சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

நோய்களை மாயமாக்கும் தேங்காய் Khan11

நோய்களை மாயமாக்கும் தேங்காய்

4 posters

Go down

நோய்களை மாயமாக்கும் தேங்காய் Empty நோய்களை மாயமாக்கும் தேங்காய்

Post by ahmad78 Sun 8 Feb 2015 - 13:15

நோய்களை மாயமாக்கும் தேங்காய் Ht3262
 
‘தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல. மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட’ என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல அத்தியாவசியச் சத்துகள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.

மனிதனுக்கு அழகும், ஆரோக்கியமும் தரும் உணவு தேங்காய். அசைவ உணவு சாப்பிடாதவர்கள், கண்டிப்பாக தேங்காய் சாப்பிட வேண்டும். தேங்காயில் கொழுப்பு சத்து, புரதம், தாது, டன்டனிக் அமிலம், வைட்டமின் இ மற்றும் நீர்ச் சத்தும் உள்ளது. சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயைச் சாப்பிட்டு தண்ணீர் பருகினால், இறைச்சி உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும். அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளன.

100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் அடங்கி உள்ளது. நீரிழிவுக்கு தேங்காய் மிகவும் பயன் தரக் கூடியது.

சத்துகள் என்ன?: புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

மருத்துவ குணங்கள்: தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. தேங்காய்ப் பால் நஞ்சு முறிவாகவும் பயன்படுத்தப்படுகிறது.

எளிதில் ஜீரணமாகும்: தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப் புண்கள்: தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

கொழுப்பை குறைக்கும்: உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட், லாரிக் ஆசிட் ஆகிய அமிலங்கள் தேங்காயில் போதிய அளவு உள்ளன. வைரஸ் மற்றும் பாக்டீரியா நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாகவும் இந்த அமிலங்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.   தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது.

ஆண்மைப் பெருக்கி: முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் உள்ள வைட்டமின் இ, முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது. குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

ஆயுர்வேத மருத்துவத்தில், இயற்கையாக தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டால் உடலை போஷிக்கும். உடல் இளைப்பு, பலவீனம் போன்றவற்றுக்கும் மருந்தாகிறது. நிமோனியா போன்ற சுவாச மண்டல கோளாறுகளில் தேங்காய் எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது. ஆராய்ச்சிகள், தேங்காய் எண்ணெய் அதிக உடல் பருமனையும், அதிக அளவு கொலஸ்ட்ராலையும் ஏற்படுத்துவதில்லை என்று தெரிவிக்கின்றன. இருந்தாலும் அதிக உடல் எடை உள்ளவர்கள், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை அளவாக எடுத்துக்கொள்ளலாம். அளவாக உபயோகித்தால் தேங்காய் எண்ணெயின் பலன்களைப் பெறலாம்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3272


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நோய்களை மாயமாக்கும் தேங்காய் Empty Re: நோய்களை மாயமாக்கும் தேங்காய்

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 9 Feb 2015 - 9:56

சிறப்பு.. தொடர்ந்து ஆரோக்கியம் சார்ந்த பதிவாகப் பகிரும் முகமது...ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டுகிறேன். :) தொடரட்டும் :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

நோய்களை மாயமாக்கும் தேங்காய் Empty Re: நோய்களை மாயமாக்கும் தேங்காய்

Post by *சம்ஸ் Mon 9 Feb 2015 - 19:00

காயத்ரி வைத்தியநாதன் wrote:சிறப்பு.. தொடர்ந்து ஆரோக்கியம் சார்ந்த பதிவாகப் பகிரும் முகமது...ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டுகிறேன். :) தொடரட்டும் :)
நானும் வேண்டுகிறேன்  சியர்ஸ்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நோய்களை மாயமாக்கும் தேங்காய் Empty Re: நோய்களை மாயமாக்கும் தேங்காய்

Post by சே.குமார் Mon 9 Feb 2015 - 20:51

நல்ல பகிர்வு.  வாழ்த்துக்கள் அகமது...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

நோய்களை மாயமாக்கும் தேங்காய் Empty Re: நோய்களை மாயமாக்கும் தேங்காய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum