சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் எளிய முறை! Khan11

கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் எளிய முறை!

2 posters

Go down

கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் எளிய முறை! Empty கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் எளிய முறை!

Post by ராகவா Tue 3 Sep 2013 - 17:59

கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் எளிய முறை! Imagescake

கிறிஸ்துமஸ் நெருங்கிவிட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளையொட்டி தமிழகம், கேரள மாநிலங்களில் கேக் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, முட்டைகளின் தேவைப்பாடு அதிகரித்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் முட்டைக் கொள்முதல் விலை வியாழக்கிழமை ஒரே நாளில் 7 காசுகள் உயர்த்தப்பட்டு, 2.87 ஆக நிர்ணயிக்கப்பட்டது.இதற்கு பிரச்சனை இல்லாமல் நாமே  நம் வீட்டில் தயாரித்து கொள்ளலாம்.இதோ செய்முறை!
கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் முறை

தேவையானவை:


  •     மைதா - ஒன்றரை கப்
  •     சீனி - ஒரு கப்
  •     முட்டை - 3
  •     முந்திரி - 10
  •     திராட்சை - 15
  •     வெண்ணெய் - 75 கிராம்
  •     டூட்டி ப்ரூட்டி - 2 மேசைக்கரண்டி
  •     ஆரஞ்சு தோல் - 2 மேசைக்கரண்டி
  •     கேக் விதை - அரை மேசைக்கரண்டி
  •     ஜாதிக்காய் தூள் - அரை தேக்கரண்டி
  •     வெனிலா எசன்ஸ் - அரை மேசைக்கரண்டி
  •     பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி

 

  1. தேவையானப் பொருட்களை தயாராய் வைத்துக் கொள்ளவும். நல்ல தரமான மைதாவை உபயோகிக்கவும்.
  2. கேக் விதை (cake seed) என்பது சீரகம் போன்று மிகவும் சிறியதாக இருக்கும். தமிழில் கருஞ்சீரகம் என்று அழைக்கப்படுகின்றது. ஆரஞ்சுத் தோல் என்று இங்கே குறிப்பிட்டுள்ளது, தோலைத் துண்டுகளாக நறுக்கி பதப்படுத்தப்பட்டது. கடைகளில் ரெடிமேடாக பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
  3. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும். அதில் 2 மேசைக்கரண்டி சீனியை போட்டு ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி ப்ரெளன் கலர் வரும் வரை கலக்கவும். சற்று புகை வரும். கவலை வேண்டாம்.
  4. சீனி கரைந்து ப்ரெளன் கலர் ஆனதும் மேலும் அதில் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றவும். ஊற்றியதும் ப்ரெளன் கலர் மாறி டார்க் ப்ரெளன் கலராக மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
  5. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி முட்டை அடிக்கும் கருவியால் சுமார் 5 நிமிடங்கள், நன்கு நுரைத்து வரும் வரை அடிக்கவும்.
  6. அதனுடன் சீனியை போட்டு சீனி கரையும் வரை மேலும் 5 நிமிடம் அடிக்கவும். மின்சாரத்தில் இயங்கும் கலக்கியைப் பயன்படுத்தினால் மிதமான வேகத்தில் ஒரே சீராக கலக்கவும்.
  7. சீனி கரைந்ததும் அதனுடன் வெண்ணெய் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் நன்கு அடிக்கவும்.
  8. பிறகு அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியை வைத்து வட்டமாக கலக்கவும்.
  9. மாவினை கலக்கும்போது இடமிருந்து வலமோ அல்லது வலமிருந்து இடமோ (clockwise or anticlockwise), உங்களின் வசதிக்கு ஏற்றார்போல் ஒரே பக்கமாக கலக்கவும். மைதா கட்டியில்லாமல் கரையும் வரை கலக்கவும். மிகுந்த வேகம் கூடாது.
  10. பின்னர் ஒரு டம்ளரில் பேக்கிங் பவுடரை போட்டு அதில் ஒரு மேசைக்கரண்டி சூடான பால் ஊற்றி கலக்கவும். கலக்கும் போது நுரைத்து வரும். அதையும் மாவுடன் சேர்த்து வட்டமாக கலக்கவும்.
  11. மாவின் பதம் ஒரு கரண்டியால் மாவை எடுத்து பார்க்கும் போது கீழே விழ வேண்டும். பிறகு அதில் கரைத்து வைத்துள்ள ப்ரெளன் கலர் சீனி தண்ணீரை (Sugar syrup) ஊற்றி வட்டமாக கலக்கவும்.
  12. கேக் விதையை அம்மியில் வைத்து நுணுக்கிக் கொள்ளவும். அதன் பின் கலக்கிய மாவில் எசன்ஸ், நுணுக்கிய கேக் விதை, ஜாதிக்காய் தூள், டூட்டி ப்ரூட்டி மற்றும் ஆரஞ்சு தோல் ஆகியவற்றை போட்டு மீண்டும் வட்டமாக கலக்கவும்.
  13. கேக் விதையின் சுவை பிடிக்காதவர்கள் குறைவாக சேர்த்துக் கொள்ளலாம். அல்லது தவிர்த்துவிடலாம். மாவைக் கலக்கும் போது ஒரே மாதிரி சுற்றிக் கலக்கவும். அப்போதுதான் மாவு பதமாக கிடைக்கும். இயந்திரங்கள் மூலம் வேகமாக சுற்றிக் கலக்கினால், அதனால் உண்டாகும் சூட்டில் மாவின் தன்மை மாறுபட்டுவிடும். கேக் நன்றாக வராது.
  14. வீடுகளில் கேக் செய்வதற்கென்று சிறிய அளவிலான ஓவன்கள் கிடைக்கின்றது. அதில் மாவு வைப்பதற்கான பாத்திரத்தில், கலக்கிய மாவை ஊற்றவும். பாத்திரத்தின் மத்தியில் வைப்பதெற்கென ஒரு டம்ளர் (அல்லது குழல்) போன்ற பாத்திரம் ஓவனுடன் வரும்.
  15. குழல் போன்ற அந்த சிறிய பாத்திரத்தை மையத்தில் வைத்து அதனை சுற்றி மாவை ஊற்றவும். அப்போதுதான் வெப்பம் கேக்கின் அனைத்து பாகத்திற்கும் சென்று, முழுமையாக வேக வைக்கும். மாவின் மேல் முந்திரி மற்றும் திராட்சையை தூவி அலங்கரிக்கவும்.
  16. கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் எளிய முறை! Cakeஅலங்கரித்ததும் பாத்திரத்தை ஓவனில் வைத்து மூடி விடவும். சுமார் 45 நிமிடங்கள் வேகவிடவும். ஓவனின் மேல்புறம் உள்ள கண்ணாடியின் வழியாகப் பார்த்தால் கேக்கின் நிறம் தெரியும்.
  17. அனைத்து பாகமும் சீராக வெந்திருந்தால் கேக் முழுமையும் ஒரே வண்ணத்தில் இருக்கும். ஓரங்கள் சற்று அதிகமாக சிவந்து இருக்கும். பொன்னிறமாக வெந்தவுடன் ஓவனில் இருந்து கேக்கை எடுத்து, சிறிது நேரம் ஆறவிடவும்.
  18. நன்கு ஆறியவுடன் கேக் மிகவும் மிருதுவாக இருக்கும். சுவையான கிறிஸ்துமஸ் கேக் இப்போது தயார்.

நன்றி:லைப் ஸ்டைல்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் எளிய முறை! Empty Re: கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் எளிய முறை!

Post by Muthumohamed Tue 3 Sep 2013 - 21:18

:”@: :”@: :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum