சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

நோய் பயம் Khan11

நோய் பயம்

2 posters

Go down

நோய் பயம் Empty நோய் பயம்

Post by ahmad78 Wed 4 Mar 2015 - 13:44

நோய் பயம் Ht3333
அச்சம் தவிர்

மனிதனின் மனம் ஒரு மாயப்புதிர். திகில் கதை படித்தால் திடீரென தூக்கத்தில் திடுக்கிட்டு எழுந்திருப்போம். பேய் படம் பார்த்தால் மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்கிற கதை உண்மையாகும். விசித்திரமான நோய்களைப் பற்றிப் படிக்கிற, கேள்விப்படுகிற போதும் இதே நிலையை அனுபவிப்பவர்கள் பலர். எங்கோ, யாருக்கோ வந்திருப்பதாகக் கேள்விப்படுகிற நோய் தமக்கும் வந்துவிடுமோ என்கிற பயம், அதே அறிகுறிகளை தாமும் உணர்வது என்கிற இந்த பீதியை அனேகம் பேரிடம் பார்க்கலாம். இந்தப் பிரச்னை இயல்பானதா? அல்லது ஏதேனும் மனநோயின் அறிகுறியா? மனநல மருத்துவர் எஸ்.பி.முருகப்பனிடம் பேசினோம்...

‘‘தினமும் ஏறத்தாழ 60 ஆயிரம் சிந்தனைகள் நம் மனதில் தோன்றுகின்றன. மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பல நோய்களைப் பற்றி நாள் முழுவதும் படிக்க வேண்டியிருக்கிறது. சில புதிய நோய்களைப் பற்றி படிக்கும் போது, ‘இவ்விதமான நோய்கள் நமக்கும் இருக்குமோ? வந்தால் என்ன செய்வது?’ போன்ற எண்ணங்கள் தோன்றுவது சகஜம். அதிகபட்சம் இந்த எண்ணம் ஒருமணி நேரம் இருக்கும். அதன் பிறகு கடந்து போய்விடும். மருத்துவம் படிப்பவர்களுக்கே, அது பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கே இந்தப் பிரச்னை வருகிறது என்றால் சாமானிய மனிதனுக்கு இந்த வகை பயம் ஏற்படுவது இயற்கையானதே! 

வெளிநாட்டில் புதிய வைரஸ் நோய் பரவி வருகிறது என்ற செய்தியை செய்தித்தாளில் படிக்கிறீர்கள். அந்த நோய் இந்தியாவுக்குள் வந்து நமக்கு பரவிவிட்டால் என்ன செய்வது? இப்படி நினைத்து பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். நோய் வராமல் இருக்க மனதுள் செயல்படும் அகவிழிப்பே இவ்வகை பயங்கள் ஏற்பட ஆதார காரணம். இதை உணர்ந்தாலே பிரச்னை சரியாகி விடும். தொண்டையில் அடிக்கடி கரகரப்பும் வலியும் ஏற்படுகிறது. சளியைத் துப்பும் போது ரத்தம் வருகிறது என வைத்துக்கொள்வோம். உடனே, ‘தொண்டையில் புற்றுநோய் வந்துவிட்டதோ’ அல்லது ‘தைராய்டு கேன்சராக இருக்குமோ’ என்றெல்லாம் பயப்படுபவர்களும் ஏராளம். ஒரு சில அறிகுறிகளை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த நோய்தான் என்பதை யாருமே தீர்மானிக்க முடியாது. 

சிலர் அறிகுறிகளைக் கண்டு பயந்து, உடனே சென்று டாக்டரை பார்ப்பார்கள். இவ்வகையான பயத்தை வணிக ரீதியிலான லாபங்களுக்கு பல மருத்துவமனைகள் பயன்படுத்திக் கொள்கின்றன. பயத்துடன் அணுகுபவரை ‘சிடி ஸ்கேன் எடுக்கவேண்டும், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தால்தான் தெரியும்’ என்று அலைபாய வைப்பதும் நடக்கிறது. பணம், நேரம் எல்லாம் நிறைய செலவழித்த பின், ‘உங்களுக்கு ஒன்று மில்லை’ என்று சொல்லி அனுப்பி விடுவார்கள். அதனால், சிறிய சந்தேகங்களுக்கு எடுத்தவுடன் மருத்துவமனையை நாடாமல் நன்றாக விஷயம் தெரிந்தவர்களிடம் பிரச்னையைச் சொல்லி விவாதியுங்கள். உங்களின் பிரச்னை சாதாரணமானது என அவர்களுக்கு தெரிந்தால் ‘ஏம்பா? இந்தப் பிரச்னை எனக்கும் இருந்துச்சு! 

இப்படி செய்தேன்... சரியாகிவிட்டது’ என்று அனுபவத்தைப் பகிர்வார்கள். ஒரு நோய் பற்றி படித்த தாக்கம் ஒரு வாரத்துக்கு மேல் உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது என்றால் காலம் தாழ்த்தாமல் மனநல மருத்துவரைப் பார்த்து ஆலோசிப்பதே நல்லது. சிலர் ஏதாவது ஒரு புதிய நோய் பற்றி படித்தாலோ, அந்த நோயால் ஒருவர் இறந்திருந்தாலோ அந்த எண்ணமானது ஆழமாக விதைக்கப்பட்டு, அது பற்றியே கவலையும் பயமும் கொள்வார்கள். அந்த நோய் தனக்கு வந்துவிட்டதாக நினைப்பார்கள். இந்தப் பிரச்னைக்கு ‘டெல்யூஷனல் டிஸ்ஆர்டர்’ (Delusional disorder) என்று பெயர். இது மனநலம் பாதித்ததன் ஆரம்ப அறிகுறி. 

இதை கண்டுகொள்ளாமல் விட்டால் பிரச்னையானது வளர்ந்து வேலை, வருமானம், வணிகம், குடும்பம் என வாழ்க்கையின் ஆதாரத்தை பாதிக்கலாம். டாக்டர் உங்களுக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னாலும் ‘இந்த டாக்டர்தான் சரியில்லை’ என்று சொல்லி, நம்பிக்கை இல்லாமல் அடுத்த டாக்டரை பார்க்கப் போவார்கள். இப்படி தவறாக ஒரு விஷயத்தை புரிந்துகொண்டு அதை நம்புவது அல்லது அரைகுறையாக ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டு அதை உண்மை என்று நம்புவது எல்லாம் டெல்யூஷனல் டிஸ்ஆர்டரில் அடக்கம். இதில்  பல வகைகள் உள்ளன. அதில் பாதிக்கப்பட்ட நபர் எந்த வகையில் இருக்கிறார் என்பதை வரையறுத்து அதற்குரிய சிகிச்சையை அளிக்க வேண்டியிருக்கும்.
 
இவ்வாறு அதீதமாக யோசித்து பயப்படுபவர்களுக்கு ‘டீபெர்சனலைசேஷன்’ என்ற பிரச்னையும் வரலாம். தங்களைப் பற்றி சுய பச்சாதாபக் கவலைகள் இவர்களிடம் அதிகமாக இருக்கும். ‘எப்படி ஜம்முன்னு இருந்தேன்... இப்ப பாருங்களேன் இந்த நோயால் உடம்பு எவ்வளவு இளைச்சுப் போச்சு’ என்பார்கள். உண்மையில் அவர்கள் உடல்நலனில் எந்தப் பிரச்னையும் இருக்காது. சொன்னால் நம்ப மறுப்பார்கள். எதைப் பற்றியும் அதிகம் சந்தேகங்கள் கொள்வார்கள். அதிகம் கற்பனை செய்து பேசுவார்கள். இது கொஞ்சம் பிரச்னைக்குரிய நிலை. மனதில் எதுவும் பிரச்னை எனில் உடலிலும் பிரதிபலிக்க ஆரம்பிக்கும்.

சரியாக சாப்பிட மாட்டார்கள்... தூங்க மாட்டார்கள். எதையாவது, யாரையாவது குறைசொல்லிக் கொண்டே இருப்பார்கள். யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் ஒரு கட்டத்தில் வன்முறைச் செயல்களில் கூட ஈடுபடுவார்கள்.  இவ்வகை மனநல பிரச்னைகள் ஒரே நாளில் பூதாகரமாகி விடாது. படிப்படியாகத்தான் வளர்ந்து வந்திருக்கும். ஆரம்பநிலையிலேயே சரி செய்து கொள்வது நல்லது. மனதை கவலைப்படுத்தும் திரைப்படத்தை பார்க்கும்போதோ, கலவரப்படுத்தும் செய்திகளை படிக்கும்போதோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சில மணி நேரங்கள் அது பற்றிய நினைவுகள் இருக்கும். பின் அதிலிருந்து வெளியேறி வேறு வேலையில் கவனத்தை திருப்பிவிடுவோம் அல்லவா? அது போலத்தான் நோய்கள் பற்றி கேள்விப்படுகிற தகவல்களும். பயப்படத் தேவையே இல்லை!’’ என மனக்கவலையைத் தீர்க்கிறார் மனநல மருத்துவர் எஸ்.பி.முருகப்பன்.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3343


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நோய் பயம் Empty Re: நோய் பயம்

Post by Nisha Thu 5 Mar 2015 - 17:58

ஐயோ! நானும் இப்படி பட்டவர்களை பார்த்திருக்கேன்பா!

நாமெல்லாம் வருத்தம் வந்தாலும் ஒன்றுமே இல்லை என  சும்மாவானும்  ட்ராமா போடுவோம். சிலர்  ஒன்றுமே இல்லாததுக்கெல்லாம் அந்த வருத்தம் இந்த வருத்தம் என  சொல்லும் போது  சிரிக்கத்தான் தோன்றும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum