சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

புதினா கீரையின் அற்புதங்கள்! Khan11

புதினா கீரையின் அற்புதங்கள்!

5 posters

Go down

புதினா கீரையின் அற்புதங்கள்! Empty புதினா கீரையின் அற்புதங்கள்!

Post by Muthumohamed Tue 12 Feb 2013 - 21:30

புதினா கீரையின் அற்புதங்கள்!

புதினா (Mentha spicata) ஒரு
மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து
வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட்,
நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து,
வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய
சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை
பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய
அம்சம்.

அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில்
ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை
தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர
புதினாக்கீரை உதவுகின்றது.

ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற
இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது. வயிற்றுப் புழுக்களை
அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.


புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி,
நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும்
புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

மஞ்சள் காமாலை, வாதம்,
வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை
சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம்
உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.


புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக
அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச்
சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை
கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.

புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல்
60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க,
புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து
பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.

புதினா சாறு,
பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து .
சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும்
பட்டுபோல் பளபளக்கும்.

புதினா கஷாயம் தயாரிக்கும் முறை:


25 கிராம் புதினா இலையை 500 மில்லி தண்ணீர் விட்டு நன்கு வேகும் வரை
கொதிக்க வைத்து வடிகட்டிய கஷாயத்தில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து
60 மில்லி அளவு தினம் இரண்டு வேளை சாப்பிட்டால் செரிமானக் குறைவு
நிவர்த்தியாகும். கை, கால் மூட்டுக்களில் ஏற்பட்ட வலிகள் குறைந்து விடும்.

புதினா ஜூஸ் தயாரிக்கும் முறை:

வெயிலில் நிழலான இடத்தில காயவைத்து புதினா இலையை எடுத்து கொள்ளவேண்டும்.
தண்ணீரில் இஞ்சி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சில நிமிடம் கொதிக்க விடவும்.
சர்க்கரை கரைந்து தண்ணீர் தயாரான பிறகு புதினா இலைகளைச் சேர்த்து
மறுபடியும் கொதிக்க விடவும். சில நிமிடங்கள் கொதிக்க வைத்து
அடுப்பிலிருந்து இறக்கி, இதை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின் இந்தக்
கலவையை வடிகட்டி, எலுமிச்சை சாறு சேர்க்கவும். குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை இதனை அருந்தி வரலாம்.

புதினா பல்பொடி தயாரிக்கும் முறை:

புதினா இலைகளை வெயிலில் நன்றாக காயவைத்து அதனுடன் அதன் அளவில் எட்டில் ஒரு
பங்கு உப்பு சேர்த்து தூள் செய்து சலித்து பாட்டிலில் எடுத்து
வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த பொடியை வைத்து தினசரி பல் தேய்த்து
வந்தால் வாழ்நாள் முழுவதும் பல் சம்பந்தமான எந்த ஒரு நோயினாலும்
பாதிக்கப்படமாட்டார். பற்கள் வெண்மையாக ஜொலிக்கும். ஈறுகளில் இரத்தம்
வருவது, வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும்.

புதினாக் கீரையை
தொட்டிகளில் எளிதாக வளர்க்கலாம். கடையில் வாங்கி வரும் புதினாக் கீரையில்
இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை தொட்டி மண்ணில் ஊன்றி
வைத்தால் போதும், கைக்கெட்டிய தூரத்தில் புதினா மூலிகை கிடைக்கும்.

புதினா அனைத்துக்கும் தீர்வு தரும் காயகல்பம். எனவே அனைவரும் வீடுகளில்
புதினாவை வளர்த்து நம் உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

புதினா கீரையின் அற்புதங்கள்! Empty Re: புதினா கீரையின் அற்புதங்கள்!

Post by ahmad78 Tue 12 Feb 2013 - 21:54

பயனுள்ள தகவல்கள்புதினா கீரையின் அற்புதங்கள்! 517195


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

புதினா கீரையின் அற்புதங்கள்! Empty Re: புதினா கீரையின் அற்புதங்கள்!

Post by கைப்புள்ள Tue 12 Feb 2013 - 23:08

நல்ல தகவல் :”@: :”@:
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

புதினா கீரையின் அற்புதங்கள்! Empty Re: புதினா கீரையின் அற்புதங்கள்!

Post by முனாஸ் சுலைமான் Tue 12 Feb 2013 - 23:10

முடிந்தால் புதினா கீரையின் படமும் பிரசுரித்தால் நன்றாக இருக்கும் :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

புதினா கீரையின் அற்புதங்கள்! Empty Re: புதினா கீரையின் அற்புதங்கள்!

Post by ansar hayath Tue 12 Feb 2013 - 23:16

புதினா கீரையின் அற்புதங்கள்! Images?q=tbn:ANd9GcS1chOBqFg0A0HPXj0HTvlKoE8nWmk13IEHYUJDF7VtpJmMBzbCLA

புதினா கீரையின் அற்புதங்கள்! Images?q=tbn:ANd9GcT21T4hqmz3tu80qivPC9ZFkDQdcVI1NxHjdfl-6j9sF8bQFgmGHA

இதுதானே ...புதினா :”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

புதினா கீரையின் அற்புதங்கள்! Empty Re: புதினா கீரையின் அற்புதங்கள்!

Post by முனாஸ் சுலைமான் Tue 12 Feb 2013 - 23:28

ansar hayath wrote:புதினா கீரையின் அற்புதங்கள்! Images?q=tbn:ANd9GcS1chOBqFg0A0HPXj0HTvlKoE8nWmk13IEHYUJDF7VtpJmMBzbCLA

புதினா கீரையின் அற்புதங்கள்! Images?q=tbn:ANd9GcT21T4hqmz3tu80qivPC9ZFkDQdcVI1NxHjdfl-6j9sF8bQFgmGHA

இதுதானே ...புதினா :”@:
:”@: :”@: #heart
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

புதினா கீரையின் அற்புதங்கள்! Empty Re: புதினா கீரையின் அற்புதங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum