சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை Khan11

மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை

Go down

மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை Empty மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:39

மவ்லவி, எஸ். லியாகத் அலீ, மன்பஈ

[ இறைவணக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாக மனைவியை மகிழ்விக்க முடியவில்லை என்று காரணம் கூறித் தப்பிக்கவும் முடியாது. இரவில் சில பகுதியை மட்டுமே இறைவணக்கத்துக்காக ஒதுக்கலாமே தவிர முழு இரவையும் வணக்கத்திலேயே கழித்துவிட அனுமதியில்லை. ஏனெனில் தனது துணைவிக்கு சுகமளிப்பதும் இறைவணக்கத்தின் பாற்பட்டதே.
மனைவிக்கு பணம் அனுப்புவதும், நகை வாங்கிப் போட்டு அழகு பார்ப்பதும், கோடிக்கணக்கில் சொத்துக்களை அவள் பெயரில் வாங்கிக் குவிப்பதும் மனைவியை மகிழ்விப்பதாகவோ, அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிட்டதாகவோ அர்த்தமாகாது.

தன் தந்தை தாயுடன் வாழ்ந்தபோது உணவு, உறைவிடம், உடை போன்ற தேவைகள் அவளுக்கு நிறைவாகவே இருந்தன. இவற்றுக்காக அவள் நம் இல்லம் தேடி வரவில்லை. அவளுக்கு திருமணம் நடந்திருப்பது இதற்காக அல்ல, இல்லற சுகத்திற்காக மட்டுமே என்பதைப் புரிந்து அந்த விஷயத்தில் அவளை பரிபூரண திருப்தி பெறச் செய்வது கணவன் மீது நீங்கா கடமை.
தன் மனைவியை மகிழ்விக்கச் செய்யும் காரியங்களில் முதன்மையானது அவளுக்குத் தான் அளிக்கின்ற இல்லற இன்பமே என்பதை ஒவ்வொரு கணவனும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.]

மனைவியை மகிழச் செய்வதில் மிக மிக முக்கிய அம்சம் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு அவளை திருப்தியறச் செய்வது. அதுபோன்றே மனைவியும் கணவனை இல்லறத்தில் மகிழ்விப்பது அவளது தலையாயக் கடமை. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் இன்பத்தை அளிப்பவர்களாகவும் தத்தமது கற்புக்கு அரணாகவும் திகழ வேண்டும்.

பெண் இயல்பிலேயே வெட்கமும், நாணமும் மிகந்தவளாக இருப்பதால் இந்த விஷயத்தில் அவளிடமிருந்து எந்த கோரிக்கையும் வருவதை ஆண்மகள் எதிர்பார்க்கக்கூடாது. அவ்வப்பொழுது அவளது தேவையறிந்து நடந்து கொண்டால் இல்லறம் இனிக்கும்.

‘ஒரு கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்பவர் குறைந்த பட்சம் அவளுடன் தொடர்ந்து 7 இரவுகள் தங்குவது அவசியம்' என்று சொன்ன நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் 'விதவையைத் திருமணம் செய்கின்றவர் தொடர்ந்து மூன்று இரவுகள் தங்கினாலும் போதும்' என்று சொன்னார்கள்.
கன்னிப் பெண்ணின் நாணம், இளமை போன்ற அம்சங்களை கவனித்து இவ்வாறு கூறியிருப்பதன் ரகசியத்தை உணரும்போது ஒவ்வொரு பெண்ணின் உடற்கூறை அனுசரித்து அவளுடன் இல்லறத்தில் ஈடுபடுவதும், எப்படியானாலும் மனைவியின் உணர்ச்சிக்குத் தக்கபடி இல்லறத்தில் ஈடுபட வேண்டும் என்ற கருத்து தெளிவாகிறதல்லவா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை Empty Re: மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:39

அதற்கும்’ கூடவா நன்மை?

‘நீங்கள் உங்கள் துணைவியருடன் உடலுறவில் ஈடுபட்டால் அதுவும் உங்களுக்கு நற்செயலாகப் பதிவு செய்யப்படுகின்றது’ என்று ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது தோழர்கள் வியப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்டார்கள்.
‘நாயகமே! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு மனிதன் தன் மனோ இச்சையின் காரணமாக நடந்து கொள்ளும் ‘அந்த’ காரியத்துக்கும் நன்மை கிடைக்குமா?’ எப்படி இது சாத்தியமாகும் என்று வினவினார்கள்.

இதற்கு விளக்கமளித்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அன்பர்களே! ஒருவன் தன் மனைவியல்லாத இன்னொருத்தியிடம் இந்த இச்சையைத் தணித்துக் கொள்வது கொடிய பாவம்தானே?’ என்று கேட்க, ‘ஆம்!’ என்று தோழர்கள் சொல்ல, ‘தவறான பாதைக்குச் சென்றுவிடாமல் உரிய முறையில் தன் மனைவியின் மூலம் ‘அந்த’ தேவையைப் பூர்த்தி செய்கின்றபோது அதற்காக நன்மை எழுதப்படுவதில் மட்டும் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?’ என்று கூறியபோது தோழர்கள் அகமகிழ்ந்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமா!

நீதி தேவை

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியருடன் வாழ்கின்ற ஒருவர் தம் மனைவியரிடையே உடலுறவிலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை கடமையாக்கிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் ஒரு மனைவியிடம் ஒரு நாள் என்றால் அடுத்த மனைவியிடம் அடுத்த நாள் தங்க வேண்டும். ஒரு மனைவியிடம் தொடர்ந்து 3 நாள் தங்கினால் அடுத்த மனைவியிடமும் தொடர்ந்து மூன்று நாட்கள் தங்க வேண்டும் என்று வலியுறத்தினார்கள்.
இறைவணக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாக மனைவியை மகிழ்விக்க முடியவில்லை என்று காரணம் கூறித் தப்பிக்கவும் முடியாது. இரவில் சில பகுதியை மட்டுமே இறைவணக்கத்துக்காக ஒதுக்கலாமே தவிர முழு இரவையும் வணக்கத்திலேயே கழித்துவிட அனுமதியில்லை. ஏனெனில் தனது துணைவிக்கு சுகமளிப்பதும் இறைவணக்கத்தின் பாற்பட்டதே என்பதை பின்வரும் செய்தி தெளிவு படுத்துகின்றது.

உலகின் தேவை இல்லாதவர்கள்

ஒரு நாள் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு தம் சகோதரர் அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திப்பதற்காக வந்தார்கள். அப்பொழுது அவர்கள் வீட்டில் இல்லை. அவர்களின் துணைவியார் வரவேற்று அமரச் செய்தபோது அவர்களைப் பார்த்த ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு

திடுக்கிட்டார்கள். காரணம் ஒரு இல்லத்தரசியின் முகத்தில் இருக்க வேண்டிய களை, மகிழ்ச்சி அம்மாதரசியிடம் காணப்படவில்லை. அழுக்கடைந்த ஆடைகளாலும், குழிவிழுந்த கண்களாலும் இவ்வுலகத்தில் ஏன்தான் இன்னும் இருக்கிறோம் என்று எண்ணுவது போன்ற நிலையில் காட்சியளித்தார்கள்.
உடனே அப்பெண்ணிடம் சகோதர வாஞ்சையுடன், ‘ஏன் இப்படி இருக்கிறீர்கள்?’ என்று வினவினார்கள். அதற்கு அந்த மாதரசி ‘உங்கள் சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலக வாழ்க்கையில் எந்த விருப்பமும் தேவையுமில்லை. நான் இப்படி இருந்தால் என்ன?’ என்று பதில் கூறியதும் அதிர்ச்சியுடன் விஷயத்தை ஊகித்துக் கொண்ட ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு

அவர்கள் (அப்படியா? சரி! அவர் வரட்டும் நான் பேசிக் கொள்கிறேன்’ என்று அங்கேயே அமர்ந்து விட்டார்.
இப்பொழுது என்ன நோன்பு?

சற்று நேரம் கழித்து அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். தம் ஆருயிர்ச் சகோதரரைக் கண்டதும் ஆரத்தழுவி அளவளாவியபின் உணவு கொண்டு வைத்து ‘உண்ணுங்கள், நான் நோன்பு வைத்திருக்கிறேன்!’ என்று உபசரித்தார்கள்.

‘இது ரமளான் மாதமல்லவே! இப்பொழுது ஏன் நோன்பு வைத்துள்ளீர்கள்?’ எனக் கேட்க ‘நஃபிலான நோன்புதான்’ என்றார்கள். ‘அப்படியானால் நீங்கள் நோன்பை முறித்துவிட்டு என்னோடு சாப்பிட வெண்டும். இல்லையெனில் நான் சாப்பிட மாட்டேன்’ என்று ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்ல, அவரது வற்புறுத்தலுக்கு இணங்கி நோன்பை விட்டுவிட்டு இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை Empty Re: மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:39

இரவு முழுவதும் இறை வணக்கமா?

அன்று முழுவதும் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஒன்றாக இருந்து அவர்களை கண்காணித்தார்கள். இரவு வந்தது. தம் சகோதரருக்கு படுக்கை விரித்துக் கொடுத்து விட்டு தான் வணங்கப் போவதாக அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னபோது அவரைத் தடுத்து, ‘அபூதர்தாவே! நன்றாகத் தூங்குங்கள்’ என்று கட்டாயப் படுத்தினார்கள் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு.

வேறு வழியின்றி சகோதரரும் படுத்தார். சற்று நேரம் சென்றது. மீண்டும் தொழச் சென்றார்கள். இப்பொழுதும் அவர்களை இவர்கள் விடவில்லை. அவர்கள் எழுந்திருப்பதும் இவர்கள் தடுப்பதுமாக இரவில் பெரும்பகுதி கழிந்து பின்னிரவு (தஹஜ்ஜுத்) நேரம் வந்ததும் ‘வாருங்கள் இப்பொழுது நாம் இருவருமே தொழுவோம். என்று கூறி தொழுகைக்கு தயாரானார்கள்.

தொழுதபின் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு சொன்னார்கள் ‘அபூதர்தாவே! நிச்சயமாக உனது இறைவனுக்காக நீர் வணங்க வேண்டிய கடமை உமக்கு உண்டு. உமது உடம்புக்காக நீர் பராமரிக்க வேண்டிய கடமையும் உண்டு. அதுபோல் உமது குடும்பத்துக்கு – மனைவிக்கு செய்ய வேண்டிய மகத்தான கடமையும் நிச்சயமாக இருக்கிறது. எனவே, ஒவ்வொருவருக்கும் உரிய கடமையையும் உரிமையையும் கொடுத்துத்தான் தீர வேண்டும்’ என அறிவுறுத்தினார்கள்.

அதன் பின் மறுநாள் அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் அழைத்துக் கொண்டு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருச்சமூகம் வந்து நடந்த விபரங்கள் அனைத்தையும் சொன்னார்கள். அதுகேட்டு மகிழ்ந்த திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஆம்! ஸல்மான் சொன்னதே உண்மை’ என்று கூறினார்கள்.

சிரமத்தை ஏன் சகித்துக் கொள்கிறாள்?

இல்லறத்தின் மூலம் ஒரு பெண் அடைகின்ற இன்பத்தின் பரிசாகத் தன் வயிற்றில் குழந்தையைச் சுமக்கிறாள். கருவுற்றிருக்கும் காலத்திலும், குழந்தையைப் பிரசவிக்கும் நேரத்திலும் அவள் அடைகின்ற சிரமங்கள் கொஞ்சமல்ல. எனினும் இந்தச் சிரமங்களை எல்லாம் சகித்துக்கொள்ள அவளைத் தூண்டுவது அவளுக்குக் கணவன் மூலமாகக் கிடைக்கின்ற இல்லற சுகம்கூட ஒரு காரணமாகும். எனவே தன் மனைவியை மகிழ்விக்கச் செய்யும் காரியங்களில் முதன்மையானது அவளுக்குத் தான் அளிக்கின்ற இல்லற இன்பமே என்பதை ஒவ்வொரு கணவனும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பிரிந்து வாழலாமா?

திருமணம் செய்து கொண்ட பிறகு மனைவியைப் பிரிந்து வருடக் கணக்கில் வெளிநாடுகளில் வாழ்வோரும், பல மாதங்களாக வெளியூருக்குச் சென்றுவிடுவோரும் இவ்விஷயத்தில் மனைவிக்கு அநீதி இழைக்கிறார்கள் என்பதே உண்மை.

இஸ்லாமியக் கொள்கையை உலகில் மேலோங்கச் செய்திடும் அறப்போருக்குச் சென்றிருப்போர் கூட குறைந்த பட்சம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தம் இல்லம் திரும்பி வந்து மனைவியுடன் தங்கிச் செல்வதை அமீருல் முஃமினீன் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனைத்து முஸ்லீம் வீரர்களுக்கும் கட்டாயமாக்கியதன் காரணத்தை நாம் மறந்து விடக்கூடாது. மனைவிக்கு பணம் அனுப்புவதும், நகை வாங்கிப் போட்டு அழகு பார்ப்பதும், கோடிக்கணக்கில் சொத்துக்களை அவள் பெயரில் வாங்கிக் குவிப்பதும் மனைவியை மகிழ்விப்பதாகவோ, அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிட்டதாகவோ அர்த்தமாகாது.

தன் தந்தை தாயுடன் வாழ்ந்தபோது உணவு, உறைவிடம், உடை போன்ற தேவைகள் அவளுக்கு நிறைவாகவே இருந்தன. இவற்றுக்காக அவள் நம் இல்லம் தேடி வரவில்லை. அவளுக்கு திருமணம் நடந்திருப்பது இதற்காக அல்ல, இல்லற சுகத்திற்காக மட்டுமே என்பதைப் புரிந்து அந்த விஷயத்தில் அவளை பரிபூரண திருப்தி பெறச் செய்வது கணவன் மீது நீங்கா கடமையன்றோ?

நன்றி நிடுர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை Empty Re: மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum