தல். இளைஞன் அருட்கவி பொழிகிறான்.

1893 - 11 அகவையுள்ள சுப்பையாவை எட்டயபுரம் சமஸ்தானப் புலவரகள் பெருஞ்சபையில் சோதித்து, வியந்து, 'பாரதி' (கலைமகள்) என்ற பட்டம் அளிக்கின்றனர்.

1894-1897 - திருநெல்வேலி இந்து கல்லூரிப் பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படிப்பு. தமிழ்ப்பண்டிதர்களுடன் சொற்போர். 1896-ஜூன் 14 1/2 அகவை பாரதிக்கும் 7 அகவை செல்லமாளுக்கும் திருமணம்.

1898 - ஜூன் தந்தையார் இயற்கை எய்தல்- பெருநதுயர்.

1898-1902 - காசியில் அத்தை குப்பம்மாளுடன் வாசம், படிப்பு; அலகாபாத் பல்கலை கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி. காசி இந்து கலாசாலையில் செங்கிருதம், இந்தி பயின்றார். கச்சம், வாழ்விட்ட தலைப்பாகை, மீசைப் பழக்கம்.

1904 - ஆகஸ்ட்-நவம்பர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிகமாகத் தமிழ்ப் பண்டிதர்.

1904 - நவம்பர் - சென்னை 'சுதேசமித்திரன்' உதவியாசிரியர், ஜி. சுப்ரமணிய அய்யரிடம் பயிற்சி. சக்ரவர்த்தினி மாதயிதழ் ஆசிரியப் பொறுப்பு.

1905 - வங்கப்பிரிவினை. சமூக சீர்திருத்தவாதி பாரதி, அரசியலில் தீவிரவாதியாகிறார். காசி காங்கிரஸ் சென்று திரும்புகையில் விவேகாநந்தரின் சிஷ்யை நிவேதிதாதேவியைச் சந்தித்து ஞானகுருவாக ஏற்றல்.

1906 - ஏப்ரல் - சென்னையில் புரட்சிகரமான 'இந்தியா' வாரயிதழ் தோற்றம். பாரதி பொறுப்பாசிரியர். மண்டயம் நா. திருமலாச்சாரி, எஸ்.சீனிவாசாச்சாரி, சா.துரைசாமி அய்யர், வி.சக்கரைச் செட்டியார், வ.உ.சி. நட்பு. விபின் சந்திர பாலர் சென்னை வருகை. 'பாரதமாதா' ஆங்கில வாரயிதழ் ஆரம்பம்.

1907 - டிசம்பர் - சூரத் காங்கிரஸ். திலகரின் தீவிரவாதிகளுக்கு ஆதரவு. வ.உ.சி. மண்டயம் சீனிவாசாச்சாரியுடன் சென்னைத் தீவிர இளைஞர் குழுவைச் சூரத் அழைத்துச் செல்கிறார். காங்கிரசில் பிளவு. திலகர், அரவிந்தர், லஜபதி, பாரதி சந்திப்பு.

1907 - அரசியல் எதிரி பழுத்த மிதவாதி வி.கிருஷ்ணசாமி அய்யர் பாரதியின் தேசிய கீதங்களில் மோகித்து போகிறார். 'சுதேச கீதங்கள்' என்ற தலைப்பில் மூன்று பாடல்கள் கொண்ட நாலு பக்க ப்ரசுரம் நிறைய வெளியிட்டு, இலவசமாய் விநியோகிக்கிறார் கிருஷ்ணசாமி அய்யர்.

1908 - சென்னைத் தீவிரவாதிகள் கோட்டை. 'சுயராஜ்ய தினம்' சென்னையில் பாரதியாலும், தூத்துகுடியில் வ.உ.சி, சுப்ரமணிய சிவா, சுதேசி பத்மநாபய்யங்கார் முதலியோராலும் கொண்டாடப்படுகிறது. பின்னர் மூவர் கைது. வ.உ.சி, சிவாவுக்கு தண்டனை. சிறைவாசம். வழக்கில் பாரதி சாட்சியம் சொல்கிறார்.

1908 - சுதேசகீதங்கள் என்ற கவிதைத் தொகுதியை பாரதி வெளியிடுகிறார். முதல் நூல்.

1908 - இந்தியா மீது ஆங்கிலேய அரசு பார்வை. சட்டபூர்வமான ஆசிரியர் கைது. பாரதி மீது வாரண்ட். பாரதி தலைமறைவாகிப் போய் புதுச்சேரி வருகிறார். பழக்கமற்ற புது ஊர். போலீஸ் தொல்லை.

1908-1910 - இந்தியா இதழும் புதுவை வந்து, பிரஞ்சிந்திய எல்லைக்குள்ளிருந்து ஆங்கிலேய அரசாங்கத்தின் மீது நெருப்பு மழை பொழிகிறது. இதழின் செல்வாக்கு அதிகரிப்பது கண்டு, அது ஆங்கில இந்தியாவில் நுழையாதபடி ஆங்கில அரசு தடுக்கின்றது. இதழ் நின்று போதல்.

1909 - ஜன்மபூமி என்ற இரண்டாவது கவிதைத் தொகுதி வெளியீடு.

1910 - விஜயா நாளிதழ், சூர்யோதயம் வாரயிதழ், பாலபாரதா ஆங்கில வாரயிதழ், கர்மயோகி திங்களிதழ் - யாவும் நின்று போகின்றன. சித்ராவளி ஆங்கில-தமிழ் கார்ட்டூன் இதழ்திட்டம் நிறைவேறவில்லை.

1910 - ஏப்ரல் - பாரதி ஏற்பாடு செய்ய, அரவிந்தர் புதுவை வருகிறார். வேதநூல் ஆராய்ச்சி.

1911 - நவம்பர் - கனவு என்ற சுயசரிதை முதலிய பாடல் அடங்கிய 'மாதா மணிவாசகம்' நூல் வெளியீடு. வ.வே.சு அய்யர் வருகை.

1911 - மணியாச்சியில் கலெக்டர் ஆஷ் துரை கொலை. புதுவையிலிருந்து நாட்டுத் தொண்டர்களை வெளியேற்ற முயற்சிகள். பாரதியின் சீடர்கள் பெருகுகின்றனர்.

1912 - உழைப்பு மிக்க வருடம். கீதை; மொழிபெயர்ப்பு. கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் எழுதப் பெறுகின்றன. பாஞ்சாலி சபதம் முதல் பாகம் வெளியீடு.

1913-14 - "சின்ன சங்கரன் கதை" கையெழுத்துப் படி மறைந்து போகிறது. சுப்ரமணிய சிவத்தின் ஞானபாநு இதழுக்குச் செய்திகள் அளித்தல். தென் ஆப்பிரிக்கா நேடாலில் மாதா வணிவாசகம் நூல் வெளியீடு. முதல் உலகப் போர் தொடக்கம். புதுவை நாட்டுத் தொண்டர்கள் தொல்லைகள் அதிகரித்தல்.

1917 - கண்ணன் பாட்டு முதல் பதிப்பு பரசி சு. நெல்லையப்பர் வெளியிடுகிறார்.

1918 - நெல்லையப்பர் சுதேச கீதங்களை நாட்டுப் பற்று என்று வெளியிடுகிறார்.

1918 - புதுவை வாழ்வு சலித்துப் போய், புதுவையை விட்டு நவம்பர் 20ஆம் தேதி பாரதி கிளம்புகிறார். கடலூர் அருகே கைது. வாரண்டில் 34 நாள் முடிவில், வழக்கில்லையென்று விடுதலை. நேரே மனைவியின் ஊர் கடயத்திற்குச் செல்கிறார்.

1918-1920 - கடயம் வாசம். திருவனந்தபுரம், எட்டயபுரம், காரைக்குடி, கானாடுகாத்தான் போய் வருகிறார். எட்டயபுர மன்னருக்குச் சீட்டுக் கவிகள். பயனில்லை. தாகூருடன் நோபல் பரிசுக்காகப் போட்டியிட விருப்பம். நடைபெறவில்லை.

1919 - சென்னைக்கு வருகை. இராஜாஜி வீட்டில் காந்திஜி சந்திப்பு.

1920 - டிசம்பர் - சென்னையில் சுதேசமித்திரனில் மீன்டும் உதவியாசிரியர் வேலை. ஏ. ரங்கசாமி அய்யங்கார் ஆசிரியர். பாரதி, கட்டுரைகள் நிறைய எழுதுகிறார்.

1921 - ஜூலை - ஆகஸ்ட் - திருவல்லிகேணி கோயில் யானை தூக்கியெறிய யானை காலடியில் கிடக்கிறார். குவளை காப்பாற்றுகிறார்.

1921 - செப்டம்பர் - அதிர்ச்சியால் ஏற்பட்ட நோயிலிருந்து குணமடைந்தாலும், வயிற்றுக் கடுப்பு நோய் பீடிக்கிறது.

1948 - செப்டம்பர் - நோய் கடுமையாதல் - மருந்துண்ண மறுப்பு.

1949 - செப்டம்பர் - 12 - அகவை 39 கூட நிறைவு பெறாமலேயே நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் இயற்கை எய்தல்.


மாகவி பாரதியின் வாழ்க்கை - சில விவரங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு...
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» மூச்சு விடுவதல்ல வாழ்க்கை. முன்னேற முயற்சி செய்வதே வாழ்க்கை.
» ஜெயில் வாழ்க்கை பெயில் வாழ்க்கை -எது சிறந்தது – மொக்க ஜோக்ஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum