சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

பெண்களின் பிரச்சினை Khan11

பெண்களின் பிரச்சினை

2 posters

Go down

பெண்களின் பிரச்சினை Empty பெண்களின் பிரச்சினை

Post by *சம்ஸ் Fri 28 Jan 2011 - 14:22

வேலைக்குப் போகும் பெண்களின் பிரச்சினை

இன்றைய பெண்கள் எல்லாத் துறையிலும் பங்கெடுத்துத் தன் திறன் மூலம் பளிச்சிடுகிறார்கள். எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அவர்களே முன்னிலை வகிக்கிறார்கள். பொருளாதார ரீதியிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்தவர்களாகவே இருக்கிறார்கள். இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே வேலைக்குச் சென்று வந்த பெண்கள் இன்று கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள். கல்வியில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கும் அவர்கள் எந்தப் பிரச்சனையிலும் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறன் பெற்றவர்களாக இருந்த போதிலும் மனதளவில் அவர்கள் பாதுகாப்புணர்வு குறைவாக இருப்பதாகவே நினைக்கிறார்கள். இதற்கு என்னதான் காரணம்? அவர்களின் உண்மையான பிரச்சனை என்னதான் என்பதைக் கேட்டோம்.

இதோ அவர்கள் மனம் திறந்த பதில்கள்...

ஆஷாகணேஷ்


இன்று பெண்களின் உடல்ரீதியான, பொருளாதார ரீதியான எல்லாத் தேவைக?95;ும் நிறைவேறிவிட்ட போதிலும் அவர்கள் மன அழுத்தம், மனப்புழுக்கம் போன்றவற்றிற்கு ஆளானவர்களாகவே இருக்கிறார்கள். இதற்குக் காரணம் வீட்டிலும் சரி, வேலை பார்க்கும் இடத்திலும் சரி, சமூகத்திலும் சரி அவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள சரியான ஆட்கள் கிடைப்பதே இல்லை. மேலும் தன்னைச் சுற்றியே வந்த பிள்ளைகள் ஒரு நிலையில் முழுமையாக விட்டுப் பிரிவதாலும் பெண் மிக வேதனையடைகிறாள். தனிமை பெரிதும் வாட்டுகிறது. மேலும் உடல் ரீதியான பாதிப்பும் சேரும் போது மிகவும் பாதிக்கப்படுகிறாள். அதோடு தன் கருத்துக்களைப் பிறர் ஏற்காதபோது தன் தேவை முடிந்து விட்ட தோ என்று நினைத்துத் தற்கொலைக்குக் கூட முயன்றுவிடுகிறாள். இவற்றைத் தவிர்க்க வேண்டுமாயின் வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் அவளின் உணர்வு களைப் புரிந்து கொண்டு நடக்க முயல வேண்டும். அவளை வேலை பார்க்கும் இயந்திரமாக மட்டும் பார்க்காமல் உணர்வுகள் மிக்கவள் என்று பார்க்க வேண்டும். ஆண்கள் பெரும்பாலும் மனவேதனைக்கு ஆளாவதில்லை. காரணம் அவர்கள் தங்கள் மனக்குறையை வேறு வகையில் தீர்த்துக் கொண்டு விடுகிறார்கள்.

மஞ்சுளா தியாகராஜன் (இல்லத்தரசி)

வேலைக்குச் சென்று வரும் பெண்கள் நேரமாகி விட்டால் இரவு தனியாகப் பேருந்தில் வருவது ஆபத்தாகவே உள்ளது. மதிய வேளையிலோ அல்லது ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள நேரத்திலோ தனியாக நிற்கும் பெண்களைத் தவறான நோக்கத்துடனேயே சில ஆண்கள் பார்க்கிறார்கள். இவை எங்களுக்கு மன உளைச்சலைத் தருகிறது. பஸ்ஸில் குடித்துவிட்டு வரும் ஆண்கள் செய்யும் செயல்கள் பேருந்துப் பயணத்தையே தவிர்க்கச் செய்து விடுகிறது. குழந்தைகளைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் பெண்களையே சார்ந்திருப்பதால் திட்டமிட்ட செயல்களில் கூட முழு மனதுடன் ஈடுபட முடியவில்லை. வேலைக்குச் செல்வது தாய்மார்களுக்குச் சவாலாகவே உள்ளது. பொது வாக ஆண்களைப் பொருத்தமட்டில் திருமணத்தால் எதையும் இழப்பதில்லை. ஆனால் பெண் கணவனை மட்டுமே நம்பி பெற்றோரைக் கூட விட்டுப் பிரிந்து வரவேண்டியுள்ளது.

மைதிலி ஸ்ரீதர் (நாட்டிய ஆசிரியை)

பிரச்சனை என்பது நாம் எடுத்துக் கொள்ளும் முறையில்தான் உள்ளது. பெண் என்பவள் மகள், மனைவி, தாய் எனப் பல அவதாரம் எடுக்கிறாள். இவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை அந்நிலைக் கேற்றாற்போல் சமாளித்து சென்றால் எந்தப் பிரச்சனை யுமே ஏற்படாது. ஒன்றை அடைய வேண்டுமானால் ஒன்றை இழந்துதான் ஆகவேண்டும். தாய் என்பது தியாகத்தின் மொத்த உருவம். இதில் பெருமைப்பட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் அந்நிலையை அடைய முடியாது. பெண்ணே குடும்பத்தின் அடித்தளம், ஆணிவேர் எல்லாமே. அவள் நினைத்தால் சிறிதைப் பெரிதாக்க முடியும், பெரிதைச் சிறிதாக்க முடியும்.

நான் பெண்களின் பிரச்சனையாக நினைப்பது ஒன்றே ஒன்றைத்தான். அது டி.வி சீரியல்கள்தான். இவற்றில் பெண்களின் உயர்ந்த குணமான தியாகம், சகிப்புத்தன்மை, வெட்கம், விட்டுக்கொடுத்தல் போன்றவற்றைக் காட்டாமல் பழிவாங்குபவளாக, பொறாமையுற்றவளாக, தவறான நடத்தை கொண்டவளாகக் காட்டி எதிர்காலப் பெண்களின் இயல்புத்தன்மைகளை மாற்றிவிடுவார்களோ என்று பயப்படுகிறேன்.

ராஜலட்சுமி (பேராசிரியை)

இரண்டு இடத்திலும் வேலை செய்யும் கட்டாயம் பெண்களுக்கு ஏற்படுகிறது. ஆயினும் வீட்டில் ஒத்துழைப்புக் கிடைப்பதில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு எல்லாவற்றையும் அவர்களின் இடத்திற்கே கொண்டு சென்று தரவேண்டியுள்ளது. பிள்ளைகள் புரிந்து நடந்து கொள்வதில்லை. இயந்திரம் போல் வேலை மட்டுமே செய்து கொண்டிருப்பதால் பூஜைக்கோ சுயசிந்தனைக்கோ இடம் கொடுக்க முடியவில்லை. தாய்மை சிறப்பு மிக்கது என்றாலும் இன்று வேலைக்குச் சென்றுவர வேண்டியுள்ளதால் உடலாலும், மனதாலும் சோர்வடைந்து விடுகிறோம்.

விஜயலக்ஷ்மி (வங்கி மேலாளர்)

வேலைக்குச் சென்று வருவதால் வீட்டின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. வீட்டிற்குச் செல்லும் நேரம் வந்துவிட்டாலோ, ஆபீஸ் செல்லும் நேரம் வந்துவிட்டாலோ போட்டது போட்டபடியே வந்து விட வேண்டியுள்ளது. வேலைக்குச் செல்லும் ஆணும் பெண்ணும் ஒன்றுதானே என்று வீட்டில் இருப்பவர்கள் நினைப்பதில்லை. ஆண் சுதந்திரமாக இருந்து விடுகிறார். பெண்ணை அப்படியிருக்க யாரும் அனுமதிப்பதில்லை. பெண் என்றால் வேலை செய்து கொண்டே இருக்கப் பிறந்தவள் என்றே பலரும் நினைக்கிறார்கள்.

இவ்வாறு பலவாறாகச் சொல்லும் போது சாப்ட்வேர் துறையில் வேலை பார்க்கும் பெண்கள் ஒட்டு மொத்தமாய் சொன்னது, எங்களுக்கு ஆபீஸ் உள்ளே வரும் நேரம் மட்டும்தான் தெரியும் எப்போது ப்ராஜக்ட் முடித்து போவோம் என்பது தெரியாது. அதனால் ஏற்படும் பாதிப்பு இப்போது எங்களுக்குத் தெரியாது என்பதால் எதைப்பற்றியும் எங்களால் கவலைப்பட முடியவில்லை என்பதே. கல்லூரிப் பெண்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்னபதில் சின்னச் சின்னப் பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அதற்காக நாங்கள் பெரிதும் கவலைப்படுவதில்லை! என்பதே.

சில பெண்கள் தவறான வழியில் செல்கிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்தமாய் கல்லூரிப் பெண்கள் எல்லோருமே அத்தகையவர்கள் என்றும், சரியான காரணத்திற்காக வெளியே சென்று தாமதமாக வந்தால் உறவினர்கள் ஊர்சுற்றி வருகிறாள் என்றும் சொல்லும் போது நாங்கள் மிகுந்த வேதனையடைகிறோம் என்று கல்லூரிப் பெண்கள் சொல்கிறார்கள். ஒட்டு மொத்தமாய்ப் பார்க்கும் போது ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அதாவது புரிந்து கொள்ளுதலிலும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதில் சரியான அக்கறையை நம் சமூகம் காட்டுவதில்லை என்பதே. புரிந்து கொண்டு பெண்ணின் புனிதத்தைக் காக்க வேண்டும். இதுவே இப்போதைய முக்கிய தேவையாக நாம் உணர்கிறோம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களின் பிரச்சினை Empty Re: பெண்களின் பிரச்சினை

Post by ஹம்னா Fri 28 Jan 2011 - 20:42

##* ##*
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum