சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Khan11

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

+7
rinos
கவிதை ரசிகன்
ராகவா
kalainilaa
நண்பன்
rammalar
கவிப்புயல் இனியவன்
11 posters

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Jul 2014 - 11:01

First topic message reminder :

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Xmcjh_204797

பெண்ணே நீ யார் ....?
-------------------------------

என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய 
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில் 
அழகியா ..?

எனக்காகவே இறைவனால் 
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து 
துடிக்குதடி -மனசு 
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

Last edited by கே.இனியவன் on Thu 30 Oct 2014 - 17:46; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue 14 Apr 2015 - 7:48

இரக்கமே அற்றது காதல் ...

காதல் வேட்கை ...
இரக்கமே அற்றது ....
என்னை நினைக்காமல் ...
உன்னை நினைக்க வைக்கிறது ....!!!

நிம்மதியாய் ...
தூங்கும் நள்ளிரவில் கூட ..
உன் நினைவால் வதைத்து ..
கொல்கிறது...
+
குறள் 1252
+
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை 
யாமத்தும் ஆளும் தொழில்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 172
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue 14 Apr 2015 - 8:02

காதல் செய்யாமல் இருக்க ....!!!

அடக்க முடியாது ....
நமக்கு வரும் தும்மலை ....
இருக்கும் இடத்தையும் ..
பார்க்காமல் தும்மிவிடுகிறோம்....!!!

காதலும் அவ்வாறே ....
இயன்றவரை மறைத்து ...
பார்கிறேன் முடியவில்லை ..
உயிரே இதற்கு மேல் ...
காதல் செய்யாமல் இருக்க ....!!!
+
குறள் 1253
+
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் 
தும்மல்போல் தோன்றி விடும்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 173
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue 14 Apr 2015 - 8:12

ஊர் முழுக்க பரகசியமானதே ...!!!

என்னைவிட மன உறுதி ...
யாருக்கு வரும் என்று ...
கர்வத்தில் இதுவரை ...
வாழ்ந்தேன் .....!!!

எல்லாமே 
பொய்யாய் போனது உயிரே ...
உன்னை கண்ட நொடியில் ...
தோன்றிய காதலால் ...
ஊர் முழுக்க பரகசியமானதே ...!!!
+
குறள் 1254
+
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் 
மறையிறந்து மன்று படும்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 174
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by நண்பன் Tue 14 Apr 2015 - 8:13

கவிப்புயல் இனியவன் wrote:இரக்கமே அற்றது காதல் ...

காதல் வேட்கை ...
இரக்கமே அற்றது ....
என்னை நினைக்காமல் ...
உன்னை நினைக்க வைக்கிறது ....!!!

நிம்மதியாய் ...
தூங்கும் நள்ளிரவில் கூட ..
உன் நினைவால் வதைத்து ..
கொல்கிறது...
+
குறள் 1252
+
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை 
யாமத்தும் ஆளும் தொழில்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 172
உண்மை உண்மை
என்னை நினைக்காமல்
உன்னை நினைக்கிறேன்
உண்ணும் போதும்
உறங்கும் போதும்
உன்னைப் பற்றிய எண்ணங்களுக்கும்
நினைவுகளுக்கும் குறைவே இல்லை
என்மேல் இரக்கமற்ற காதல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue 14 Apr 2015 - 8:24

என்னை பிரிந்து சென்றவனே ....

என்னை பிரிந்து சென்றவனே ....
நீர் பிரிந்து செல்லும் போது ....
காதல் வேட்கையை கொண்டு ...
செல்லாது விட்டால் காதல் வலி ..
உமக்கு புரியும் ....!!!

காதல் வேட்கையோடு ...
நீரும் சென்றால் என் வலி ..
உமக்கு புரியபோவதே..
இல்லை என்பது உண்மை ...!!!
+
குறள் 1255
+
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் 
உற்றார் அறிவதொன்று அன்று.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 175
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu 28 May 2015 - 5:27

காதல் கொடிய நோய் தானே ....!!!

வெறுத்து 
நீர் பிரிந்து சென்றாலும் ...
எனக்கு வேதனை தர ....
நீர் பிரிந்து சென்றாலும் ....
என் மனம் உம்மையே ...
நாடுகிறதே.....!!!

என்னதான் நீர் 
துன்பம் தந்தாலும் ...
உம்மையே சுற்றி சுற்றி ....
வரும் இந்த காதல் ....
கொடிய நோய் தானே ....!!!

குறள் 1256
+
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ 
எற்றென்னை உற்ற துயர்.

+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 176
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu 28 May 2015 - 5:38

என்னையே மறக்கவைகிறது ....!!!

என்னவனே ...
என் இதயம் நிறைந்தவனே ....
உன் மீது கொண்ட காதல் ...
என்னையே மறக்கவைகிறது ....!!!

நீர் நினைப்பதையும் ....
நீர் நினைக்காததையும் ....
செய்கிறேன் - நாணம் 
ஒன்றையே இப்போ ...
என்னில் காணவில்லையே ....!!!
+
குறள் 1257
+
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் 
பேணியார் பெட்ப செயின்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 177
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu 28 May 2015 - 5:51

மன அடக்ககோட்டையை உடைத்தவனே

என் 
மன அடக்ககோட்டையை ....
உடைத்தவனே ....
மன அடக்ககோட்டையை இப்போ ...
பஞ்சு கோட்டையனதே....!!!

ஏய் கள்வனே ....
என்னை மயக்கும் பொய் ...
உரைத்தவனே ....
பொய்யிலும் ஒரு இனிமை ...
இருக்குதானடா .....!!!
+
குறள் 1258
+
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் 
பெண்மை உடைக்கும் படை.

+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 178
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu 28 May 2015 - 5:59

நாணத்தால் விலகினேன் ...

என்னவனே ...
உன்னருகில் வந்தேன் ...
நாணத்தால் விலகினேன் ...
முடியவில்லை என்னவனே ...
ஊடலை மறைக்க .....!!!

நான் 
விலகினாலும் -என் 
மனம் அவரோடு ஊடல் ...
கொண்டு விட்டதே ...
இனி எப்படி என்னால் ...
தடுக்க முடியும் ...?
+
குறள் 1259
+
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் 
கலத்தல் உறுவது கண்டு.

+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 179
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu 28 May 2015 - 6:11

எதுவுமே நடக்காததுபோல் ....

நெருப்பில் விழுந்த ....
நெய் போல் உருகுதே ...
என் மனம் உயிரே ....!!!

நீ கூடவும் ..
நான் ஊடவும்....
நடக்கும் திருவிழாவில் ...
எல்லாம் முடிந்தபின் ...
எதுவுமே நடக்காததுபோல் ....
மனம் நினைக்குமோ ....?
+
குறள் 1260
+
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ 
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 180
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue 9 Jun 2015 - 13:55

என்னவனே நீ வரும் ....

என்னவனே நீ வரும் ....
நாட்களை சுவரில் ....
கீறி கீறி என் விரல்கள் ....
தேய்ந்து விட்டன ....!!!

தினமும் ...
உன்னை தேடி தேடி ...
ஓடி ஓடி பார்த்து....
என் பார்வைகளும் ....
மங்கிகொண்டு வருகின்றன ....!!!

+
குறள் 1261
+
அவர்வயின்விதும்பல்
+
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற 
நாளொற்றித் தேய்ந்த விரல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 181
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue 9 Jun 2015 - 14:08

மறந்தால் வாழ்ந்திடுவேனோ....?

சூரிய ஒளி கொண்டவனே .....
எண்ணங்களை மறந்திடுவேனோ ....
மறந்தால் வாழ்ந்திடுவேனோ....?

உன் நினைவால் ...
என் உடல் மெலிகிறது ....
கைகள் தேய்கின்றன ....
என் அழகும் குறைகிறது ....
நீ வரும் வரை ....
உன் நினைவு ஒன்றுதான் ...
அழகை காப்பாற்றுகிறது ...!!!
+
குறள் 1262
+
அவர்வயின்விதும்பல்
+
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் 
கலங்கழியும் காரிகை நீத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 182
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 5:14

இவள் காத்திருப்பாள் ....!!!

என்னவனே ....
வெற்றிதான் முக்கியம் ....
என் இன்பத்தை நுகராது ....
என் துணையை விரும்பாது ...
சென்றவனே .....!!!

உன் விருப்பமே என் ...
விருப்பம் - உன் வெற்றியே ..
என்றும் நம் வெற்றி ...
நீ எதையும் இழந்திடாதே ...
நீ வரும் வரை ...
இவள் காத்திருப்பாள் ....!!!
+
குறள் 1263
+
அவர்வயின்விதும்பல்
+
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் 
வரல்நசைஇ இன்னும் உளேன்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 183
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 5:32

மிகுந்த காதலுடன் வருவீர் ....!!!

என்னனவே ....
என்னை பிரிந்து சென்றவனே ....
மீண்டும் வருவதை என் மனம் ....
நினைக்கும் துள்ளிக்குதிக்கிறது ...
மிகுந்த காதலுடன் வருவீரே....!!!

எந்த 
நாளை எண்ணிபார்கையில்....
இதயம் வருத்தத்தை விட்டு ...
மனதில் இன்ப கிளைகளை ....
வளர்க்கிறது என் உயிரே ....!!! 
+
குறள் 1264
+
அவர்வயின்விதும்பல்
+
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் 
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 184
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 5:42

கண்களே காத்திருங்கள் ....!!!

கண்களே ...
உங்கள் பணி என்னவனை ...
பார்ப்பதற்காக இருப்பதே ....
எத்துணை துன்பம் வந்தாலும் ...
விழித்திருங்கள் என்னவன் ....
வருவான் .....!!!

என் கண்கள் ...
என்னவனை கண்டதும் ....
மெலிந்த உடலும் தோலும் ...
பொழிவுபெரும்....
கண்களே காத்திருங்கள் ....!!!
+
குறள் 1265
+
அவர்வயின்விதும்பல்
+
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் 
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 185
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Jun 2015 - 7:34

துன்பங்களை துடைப்பான் ...!!!

என்னவன் என்னிடம் ...
என்றோ ஒருநாள் வருவான் ....
துன்பங்களை துடைப்பான் ...!!!

என்னிடம் இருக்கும் ...
அனைத்து துன்பங்களையும் ...
என்னவன் மீது கொட்டி ....
தீர்த்து அனுபவிப்பேன் ....
அத்தனை இன்பத்தை ....
பெறுவேன் ....!!!
+
குறள் 1266
+
அவர்வயின்விதும்பல்
+
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் 
பைதல்நோய் எல்லாம் கெட.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 186
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Jun 2015 - 7:56

துடித்துகொண்டிருக்கிறேன் ...!!!

என் கண்ணாலனே ....
நீ வந்தால் என்செய்வேன் ..?
ஊடல் செய்வோனோ...?
கூடல் செய்வேனோ ...?
இரண்டும் செய்வேனோ ...?

அத்துணை துன்பத்தை ...
அனுபவிக்கும் நான் ....
உன் வரவுக்காய் ....
துடித்துகொண்டிருக்கிறேன் ...!!!
+
குறள் 1267
+
அவர்வயின்விதும்பல்
+
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் 
கண்அன்ன கேளிர் விரன்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 187
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Jun 2015 - 8:05

மனசே பொறுத்திரு ....!!!

பொறுத்திருப்போம் ...
போரில் வெல்வோம் ...
நாட்டை காப்போம் ....
பொறுத்திருப்போம் .....!!!

நானும் 
என் துணைவியும் ....
மாலைபொழுதில் ...
விருந்துண்போம் 
மனசே பொறுத்திரு ....!!!
+
குறள் 1268
+
அவர்வயின்விதும்பல்
+
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து 
மாலை அயர்கம் விருந்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 188
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Jun 2015 - 8:16

துடிப்பாய் உயிரே ....!!!

என்னவளே ...
நீ படும் துயரம் அறிவேன் ....
உன்னைவிட்டு பிரிந்திருக்கும் ..
எனக்கு புரிகிறது ....!!!

என்னை விட்டு ...
பிரிந்திருக்கும் பெண்ணே ....
ஒவ்வொரு நொடியும் ..
உனக்கு ஒவ்வொரு மணித்துளி ...
நாட்கள் ஒவ்வொன்றும் ....
வருடமாய் துடிப்பாய் உயிரே ....!!!
+
குறள் 1269
+
அவர்வயின்விதும்பல்
+
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் 
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 189
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Jun 2015 - 8:24

என்னவள் ...
என்னை நினைத்து ...
வருந்தி வருந்தி 
ஏதேனும் அவளுக்கு ...
நடந்துவிட்டால் ....?

அவளுக்கு நான் எதற்கு ..?
என் அன்பு எதற்கு ...?
உடலோடு கலப்பு எதற்கு ...?
அத்தனையும் பூச்சியமாகி ....
விடுமே என் மனமே ....!!!
+
குறள் 1270
+
அவர்வயின்விதும்பல்
+
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் 
உள்ளம் உடைந்துக்கக் கால்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 190
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 1 Jul 2015 - 17:15

எனக்கு புரியுமடி ....!!!

என்னவளே ...
உன் விருப்பத்தை ....
சொல்லாமல் இருந்தாலும் ....
சொல்ல மறுத்தாலும் ...
எனக்கு புரியுமடி ....!!!

உன்னையும் தாண்டி ....
கருவிழி கண்கள் ....
மனதினுள் இருப்பதை ....
சொல்லிக்கொண்டே ....
இருக்குதடி .....!!!
+
குறள் 1270
+
குறிப்பறிவுறுத்தல் 
+
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் 
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 191
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 1 Jul 2015 - 17:29

கருவிழி அழகியே ...

கண் அழகியே ....
கருவிழி அழகியே ...
சந்தன கலரில் ...
மூங்கில்போல் ....
தோள் அழகியே .....!!!

அத்தனை அழகையும் ....
அற்புதமாய் கொண்டவளே ....
உன் பெண்மை நிறைந்த ...
அழகோ அழகு ....!!!
+
குறள் 1272
+
குறிப்பறிவுறுத்தல் 
+
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் 
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 192
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 1 Jul 2015 - 17:42

அழகை நான் உணர்வேன் ....!!!

முத்துமணியால்....
மறைந்திருக்கும் நூல்போல் ....
என்னவளே உன் அழகு ....
மறைதிருக்குதடி ....!!!

என்னதான் ....
அழகை நீ மறைத்தாலும் ....
உன்னில் மறைந்திருக்கும் ...
அழகை நான் உணர்வேன் ....!!!
+
குறள் 1273
+
குறிப்பறிவுறுத்தல் 
+
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை 
அணியில் திகழ்வதொன்று உண்டு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 193
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 1 Jul 2015 - 17:52

நீ ஒருநொடி புன்னகை ...

மொட்டுக்குள் ....
மறைந்திருக்கும் ...
நறு மணம் போல் ....
என்னவளுக்குள்....
மறைந்திருக்கும் ...
அழகோ அழகு .....!!!

புன்னகை அரசியே ....
நீ ஒருநொடி புன்னகை ...
புரிந்தால் போதுமடி ....
என் நினைவோடு நீ ....
வாழும் அழகை ரசிக்க ....!!!

+
குறள் 1274
+
குறிப்பறிவுறுத்தல் 
+
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை 
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 194
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 1 Jul 2015 - 18:08

என் துயர் தீர்க்கும் ...

கை நிறைய வளையலும் ....
கழுத்து நிறைய மாலையும் ....
வண்ண மிகு அணிகலன்களும் ....
என்னவனை 
வண்ணமயமாக்குகிறது .....!!!

இத்தனை அழகையும் ...
கொண்டவளே உன் ...
கள்ளத்தனமான குறும்பு ....
பார்வை என் துயர் தீர்க்கும் ...
மருந்தல்லவோ ....!!!
+
குறள் 1275
+
குறிப்பறிவுறுத்தல் 
+
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் 
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 195
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 10 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum