சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

முதல் பார்வை: பைரவா - கமர்ஷியல் புரட்சி! Khan11

முதல் பார்வை: பைரவா - கமர்ஷியல் புரட்சி!

Go down

முதல் பார்வை: பைரவா - கமர்ஷியல் புரட்சி! Empty முதல் பார்வை: பைரவா - கமர்ஷியல் புரட்சி!

Post by rammalar Fri 13 Jan 2017 - 3:02

முதல் பார்வை: பைரவா - கமர்ஷியல் புரட்சி! Bairavaa_3061337f_3116811f
 
 மருத்துவக் கல்லூரி முறைகேட்டை அம்பலப்படுத்தப் போராடும் 
சாகச நாயகனின் கதை 'பைரவா'.

வாராக் கடன்களை வசூலிக்கும் வங்கிப் பணியில் இருக்கிறார் விஜய். 
அடாது கடன் கேட்டாலும் அலைக்கழிக்கும் நபர்களிடம் விடாது விரட்டிப் 
பிடித்து பணத்தை வசூல் செய்து வங்கியில் ஒப்படைத்து நல்ல பெயர் 
வாங்குகிறார். 

அந்த சூழலில் தன் மேனேஜர் மகள் திருமணத்துக்காக செல்பவர் 
கீர்த்தி சுரேஷை சந்தித்ததும் காதல் வயப்படுகிறார். அப்போது கீர்த்திக்கு 
இருக்கும் ஆபத்தை அறிந்துகொள்கிறார். அந்த ஆபத்து என்ன? அதற்கான 
பின்புலம் என்ன? விஜய் என்ன செய்கிறார்? கீர்த்தி சுரேஷை ஆபத்திலிருந்து 
மீட்டாரா? என்று விரிகிறது திரைக்கதை.

'அழகிய தமிழ் மகன்', 'அதிதி' படங்களுக்குப் பிறகு பரதன் இயக்கிய 
மூன்றாவது படம் 'பைரவா'. மருத்துவக் கல்லூரி முறைகேடுகள், கல்வியாளர் 
எப்படி உருவாகிறார் என்பதை கமர்ஷியல் சினிமாவில் சொன்ன விதத்தில் 
இயக்குநர் பரதன் கவனிக்க வைக்கிறார். 
ஆனால், அந்த கவன ஈர்ப்பு அதற்குப் பிறகு தொடரவில்லை.

விஜய் முன்பை விட மெலிதாக, இளமையாக இருக்கிறார். அவரது சுறுசுறுப்பும், 
உடல் மொழியும் வழக்கம்போல துருதுரு. ஆனால், வசன உச்சரிப்பில் வெரைட்டி 
காட்ட வேண்டுமென்று கொஞ்சம் நீட்டி முழக்கிப் பேசி இருப்பது ரசிக்கும்படி 
இல்லை. 

சதீஷ் வார்த்தையிலேயே அதை சொல்ல வேண்டுமென்றால் இந்த மாதிரி எல்லாம் 
பண்ணக் கூடாது. ஆக்‌ஷனில் திருப்தியாக இறங்கி அடித்த விஜய், நடனத்தில் 
கொஞ்சம் கடன் வைத்திருக்கிறார்.

'இன்னைக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத ஒரு கெட்டப்பழக்கம் என்கிட்ட இருக்கு. 
சொன்ன வார்த்தையைக் காப்பாத்துறது', 'தெரிஞ்ச எதிரியை விட தெரியாத 
எதிரிக்குதான் அல்லு அதிகம்' என்று விஜய் பேசும் பன்ச் வசனங்களுக்கு 
தியேட்டரில் விசில் தெறிக்கிறது.

கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்தின் தேவை உணர்ந்து மிகச் சரியாக நடித்திருக்கிறார். 
தான் யார் என்பதை பிளாஷ்பேக் காட்சியில் கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்திய 
விதத்தில் சிறந்த நடிகையாக தன்னை நிரூபித்திருக்கிறார். கதை நகர்த்தலுக்கும், 
கதைக்கான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் கீர்த்தி சுரேஷ் உதவி இருக்கிறார். 
அந்த விதத்தில் கீர்த்தி நடிப்பில் தனித்து நிற்கிறார்.

சதீஷ், தம்பி ராமையா ஆகியோர் நகைச்சுவைப் பகுதிக்கு சில இடங்களில் மட்டுமே 
உத்தரவாதம் தருகிறார்கள். தமிழ் சினிமாவின் அக்கா பாத்திரத்துக்கு 
குறையில்லாமல் நடிக்கிறார் சிஜா ரோஸ். நான் கடவுள் ராஜேந்திரனுக்கும், 
மைம் கோபிக்கும் படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை.

ஜெகபதி பாவு வழக்கமான நெகட்டிவ் கதாபாத்திரத்தை சரியாகக் கையாளுகிறார். 
சரத் லோகிதஸ்வா, ஒய்.ஜி.மகேந்திரன், அண்ணி மாளவிகா, , ஹரீஷ் உத்தமன், 
ஸ்ரீமன், நரேன், சண்முகராஜா, மாரிமுத்து, டேனியல் பாலாஜி ஆகியோர் 
பொருத்தமான தேர்வு.

சுகுமாரின் ஒளிப்பதிவு நேர்த்தி. சந்தோஷ் நாராயணன் இசை படத்துடன் 
ஒட்டவில்லை. வர்லாம் வர்லாம் வா பைரவா பாடலைத் தவிர பட்டையக் கிளப்பு 
பாடல் உள்ளிட்ட மற்ற பாடல்கள் சுமாராகவே உள்ளன.

மருத்துவக் கல்லூரி முறைகேடு குறித்த ஆதாரங்களை திரட்டுவதற்காக 
ஒரே இரவில் அவ்வளவு பெரிய படைபலத்தை விஜய்யால் எப்படி திரட்ட முடிந்தது, 
ஆவணங்களை எரித்தாலும் எடுத்த வீடியோ பதிவு எங்கே போனது, பென் டிரைவ் 
ஆதாரமே இருந்தும் அதை ஏன் கண்டுகொள்ளவில்லை, லட்சக்கணக்கான போஸ்டர் 
ஒட்டும் அளவுக்கு விஜய் பின்னால் யார் இருக்கிறார்கள், நீதிமன்றத்தில் ஆதாரம் 
இல்லாமல் எமோஷனை மையப்படுத்தி கால அவகாசம் பெற முடியுமா, கொடுக்கப்
பட்ட கால அவகாசத்தில் எப்படி எதையும் கண்டுபிடிக்காமல், தகவல் திரட்டாமல் 
திடீரென்று ஒரு வீடியோ காட்சி மூலம் வங்கிக் கணக்கு, கல்லூரி என 
எல்லாவற்றையும் முடக்கி கைதுப் படலத்துக்கான மிகப் பெரிய சம்பவத்தை 
நிகழ்த்துவதற்கான ஆணை பெற முடியும், எந்த பின்புலமும் இல்லாத விஜய் 
திடீரென ரைபிள் தூக்குவது என லாஜிக் கேள்விகள் நீள்கின்றன.

பரதன் வசனகர்த்தாவாக சில படங்களில் பணியாற்றியுள்ளார். 
அதனாலோ என்னவோ அந்த படங்களின் சாயலும் இதில் வருவதை அவரால் 
தடுக்கவோ, தவிர்க்கவோ முடியவில்லை போல.

கிரிக்கெட் ஆடும் காட்சி சிரிப்பை வரவழைக்காமல் நெளிய வைப்பதுதான் மிச்சம். 
கட்டுப்பாடற்ற தொய்வான திரைக்கதையாலும், நம்பகத்தன்மையற்ற 
காட்சிகளாலும் கல்விப் பிரச்சினையை 'பைரவா' கமர்ஷியல் புரட்சியாகவே பதிவு 
செய்திருக்கிறது.
-
----------------------------

உதிரன்
தமிழ் தி இந்து
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum