சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கையின் விந்தை…
by rammalar Today at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

மது எனும் காலன் Khan11

மது எனும் காலன்

Go down

மது எனும் காலன் Empty மது எனும் காலன்

Post by mufees Sun 25 Mar 2012 - 20:33

இயற்கை அன்னையால் படைக்கப்பட்ட மனிதன் பிறந்து வளர்ந்து தீய பழக்கங்களைக் கையாண்டு அற்புதமான வாழ்க்கையைச் சீரழித்து மாண்டும் போகிறான். இயற்கை மனிதனை ஆறறிவு கொண்ட மனிதனாகவும், பகுத்தறியும் உள்ள மனிதனாகவும் படைத்துள்ளது.

புலன்களின் ஈடுபாட்டால் தன்னை இழந்து நோயின் பிடிக்கு ஆளாகி தவிக்கின்றான். இந்த புலன்களை அடக்கியாண்டால்தான் அவன் மனிதனாக முடியும். இந்த புலன்கள் அனைத்தையும் உடைந்த காட்டாற்று வெள்ளம் போல் ஓடச் செய்வதற்கு முழுமுதற் காரணமாக அமைவது மதுப்பழக்கம்தான்.

மனிதனின் உடல், மனம், உள்ளம் இவற்றை பாதிக்கச் செய்து அவனது வாழ்க்கையையும், அவனது குடும்பத்தினர் வாழ்க்கையையும், சீரழித்து சின்னாபின்னமாக்கக் கூடிய தீய பழக்கம் தான் குடிப்பழக்கம்.

சண்டை சச்சரவுகள், களவு, கொலை, கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும், குற்றங்களும் மது எனும் அரக்கனின் தூண்டுதலாலேயே நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

மகாயுத்தம், பஞ்சம், இயற்கை பேரழிவு, கொள்ளை நோய் ஆகிய இம்மூன்றும் சேர்த்து அழித்ததை விட மதுபானம் அதிகமான மக்களை கொள்ளை கொண்டுள்ளது.

பழங்காலத்தில் மன்னர்கள் சோமபானம் என பழச்சாறுகள் கொண்டு தயாரித்து விருந்து உபசரிப்புகளில் பயன்படுத்தி வந்தனர். தீய குணங்கள் அனைத்திற்கும் மதுப்பழக்கம் தான் வழிகாட்டி என்று எடுத்துரைப்பதுடன் மதுபானம் அருந்தக்கூடாது எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை, சோளம், ஓட்ஸ், பார்லி, அரிசி, திராட்சை போன்றவற்றிலிருந்து தயாரிக்கப் படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் (நொதி) பழத்திலும், தானியங்களிலுள்ள மாவையும், சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.

அதுபோல் தற்போது தயாரிக்கப்படும் மதுவில் மூலக்கூறாக ஈதைல் ஆல்கஹால் (Ethyl Alcohol) உள்ளது.

மதுக்களில் உள்ள ஈதைல் ஆல்கஹாலின் அளவு

ரம் 50 - 60%

விஸ்கி, பராந்தி, ஜின் 40 - 45%

ஒயின் 10 - 15%

சாராயம் 40 - 50%

பீர் 4 - 8%

இதில் உள்ள ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடு பரவல் மூலம் இரத்தத்தில் வெகு விரைவில் கலக்கிறது. இதனால் உடனே போதை உண்டாகிறது.

இரத்தத்தில் ஆல்கஹால் அளவு அதிகரிக்க அதிகரிக்க மனிதன் தன்னை இழக்க ஆரம்பிக்கிறான். முதலில் தசை கட்டுப்பாடு இழக்கும். தொடு உணர்வு குறையும். சிந்தனை மாறும், வாய் வார்த்தை குளறும். நடையில் தள்ளாட்டம், அதிக மயக்கம், ஞாபகமறதி, குழப்பம் போன்றவை உண்டாகும்.

ஒரு மனிதன் குடிப்பதைப் பொறுத்து குடிக்கப்படும் மதுவில் 20 சதவிகிதம் ரத்தத்தில் நேரடியாக கலக்கிறது. மீதமுள்ள மது முழுவதையும் கல்லீரல் அரிக்கும் வரை அது மூளை முதலான உடல் உறுப்புகளில் பரவி பல வகையான மாற்றங்களை உண்டுபண்ணுகிறது.

பின்பு உடல் நரம்புகள் பாதிப்படைந்து, பார்வை நரம்புகளும் பாதிக்கப்படும். பித்தம் அதிகம் சுரந்து குடலில் அழற்சி உண்டாகி கல்லீரல் செல்கள் சேதப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் தெரிவதில்லை.

பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்படும் இந்த மதுப்பழக்கம் நாள் ஆக ஆக, எந்த நேரமும் அதைப் பற்றிய சிந்தனையையே உண்டாக்கும். தினமும் அருந்தும் எண்ணம் உண்டாகும். அருந்தும் அளவும் அதிகரிக்கும்.

இப்படி அளவுக்கு அதிகமாக மது குடிப்பவர்களின் நரம்புகள் தளர்ச்சியடைந்து, கை, கால்கள் நடுக்கம் உண்டாகும். இந்த நடுக்கத்தைப் போக்க மேலும் மேலும் மது அருந்த ஆரம்பிப்பார்கள். சுயக் கட்டுப்பாட்டை இழந்துவிடுவார்கள்.

குடிப்பதற்காக பலவிதமான போலிக் காரணங்களைக் கூறி நியாயப்படுத்துவார்கள். மனைவி, மக்கள் உறவுகளுடன் இனிமேல் குடிக்க மாட்டேன் என சத்தியங்களை அள்ளி விடுவார்கள்.

காதல் தோல்வி, விரக்தி, குழந்தை இல்லையென பல ஆண்கள் மது அருந்துகிறார்கள். இது மேலும் பாதிப்பை ஏற்படுத்துமே ஒழிய மாற்றத்தை உண்டு பண்ணாது என்பதை புரிந்து கொள்வதில்லை.

பொதுவாக மது அருந்துவது உடல்நலத்தை மட்டுமின்றி மனநலத்தையும் அதிக அளவில் பாதிக்கும். மது குடிப்பது பற்றிய சிந்தனை இருந்து கொண்டேயிருக்கும். உடல் அளவிலும் மனதளவிலும் பதற்றத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தும்.

மெல்ல மெல்ல காரணமற்ற பயத்தால் தன் குடும்பம் பற்றிய அவநம்பிக்கையான எண்ணங்கள், தாம்பத்திய உறவில் விரிசல், சந்தேக எண்ணெங்கள் போன்றவை ஏற்படும். இதுபோல் உடலிலும், மனதிலும் பல பாதிப்புகள் உண்டாகும்.

மதுவினால் உண்டாகும் பாதிப்புகள்:

நாம் சாப்பிடுகின்ற எத்தகைய உணவும் சீரமணடைந்த பிறகு குடலில் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தோடு கலந்துவிடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்குச் சென்று அங்கு பலவகையான மாற்றங்களைப் பெற்று, உடலின் தேவைக்கு ஏற்ப பல பாகங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள சத்துக்கள், கல்லீரல் சேமித்து வைக்கப்படுகிறது. அதுபோல அருந்தும் மதுவானது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு இரத்தத்தில் கலந்து கல்லீரலுக்கு சென்றடைகிறது. கல்லீரலில் சேமித்து வைக்கப்படும் சத்துக்கள் போல் மதுவும் வளர்சிதை மாற்றங்களுக்கு உட்படுகிறது. அதாவது கல்லீரலில் உள்ள செல்களின் மைட்டோகான்டிரியாவிலுள்ள நொதியிலிருக்கும் ஆல்கஹால் டீஹைடிரோஜனேஸ் என்ற நொதியினால் மாற்றமடைந்து அசிட்டால்டீஹைடு என்ற பொருளாக மாற்றப்படும். மீண்டும் அசிட்டால்டீஹைடானது டீஹைடிரோஜினஸ் என்ற நொதியில் அசிட்டால் டீஹைடு, ஆயிடேட் என்ற பொருளாக மாற்றப்படும். இதுபோன்ற பல்வேறு நச்சுப்பொருட்களும், மதுவும் கல்லீரலைப் பெரிதும் பாதிப்படைய வைக்கிறது.

மதுவை தொடர்ந்து அதிகமாக அருந்தும்போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும். தினமும் முப்பது கிராமுக்கு அதிகமாக மது அருந்தும் ஆண்களுக்கும், 20 கிராமுக்கு அதிகமாக மது அருந்தும் பெண்களுக்கும் கல்லீரல் பாதிப்படைகிறது.

மது அதிகமாக அருந்தும்போது ஏற்படும் மாற்றங்களால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேர்கின்றன. அதிகமான கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியாக்கப்படுகின்றன. அதேநேரம் கொழுப்பு அமிலங்கள் குறைவாக செலவழிக்கப்படுகிறது. இதனால் இவை கல்லீரலில் படிந்து கல்லீரைப் பாதிப்படைய செய்கிறது.

கல்லீரலில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகத் தங்குவதால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிந்துபோகின்றன. ஹையலின் என்ற பொருட்கள் கல்லீரலை இறுக்கி நோயாக மாற்றுகிறது. மது அருந்துவோருக்கு கல்லீரலில் இரும்புச்சத்து அதிகமாகப்படிகிறது.

துவக்கத்தில் அறிகுறிகள் ஏதும் தெரியவராது. ஆனால் கல்லீரல் பாதிக்கப்பட்டு காமாலை, மூளை பாதிப்பு, நரம்பு பாதிப்பு, வைட்டமின் குறைபாடு, வயிற்றுவலி, வயிற்றுப்புண், கை கால் நடுக்கும் உண்டாகும்.

சிகிச்சை முறை:

கல்லீரல் செல்கள் தாங்களாகவே தங்களை புதுப்பித்துக் கொள்ளும் திறன் பெற்றவை. ஆனால் கல்லீரல் பாதிப்படைந்தால் அவற்றைக் குணப்படுத்த இந்திய முறை மருத்துவங்களான ஆயுர்வேதா, சித்தா, வர்ம மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும். வர்ம மருத்துவத்தில் கல்லீரலின் பாதிப்புகளையும் அதனை குணப்படுத்த சிகிச்சை முறைகளையும் அகத்தியர் வர்ம காண்டம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வர்ம மருத்துவத்தில் உள் மருந்துகள் மூலம் கல்லீரலை சீர்படுதலாம். ஆனால் மது அருந்துவதை மறப்பது அவசியம்.

உடலைக் கெடுத்து, குடும்பத்தையும், நாசப்படுத்தும் மது தேவைதானா? யோசியுங்கள் மதுப்பிரியர்களே!
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum