சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Yesterday at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Yesterday at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Yesterday at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Yesterday at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Yesterday at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Yesterday at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

பப்பாளியின் பலன்கள் Khan11

பப்பாளியின் பலன்கள்

3 posters

Go down

பப்பாளியின் பலன்கள் Empty பப்பாளியின் பலன்கள்

Post by anuradha Wed 5 Aug 2015 - 13:10

பப்பாளியின் பலன்கள்

பப்பாளியின் பலன்கள் %E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF+2

பப்பாளியின் பலன்கள் Papaya-tree

பப்பாளியின் பலன்கள் Pappali-nam-pangali-aagattum-1050x700

இன்று பப்பாளிப் பழங்கள் தெருவோரங்களில் வண்டிக்கடைகளில் ஆங்காங்கே கிடைக்கின்றன. இப்படி மலிவாகக் கிடைக்கும் ஒன்றுக்கு மதிப்பிருக்காது என்று நினைத்துக்கொள்வது தவறான மனநிலையாகும். பப்பாளிப் பழங்களின் மதிப்பை உணர்த்தும் பதிவாக இது அமைகிறது. பப்பாளிப் பழங்களை எப்படி வாங்குவது என்றும் தெரிந்துகொள்ளுங்கள்!

“சாப்பாட்டில் காரட்டைச் சேர்த்துக்கிட்டா, கண்ணுக்கு நல்லது!’’ – எல்லா அம்மாக்களும் தங்கள் குழந்தைகளிடம் சொல்வது இது!

பப்பாளிப் பழத்துக்கு மற்ற பழங்களை மென்மையடையச் செய்யும் சக்தியும் உள்ளது.

ஆனால், கண் தொடங்கி இதயம் வரை எல்லாவற்றுக்கும் சிறந்தது மூன்று வேளை பழங்கள் சாப்பிடுவது. வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; வயதானவர்களுக்கும் இது பொருந்தும். பழங்களை தினமும் மூன்று வேளையும் சாப்பிடுவதால் வயதாவதால் குறையும் கண் பார்வைக் குறைபாடு தடுக்கப்படுகிறது.

காரணம், காய்கறிகளிலும் பழங்களிலும் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ சத்துக்கள். ARMD (Age Related Mascular Degeneration) என்ற நிலை நீடித்தால் கண் பார்வை இழக்கும் வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்கிற சக்தி பழங்களில் உண்டு!
மூன்று வேளையும் பழங்களை எப்படிச் சாப்பிடுவது..? அதுவும் பழங்கள் விற்கும் விலையில் என்கிறீர்களா?

உங்களுக்குக் கை கொடுக்கிறது பப்பாளிப் பழம். காலை டிபனுடன் அல்லது கஞ்சி, தானிய மாவுடன் ஒரு துண்டு, மதிய உணவின் சாலட்களில் அல்லது இரவு உணவில் தயிருடன் சாப்பிடுவது மிகவும் சுலபம்.

ஒரு பப்பாளியை இரண்டு பேர், மூன்று வேளைகள் சாப்பிடலாம். முதலில் பப்பாளியைச் சாப்பிடுவதற்கேற்ப எப்படி வாங்க வேண்டும் என்று பார்ப்போம்.
இளம் சிவப்பு நிறத்தில் தொட்டால் மென்மையாக இருக்கும் பப்பாளிப்பழம் உடனே சாப்பிட உகந்தது. ஆங்காங்கே இன்னும் மஞ்சள் திட்டுக்கள் உள்ள பழத்தை ஓரிரண்டு நாட்கள் பழுக்கவைத்துச் சாப்பிடலாம். பச்சை நிறப் பப்பாளியை வாங்கவே கூடாது. அதை கூட்டாகச் சமைக்கலாம். அல்லது சிலவகை சாலட்களில் சேர்க்கலாம். ஆனால், இனிப்பான சுவை இருக்காது. அதேபோல, அதிக அளவில் பழுத்த பப்பாளியும் வாங்கக் கூடாது.

பப்பாளியின் பலன்கள்

இத்தனை தேர்ந்தெடுத்து வாங்கிச் சாப்பிடும் பப்பாளிப் பழத்தால் நாம் அடையும் பயன்கள் என்னென்ன?

•பப்பாளிப்பழம், இனிப்பான சுவையைத் தருவதோடு, கரோட்டின்ஸ், வைட்டமின் ஏ, பி, சி, ஈ, ஃப்ளாவனாய்ட்ஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் மற்றும் நார்ச் சத்தினைத் தருகிறது.

•இருதயம் வலிமை பெறத் தேவையான சத்துக்களையும், ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்புச் சக்தியையும் தருகிறது.

•நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கக்கூடிய வல்லமை பொருந்திய பப்பாயின் என்ற என்சைமினையும் தருகிறது.

•பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ, சி, மற்றும் ஈ சத்துக்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்ற உதவுகின்றன. இதனால் கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதைத் தடுத்து ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேராமல் தடுத்து, இருதயம் பாதிப்பில்லாமல் இயங்கவும் உதவுகிறது.
 
•பப்பாளியில் உள்ள நார்ச் சத்து, கொழுப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கிறது.

•பப்பாளியில் உள்ள வைட்டமின்கள், பீடாகரோடின் போன்றவை புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றன.

•பீடாகரோடின், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஜலதோஷம், ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றன.

பப்பாளிப் பழத்தினை நேடியாக வெட்டிச் சாப்பிடுவதே சிறப்பு. அதை இன்னும் சுவையாகச் சாப்பிட, அதன் மேல் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். பப்பாளிப் பழத்துக்கு மற்ற பழங்களை மென்மையடையச் செய்யும் சக்தியும் உள்ளது. அதனால் பழ சாலட்கள் தயாரிக்கும்போது, அவசியம் பப்பாளியையும் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லாப் பழங்களும் கனிந்துவிடும்.

பப்பாளியின் கறுப்பு நிறக் கொட்டைகளைக்கூட சாலட்களில் சேர்க்கலாம். அதற்கு மிளகைப் போன்ற சுவையும் நறுமணமும் உண்டு.

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.


• நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து.


• பித்தத்தைப் போக்கும்.

• உடலுக்குத் தென்பூட்டும்.

• இதயத்திற்கு நல்லது.

• மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.

• கல்லீரலுக்கும் ஏற்றது.

• கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

• சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.

• கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.

• முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.

• இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்.

• மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.

• பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.

• பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.

• பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.

• இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.

• உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.

• இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

• ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.

• நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.

பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பப்பாளியின் பலன்கள் Empty Re: பப்பாளியின் பலன்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 5 Aug 2015 - 18:06

பயனுள்ள பதிவு 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பப்பாளியின் பலன்கள் Empty Re: பப்பாளியின் பலன்கள்

Post by ahmad78 Sun 9 Aug 2015 - 14:55

பப்பாளியின் பலன்கள் அறியத்தந்தமைக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பப்பாளியின் பலன்கள் Empty Re: பப்பாளியின் பலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum