சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

மூலிகைகள்! Khan11

மூலிகைகள்!

5 posters

Go down

மூலிகைகள்! Empty மூலிகைகள்!

Post by Nisha Wed 8 Oct 2014 - 16:32

தூதுவளை

மூலிகைகள்! 10431473_548410175288598_6643316318269183720_n



மூலிகைகள்! 10561789_548410221955260_623522595679780535_n

தூதுவளை (Solanum trilobatum) மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலைகரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.

தூதுவளை இலங்கை மற்றும் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா , இலங்கை முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.

இதனை அரைத்துப் பச்சடியாக உண்வில் சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.

  • வேறு பெயர்கள்: தூதுவளை, தூதுளம், தூதுளை
  •  தாவரப் பெயர்கள்: Solanum Trilubatum; Solanaceae
  • வளரும் தன்மை: தமிழகம் எங்கும் தன்னிச்சையாக வளர்கிறது. வீட்டுத் தோட்டத்திலும் வளர்ப்பதுண்டு. சிறகாக உடைந்த முள்ளுள்ள இலைகளையும், ஊதாநிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்கள் சுண்டைக் காய் மாதிரி இருக்கும். சிவப்புப் பழங்களையும் வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய ஏறு கொடி. இது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
  • பயன்படும் உறுப்புகள்: வேர் முதல் பழம் வரை எல்லா பாகமும்.


தகவல் சேகரிப்பு விக்கிமீடியா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மூலிகைகள்! Empty Re: மூலிகைகள்!

Post by Nisha Wed 8 Oct 2014 - 16:41

திப்பிலி

மூலிகைகள்! 10606573_548425131953769_4373749385979553049_n



மூலிகைகள்! 148718_548425168620432_4590896549132857689_n


 திப்பிலி (Piper Longum) என்பது மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் மிளகு கொல்கத்தாவிலிருந்து ஏற்றுமதியாகிறது. திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 'கண்ட திப்பிலி' என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கனிகள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி 'அரிசித் திப்பிலி' என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய், தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களைக் குணமாக்கப் பயன்படும் மருந்தாகும்.சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் என்னும் மருந்தாகும்.

சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மூலிகைகள்! Empty Re: மூலிகைகள்!

Post by Nisha Wed 8 Oct 2014 - 16:43

முடக்கத்தான் 
மூலிகைகள்! 10565193_548875475242068_7215388627593908245_n
மூலிகைகள்! 1919671_548875468575402_6089254253645396555_n
முடக்கத்தான் கீரை கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு ஏறுகொடி. வேலிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும்.இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.
ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது ஒவ்வொரு இலைக் காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும்.
கம்பி போன்ற காம்பின் நுனியில் வெண்ணிறப் பூக்களும் காய்களும் இருக்கும். அந்தக் காய்கள் மிருதுவான தோல்களால் முப்பட்டை வடிவமாக மூடிக்கொண்டும், பலூன் போன்று உப்பிக் கொண்டும் இருக்கும்.
அந்தக் காய்க்குள் மூன்று அறை உண்டு. ஒவ் வொரு அறைக் குள்ளும் ஒரு விதை வீதம் மூன்று அறைக்குள் மூன்று விதை இருக்கும். இந்த விதை நன்கு முற்றாத போது பச்சையாக உருண்டையாக இருக்கும். விதை நன்கு முற்றிக் காய்ந்தவுடன் உருண்டையாக, கறுப்பு நிறமாக இருக்கும்.
ஒவ்வொரு விதையிலும் வெண்மை நிற அடையாளம் ஒன்றிருக்கும். இந்த விதைகளே சிதறி முளைக்கிறது.
இந்த முடக்கத்தான் முடக்குவாதத்தைப் போக்குகிறது. முடக்கத்தான், முடக்கற்றான், முடக்கு அறுத்தான், இந்திரவல்லி, ஊழிஞை போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதை கிராமத்து மக்கள் கீரையாகப் பயன்படுத்தி பல நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
முடக்கத்தான் கீரை 61 கலோரி வெப்ப ஆற்றலைக் கொடுக்கிறது.

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.
 
Spoiler:


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மூலிகைகள்! Empty Re: மூலிகைகள்!

Post by Nisha Wed 8 Oct 2014 - 19:42

குப்பைமேனி மூலிகைகள்! 10615417_549118675217748_3045586024874881767_n
மூலிகைகள்! 10568856_549118901884392_209333845673884852_n


மூலிகைகள்! 10423951_549118478551101_1382196530126639365_n

குப்பைமேனி (Acalypha indica) பூண்டு இனத்தைச் சார்ந்தது. ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.


  • இலை மலம் இளக்கியாகும்
  • சொறி, சிரங்கு, உடல் அரிப்புக்கு மேற்பூச்சாகவும் பயன்படுகிறது
  • இலைச் சாறு பாம்புக்கடி நஞ்சினை முறிக்கவும் பயன்படுகிறது.
  • நெஞ்சுச்  சளியைஇளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது
  • இதன் வேர் பேதி மருந்துத் தயாரிப்பில் பயன்படுகிறது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மூலிகைகள்! Empty Re: மூலிகைகள்!

Post by Nisha Wed 8 Oct 2014 - 19:47

சந்தனம் மூலிகைகள்! 10401952_549370358525913_1700399570481880957_n
மூலிகைகள்! 10376924_549370465192569_7710611325505089235_nமூலிகைகள்! 10269487_549370508525898_1203459709543215140_n
மூலிகைகள்! 10487361_549370378525911_5706673769514081353_n


சந்தனம் (Santalum album, Indian sandalwood) மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில்  தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம். இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா. இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படும். சுமாரான உயரத்துடன் கூடிய மரம். வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மூலிகைகள்! Empty Re: மூலிகைகள்!

Post by Nisha Wed 8 Oct 2014 - 19:54

இனி தொடர்வது........




எருக்கன்/ அருக்கன்/ ஆள்மிரட்டி 
மூலிகைகள்! 10599295_549652928497656_678236778985854023_n

துத்தி 

மூலிகைகள்! 10632623_550136921782590_478151945406759819_n



சிறியாநங்கை/ நிலவேம்பு 

மூலிகைகள்! 1896997_550523381743944_8709444475979582370_n



பிரண்டை

மூலிகைகள்! 10612841_551306008332348_559585509506896376_n



காட்டுப்புகையிலை

மூலிகைகள்! 10644973_552156881580594_5362851035461200297_n



நாய்வேளை / நாய்க்கடுகு / நைக்கடுகு

மூலிகைகள்! 1782086_554486044681011_6329441248120671318_n



கொள்ளுக்காய் வேளை / காவாளி / கொலுஞ்சி 

மூலிகைகள்! 10534418_554506341345648_8579641068550591404_n



கற்பூரவல்லி / ஓமவல்லி

மூலிகைகள்! 10417490_554514498011499_5635260331428441118_n





மருதோன்றி / மருதா

மூலிகைகள்! 10616463_556767151119567_3439126252396877333_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மூலிகைகள்! Empty Re: மூலிகைகள்!

Post by முனாஸ் சுலைமான் Wed 8 Oct 2014 - 20:10

மூலிகைகள் சர்வநோய் நிவாரணி
 ஆயுர்வேத மருத்துவம்... நல்ல பதிவு வாழ்த்துக்கள் ...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மூலிகைகள்! Empty Re: மூலிகைகள்!

Post by Nisha Wed 8 Oct 2014 - 20:14

ஊரில் இருக்கும் போது  அம்மம்மா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தூதுவளை இலை பிடுங்கி சோறு சமைக்கும் போது வாழையிலையில் வைத்து  சோற்றின் மேல் வைத்து மூடி அவித்து  வெங்காயம், பச்சமிளகாய் சேர்த்து அம்மியில் அரைத்து  சம்பல் செய்து தருவா! 

இரண்டு தடவை சோறு கேட்டு வாங்கி சாப்பிடுவோம்.  ஊரிலிருந்து வந்த பின் வாய்ப்பே கிடைக்கவில்லை!

இப்படித்தான் கறிவேப்பிலை துளிர், முருங்கைகீரை துளிர் என விதம் விதமாக செய்வார்.  குப்பை மேனியில் கீரைக்கடைசல் வைப்பார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மூலிகைகள்! Empty Re: மூலிகைகள்!

Post by முனாஸ் சுலைமான் Wed 8 Oct 2014 - 20:21

Nisha wrote:ஊரில் இருக்கும் போது  அம்மம்மா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தூதுவளை இலை பிடுங்கி சோறு சமைக்கும் போது வாழையிலையில் வைத்து  சோற்றின் மேல் வைத்து மூடி அவித்து  வெங்காயம், பச்சமிளகாய் சேர்த்து அம்மியில் அரைத்து  சம்பல் செய்து தருவா! 

இரண்டு தடவை சோறு கேட்டு வாங்கி சாப்பிடுவோம்.  ஊரிலிருந்து வந்த பின் வாய்ப்பே கிடைக்கவில்லை!

இப்படித்தான் கறிவேப்பிலை துளிர், முருங்கைகீரை துளிர் என விதம் விதமாக செய்வார்.  குப்பை மேனியில் கீரைக்கடைசல் வைப்பார்கள்.
உண்மையில் கீரைவகை என்றாலே எனக்கும் அலாதிப்பிரியம் அந்த வகையில் மூலிகைக் கீரை சாப்பாட்டில் சமையலில் சேர்த்துக்கொண்டால் வைத்தியசாலை தேவையில்லை சில வியாதிகளுக்கு....
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மூலிகைகள்! Empty Re: மூலிகைகள்!

Post by Nisha Wed 8 Oct 2014 - 20:27

அதே தான்! அதனால் தான் நம் அம்ம்ம்ம்ம்ம்ம்மா மார் ரெம்ப காலம் ஆரோக்கியமாக ஜம்மென்று  80, 90 வயதிலும் தங்க வேலையை தாங்களே செய்து சமைத்து சாப்பிட்டு யாருக்கும் பாரமில்லாமல்  வாழ்ந்து மறைந்தார்கள். 

சுனாமிக்கு பின் தூதுவளை போன்றவை விளைவதில்லை என  2007  ல் ஊர் வந்த போது தூதுவளைசம்பல் போட பறித்து வர சொல்லி கேட்டதுக்கு என் தங்கை சொன்னாள்!

இப்போதும் அதே நிலை தானா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மூலிகைகள்! Empty Re: மூலிகைகள்!

Post by ahmad78 Thu 9 Oct 2014 - 13:19

மூலிகைகள் பற்றி அறியத்தந்துகொண்டிருப்பதற்கு நன்றி.

தொடருங்கள் அறிய காத்திருக்கிறோம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மூலிகைகள்! Empty Re: மூலிகைகள்!

Post by பானுஷபானா Thu 9 Oct 2014 - 13:23

Nisha wrote:அதே தான்! அதனால் தான் நம் அம்ம்ம்ம்ம்ம்ம்மா மார் ரெம்ப காலம் ஆரோக்கியமாக ஜம்மென்று  80, 90 வயதிலும் தங்க வேலையை தாங்களே செய்து சமைத்து சாப்பிட்டு யாருக்கும் பாரமில்லாமல்  வாழ்ந்து மறைந்தார்கள். 

சுனாமிக்கு பின் தூதுவளை போன்றவை விளைவதில்லை என  2007  ல் ஊர் வந்த போது தூதுவளைசம்பல் போட பறித்து வர சொல்லி கேட்டதுக்கு என் தங்கை சொன்னாள்!

இப்போதும் அதே நிலை தானா?

இந்த துவையல் சாப்பிட்டதில்ல். ஊரில் இதை சீண்டுவார் யாருமில்லை. இதன் பூவைப் பறித்து விளையாடுவோம். இப்போது தான் இதன் பெயரே தெரியும் .
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மூலிகைகள்! Empty Re: மூலிகைகள்!

Post by Nisha Thu 9 Oct 2014 - 17:30

ஐய்ய்! பானு ரெம்ப மிஸ் செய்திட்டிங்க பானு! 

சுடச்சுட சோறும் தூதுவளை இலை சட்னியும் வைச்சு சாப்பிட்டால்  சூப்பராக இருக்கும் தெரியுமா?

எனக்கு தூதுவளை இலையில் செய்யும் சட்னி ரெம்ப பிடிக்கும்.  கறிவேப்பிலை துளிரில் செய்வதும் பிடிக்கும். பொதுவாக எல்லா கீரையும் பிடிக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மூலிகைகள்! Empty Re: மூலிகைகள்!

Post by கவிப்புயல் இனியவன் Fri 10 Oct 2014 - 4:09

*_ *_ *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

மூலிகைகள்! Empty Re: மூலிகைகள்!

Post by பானுஷபானா Fri 10 Oct 2014 - 15:23

Nisha wrote:ஐய்ய்! பானு ரெம்ப மிஸ் செய்திட்டிங்க பானு! 

சுடச்சுட சோறும் தூதுவளை இலை சட்னியும் வைச்சு சாப்பிட்டால்  சூப்பராக இருக்கும் தெரியுமா?

எனக்கு தூதுவளை இலையில் செய்யும் சட்னி ரெம்ப பிடிக்கும்.  கறிவேப்பிலை துளிரில் செய்வதும் பிடிக்கும். பொதுவாக எல்லா கீரையும் பிடிக்கும்.

அப்படியா இனிமே எங்க இதை சாப்பிட முடியும் )*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மூலிகைகள்! Empty Re: மூலிகைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum