சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06

» பூக்கள்
by rammalar Today at 8:35

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Khan11

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

5 posters

Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 16:34

பெரும்பாலான பெண்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுவார்கள். சொல்லப்போனால் உலகில் பாதி பெண்கள் இரத்தசோகை பிரச்சனைக்கு ஆளாகியிருப்பார்கள். இத்தகைய இரத்தசோகை நோயானது, இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. எனவே இதற்கு மருத்துவரிடம் சென்றால், அவர்கள் இரும்புச்சத்து நிறைந்த டானிக், மாத்திரை போன்றவற்றைக் கொடுப்பார்கள். ஆனால் இந்த மருந்து மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொண்டால், பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.


எனவே இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல மற்றும் ஆரோக்கியமான தீர்வு என்னவென்றால், இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது தான். அதில் கீரைகள், ப்ராக்கோலி, கொண்டைக்கடலை, காளான், மாதுளை போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது தான். இத்தகைய உணவுப் பொருட்களில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 16:36

பசலைக் கீரை புலாவ்

பசலைக் கீரையின் எண்ணற்ற நன்மைகளை பார்த்திருப்போம். இதுவரை அத்தகைய பசலைக் கீரையை பொரியல், கடைசல் என்று தான் செய்திருப்போம். ஆனால் இத்தகைய பசலைக் கீரையை வைத்து, ஈஸியான முறையில் புலாவ் கூட செய்யலாம்.
இந்த பசலைக் கீரை புலாவ் எப்படி எளிமையான முறையில் செய்வதென்று, அதன் செய்முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து, சமைத்து ருசித்து மகிழுங்கள்.

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! 25-palakpulao

தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
பசலைக் கீரை - 1/2 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, கழுவி தனியாக வைத்துக்க் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சீரகம் பிரியாணி இலை, கிராம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள பசலைக் கீரையை போட்டு, 3 நிமிடம் வதக்கி விடவும்.
பின்பு உப்பு, மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பசலைக் கீரை புலாவ் ரெடி!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 16:38


 பீட்ரூட் மசாலா


பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் சிலருக்கு பீட்ரூட் இனிப்பாக இருப்பதால், பிடிக்காது. ஆனால் அத்தகைய பீட்ரூட்டை விரும்பி சாப்பிடும் வகையில் சமைத்தால், பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அப்படியெனில் அதற்கு பீட்ரூட் மசாலா தான் சிறந்தது. இப்போது அந்த பீட்ரூட் மசாலாவை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! 24-beetrootmasala-600

தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2 அல்லது 2 1/2 கப் (துருவியது அல்லது துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, துருவிய அல்லது துண்டுகளாக்கப்பட்ட பீட்ரூட்டை சேர்த்து, 4-5 நிமிடம், தீயை குறைவில் வைத்து வதக்கி விட வேண்டும்.
பின்பு அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு, நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பீட்ரூட் வேகும் வரை மூடி வைக்க வேண்டும்.
பீட்ரூட்ரானது வெந்ததும், அதனை இறக்கி சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பரான இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 16:40

துவரம் பருப்பு பசலைக் கீரை சப்ஜி

கீரை உடலுக்கு மிகவும் இன்றியமையாத உணவுப் பொருட்களுள் ஒன்றாகும். ஏனெனில் கீரையில் உடலுக்கு வேண்டிய நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே வாரத்தற்கு இரண்டு முதல் மூன்று நாட்களாவது கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் கீரையில் பசலை கீரையின் நன்மைகளைப் பற்றி நிறைய படித்திருப்போம். அத்தகைய கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து, ஒரு சப்ஜி செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இப்போது அந்த துவரம் பருப்பு பசலைக் கீரை சப்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! 20-toordal-600

தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை - 1 கட்டு
துவரம் பருப்பு - 2 கப்
வேர்க்கடலை - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பசலைக் கீரையை நன்கு சுத்தமாக கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் துவரம் பருப்பை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பசலைக் கீரை, துவரம் பருப்பு மற்றும் வேர்க்கடலை போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்கி, 10 நிமிடம் குளிர வைத்து, கடைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
பின்பு வேக வைத்துள்ள பசலைக் கீரை கலவையை சேர்த்து, உப்பு போட்டு, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான துவரம் பருப்பு பசலைக் கீரை சப்ஜி ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 16:41


 காஷ்மீரி காராமணி மசாலா


காஷ்மீரி காராமணி மசாலா மிகவும் சுவையுடன் இருக்கக்கூடிய ஒரு மசாலா. பொதுவாக காராமணியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வெள்ளை காராமணி மற்றொன்று சிவப்பு காராமணி. இப்போது இந்த மசாலாவில் பயன்படுத்தியிருப்பது சிவப்பு காராமணி. பெரும்பாலும் காஷ்மீரி உணவுகள் காரத்தில் மிகவும் குறைவாக இருக்கும். ஏனெனில் காரம் அதிகம் இருந்தால், சுவை குறைந்துவிடும் என்பதாலேயே.
மேலும் இதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல், சற்று வித்தியாசமான முறையில் மசாலா செய்யப் போகிறோம். சரி, இப்போது அந்த காஷ்மீரி காராமணி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! 29-kashmirirajmamasala

தேவையான பொருட்கள்
காஷ்மீரி காராமணி - 2 கப் (இரவு முழுவதும் ஊற வைத்தது)
பிரியாணி இலை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஊற வைத்துள்ள காராமணியை கழுவி, குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீர் ஊற்றி, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் விசில் போனதும், தண்ணீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் துருவிய இஞ்சி சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
பின் வேக வைத்துள்ள காராமணியைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி விட்டு, இறுதியில் கரம் மசாலா சேர்த்து கிளறி, மீண்டும் 5-8 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான காஷ்மீரி காராமணி மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, பின் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 16:43

பசலைக்கீரை காளான் குழம்பு

சைவ உணவுகளிலேயே அசைவ உணவின் சுவைக்கு ஈடான சுவையைத் தரக்கூடியது தான் காளான். அத்தகைய காளானில் உடலுக்கு தேவையான எண்ணற்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் நீரிழிவு நோயாளிகள் காளானை அதிகம் சாப்பிடுவது நல்லது. அத்தகைய காளானுடன், சத்துக்கள் அதிகம் நிறைந்த பசலைக் கீரையை சேர்த்து ஒரு குழம்பு செய்தால், மிகவும் அலாதியான சுவையில் குழம்பானது இருக்கும்.
இப்போது அந்த பசலைக்கீரை காளான் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!!!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! 21-mushroompalak

தேவையான பொருட்கள்:
பட்டன் காளான் - 15
வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்
பசலைக்கீரை பேஸ்ட் பொருட்கள்...
பசலைக் கீரை - 1 கட்டு (கழுவி நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச்
பச்சை மிளகாய் - 2
பட்டை - 1
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
அன்னாசிப்பூ - 1
கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் பட்டன் காளானை நன்கு நீரில் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் பசலைக்கீரை பேஸ்ட்டிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு கெட்டியான பேஸ்ட் போல், தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பிறகு பசலைக்கீரை பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து மல்லி தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்ற, தட்டு கொண்டு மூடி 7-8 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
காளானது நன்கு வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், சூப்பரான பசலைக்கீரை காளான் குழம்பு ரெடி!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 16:45


 ப்ராக்கோலி சப்பாத்தி


சப்பாத்தியில் நிறைய வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ப்ராக்கோலி சப்பாத்தி. இந்த சப்பாத்தி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில் ப்ராக்கோலியில் நிறைய சத்துக்களானது அடங்கியுள்ளது. எனவே இந்த ப்ராக்கோலியை உணவில் அதிகம் சேர்த்தால், பல நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். அதிலும் ப்ராக்கோலியை சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம்.
இது ஒரு சிறந்த காலை உணவும் கூட. சரி, அந்த ப்ராக்கோலி சப்பாத்தியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! 28-broccolichapathyd-600

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 3 கப்
உப்பு - தேவையான அளவு
வெதுவெதுப்பான நீர் - 1 கப்
உள்ளே வைப்பதற்கு...
ப்ராக்கோலி - 1 (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, துருவிய ப்ராக்கோலியை சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு சீரகப் பொடி, மல்லி தூள், மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 5-6 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
அடுத்து கோதுமை மாவை சிறு உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அவற்றில் ஒன்றை எடுத்து, சிறு சப்பாத்தியாக தேய்த்து, அதன் நடுவே ப்ராக்கோலி கலவையை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் சப்பாத்தியாக தேய்க்க வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் செய்ய வேண்டும்.
இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது காய்ந்ததும் எண்ணெய் தடவி, தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி, வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான ப்ராக்கோலி சப்பாத்தி ரெடி!!! இதனை சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 16:46


 மாதுளை தயிர் சாதம்



இந்தியாவில் தயிர் சாதம் மிகவும் பிரபலமானது. அதிலும் தென்னிந்தியாவில் மதிய வேளையில் தயிர் சாதம் நிச்சயம் இருக்கும். இந்த தயிர் சாதம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது மற்றும் வயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிக்கும். குறிப்பாக கோடையில் தயிர் சாதம் அதிகம் சாப்பிட்டால், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.
மேலும் தயிர் செரிமானத்தை அதிகரிப்பதோடு, வாயுத் தொல்லையை நீக்கும். தயிர் சாதத்தை பலவாறு செய்யலாம். அவற்றில் ஒரு வகை தான், மாதுளையை வைத்து செய்யக்கூடிய மாதுளை தயிர் சாதம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இப்போது இந்த மாதுளை தயிர் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! 10-pomegranatecurdrice

தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
தயிர் - 1 கப்
பால் - 1 1/2 கப்
மாதுளை - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசி நன்கு கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியையும் போட்டு, தீயை குறைவில் வைத்து, சாதம் போன்று நன்கு வேக வைக்க வேண்டும்.
பின்பு அதனை இறக்கி லேசாக குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதில் தயிர், உப்பு, மாதுளை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி, 30 நிமிடம் கழித்து பரிமாற வேண்டும்.
இப்போது சுவையான மாதுளை தயிர் சாதம் ரெடி!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 16:48


 பீட்ரூட் சாம்பார்


தென்னிந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் பீட்ரூட் சாம்பார் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. இந்த சாம்பார் பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில், மிகவும் சுவையான ருசியில் இருக்கும். எனவே எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் செய்து அழுத்துப் போனவர்கள், இந்த பீட்ரூட் சாம்பாரை ட்ரை செய்து பார்க்கலாம்.
இது எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு சாம்பார் ரெசிபி. இப்போது அந்த பீட்ரூட் சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! 03-beetrootsambar-600

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 2 கப்
பீட்ரூட் - 2 (சிறியது)
கடுகு - 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
புளி - 1 எலுமிச்சை அளவு (வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, கரைத்தது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பீட்ரூட் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கி, குளிர வைத்து, நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து, துவரம் பருப்பை கழுவிப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கி விட வேண்டும்.
விசிலானது போனதும், அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, கடைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வேக வைத்து நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து 2 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.
பின்பு அத்துடன் கடைந்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து ஒரு கிளறி விட்டு, கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி நன்கு 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 5 நிமிடம் கொதிக்க விட்டு, இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பீட்ரூட் சாம்பார் ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 16:50


 வெந்தயக் கீரை சப்பாத்தி


சப்பாத்திகளில் நிறைய உள்ளன. அவை அனைத்தும் விருப்பதைப் பொறுத்ததே. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வெந்தயக் கீரையை வைத்தும் சப்பாத்தி செய்ய முடியும். பொதுவாக சப்பாத்தியில் கோதுமை மாவை மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த சப்பாத்தியில் கோதுமை மாவுடன், கடலை மாவையும் சேர்த்து செய்யப் போகிறோம். அதனால் இதன் சுவை சற்று வித்தியாசமானதாக இருக்கும்.
இப்போது அந்த வித்தியாசமான வெந்தயக் கீரை சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! 05-methichapathy

தேவையான பொருட்கள்:
வெந்தயக் கீரை - 1 கப் (நறுக்கியது)
கோதுமை மாவு - 2 கப்
கடலை மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
ஓமம் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, கடலை மாவு, உப்பு, வெந்தயக் கீரை, பச்சை மிளகாய், வெங்காயம், ஓமம், மிளகாய் தூள் மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான வெந்தயக் கீரை சப்பாத்தி ரெடி!!! இதனை சாம்பார் அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 16:52


 கொண்டைக்கடலை பசலைக் கீரை மசாலா


சோலே பாலக் மசாலா என்னும் கொண்டைக்கடலை பசலைக் கீரை மசாலா, பஞ்சாபில் மிகவும் பிரபலமானது. மேலும் இது மிகவும் சுவையானது, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ரெசிபிக்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்த மசாலாவானது மிகவும் காரமாகவும், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும்.
குறிப்பாக இந்த மசாலா சாதம் மற்றும் சப்பாத்திக்கு சரியானதாக இருக்கும். இப்போது அந்த கொண்டைக்கடலை பசலைக் கீரை மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! 29-cholepalakmasala

தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 250 கிராம்
பசலைக் கீரை - 1 கட்டு
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பட்டை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை நீரில் 5 மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்பு கீரை சுத்தம் செய்து, தனியாக நீரில் அலசி வைக்க வேண்டும்.
பின் மிக்ஸியில் கீரை மற்றும் பச்சை மிளகாய் போட்டு, அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய தக்காளி, மல்லி தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைக்க வேண்டும்.
பின் அரைத்த பசலைக் கீரையை சேர்த்த, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் வேக வைத்துள்ள கொண்டைக்கடலையில் உள்ள நீரை வடித்துவிட்டு, இத்துடன் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, ஏலக்காய் பொடியைத் தூவி, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கொண்டைக்கடலை பசலைக் கீரை மசாலா ரெடி!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by நண்பன் Sun 22 Sep 2013 - 22:54

:”@: :”@: :”@: நான் விரும்பி சாப்பிடும் உணவுகள் சில


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by *சம்ஸ் Mon 23 Sep 2013 - 14:59

நண்பன் wrote::”@: :”@: :”@: நான் விரும்பி சாப்பிடும் உணவுகள் சில
பார்த்தவுடன் பசி வயிற்றைக் கிள்ளுகிறது பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by பானுஷபானா Mon 23 Sep 2013 - 15:28

வாயில் நீர் ஊறுகிறது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by *சம்ஸ் Mon 23 Sep 2013 - 15:34

பானுஷபானா wrote:வாயில் நீர் ஊறுகிறது
Spoiler:
^_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by ராகவா Tue 24 Sep 2013 - 0:16

பகிர்வுக்கு நன்றி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!! Empty Re: இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum