சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06

» பூக்கள்
by rammalar Today at 8:35

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

புகையிலை... பகையிலை! Khan11

புகையிலை... பகையிலை!

Go down

புகையிலை... பகையிலை! Empty புகையிலை... பகையிலை!

Post by ahmad78 Tue 6 Nov 2012 - 16:26

சென்னையின் புறநகர்ப் பகுதி ஒன்றில் குடியிருக்கும் பெண்மணி அவர். ஒருநாள் பல்வலியால் தவிக்க, பக்கத்து வீட்டில் உள்ள பாட்டி ஒருவர் குறிப்பிட்ட கம்பெனியின் பெயரைச் சொல்லி 'அந்தப் பாக்கை வாங்கிப் போடு, சரியாகும்’ என்றிருக்கிறார். அவரும் அதன்படி போட, போதையில் பல் வலி போய்விட்டது. அதாவது, வலியை அவரால் உணர முடியவில்லை. தினமும் அந்தப் பாக்கை வாங்கிப்போட்டிருக்கிறார். அதுவும் கைக்கு அடக்கமான விலையில் கிடைத்ததால் காசுக்குப் பிரச்னையே இல்லை. பாக்கைப் போட்டு போட்டு அவருடைய பற்கள் கறை படியத் தொடங்கின. ஆனால், வீட்டில் உள்ளவர்கள் இதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஒருநாள் உறவினர் ஒருவர் எதேச்சையாகப் பார்த்தபோது போதைப் பாக்கின் தீமையைப் பற்றிச் சொல்ல, அலறி அடித்துக்கொண்டு புற்றுநோய் மருத்துவரைப் பார்த்திருக்கிறார். பரிசோதனையில் வாய்ப் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தன. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதையாகத் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார் அந்தப் பெண்மணி.

இப்படித் தெரிந்தும், தெரியாமலும் புகையிலையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். இதனால், தற்போது மாரடைப்புக்கு அடுத்தபடியாகப் புற்றுநோய்தான் விரைவில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காரணியாக இருக்கிறது என்கிறார் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் புற்றுநோய் உளவியல் துறை மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டு வள மைய உதவிப் பேராசிரியர் டாக்டர் சுரேந்திரன்.
'புகை பிடிப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்பற்றி எல்லோருக்கும் ஓரளவுக்குத் தெரியும். அதேசமயம், புகைபிடிப்பதற்கு நிகரான பாதிப்புகளை உண்டாக்கக் கூடிய புகையிலையை வாயிலிட்டுச் சுவைத்தல், போதைப் பாக்குகளைப் பயன்படுத்துதல், மூக்குப்பொடி போடுதல் போன்றவற்றின் அபாயம்பற்றி நம் மக்களிடம் அந்த அளவுக்கு விழிப்பு உணர்வு இல்லை.

புகையிலையில் சுமார் 3500 ரசாயனங்களுக்கு மேல் இருக்கின்றன. அவற்றில், சுமார் 60 ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. இந்த ரசாயனங்களை 'கார்சினோஜென்ஸ்’ (Carcinogens), அதாவது புற்றுநோய் ஊக்குவிப்பான்கள் என்று குறிப்பிடுகின்றனர். மிக முக்கியமாக, புகையிலையில் இருக்கும் 'நிகோடின்’ (Nicotine) ரசாயனம்தான் அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது. பாக்கில் 'அரிக்கா டானின்’(Areca tannin) ) என்ற வேதிப்பொருள் உள்ளது. இதற்கு புற்றுநோயைத் தோற்றுவிக்கும் ஆற்றல் இருப்பதாக ஏற்கெனவே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். தற்போது புற்றுநோய் தவிர, வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் (Metabolic syndromes), சர்க்கரை நோய் மற்றும் உடற்பருமன் ஆகிய பிரச்னைகளும் ஏற்படுவதாக சவுதி பல்கலைக்கழகம் நடத்திய எட்டு ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனுடன் புகையிலையும் சேரும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகமாக இருக்கும்'' என்ற டாக்டர் சுரேந்திரன், போதைப் பாக்குகளில் சேர்க்கப்படும் பொருட்கள் பற்றியும் விவரித்தார்.

'கொட்டைப் பாக்கு, புகையிலை, மரப்பட்டைச்சாறு, பாரபின் மெழுகு - இவைதான் போதைப் பாக்குகளின் மூலப்பொருட்கள். இவற்றில் புகையிலை போன்ற சில பொருட்கள் மாவாக அரைத்துச் சேர்க்கப்படுகின்றன. இவற்றுடன் வேறு சில போதை வஸ்துகளையும் சேர்த்து வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வாசனைகளில் விற்கிறார்கள். விற்கும் கம்பெனிகளைப் பொருத்து, இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்களின் எண்ணிக்கையும் மாறுபடுகிறது. இதில் கொடுமையான விஷயம், ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கினால்கூட அதில், என்னென்ன பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டு உள்ளது என்ற விபரம் உறையில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இதுபோன்ற போதைப் பாக்குகளில் அப்படி எந்தக் குறிப்பும் கிடையாது' என்று ஆதங்கப்பட்டார் டாக்டர் சுரேந்திரன்.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற தெற்காசிய நாடுகளில்தான் இப்படிப் புகையிலையை வாயிலிட்டுச் சுவைக்கும் பழக்கம் இருந்துவந்தது. மேலைநாடுகளில் புகைபிடிப்பதைக் கட்டுப்படுத்த ஆரம்பித்த பிறகு, நம்மவர்கள்போல் அவர்களும் இப்படி வாயிலிட்டுச் சுவைத்தனர். ஆனால், அதன் பாதிப்புகள்குறித்து தெரியவந்தபிறகு அங்கு இவற்றின் பயன்பாடுகளைக் குறைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். நாம்தான் விடாமல் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். சரி, இது போன்ற பாக்குகள் அப்படி என்னதான் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன?

'90 சதவிகித வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதற்கு புகையிலையை வாயிலிட்டுச் சுவைப்பதுதான் காரணம். அதற்காக மற்ற இடங்களில் புற்றுநோய் வராது என்று சொல்ல முடியாது. தொண்டை, உணவுக்குழாய், நுரையீரல், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய், ஆசனவாய், கருப்பை என உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம். காரணம், வாய் மூலம் சுவைக்கும்போது ரத்தத்தில் கலந்துவிடுவதால், ரத்தம் பயணிக்கும் எல்லாப் பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

போதைப் பாக்கில் உள்ள ரசாயனங்கள் ரத்த நாளங்களின் அளவைக் குறைப்பதால், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். இதனால் இதயத்துக்குப் போதுமான ரத்தம் கிடைக்காமல் மாரடைப்பு ஏற்படும். பற்களில் கறை ஏற்பட்டு, வாய் துர்நாற்றம் உண்டாகும். பக்கவாதம் ஏற்படுவதற்கு 50 சதவிகிதக் காரணம் புகையிலைதான். மேலும், விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து ஆண்மை குறைவை உண்டாக்கும். கர்ப்பிணிகள் புகையிலையைப் பயன்படுத்தும்போது நஞ்சுக்குழாய்க்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து அபார்ஷன் ஏற்படலாம். சமயங்களில் குறைந்த எடையுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்பு உள்ளது.

புகையிலை பயன்படுத்தி எவ்வளவு வருடங்கள் கழித்து பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொருத்து இரண்டு வருடங்களிலோ அல்லது இருபது வருடங்களிலோகூட பாதிப்பு வரலாம். பிற காரணங்களால் புற்றுநோய் ஏற்பட்டால் குணப்படுத்துவது ஓரளவு எளிதானது. ஆனால், புகையிலையால் புற்றுநோய் ஏற்பட்டால் சிகிச்சைக்கான காலமும் வேதனையும் அதிகம்'' என்கிறார்கள் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களான ரோகிணி பிரேம்குமாரி மற்றும் டி.ராஜா.
இந்த விஷயத்தில் இன்னொரு வேதனை என்னவென்றால் தமிழகத்தைப் பொருத்தவரை போதைப் பாக்குகளை விற்க இங்கே பல வருடங்களாகத் தடை உள்ளது. இருந்தாலும் பெரிய நகரங்களில் தொடங்கி சிற்றூர்கள் வரைக்கும் இவை பகிரங்கமாக விற்கப்படுகின்றன.

அரசாங்கம் இனியேனும் விழித்துக்கொள்ளுமா?

நன்றி: www.vikatan.com


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum