சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Khan11

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

+5
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
Nisha
மீனு
ந.க.துறைவன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon 17 Mar 2014 - 7:54

First topic message reminder :

தூக்கமே விழிப்பு{புதுக் கவிதை}
*
தூக்கம் வரவில்லை எனப்
புரண்டுப் புரண்டுப் படுத்தான்.
தூக்காமல் எவ்வளவு நேரந்தான்
விழித்திருப்பதென எழுந்துப் போய்
தண்ணீர்க் குடித்து விட்டு வந்து
படுக்கையில் உட்கார்ந்தான்.
எதையோ யோசித்தவாறு மீண்டும்
படுக்கையில் சாயந்தான்.
*
தூக்கம் வரவில்லை துங்க முயற்சித்தான்
படுத்தவாறே தியானப்
பயிற்சி செய்துப் பார்த்தான்.
தூக்கம் வருவதாகக் காணோம்
மீண்டும் எழுந்துப் போய்
சிறுநீர்க் கழித்து விட்டுவந்துக்
கடிகாரத்தில் நேரம் பார்த்தான்
மணி ஐந்துக் காட்டியது முள்கள்.
*
தூங்க முயற்சிக்காமல் விழித்திருந்தான்
வாசலில் காலிங் பெல் அடிக்கும்
சத்தங் கேட்டுப் போய் கதவைத் திறந்தான்.
எதிரில்,பயணக் களைப்பும்
அசதியுமாய் கலைந்தக் கூந்தலுமாய்
நின்றிருந்தாள். ஊருக்குப் போய்த்
திரும்பி வந்த மனைவி, குழந்தைகள்
அவனுக்குப் பின்னாலேயே நின்று
அவர்களை வரவேற்றதுப் பூனைக் குட்டி…!!
 
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down


ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri 11 Apr 2014 - 7:12

வரவேற்கிறாள் பொம்மைப் பெண்….!! {புதுக்கவிதை}
*
.கல்யாண மண்டபம்
களைக்கட்டியது
வண்ண வண்ண விளக்குகள்
ஜொலித்தன.
*
கைக்கூப்பி வரவேற்கிறாள்
பொம்மைப் பெண்.
ஐஸ் கிரீம்
வாங்கிச் சாப்பிட்டு
ஒழுக ஒழுக நிற்கிறார்கள்
சிறுவர்கள்.
*
முதல் பந்திக்கு
முந்திக் கொள்ள
கேட்டின் அருகில்
ஒரே ஆண்கள் கூட்டம்.
*
பெண்கள் குழு குழுவாக
அமர்ந்துக் கொண்டு
குடும்பப் பிர்சனைகளைக்
கடுகடுத்த முகத்தோடு
பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
*
உறவினர்கள் அருகில்
வரும்போதே போலியாய்ச்
சிரிக்கிறார்கள்.
வரிசையில் நின்று
மாப்பிள்ளை—பெண்ணுக்கு
பரிசுப் பொருள்கள் வழங்கி
விடியோவுக்குப் போஸ்
கொடுக்கிறார்கள்.
*
அன்பான உபசரிப்பு
பந்தியில் விசாரிப்பு
தாம்பூலப் பை அன்பளிப்பு.
*
விருந்துண்டு முடித்தவர்கள் சிலர்
வேகமாக வெளியேறுகிறார்கள்
ஊர் போய் சேர,
*
மண்டபம் கலகலப்பாகத்
தானிருக்குமோ?
முகூர்த்தம் நேரம் வரை…!!.
*
 

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sat 12 Apr 2014 - 6:21

வேலூர் {வெயிலூர்} கோட்டை
*
மன்னர் காலத்து
நினைவுச் சின்னமாய்
உயிர்ப்போடு வாழ்கிறது
வேலூர் கோட்டை.
பார்வையாளர்களைக்
கவர்ந்தச் சுற்றுச் சுவர்கள்
கற்கோட்டை மதில்கள்
கம்பீரமாய் பொலியுடன்
காட்சியளிக்கிறது.
*
பழமை வாய்ந்த
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ
ஆலயங்கள் உள்ளே
மதநல்லிணக்கச் சின்னமாய்
சுற்றுலா பயணிகளுக்கு
சரித்திரங்களைச் சொல்லி
மௌனிக்க வைக்கிறது.
*
வடக்குப்புறம்
முதலைகளில்லாத
குறைந்த நீர் சூழ்ந்த
அகழியில்
கூட்டமாய் மீன்கள்.
கரையோரம் யாருக்காகவோ
காத்திருக்கிறது
சவாரி செல்லாதப்
படகுகள்..
*
தெற்குப் புறம்
அடர்ந்த புதராய் வளர்ந்து
அழகிழந்து நிற்கும்
கோரைப் புற்கள்
பார்வையாளர்களைச்
‘ ச்சூ ‘ கொட்ட வைக்கிறது.
*
காலை நேரங்களில்
கோட்டைவெளியைச் சுற்றி
எல்லா வயதினரும்
நடைப் பயிற்சியில்
உடல் ஆரோக்கியம்
தேடுகிறார்கள்.
*
சிப்பாய் புரட்சியில்
உயிரிழந்தச் சிப்பாய்களின்
எலும்புக்கூடுகள்
புதைந்துள்ள பாதையில்
வானோக்கி நிற்கிறது
வீரத்தியாகிகளின்
நினைவுத் தூண்கள்.
*
ஆண்டுக்கொரு நாள்
சிப்பாய் புரட்சி
வீர வணக்க நாள்
கொண்டாடப்படுகிறது
சம்பிரதாயமாக அரசு…!!
*
 

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 15 Apr 2014 - 7:54

மழை பார்த்து நாளாச்சு…!!
*
அங்கே
மழை பெய்கிறதென்று
சொன்னார்கள்.
இங்கே
சின்னதாய்
துளி மழை கூட
பெய்யவில்லை.
*
மேகங்கள்
ஏமாற்றக் கற்றுக்
கொண்டு விட்டனவோ?
காற்று
மேகங்களைக்
கடத்திச் சென்று
அங்கே
பெய்விக்கிறதோ?
*
மழையைப் பார்த்து
பல நாள்களாச்சு
இன்று
மழை வருமா?
*
 
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by Nisha Tue 15 Apr 2014 - 9:18

முந்தா நாள் திருமண வீடு போய் வந்ததும் , கண்டதும் .....

நேற்று விடுமுறை என  காற்றாட வேலூர்க்கோட்டை போய் வந்தீர்கள் போல..

அன்றாட வாழ்க்கையின்  நாம் சந்திப்பவை பதிவுகளாகுவது  அருமை!

மழை வருமா வராதா வெயில் அத்தனை  சூடாயிருக்கிறதா சார்.. நாங்கல்லாம் வெயில் வராதனனு தவிச்சிட்டிருக்கிறோம்.

உங்கள் கவிதை கண்டு மழை வந்தால் மறக்காமல் மழை குறித்தும் எழுதி விடுங்கள்.

அனைத்து கவிதைகளும் மனதை தொட்டன. தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 15 Apr 2014 - 14:28

பாராட்டுக்கு நன்றி நிசா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Apr 2014 - 15:15

அன்பான உபசரிப்பு
பந்தியில் விசாரிப்பு
தாம்பூலப் பை அன்பளிப்பு.


நல்ல கவிதை அலங்கரிப்பு  *_ 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed 16 Apr 2014 - 7:04

கூழாங்கற்கள்
1.
ஒய்வு
பெற்றவர்கள்
என்று தான்
பெயர்.
அவர்களுக்கு
ஒய்வென்பதே
இல்லை.
ஏதேனுமொரு
வேலையாய்
அலைகிறார்கள்
ஆங்காங்கே…!!
2.
எந்த ஒர்
காதலும்
நிறைவேறாமல்
போவதில்லை
தோல்வியென்றாலும்…
வெற்றியென்றாலும்..!!
*
3.
சுப நிகழ்வுகளிலும்
அசுப நிகழ்வுகளிலும்
நம்மோடு
இணைந்திருப்பது
தொடுக்கப்பட்ட
தொடு்க்கப்படாத
வண்ண வண்ண
அழகிய மலர்கள்
அழகிய மாலைகள்
மலர்கள்
இப்பிரபஞ்த்தின்
உயிர்கள்
*  

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by பானுஷபானா Wed 16 Apr 2014 - 11:23

ந.க.துறைவன் wrote:கூழாங்கற்கள்
1.
ஒய்வு
பெற்றவர்கள்
என்று தான்
பெயர்.
அவர்களுக்கு
ஒய்வென்பதே
இல்லை.
ஏதேனுமொரு
வேலையாய்
அலைகிறார்கள்
ஆங்காங்கே…!!
2.
எந்த ஒர்
காதலும்
நிறைவேறாமல்
போவதில்லை
தோல்வியென்றாலும்…
வெற்றியென்றாலும்..!!
*
3.
சுப நிகழ்வுகளிலும்
அசுப நிகழ்வுகளிலும்
நம்மோடு
இணைந்திருப்பது
தொடுக்கப்பட்ட
தொடு்க்கப்படாத
வண்ண வண்ண
அழகிய மலர்கள்
அழகிய மாலைகள்
மலர்கள்
இப்பிரபஞ்த்தின்
உயிர்கள்
*  

 


 சூப்பர் சூப்பர் 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed 16 Apr 2014 - 13:13

நன்றி பானுஷா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ராகவா Wed 16 Apr 2014 - 13:27

மிக அருமையான கவிகள் ..தொடருங்கள்.........
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed 16 Apr 2014 - 14:23

நன்றி அச்சலா மேடம்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri 18 Apr 2014 - 6:51

பாதை{யில்} உபாதை{ கவிதைக் காட்சி. }
*
நாளும் வளர்கிறது
நகரம்.
அகன்று விரிந்த சாலைகள்
நடைபாதையெல்லாம் கடைகள்
பரபரப்பான வியாபாரம்
எங்கும் மக்கள் கூட்டம்
மிகுந்த நெரிசல், இடிசல்.
*
ஆக்ரமிப்புக் கடைகள்
அகற்றப்படுகின்றன
நடைபாதைகளில்
நெரிசல் குறைந்து
இடிபாடுகளில்லாமல்
போக முடிகிறது.
சற்றே நிம்மதியாய்…
*
மழை நாள்களில்
சாக்கடைக் கழிவுகள்
தேங்கிய பகுதிகளில்
சேறும் சகதியுமாய்…
நிரம்பி வழிகிறது
சரியா? தப்பா?
பாண்டி விளையாடி
நடக்கிறார்கள்
பாதசாரிகள்.
*
மேடும் பள்ளமும்
சாலையின் புண்கள்
ஆறாத ரணங்கள்
கவனமாய்
போகவில்லையெனில்
வாகன விபத்துக்கள்
மனிதர்களின் நெஞ்சைப்
பதற வைக்கிறது
அகால மரணம்
உயிரிழப்புக்கள்.
*

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sat 19 Apr 2014 - 6:05

*
கூழாங்கற்கள் { புதுக்கவிதைகள் }
*
நேசிப்பவர்கள்
எப்பொழுதேனும்
எப்பிரச்சினையாலோ
பிரிந்து விடுகிறார்கள்
எந்தத் தயக்கமு மின்றி
பிரிந்தவர்கள்
எப்பொழுதேனும்
சந்திக்க நேர்கையில்
பேசிக்
கொள்பவர்களும் உண்டு.
பேசாமல்
முகத்தைத் திருப்பிக்
கொள்வாரும் உண்டு.
நேசிப்பது உறவு
பிரிவது துறவு.
 
2
நேசிப்பவர்கள்
இருவருமே
நேர்மையாகவே
நேசிக்கிறார்கள்
நேசிப்பவர்களுக்குள் தான்
எப்படியோ?
அந்த நேசிப்பில்
முரண் வந்து
முன் நிற்கிறது
முரண்களில்
முகிழ்வது தான்
காதலோ?.
3.
குழந்தைகளின்
நேசிப்பில்
எந்தக் கல்மிஷமும்
இருப்பதில்லை.
கூளமாய் மண்டிக்
கடக்கிறது
மனிதர்களின்
நேசிப்பில்
ஆயிரமாயிரம்
கல்மிஷங்கள்…!!

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed 23 Apr 2014 - 7:08

கூழாங்கற்கள்
*
1.
அருகில் எவரும் இல்லை
கண்கள் மூடியிருந்தார்
கண்கள்
திறந்துப் பார்த்தார்
அருகில் எவரும் இல்லை.!!.
*
2
கண்டிப்பாக இன்று
வருவதாகத்தான்
சொன்னார்.
கண்டிப்பாக
வருவாறென்று தான்
காத்திருக்கிறேன்.
கண்டிப்பாக
வருகிறேனென்று
சொன்னவர்
வரவேயில்லை
கண்டிப்பாக…!!.
3.
நண்பரைத் தேடி
அவர் வீட்டற்குச் சென்றேன்.
கேட்டிலிருந்த நாய்
அன்னியரென்று
என்னைப் பார்த்து
பலமாய் குரைத்தது.
நாய் குரைத்தலின்
குரல் கேட்டு
வெளியில் வந்த
நண்பர் சொன்னார்.
“ டேய், போடா
நம்ம சாருடா ” என்றார்.
சட்டென்று குரைப்பதை
நிறுத்தியது நாய்..!!
***
.

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by பானுஷபானா Wed 23 Apr 2014 - 10:06

நண்பரைத் தேடி அவர் வீட்டற்குச் சென்றேன். கேட்டிலிருந்த நாய் அன்னியரென்று என்னைப் பார்த்து பலமாய் குரைத்தது. நாய் குரைத்தலின் குரல் கேட்டு வெளியில் வந்த நண்பர் சொன்னார். “ டேய், போடா நம்ம சாருடா ” என்றார். சட்டென்று குரைப்பதை நிறுத்தியது நாய்..!! அதிர்ச்சி* wrote:

 *_ *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by Nisha Wed 23 Apr 2014 - 12:36

நேசிப்பது உறவு.. பிரிப்பது துறவு

டேய் போடா நம்ம சாருடா..

நல்ல சொல்லாடல். வித்தியாசமாய் சிந்திக்கின்றீர்கள்.. நிஜமாகவே உங்கள் வாழ்வில் நடப்பவைதான் கவிதையாகின்றதா சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed 23 Apr 2014 - 14:12

பாராட்டுக்கு நன்றி நிசா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 15:13

பழக்கமானது உறவுகள் தான் இருந்தும் சில உறவுகள் பழக்கமில்லாமல் 
இருப்பது தான் கவலை .....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu 24 Apr 2014 - 6:45

பாராட்டுக்கு மிக்க நன்றி பாலமுனை...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 29 Apr 2014 - 6:36

பயந்திருக்குமோ மரம்…? { புதுக்கவிதை }.
*
மரத்தை
வெட்டிக் கொண்டிருந்தார்கள்
அருகிலிருந்த மரம்
எந்த அசைவுமின்றி
மௌனமாகக் கொஞ்ச நேரம்
பார்த்துக் கொண்டிருந்தது.
என்றேனு மொரு நாள்
நமக்கும்
இந்த கதி தானோ? என்று
சிந்தித்திருக்குமோ?
என்னவோ அப்பொழுது
மரத்தை
வெட்டியவர்கள்
அதனருகில் வந்து
நின்றனர்.
மரம் பயந்திருக்கும் ?
*

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Apr 2014 - 7:25

ந.க.துறைவன் wrote:பயந்திருக்குமோ மரம்…? { புதுக்கவிதை }.
*
மரத்தை
வெட்டிக் கொண்டிருந்தார்கள்
அருகிலிருந்த மரம்
எந்த அசைவுமின்றி
மௌனமாகக் கொஞ்ச நேரம்
பார்த்துக் கொண்டிருந்தது.
என்றேனு மொரு நாள்
நமக்கும்
இந்த கதி தானோ? என்று
சிந்தித்திருக்குமோ?
என்னவோ அப்பொழுது
மரத்தை
வெட்டியவர்கள்
அதனருகில் வந்து
நின்றனர்.
மரம் பயந்திருக்கும் ?
*

 
பல அர்த்தங்கள் பேசிநிற்கிறது வரிகள் பாராட்டுகள்


ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by rammalar Tue 29 Apr 2014 - 7:55

*_  *_ 
ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Morning-sun-3
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 29 Apr 2014 - 13:55

பாராட்டுக்கு மிக்க நன்றி ராம்மலர்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 29 Apr 2014 - 13:56

பாராட்டுக்கு நன்றி ஹாசிம்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri 2 May 2014 - 6:11

*
பிரிவு { புதுக்கவிதை }
*
ஒரு தொட்டியில்
இரு செடிகள்
பூத்துக் குலுங்கி
இணைந்திருந்தது.
யார் கண்பட்டதோ?
ஒரு நாள் பார்த்த போது
தனித்தனி தொட்டிகளில்
பிரித்துத் தள்ளி
வைக்கப்பட்டிருந்தது.
சில நாட்களில்,
அதற்கென்ன
வருத்தமோ துவண்டு
வாடி வதங்கிப்
பட்டுப் போய்விட்டது
அந்தப்

அழகானப் பூச்செடிகள்
***.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் - Page 2 Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum