Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
+19
செய்தாலி
sikkandar_badusha
ஜிப்ரியா
rinos
Atchaya
பர்ஹாத் பாறூக்
பர்வின்
jasmin
அப்துல்லாஹ்
ஹாசிம்
ஹம்னா
நண்பன்
mufees
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
மீனு
யாதுமானவள்
23 posters
Page 7 of 8
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
First topic message reminder :
துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)
அச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)
இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றிநம்மீ துதேனாகக் கொட்டுபேச்சில்
நம்மை யெல்லாம் மகிழ்வித்து மகிழ்கின்ற
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)
சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)
இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)
இனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)
எங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)
எங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டிகளில்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)
யாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)
மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)
சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)
செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)
இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)
காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)
கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் றிநோசும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து மனமொன்றி வாழ்த்துகிறோம்! (23)
செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே ! (24)
அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (25)
அன்புடன்

Last edited by யாதுமானவள் on Sat 20 Aug 2011 - 10:40; edited 5 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
sikkandar_badusha wrote:வாழ்த்துக்கள் மீனு,, நெஜமாவே சந்தோஷமா இருக்கு, இது போல் அடிக்கடி முதலிடம் பெற்று , லதாவை நிறைய கவிதை எழுத வைக்கணும் சரியா,, அப்பப்பா, எவ்ளோ பெரிய வாழ்த்துக்கவிதை, இரண்டு முறை படித்துவிட்டேன், இன்னும் படிப்பேன்,, மீனுவுக்காக நேரம் செலவழித்து அழகான அருமையான கவிதை வடித்த லதாவுக்கு மனமார்ந்த நன்றிகள்,, இன்னும் இது மாதிரி பெரிய கவிதைகள் எழுத வைக்க வேண்டியது மீனுவின் கடமை,,
நன்றி பாதுஷா...
அது என்ன மீனுவின் kadamaiyaa ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
சரி அனுப்புங்க வரட்டும்யாதுமானவள் wrote:தனி மெயில் அனுப்பவா அவருக்கு?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
இரண்டு தடவைதான் படித்த நீங்களே நான் வந்து ம்ம்ம் நினைவில்லை பல முறை படித்து விட்டேன் இன்னும் படிப்பேன் அவ்ளோ அழகிய வரிகள் ஸ்வீட் அக்காsikkandar_badusha wrote:வாழ்த்துக்கள் மீனு,, நெஜமாவே சந்தோஷமா இருக்கு, இது போல் அடிக்கடி முதலிடம் பெற்று , லதாவை நிறைய கவிதை எழுத வைக்கணும் சரியா,, அப்பப்பா, எவ்ளோ பெரிய வாழ்த்துக்கவிதை, இரண்டு முறை படித்துவிட்டேன், இன்னும் படிப்பேன்,, மீனுவுக்காக நேரம் செலவழித்து அழகான அருமையான கவிதை வடித்த லதாவுக்கு மனமார்ந்த நன்றிகள்,, இன்னும் இது மாதிரி பெரிய கவிதைகள் எழுத வைக்க வேண்டியது மீனுவின் கடமை,,
உங்களுக்கும் நன்றி பாதுஷா சார்
மீண்டும் வாங்க நீங்களும் இந்த மாதிரி பாராட்டுக் கவிதை பெறுங்க
முக்கியமாக ஒரு விடயம் டாப் 10ல நீங்கள் முதல் இடம் பிடித்தால் நான் கவிதை எழுதி உங்களுக்கு வாழ்த்துவேன் ஓக்கேவா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
யார் அங்கே அளைத்து வாருங்கள் முனாஸ் அண்ணனையாதுமானவள் wrote:சரி முனாஸ் ஐ கூப்பிடு இங்க... பாட்டுக்கு பாடு பாடசொல்லும்மா ...பாவம் அவர் ஓடியே போய்ட்டார்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ava poyaachu. naalaikku varuvaar .
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ஆமாக்கா போயிட்டார்யாதுமானவள் wrote:ava poyaachu. naalaikku varuvaar .
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு wrote:முனாஸ் சுலைமான் wrote:மீனு ஒன்று தெரியுமா இதுவரையில் யாருக்கும் பதின் மூன்று பக்கம் வாழ்த்து வர வில்லை ஆனால் இந்த மீனுக்குட்டிக்கு பதின் மூன்று பக்கம் முடிந்து விட்டது........மீனு wrote:பாதுஷா சார் அப்பவே வந்தவங்கள் போயிட்டாங்க அவங்களுக்கு லேட்டாகிட்டது செய்தாலிக்கும் லேட்டாகிட்டது அவரும் இன்னும் வரல வரட்டும்யாதுமானவள் wrote:மீனு wrote:உஷ்ஷ் பப்ளிக் பப்பளிக்நண்பன் wrote:ஆமாம் ஜிப்ரியா அக்காவும் தங்கையும் நல்ல புரிந்துணர்வு நானும் வாழ்த்தினேன் எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கும் தனி மடல் வந்ததா ரகசியமாக என் காதில் சொல்லுங்கள் யாருக்கும் கேட்ப்படாதுஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..
naan தான் சொன்னேனே.. என்னைத்தவிர எல்லோருக்கும் மீனு தனிமடல் போட்டிருப்பாள் என்று.,
ஆனால் இப்போது தான் தெரிகிறது ஒருவரை மிஸ் பண்ணி இருக்கல் என்பது. அது பாதுஷா.... சரியா மீனு?
என் மறந்தாய்?
வாழ்த்துக்கள் .
அதான் சொன்னேன் மீனுவா கொக்கா :.”: :.”:
நல்ல வேளை பாறுக் இல்லை :”:
மீனுவா இல்ல கொக்கா எனக்கு இப்பவே தெரிஞ்சாகனும்.... @. @. @. @.
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு சீக்கிரம் ஓடிபோய்டு..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
:”: :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
இந்த பக்கம் அடிக்கடி வரமால் இருந்ததால்
எங்கள் சேனையின் செல்லக்குட்டி மீனு குட்டிக்கு
தோழி யாதுமானவள் அவங்க எழுதிய வாழ்த்துக் கவிதையை
வாசிக்க முடியாமல் போயிடிச்சு
ஒரு குட்டித் தங்கைக்கு
சகோதரியின் வாழ்த்துப் பாட்டு
இயற்றிய வரிகளின் ஒளிர்கிறது
அந்த தங்கையின் உன்னதங்கள்
மீனு கட்டிக்கு ஏற்ற கவிதை
கவிதை இயற்றிய தோழிக்கு நன்றி :!@!:
மீனு இது போல் என்றும் எங்களுடன் இணைத்திருக்க வேண்டும்
அன்பாளன் :flower:

ஹய்யா நான் காத்திட்டே இருந்தேன் கவிஞரே நன்றி நன்றி அக்காவின் அன்பு வரிகள் நீங்கள் பார்க்காமல் போய் விடுவீர்களோ என்று இருந்தேன் எப்படியாவது பார்த்து விட்டீர்கள் எனக்கு சந்தோசம் நன்றி கவியேசெய்தாலி wrote:இந்த பக்கம் அடிக்கடி வரமால் இருந்ததால்
எங்கள் சேனையின் செல்லக்குட்டி மீனு குட்டிக்கு
தோழி யாதுமானவள் அவங்க எழுதிய வாழ்த்துக் கவிதையை
வாசிக்க முடியாமல் போயிடிச்சு
ஒரு குட்டித் தங்கைக்கு
சகோதரியின் வாழ்த்துப் பாட்டு
இயற்றிய வரிகளின் ஒளிர்கிறது
அந்த தங்கையின் உன்னதங்கள்
மீனு கட்டிக்கு ஏற்ற கவிதை
கவிதை இயற்றிய தோழிக்கு நன்றி
மீனு இது போல் என்றும் எங்களுடன் இணைத்திருக்க வேண்டும்
அன்பாளன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனுதான் சில நேரம் கொக்கு கொக்கு என்பது திறமை மீனு என்பது எனது பெயர் புரிஞ்சிதா சார் ஹி ஹிபர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:முனாஸ் சுலைமான் wrote:மீனு ஒன்று தெரியுமா இதுவரையில் யாருக்கும் பதின் மூன்று பக்கம் வாழ்த்து வர வில்லை ஆனால் இந்த மீனுக்குட்டிக்கு பதின் மூன்று பக்கம் முடிந்து விட்டது........மீனு wrote:பாதுஷா சார் அப்பவே வந்தவங்கள் போயிட்டாங்க அவங்களுக்கு லேட்டாகிட்டது செய்தாலிக்கும் லேட்டாகிட்டது அவரும் இன்னும் வரல வரட்டும்யாதுமானவள் wrote:மீனு wrote:உஷ்ஷ் பப்ளிக் பப்பளிக்நண்பன் wrote:ஆமாம் ஜிப்ரியா அக்காவும் தங்கையும் நல்ல புரிந்துணர்வு நானும் வாழ்த்தினேன் எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கும் தனி மடல் வந்ததா ரகசியமாக என் காதில் சொல்லுங்கள் யாருக்கும் கேட்ப்படாதுஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..
naan தான் சொன்னேனே.. என்னைத்தவிர எல்லோருக்கும் மீனு தனிமடல் போட்டிருப்பாள் என்று.,
ஆனால் இப்போது தான் தெரிகிறது ஒருவரை மிஸ் பண்ணி இருக்கல் என்பது. அது பாதுஷா.... சரியா மீனு?
என் மறந்தாய்?
வாழ்த்துக்கள் .
அதான் சொன்னேன் மீனுவா கொக்கா
நல்ல வேளை பாறுக் இல்லை
மீனுவா இல்ல கொக்கா எனக்கு இப்பவே தெரிஞ்சாகனும்....
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
பதினைந்து பக்கமா வெகுவாக விரைவது கண்டு ஆனந்தம்
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா சாதிக் உ என்ற எழுத்தில் தொடங்கலாம்சாதிக் wrote:பதினைந்து பக்கமா வெகுவாக விரைவது கண்டு ஆனந்தம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ஊ..ஊ..ஊ..ஊ....ஊ....ஊ...ஊஉ...ஊ....ஊஉ...ஊஉ...ஊஉ...ஊ.உ...ஊ..மீனு wrote:பாட்டுக்கு பாட்டு பாடுவோமா சாதிக் உ என்ற எழுத்தில் தொடங்கலாம்சாதிக் wrote:பதினைந்து பக்கமா வெகுவாக விரைவது கண்டு ஆனந்தம்
மீனு
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
உ என்ற எழுத்தில் பாடிட்டு அப்றம் ஊக்கு போகலாம்முனாஸ் சுலைமான் wrote:ஊ..ஊ..ஊ..ஊ....ஊ....ஊ...ஊஉ...ஊ....ஊஉ...ஊஉ...ஊஉ...ஊ.உ...ஊ..மீனு wrote:பாட்டுக்கு பாட்டு பாடுவோமா சாதிக் உ என்ற எழுத்தில் தொடங்கலாம்சாதிக் wrote:பதினைந்து பக்கமா வெகுவாக விரைவது கண்டு ஆனந்தம்
மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
சில நாட்களுக்கு முன்பு நான் சேனைக்கு வந்திருந்தால் இந்த 16பக்கங்கள் படிக்க வேண்டி இருந்திருக்காது தனி மடல் படிக்க தாமதமாகி விட்டது மீனு மன்னிச்சிடும்மா அன்பான மீனுவுக்கு அன்பான வாழ்த்து அதிலும் நூறு வரிகள் எழுதியவங்களுக்கும் மீனுவுக்கும் வாழ்த்துக்கள்
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
நிலா wrote:சில நாட்களுக்கு முன்பு நான் சேனைக்கு வந்திருந்தால் இந்த 16பக்கங்கள் படிக்க வேண்டி இருந்திருக்காது தனி மடல் படிக்க தாமதமாகி விட்டது மீனு மன்னிச்சிடும்மா அன்பான மீனுவுக்கு அன்பான வாழ்த்து அதிலும் நூறு வரிகள் எழுதியவங்களுக்கும் மீனுவுக்கும் வாழ்த்துக்கள்
தொடர்ந்திருங்கள் நிலா )((
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
நன்றி அக்கா நான் இப்பதான் பார்த்தேன் சாரிக்கா :+=+: :+=+: :+=+:நிலா wrote:சில நாட்களுக்கு முன்பு நான் சேனைக்கு வந்திருந்தால் இந்த 16பக்கங்கள் படிக்க வேண்டி இருந்திருக்காது தனி மடல் படிக்க தாமதமாகி விட்டது மீனு மன்னிச்சிடும்மா அன்பான மீனுவுக்கு அன்பான வாழ்த்து அதிலும் நூறு வரிகள் எழுதியவங்களுக்கும் மீனுவுக்கும் வாழ்த்துக்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அருமை மீனுமா *_ *_ *_ *_
ஏன் இப்போ யாது அக்கா வருவதெ இல்லை
ஏன் இப்போ யாது அக்கா வருவதெ இல்லை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
வாழ்த்துக்கள் யாதுமானவள் மேடம்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
16 பக்கங்கள் இன்றும் படித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன் ^*பானுஷபானா wrote:அருமை மீனுமா *_ *_ *_ *_
ஏன் இப்போ யாது அக்கா வருவதெ இல்லை
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
எனக்கு வாழ்த்து இல்லையா துறைவன் )*ந.க.துறைவன் wrote:வாழ்த்துக்கள் யாதுமானவள் மேடம்...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
தெரிய வில்லை _*பானுஷபானா wrote:அருமை மீனுமா *_ *_ *_ *_
ஏன் இப்போ யாது அக்கா வருவதெ இல்லை
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு wrote:16 பக்கங்கள் இன்றும் படித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன் ^*பானுஷபானா wrote:அருமை மீனுமா *_ *_ *_ *_
ஏன் இப்போ யாது அக்கா வருவதெ இல்லை
மனப்பாடம் ஆகி இருக்குமே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» முதலிடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா. (சினி துளிகள்!)
» மீனுவுக்கு யார் அடிச்சாங்க?
» மீனுவுக்கு பதில் தெரியலையே ? உங்களுக்கு ?
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» பிறந்த நாளைக் கொண்டாடும் மீனுவுக்கு வாழ்த்துகள்.
» மீனுவுக்கு யார் அடிச்சாங்க?
» மீனுவுக்கு பதில் தெரியலையே ? உங்களுக்கு ?
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» பிறந்த நாளைக் கொண்டாடும் மீனுவுக்கு வாழ்த்துகள்.
Page 7 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum