சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

சீதனக் கொடுமையால் சீரழியும் ரிஸானாக்கள். Khan11

சீதனக் கொடுமையால் சீரழியும் ரிஸானாக்கள்.

4 posters

Go down

சீதனக் கொடுமையால் சீரழியும் ரிஸானாக்கள். Empty சீதனக் கொடுமையால் சீரழியும் ரிஸானாக்கள்.

Post by Muthumohamed Wed 6 Feb 2013 - 7:12

சீதனக் கொடுமையால் சீரழியும் ரிஸானாக்கள்.

ரிஸானா நபீக். சவூதி அரேபியாவில் அவருக்கு ஏற்பட்ட நிலைமை நம்மனைவருக்கும்ஒரு பாடம் எனக் கூறிக் கொண்டிருக்கிறோம். எனினும் அவரின்
துரதிஷ்டவசமான நிலைமையிலிருந்து உண்மையிலேயே படிப்பினை பெற்றுக் கொண்டோமோ
என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் ரிஸானா நபீக்கை நாம் இழந்து ஒரு
மாதமேனும் கடக்காத நிலையில் இன்னுமொரு ரிசானாவின் கதை எங்களை அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது

• நடந்தது என்ன?


2012 01.18 அன்று
புறக்கோட்டை பகுதியிலிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக மருதானை
பிரதேசத்தை நோக்கி விரைந்தது. TZ 8340 எனும் இலக்கத்தைக் கொண்ட அந்த
மோட்டார் சைக்கிள் ஒரு ஆண், இரு பெண்களுடன் பயணிப்பதை அவதானித்த
பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிளை
‘‘டெக்னிக்கல் சந்தி’’ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் நிறுத்துமாறு சைகை
செய்தனர்.

பொலிஸாரின் கட்டளையை மீறி குறித்த மோட்டார் சைக்கிள்
மருதானையை நோக்கி வேகமாக விரைந்தது. சந்தேகம் அதிகரிக்கவே பொலிஸாரும்
குறித்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்தனர். இந்நிலையில் மருதானை
‘‘சினிசிட்டி’’ திரையரங்கத்துக்கு முன்னால் வைத்து ரோந்து சென்ற மருதானை
பொலிஸாரினால் குறித்த மோட்டார் சைக்கிள் மறிக்கப்பட்டது.

ஒரு
ஆணும் இரு இளம் பெண்களும் இருப்பதை அவதானித்த பொலிஸார் ‘‘எங்கு
செல்கிறீர்கள்’’ என குறித்த ஆணிடம் வினவினார். அதற்கு அவர் ‘‘லொட்ஜுக்கு
போகிறோம்.'' என பதிலளித்துள்ளார். எனினும் அதற்கிடையே விரைந்து செயற்பட்ட
பொலிஸார் இரு யுவதிகளையும் நோக்கி கேள்வியைக் கேட்க உண்மை வெளிச்சத்துக்கு
வந்தது. குறித்த இரு யுவதிகளும் தாங்கள் சவூதி அரேபியா பயணிப்பதற்காகவே
இங்கு வந்திருப்பதாக தெரிவித்த நிலையில் அவர்களின் தோற்றமும் வயதும்
சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மேலதிக விசாரணைகளின் பொருட்டு
அவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டன.

• வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்

சரியாக நள்ளிரவு 12.05 மணிக்கு கைது செய்யப்பட்ட இவர்களிடம் மருதானை
குற்றவியல் பொலிஸ் பிரிவின் தலைவர் பொலிஸ் பரிசோதகர் ேஹவாவிதான மற்றும்
பொலிஸ் அதிகாரி கொடித்துவக்கு ஆகியோர் விசாரணைகளை தொடர்ந்தனர். அப்போது
அந்த இரு யுவதிகளும் வெளிநொடொன்றுக்கு பணிப் பெண்களாக செல்வதற்குரிய
வயதெல்லையை பூர்த்தி செய்யாதவர்கள் என்பதும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட
ஆவணங்களின் அடிப்படையிலேயே இவ்விருவரையும் வெளிநாட்டுக்கு அனுப்ப
சம்பந்தப்பட்ட முகவர் முயற்சித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
குற்றத்தின் பாரதூரத்தையடுத்து உடனடியாக இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்டவிதிகளை மீறி வெளிநாட்டுக்கு யுவதிகளை கடந்த
முயன்றார் என்ற குற்றச்சாட்டு முகவர் மீது பதியப்பட்டது.

• யார் இந்த முகவர்?

வெல்லம்பிட்டிய துட்டியாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் முஸம்மில்
மொஹம்மட் ஹுசைன் என்பவரே முகவராக இருந்து செயற்பட்டவர் என பொலிஸார்
சந்தேகிக்கின்றனர். இவர்தான் குறித்த யுவதிகளை மோட்டார் சைக்களில் அழைத்து
வந்துள்ளார். அத்துடன் இந்த சட்டவிரோத செயற்பாட்டில் பெண்ணொருவருக்கும்
தொடர்பிருப்பது விசாரணைகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.


இது தொடர்பில் பொலிஸார் தீர விசாரித்ததில் குறித்த இரு யுவதிகளின்
பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட போலியான அனைத்து ஆவணங்களையும் தயாரித்தவர்
சம்பந்தப்பட்ட பெண்ணே என்பது உறுதியானது. கிண்ணியா 09 சேர்ந்த அலிசாலி
அல்லாபிச்சை பரீதா என்ற குறித்த பெண்ணையும் பொலிஸார் உடனடியாகவே கைது செய்ய
நடவடிக்கை எடுத்தனர்.

• யார் இந்த யுவதிகள்?


சவூதி
அரேபியாவுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாக செல்லும் அவாவில் தவறான வழிநடத்தலின்
பேரில் கொழும்பு வந்த குறித்த யுவதிகள் கிண்ணியா, புதுக்குடியிருப்பு
மாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவரின் பெயர் ரிஸானா, மற்றையவர்
ஜுனூபா. ரிஸானாவுக்கு 18 வயதும் ஜுனூபாவுக்கு 19 வயதுமே ஆகின்றன. அரேபியக்
கனவோடு வந்த அவர்கள் தற்போது எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள
வழக்கு விசாரணைகள் வரையில் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த தினத்தில் இவ்விருவர் தொடர்பிலும்
நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ள வைத்திய அறிக்கை மற்றும் ஏனைய விசாரணைகளின்
அடிப்படையிலேயே அடுத்தகட்ட தீர்மானங்கள் எடுக்கப்படலாம்.

• சவூதி கனவு பிறந்த கதை

ரிஸானா கிண்ணியாவின் புதுக்குடியிருப்பு, மாதிரிக் கிராமத்தில் இலக்கம் 5
இல் வசிப்பவள். சகோதர சகோதரிகள் அனைவரும் திருமணமாகி வேறு இடங்களில்
வசித்து வரும் நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ள தனது தந்தை மற்றும் தாயுடன்
தனது குடிசையில் தனிமையானார் ரிசானா. காட்டுக்குச் சென்று விறகு சேகரித்து
விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் சிறு வருமானத்தில் வாழ்க்கை வண்டியை
ஓட்டும் ரிஸானாவின் குடும்பத்துக்கு சவூதி ஆசையைக் காட்டியது தவறான
ஆவணங்களைத் தயாரித்த அந்தப் பெண்தான்.

திருமண வயதை அடைந்த
நிலையில் சீதனமாக கொடுப்பதற்கு முழுமையான வசதிகளுடன் கூடிய ஒரு வீடும்
மோட்டார் சைக்கிளும் தேவை எனும் நிர்ப்பந்தமும் காணப்படும் அப்பிரதேசத்தில்
தந்தையின் இயலாமையும் குடும்பத்தின் வறுமையும் ரிஸானாவை உபமுகவரின் (தவறான
ஆவணங்களை தயாரித்த பெண்) வலையில் சிக்கவைத்தது. ஜுனூபா, அதே மாதிரிக்
கிராமத்தில் வசிக்கும் இவர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, 10 ஆம் ஆண்டு வரை
மட்டுமே கல்வியை தொடர்ந்த அவர் அதன் பின் கல்வியை தொடர்வது
சாத்தியமற்றதானது.

ஜுனூபாவுக்கு இரு சகோதரர்கள். ஒருவர் 10 ஆம்
தரத்திலும் அடுத்தவர் 3 ஆம் தரத்திலும் கல்வி கற்கின்றனர். இரண்டு அறைகளைக்
கொண்ட கற்களால் அடுக்கப்பட்ட அந்தக் குடிசையில் அடுப்பு எரிவதில் பல
சிக்கல்கள். சுகயீனமான தந்தை, பிறரின் விவசாய நிலங்களில் காவல் செய்வதில்
பல பிரச்சினைகளை எதிர்கொண்டார். கல்யாண வயதில் மகள் வேறு. படிக்கும்
வயதில் இரு தனயன்கள். இவற்றை கருத்திற்கொண்டே உப முகவரின் பேச்சை நம்பி
ஜுனூபா சவூதி செல்ல தயாரானாள்.

• உப முகவரின் ஆசை வார்த்தைகள்

குறித்த இரு யுவதிகளும் சுயவிருப்பின் பேரில் சவூதி அரேபியா செல்ல
முனைந்ததாக கூறப்படுகிற போதிலும் தவறான ஆவணங்களை தயாரித்த உப முகவரான
அல்லாபிச்சை பரீதா என்ற பெண்ணின் ஆசை வார்த்தைகளும் தவறான வழி நடத்தல்களுமே
அதற்குக் காரணமானது. இவ்விரு யுவதிகளின் வீடுகளுக்கும் சென்றுள்ள அவர்
யுவதிகளின் திருமணம் மற்றும் வறுமை நிலை ஆகியவற்றை முன் நிறுத்தியே
அவர்களின் சம்மதத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

• ரிஸானாவின் பெற்றோர்

பொலிஸாரால் ரிஸானா கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்திருந்த அவர்களது
பெற்றோரிடம் இது தொடர்பில் விடிெவள்ளி வினவிய போது ரிஸானாவின் தந்தையான
ஸைனுலாப்தீன் அப்துஸ்ஸலாம் இவ்வாறு தெரிவித்தார். ''எங்கள் வறுமை காரணமாகவே
மகள் வெளிநாடு செல்லும் முடிவை எடுத்தார். எனக்கும் சுகமில்லை. அதனால்
தொடர்ந்து என்னால் காட்டுக்குச் சென்று விறகு பொறுக்கி விற்பனை செய்வதும்
இயலாமல் போகிறது. இக்குடிசையை மாற்றி இரு அறைகளையேனும்
கட்டிக்கொள்வதற்காகவே அவள் வெளிநாடு செல்ல முற்பட்டாள். எனக்கு இப்போது
நோயும் அதிகமாகி விட்டது. எனது பிள்ளையை எப்படியேனும் மீட்டுத்தாருங்கள்
எனக்கு அது போதும்'' என்றார்.

இப்போது வயது குறைந்த பிள்ளைகளை
இப்படி வெளிநாடுகளுக்கு அனுப்புவது தவறல்லவோ என நாம் அவரிடம் வினவினோம்.
எனினும் அது தொடர்பில் அப்பெற்றோர் எதனையும் அறிந்திருக்கவில்லை. அப்படி
எதுவும் எமக்குத் தெரியாது எனக்கூறும் அவர்கள் எவ்வித பிரச்சினையும்
இல்லையென்று கூறியே உப முகவர் தமது மகளை அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர்.
எனினும் யாரோ ஒருவர் தொலைபேசியில் மகளை கைது செய்துள்ளதாக
தெரிவித்ததையடுத்தே தமக்கு மகள் ஆபத்தில் சிக்கியுள்ளது தெரிய வந்ததாக
அப்பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர்.

• ஜுனூபாவின் பெற்றோர்

முஹம்மது தம்பி என்ற ஜுனூபாவின் தந்தையுடனும் தாயுடனும் நாம்
கதைக்கத்தவறவில்லை. உப முகவர் கேட்டதற்கிணங்கவே நாமும் எமது வறுமை மற்றும்
பிள்ளைகளின் கல்வி தொடர்பில் கருத்திற் கொண்டு சம்மதித்தோம். ஜுனூபா தான்
மூத்த பிள்ளை. சகோதரர்களை படிக்க வைக்க வேண்டும் என்றே அவள் சென்றாள். அவளை
கல்யாணம் செய்து கொடுக்கவும் எம்மிடம் வசதியில்லை. இந்நிலையிலேயே உப
முகவரின் வழிநடத்தலின் பேரில் அவள் வெளிநாடு செல்லத் தீர்மானித்தாள். எனது
செலவுக்கு கூட இப்போது என்னிடம் காசு இல்லை. எவ்வளவு செலவானாலும்
பரவாயில்லை. எனது பிள்ளை எனக்கு வேண்டும். வறுமை காரணமாக அவள் 10 ஆம்
ஆண்டுடனேயே படிப்பையும் நிறுத்தி விட்டாள் எங்கள் வறுமை காரணமாகவே அவள்
வெளிநாட்டுக்குச் செல்ல கொழும்பு வந்தாள் என அப்பெற்றோர் தெரிவித்தனர்.

• பொலிஸாரின் விசாரணையும் உப முகவரின் தவறான வழிநடத்தலும்

குறித்த யுவதிகள் இருவரும் கைது செய்யப்பட்ட விபரத்தை உப முகவராக
செயற்பட்டதாகக் கூறப்படும் அம்லாபிச்சைப் பரீதா என்ற பெண்ணே உறவினர்கள்
வாயிலாக அவ் யுவதிகளின் பெற்றோருக்கு அறிவித்துள்ளார். இந்நிலையில் மறுநாள்
(2012.01.19) கொழும்பு விரைந்த குறித்த யுவதிகளின் பெற்றோருக்கு
பொலிஸாரிடம் என்ன கூற வேண்டும் என்பதையும் குறித்த முகவரே சொல்லிக்
கொடுத்திருக்கிறார்.

உங்களது பிள்ளைகளை மீட்க வேண்டுமானால்
பொலிஸாரிடம் தாங்களே அவர்களை கொழும்பில் கொண்டு வந்து விட்டதாகக்
கூறுமாறும் அந்த 'உப முகவர் பெண்' அப்பாவிப் பெற்றோர்களிடம் கூறியதாகவும்
அதன் படியே தாங்கள் பொலிஸாரின் விசாரணைகளில் கூறியதாகவும் குறித்த பெற்றோர்
தெரிவித்தனர். தன்னை காட்டிக்கொடுக்கக் கூடாது என குறித்த பெண் உப முகவர்
தெரிவித்துள்ளதுடன் அவரின் வழிகாட்டலின் பேரிலேயே பெற்றோர் பொலிஸாரிடம்
விசாரணைகளில் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் தங்கள் பிள்ளைகள்
தொடர்பில் முழுப்பொறுப்பையும் ஏற்பதாகக் கூறியே கிண்ணியாவிலிருந்து குறித்த
உப முகவாரல் இந்த யுவதிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

• கிராம சேவகர்...

குறித்த இவ்விரு யுவதிகள் தொடர்பான விடயம் தொடர்பில் கிண்ணியா,
புதுக்குடியிருப்பு மாதிரிக் கிராமத்துக்கு பொறுப்பான கிராம சேவகர்
ரியாஸினை நாங்கள் தொடர்பு கொண்டு வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து நானும் கேள்விப்பட்டேன் திருகோணமலை மாவட்டத்திலும் எமது
பிரதேசத்திலிருந்தே அதிகமான பெண்கள் வெளிநாடு செல்கின்றனர்.இதற்கு வறுமையே
முக்கிய காரணமாகவுள்ளது. தற்போது வெளிநாடு செல்ல முற்பட்ட போது கைது
செய்யப்பட்ட இரு யுவதிகளின் குடும்பங்கள் தொடர்பில் நான் அறிவேன். அவர்கள்
வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்கள் திவிநெகும பயனாளிகளிலும் அவர்கள் இடம்
பிடிக்கிறார்கள் என தெரிவித்தார்.

• பள்ளிவாசல் நிருவாக சபைத் தலைவர்

எமது பள்ளிவாசலின் நிருவாகத்துக்குட்பட்ட பிரதேசத்தில் 253 குடும்பங்கள்
வசிக்கின்றனர். இவ்விரு குடும்பங்கள் தொடர்பிலும் நான் தனிப்பட்ட ரீதியில்
அறிவேன்.இவ்விரு குடும்பங்களும் மிக மோசமான வறுமையால்
பாதிக்கப்பட்டுள்ளவர்கள். ரிஸானா என்ற பிள்ளையின் வீடு ஓலையால் ஆனது. அவளது
சகோதர சகோதரிகள் திருமணமானவர்கள். ஜுனூபாவின் குடும்ப நிலையும்
இப்படித்தான். மிகவும் வறுமைப்பட்டவர்கள். இப்பிரதேசத்தில் வறுமையோடு
சேர்ந்து பல சமூகப்பிரச்சினைகள் உள்ளன. பெரும்பாலும் பெண்களை ஆண்களே
வெளிநாட்டுக்கு அனுப்புகின்றனர். அத்துடன் உப முகவர்களும் அப்பாவிப்
பெற்றோர்களை ஏமாற்றி மூளைச்சலவை செய்து இவ்வாறான நடவடிக்கைகளில்
ஈடுபடுகின்றனர்.

இது ஒரு தனி முஸ்லிம் ஊர் என்ற ரீதியில் இங்கு
ஏற்பட்டுள்ள சமூகப்பிரச்சினைகளையும் வறுமை போன்ற ஏனைய நிலைமைகளையும் போக்க
எமது சமூகத்தின் புத்திஜீவிகளும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையும்
உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என்றார். பெண்களை வெளிநாட்டுக்கு வேலை
வாய்ப்பின் நிமித்தம் அனுப்பும் போது இறுக்கமான நடைமுறைகளை அமுல் செய்ய
அரசு தீர்மானித்த போதும் சட்ட விரோதமான முறையில் வயதினை மாற்றி
போலிஆவணங்களை சமர்பித்து வெளிநாடு செல்வோரின் நிலையிற் மாற்றம்
ஏற்பட்டுள்ளதாக என அறிய முடியவில்லை.

ஒரு ரிஸானாவை இழந்த நாம்
மற்றொரு ரிஸானாவின் இழப்பையாவது தடுத்து நிறுத்துவதற்குரிய காத்திரமான
நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவில்லை. இலங்கையிலிருந்து பணிப்பெண்கள்
அதிகமாக பயணிக்கும் மாவட்டமாக இனம் காணப்பட்டுள்ள திருகோணமலை மாவட்டத்தில்
அதற்குரிய காரணிகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
சட்டங்களை இறுக்கினாலும் தண்டனைகளை அதிகரித்தாலும் இவ்வாறான நிலைமையை
கட்டுப்படுத்த முடியாது என்பதே யதார்த்தமாகும்.

சீதனம் உள்ளிட்ட
சமூகக் கொடுமைகள் ஒழிக்கப்பட்டு வறுமை என்ற கொடுங்கோலனிடமிருந்து விடுதலை
பெறுவதற்கான காத்திரமான திட்டங்கள் நடைமுறைக்குவராத வரை இன்னும் பல
ரிஸானாக்களை நாம் இழக்கப்போவது மட்டும் உறுதி.
.

http-www.vidivelli-lk
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சீதனக் கொடுமையால் சீரழியும் ரிஸானாக்கள். Empty Re: சீதனக் கொடுமையால் சீரழியும் ரிஸானாக்கள்.

Post by ராகவா Wed 6 Feb 2013 - 9:09

நன்றிகள் கோடி நண்பா.. )((
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சீதனக் கொடுமையால் சீரழியும் ரிஸானாக்கள். Empty Re: சீதனக் கொடுமையால் சீரழியும் ரிஸானாக்கள்.

Post by ahmad78 Wed 6 Feb 2013 - 13:14

வறுமைதான் இதற்கு காரணம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சீதனக் கொடுமையால் சீரழியும் ரிஸானாக்கள். Empty Re: சீதனக் கொடுமையால் சீரழியும் ரிஸானாக்கள்.

Post by kalainilaa Wed 6 Feb 2013 - 13:17

@.
ahmad78 wrote:வறுமைதான் இதற்கு காரணம்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சீதனக் கொடுமையால் சீரழியும் ரிஸானாக்கள். Empty Re: சீதனக் கொடுமையால் சீரழியும் ரிஸானாக்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum