சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59

» பூக்கள்
by rammalar Yesterday at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

திரை விமர்சனம்: மேயாத மான் Khan11

திரை விமர்சனம்: மேயாத மான்

Go down

திரை விமர்சனம்: மேயாத மான் Empty திரை விமர்சனம்: மேயாத மான்

Post by rammalar Tue 24 Oct 2017 - 13:49

திரை விமர்சனம்: மேயாத மான் Meeyadhamaanjpg
-
மேயாத மான் என்ற பெயரில் மெல்லிசைக் குழு நடத்தும் 
வைபவ், தனது கல்லூரித் தோழியான பிரியா பவானிசங்கரை 
ஒருதலையாகக் காதலிக்கிறார். கடைசிவரை காதலைச் 
சொல்லாமல், போதையில் புலம்புகிறார். 

காதலிக்குத் திருமணம் நிச்சயமானதை அறிந்து, தற்கொலைக்கு 
முயற்சிக்கிறார். அதிர்ச்சியடையும் நண்பர்கள், காதலி 
மூலமாகவே அவரைக் காப்பாற்றுகின்றனர். இதற்கிடையே, 
வைபவ் தங்கை இந்துஜாவுக்கு தனது அண்ணனின் நண்பன்
விவேக் பிரசன்னா மீது ஒருதலைக் காதல் மலர்கிறது.

தங்கையின் காதலுக்காக நண்பனிடம் தூது செல்கிறார் வைபவ்.
இந்தக் காதல்கள் என்ன ஆனது என்பது மீதி கதை.

வழக்கமான ஒருதலைக் காதல் கதையை நட்பு, பாசம் கலந்து 
வித்தியாசமான திரைக்கதையுடன் நகைச்சுவைப் படமாக 
எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரத்னகுமார்.

வடசென்னை மக்களின் நேசம் கலந்த வாழ்வை, எதார்த்தத்தை 
மீறாத அழகியலோடு, திரையில் படரவிட்டிருப்பதன் மூலம் 
முதல் படத்திலேயே கவனிக்க வைக்கிறார்.

தொடக்கக் காட்சியில் வைபவ், வணிகவியல் ஆசிரியரை சிக்க 
வைப்பதற்காக, அவரது வீட்டுக் கட்டிடத்தையே தற்கொலைக்குத் 
தேர்ந்தெடுப்பது, போதையில் ஷேக்ஸ்பியர் கவிதைகளை 
உளறுவது, திருமண மேடையில் ‘கோலங்கள்’ சீரியல் பாடலைப்
பாடுவது என படம் நெடுக சிரிப்பு பட்டாசு வெடிக்கிறது. 
நிதானித்து சிரிப்பதற்குள், அடுத்த நகைச்சுவை வந்துவிடுகிறது.

சோகம் தோய்ந்த முகம், அரை போதை உளறல், காதலின் தவிப்பு 
என ‘இதயம் முரளி’யாகவே மாறி இருக்கிறார் வைபவ். 
காதலில் உருகும்போதும், தங்கையின் காதலுக்காக இறங்கிப் 
பேசும்போதும், நண்பர்களிடம் சண்டை போடும்போதும் நேர்த்தி.

அதிலும் தனது நண்பன் - தனது தங்கை இடையிலான காதலை 
அவர் உணரும் தருணமும், அதை வெளிப்படுத்தும் விதமும் 
அருமை. நகைச்சுவை காட்சிகளில் ஸ்கோர் செய்வதுபோல, 
உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் அவர் இன்னும் கொஞ்சம் 
கவனம் செலுத்தியிருக்கலாம்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் 
அறிமுகமாகியுள்ள பிரியா பவானிசங்கர் கண்ணியமான 
அழகோடு, அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

வழக்கமாக, ஒரே பாணியில் நடிப்பை வழங்கிவரும் 
விவேக் பிரசன்னாவுக்கு இது மாறுபட்ட, பெயர் சொல்லும் படம். 
கிரிக்கெட் விளையாடும்போது, ஒரு இடத்தில் அடிபட, காலில் 
கட்டு போடுவது தொடங்கி, கிளைமாக்ஸ் காட்சி வரை நகைச்
சுவையிலும், குணச்சித்திரத்திலும் தூக்கி சுமக்கிறார். 
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24734
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

திரை விமர்சனம்: மேயாத மான் Empty Re: திரை விமர்சனம்: மேயாத மான்

Post by rammalar Tue 24 Oct 2017 - 13:49

அலட்டிக்கொள்ளாத உடல்மொழி, இயல்பான நடிப்பு, 
உணர்வுகளை உள்வாங்கி வசனம் பேசுவது என ஒவ்வொரு 
காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். நண்பனின் தங்கை என்பதால் 
அவரது காதலை நிராகரிக்கும்போதும், நண்பனின் அறிவுரைக்குப்
பிறகு காதலை ஏற்கும்போதும் சிறப்பாக நடித்திருக்கிறார்.


வைபவ் தங்கையாக வரும் இந்துஜா, ‘ஏரியா கெத்து’ 
காட்டுவதும், அண்ணனின் காதலியைப் பார்க்க ஏங்குவதும்,
அண்ணனின் நண்பனைக் காதலித்து மருகுவதுமாக 
ஆச்சர்யமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

அதிலும், ‘‘தங்கச்சி, தங்கச்சின்னு சொல்லிகிட்டு என்னை 
தொடாத’’ என சீறுவதிலும், ‘‘அவன் தங்கச்சின்னு 
சொல்றதுதான் பிரச்சினையே’’ என அண்ணனிடம் 
வெறுப்பில் சொல்வதும்.. பக்கா பக்கத்துவீட்டுப் பெண்!

சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமாரின் இசை, 
விது அயன்னாவின் ஒளிப்பதிவு ஆகியவை படத்துக்கு 
பலம் சேர்க்கின்றன. பாடல்கள் பரவாயில்லை ரகம்.

நீளும் காட்சிகளை வெட்டி, திரைக்கதையின் லேசான 
தொய்வுகளை சரிசெய்திருந்தால், ‘மேயாத மான்’ இன்னும் 
வேகமாக துள்ளி ஓடியிருக்கும்!
-
--------------------------------
தி இந்து
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24734
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum