சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Khan11

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 12:38

ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்
உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்
தண்டனை விவரத்தை 3 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி
ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றம் என்றும் தகவல்
ஜெயலலிதாவுக்கான தண்டனை விவரம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பு
https://www.facebook.com/tamilnewsbbc

 இந்த செய்தி எத்தனை வீதம் உண்மை?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 12:39

ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு

பட்டாசு வெடித்துக் கொண்டாடக்கூடாது என தொண்டர்களுக்கு கருணாநிதி உத்தரவு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 12:40

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதாக ஜெயலலிதாவின் வக்கீல் தெரிவித்த சில நிமிடங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டிருப்பதாக தகவல்ள் கூறுகின்றன.
மேலும் பல பகுதிளில் அரசு கேபிளும் கூட கட்டாகியுள்ளது. தனியார் கேபிள்களிலும் கூட சானல்கள் தெரியவில்லை என்கிறார்கள். எனவே ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு இருக்கப் போவதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சேலம் ,கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மின்வெட்டு காணப்படுகிறது. பல பகுதிகளில் அரசு கேபிள் ஒளிபரப்பு இல்லை. டிவிகளில் சானல்கள் எதுவும் தெரியவில்லை.

இவை அனைத்தும் பெங்களூர் கோர்ட்டில் உள்ள ஜெயலலிதாவின் வக்கீல் திவாகர், தீர்ப்பு தள்ளிப் போவதாக கூறிய பின்னர் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 12:49

தீர்ப்பு மதியம் 1 மணியளவில் வெளிவரும் என தகவல்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அஹ்ரகார கோர்ட் வளாகத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக இன்று காலை 8.30 மணியளவில் சென்னையில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டு சென்றார். தனி நிதிமன்ற நீதிபதி டி.ஹுன்கா இந்த தீர்ப்பை வழங்குகிறார்.

தீர்ப்பை அறிய பரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,.தொண்டர்கள் குவிந்துள்ளனர்.இந்த நிலையில், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஒரு மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.தீர்ப்பு 1 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்ததாக ஜெயலலிதா தரப்பு வக்கீல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தீர்ப்பு வெளியாவதையொட்டி கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 12:54

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ததாக கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு விசாரணையை சென்னையில் அமைக்கப்பட்ட தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது.

கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா முன்னிலையில் இறுதி வாதத்தை முதலில் தொடங்கிய ஜெயலலிதாவின் வக்கீல் குமார், 25 நாட்கள் வாதாடி பல்வேறு முக்கியமான தகவல்களை,விவரங்களை எடுத்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து சசிகலாவின் வக்கீல் மணிசங்கர் 9 நாட்களும், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல் அமித் தேசாய் 8 நாட்களும் வாதிட்டனர். அரசு வக்கீல் பவானிசிங் 9 நாட்கள் வாதிட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந் தேதியுடன் இறுதி வாதம் நிறைவடைந்ததை அடுத்து செப்டம்பர் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா அறிவித்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில் பாதுகாப்பு கருதி தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா வழக்கு ஆவணங்களை மாற்றம் செய்யவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும்
வசதியாக காலஅவகாசம் தேவைப்பட்டதால் வழக்கின் தீர்ப்பை 27-ந் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா “இசட்-பிளஸ்” பாதுகாப்பு பிரிவில் இருக்கிறார். எனவே அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் புறப்பட்டு பெங்களூர் சென்றார்.

காலை 9.50 மணியளவில் இவ்வழக்கின் தீர்ப்பை வழங்கவுள்ள நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட் வளாகத்தை வந்தடைந்தார்.
சுமார் 10 மணியளவில் பெங்களூர் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் ஜெயலலிதாவின் தனி விமானம் தரை இறங்கியது. அவரை தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து கார் மூலம் ஓசூர் நெடுஞ்சாலை வழியாக தனிக்கோர்ட்டுக்கு அவர் சென்றார்.

தனிக்கோர்ட்டு அமைந்துள்ள பகுதியில் சுமார் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தனிக்கோர்ட்டை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதிக்குள் வாகனங்கள் எதுவும்
அனுமதிக்கப்படவில்லை. செல்போன் சேவைகளும் சில மணி நேரத்துக்கு முடக்கப்பட்டிருந்தது

பெங்களூர் நகரத்துக்குள் தமிழகப் பதிவு எண்களை கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.மேலும் பெங்களூர் நீதிமன்றத்தையொட்டிய சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தனிக்கோர்ட்டு அமைந்துள்ள கட்டிடப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை போலீஸ்கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டிருந்தன. அப்பகுதியில் உள்ள கடைகள் காலையில் இருந்தே திறக்கப்படவில்லை.

சுமார் 11 மணியளவில் நீதிபதியின் முன்னர் ஜெயலலிதா ஆஜர் ஆனார். பரபரப்பு வாய்ந்த இவ்வழக்கின் தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. போலீசாரால்அனுமதிக்கப்படிருந்த பகுதியில் தேசிய ஊடகங்களைச் சேர்ந்த ஏராளமான நிருபர்கள், கேமரா, மைக் சகிதமாக பரபரப்பாக காத்திருந்தனர்.

ஜெயலலிதாவுடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் நீதிபதியின் முன்னர் ஆஜராகினர். சுமார் 11 மணியளவில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா,தீர்ப்பை வாசிக்க தொடங்கியதாக தகவல் வெளியானது. சுமார் 12 மணியளவில் கோர்ட் அறையில் இருந்து வெளியே வந்த சில வக்கீல்கள் இவ்வழக்கின் தீர்ப்பு பிற்பகல் 1 மணிக்கு பின்னர் வெளியாகும் என்று தெரிவித்தனர்.

பிற்பகல் சுமார் 2.15 மணிக்கு தீர்ப்பளித்த ஜெயலலிதா உள்பட குற்றவாளி என அறிவித்தார். இந்த தீர்ப்பயடுத்து, தமிழக முதல்வர் பதவியில் இருந்து அவர் விலக நேரிடும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilnewsbbc.com

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by பானுஷபானா Sat 27 Sep 2014 - 13:03

இங்க ஒரே கலவரமா இருக்கு எங்க ஆஃபிச மூடிட்டு உள்ளே இருக்கோம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 13:07

பானுஷபானா wrote:இங்க ஒரே கலவரமா இருக்கு எங்க ஆஃபிச மூடிட்டு உள்ளே இருக்கோம்

செய்தி 100 வீதம் நிஜம் தானாம்! கவனமாக இருங்கள்.. பையனையும் பெண்ணையும் பத்திரமாக  இருக்க சொல்லுங்கள்.  இப்படி எனில் எப்படி வீட்டுக்கு செல்வீர்கள் பானு! 

பவர் கட்டானாலும் ஆகலாம் என்கின்றார்கள். பத்திரம் பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by பானுஷபானா Sat 27 Sep 2014 - 13:09

இதோ வீட்டுக்கு கெளம்பீட்டேன் நிஷா

இன்னைக்குனு என் பையன் இண்ட்ரவ்யூ போனான் இன்னும் வீட்டுக்கு போகலனு சொல்றான் .
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by நண்பன் Sat 27 Sep 2014 - 15:20

ஏகப்பட்ட சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள் கருமம் என்னதான் செய்யப்போகிறாங்களோ தெரியல சாகப்போற நேரத்தில்...!

பண வசதி இல்லாமல் படிப்பை தொடர முடியாமல் தமிழ் நாட்டில் லட்சக்கணக்கில் மாணவர்கள் உள்ளார்கள் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும் இந்நேரும் தமிழ் நாடு எங்கயோ போயிருக்கும் இந்த அம்மாக்கு பண வெறி

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Jayalalitha-sasikala111

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by நண்பன் Sat 27 Sep 2014 - 15:26

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை! 100 கோடி ரூபாய் அபராதம்! பெங்களூரு சிறப்பு கோர்ட் தீர்ப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என, இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு கோர்ட் சனிக்கிழமை (27.09.2014) தீர்ப்பு வழங்கி உள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹார கோர்ட் வளாகத்தில், நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா இந்த தீர்ப்பை வாசித்தார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கான தண்டனை பிற்பகல் அறிவிக்கப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 16:44

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை 1601036_858593487508602_3590254652258152314_n
ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பு- காஞ்சிபுரம் அருகே அரசு பஸ்ஸை தீ வைத்து எரித்த அதிமுகவினர்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by நண்பன் Sat 27 Sep 2014 - 18:48

இது என்ன மடத்தனமான வேலை !* !*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 19:12

அவர்கள் ஆட்சியில் அவர்கள் சொத்தான பேருந்தை எரிப்பதும் தானே கஷ்டப்பட்டு கட்டி குடியிருக்கும் வீட்டை எரிப்பதும் ஒன்றுதான் என என்றுதான் புரிந்து கொள்வார்களோ? 

வரவுக்கு மீறி சொத்து சேர்த்தது குற்றமாயிருக்க அதற்கான் தண்டகைக்கும்  இன்னும் இன்னும் குற்றசெயல்களில் ஈடு பட்டு தம் எதிர்ப்பை காட்டுபவர்கள் தன் தாய் நாட்டையே அவமதிப்பவர்கள் தான்! 

தன் நாடு! தாய் நாடு என  சொல்லிகொள்பவர்கள்.. தன் நாட்டில்  தன் சொத்தை தானே அழிப்பது நியாயமா என ஏன் சிந்திப்பதில்லை! !*!*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 19:20

இன்று ட்விட்டரில் டிரெண்டிங்கில் இருக்கும் #Jayaverdict .
18 ஆண்டு காலத்துக்கு பின்னர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், ட்விட்டரில் இந்த தீர்ப்பு குறித்து விவாதம் வலுத்ததால், இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் #Jayaverdict முதல் இடத்தை பிடித்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அனைவரது பார்வையும் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் இறுதி கட்டத்தை எதிர்நோக்கி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று(சனிக்கிழமை) ட்விட்டரில் இந்திய அளவில் #Jayaverdict என்ற ஹேஷ்டேக் முதல் இடத்தில் உள்ளது.

அந்த ஹேஷ்டேகில் பலர் இந்த தீர்ப்பு குறித்து தங்களது சுய கருத்துக்களை அளித்து வருகின்றனர். கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று புகார் அளித்தார்.

இதனிடையே ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், தவறு செய்யும் அரசியல் தலைவர்களுக்கு இதன் மூலம் பாடம் கிடைக்கும் என்ற நிலைபாட்டிலும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமெரிக்க பயணம், ஐ.நா. பொது சபையில் அவரது முதல் உரை என்பதான விஷயங்களில் கடந்த இரண்டு நாட்களாக தேசிய ஊடகங்கள் கவனம் செலுத்திய நிலையில், அவை அனைத்தின் கவனமும் முற்றிலும் இன்று(சனிக்கிழமை) ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு மீது திரும்பியுள்ளது.
இவை ட்விட்டரில் பிரதிபலிக்கத் தவறவில்லை. இந்திய அளவில், ஜெயலலிதா சொத்து குவிப்பு குறித்து விமர்சனமும், பல விதமான எதிர்மறை கருத்துக்களையும் இணையவாசிகள் #Jayaverdict ஹேஷ்டேகில் பகிர்ந்து வரும்கின்றனர். அந்த ட்வீட்டுகளில் சில,

ஆர்ச்சீ (@JhaSanjay): இனி ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் கடவுளை வேண்ட வேண்டும்.

கிருஷ்ணா (@Krishna #BDL ‏@Atheist_Krishna): என்ன நடிப்புடா... ஆஸ்கர் தான்_ (அதிமுக ஆதரவாளர்கள் ஒப்பாரி வைத்து சோகத்தை அனுசரிக்கின்றனர்)

லதா ஸ்ரீநிவாசன் (@latasrinivasan ): தமிழகம் எங்கம் கலவரமாக உள்ளது என்று செய்திகள் வருகின்றன.

ஜெயசீல பெல்காகுமார் (@jaysheel77): ஒரு சிறிய தவறு பல ஆண்டு கால நல்ல செயல்களை எல்லாம் பாதித்துவிடுகிறது. ஜெயலலிதாவுக்கு பின் அவரது கட்சியை நிகரான ஆளுமையுடன் செயல்பட யாரும் இல்லை.

விக்னேஷ் சுரேஷ் (@VignaSuresh): எனக்கு ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும். ஆனால், இந்த நேரத்தில் நமது நீதித்துறையை நினைத்து பெருமைப்படுகிறேன்.

விம்ரம் சந்திரா (@vikramchandra): பெங்களூருவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மனோஜ்குமார் (@Manoj Kumar): எனக்கு தெரிந்த ஒரு அதிமுக ஆதரவாளர், கடவுள் கூட எனது தலைவரை தண்டிக்க முடியாது என்றார். இந்தியாவில் இது போல நிறைய முட்டாள்கள் உள்ளனர்.

மீனாட்சி மகாதேவன் (‏@m_meenakshi86) : அனைவரும் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருங்கள். தமிழகத்தின் நிலைமை இப்போது மோசமாக உள்ளது.

ஹரிஹரன் கஜேந்திரன் (@hariharannaidu): வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஜெயலலிதா அதே கம்பீரத்துடன் எழுந்து வருவார்.

வாண்டரிங் மொங்க் (@muralispeak): யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், தீர்ப்புக்கு பின்னரும் ஜெ மீண்டும் எழுந்து வருவார்.
அன்புடன் பாலா (@AmmU_MaanU): ஜெயலலிதா பாடம் கற்கவில்லை. நன்கு தேர்ந்த ஆளுமை பெற்றவர், தகுதி வாய்ந்த முதல்வர். என்ன பயன்? அவர், எது நல்லது, யார் நல்லவர், என்ன செய்வது, என்ன செய்யக் கூடாது என்று அவருக்கு தெரியவில்லையே.

ஸ்ரீநாத் முரளி (@ Srinath Murali_msn): அம்மா என்றும் நினைவில் நிற்பார். ஆனால் இந்த தீர்ப்புக்குப் பின் தமிழகத்தின் நிலைமை என்ன ஆகும் என்று தான் தெரியவில்லை.

கீதா (@ geetdiamonds): அநீதி இழைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் செய்து சிறிய தவறுக்கு, பதவியில் இருக்கும் ஒருவரை தண்டிக்கலாமா? என்ன தமிழகத்திலும் இந்தியாவிலும் உள்ள அரசியல்வாதிகள் தியாகிகளா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 19:27

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதா தீர்ப்பு வழங்கும் முன்பு வெளியே வந்து அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசிவிட்டு சென்றார். 

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

 இதில் ஜெயலலிதா ரூ.100 கோடி அபராதம் செலுத்த தவறினால் அவர் மேலும் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி குன்ஹா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தீர்ப்பு அறிவிக்கப்படும் முன்பு ஜெயலலிதா நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது நீதிமன்றத்திற்கு வெளியே நின்ற அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம் மட்டும் ஏதோ பேசிவிட்டு சென்றார்.

 தான் சிறைக்குச் செல்வதால் அடுத்த முதல்வர், கட்சி விவகாரங்கள் ஆகியவை குறித்து ஜெயலலிதா அவரிடம் ஆலோசித்து இருக்கலாம் என்று தெரிகிறது.

tamil.oneindia

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 21:34

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை 10484926_10201554331780445_8634779888202062791_n18 ஆண்டுகள்.. 6 நீதிமன்றங்கள்.. 90 நீதிபதிகள்.. தினமும் 18 மணி நேரம் இடைவிடாது பணியாற்றிய டி'குன்ஹா
கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம்.
இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் அவரது கடும் உழைப்பும்,அசராத அணுகு முறையும் உள்ளது.
1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை சிங்கார வேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஏறி இருக்கிறது. சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வரை சுமார் 90 நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்துள்ளதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
1997-ல் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக் கப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜான் மைக்கேல் டி'குன்ஹா 14-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக கடந்த 31-10-2013 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பெங்களூர் சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதியாகவும்,பெங்களூர் மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றிய இவர் கடந்த 11 மாதங்களில் வழக்கை தீர்ப்பை நோக்கி நகர்த்தியுள்ளார்.அதற்கு காரணம் அவருடைய கடினமான உழைப்பும், கண்டிப்பான அணுகு முறையும் தான் காரணம். மேலும் மனு மேல் மனு போட்டு நீதிமன் றத்தின் நேரத்தை வீணடித்த தனியார் நிறுவனங்களின் மனுக் களை மிகச்சரியாக கையாண்டார். முதல் முறையாக அவர்களுக்கு அபராதம் விதித்தார். அரசு வழக் கறிஞர் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் அவரு டைய இரு நாள் ஊதியத் தை(ரூ.1.2லட்சம்) அபராதமாக விதித்தார்.உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறி ஞருக்கு அபராதம் விதித்த‌து அதுவே முதல்முறை.

காலை 8.15 மணிக்கே வந்து விடுவார்
டி'குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க ஆரம்பித்ததும் வாரத்தின் 5 நாட்களும் விசாரணையை தொடர்ந்து நடத்தினார். இதற்காக தினமும் 18 மணி நேரம் ஒதுக்கி வேலை செய்தார்.
அதுவும் தீர்ப்பு தேதியை குறித்த பிறகு, நீதிமன்றத்தை சுத்தம் செய்பவர்கள் வருவதற்கு முன்பாக தனது இருக்கையில் வந்து அமர்ந்து விடுவார். தினமும் மாலை 6 மணிக்கு தான் வீட்டிற்கு திரும்புவார்.வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் படித்து, அவ்வப்போது குறிப் பெடுத்துக்கொள்வார் என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதி டி'குன்ஹாவின் பாணி குறித்து விவரித்தனர்.
அவர்கள் மேலும் கூறும்போது “நேற்று காலை 7.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு நேரடியாக சென்று இருந்தோம்.பெங்களூர் சிறப்பு நீதிமன்ற கட்டிடத்தில் யாரும் தென் படவில்லை. ஆனால் காலை 8.15 மணிக்கு நீதிமன்ற கட்டி டத்தில் உள்ள பழைய தபால் நிலையம் அருகே இருந்த குறுகலான பாதையில் நுழைந்தார். தன்னை யாரும் புகைப்படம் எடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வழியை டி'குன்ஹா தேர்ந்தெடுத்துள்ளார்.
காலை 8.18 மணிக்கு தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி குன்ஹா மாலை 7.30 மணி வரை பணியில் மூழ்கினார்.இன்று வழங்கவிருக்கும் தீர்ப்பின் பக்கங்களுக்கு இறுதிவடிவம் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த வழக்கு மிகவும் முக்கியமானது என்பதால் வழக்கமாக தட்டச்சு செய்பவரை பயன்படுத்தவில்லை.தான் நீதிபதியாக பணியாற்ற தொடங்கிய காலத்தில் இருந்து பழக்கமான ஒரு பெண்ணையே தட்டச்சு செய்ய அனுமதித்துள்ளார்.
அதுவும் தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே கடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சு செய்துள்ளார்” என்றனர்.
நீதிபதி டி'குன்ஹாவை பொறுத்தவரை அவர் ஒரு முறை தீர்ப்பு அளித்தால், அந்த வழக்கு அடுத்தடுத்து உயர்நீதி மன்றங் களை அணுகினாலும் தோல்வியே அடையும்.அந்த அளவுக்கு தீர்ப்பு வழங்குவதில் கெட்டிக்காரர் என கர்நாடக நீதித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே கடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சு செய்துள்ளார்.

mohan ganthi 
Face book

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 21:43

ஜெயலலிதாவின்
சொத்துப்பட்டியல்!

ஸ்பாய்லரில் போட்டிருக்கின்றேன்! மனசை திடப்படுத்தி விட்டு  போய் படிங்கப்பா.. யாருக்காவது  அதிர்ச்சியில் மயங்க்ம் வந்தால் அதற்கு நிஷா பொறுப்பு அல்ல!

Spoiler:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 21:47

ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் 

ஒரே பதிவாகப்போடலாம் என போட்டால் த போஸ்டட் மேசேஜ்   லாங்க் என வருகின்றது. இரண்டாக பிரித்து போட்டேன்!

Spoiler:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 21:54

மூன்று வருடங்களுக்கு மேல்  தண்டனை எனில் உடனடியாக் ஜாமின் கிடைக்காது என்பதுடன் தண்டனை உறுதியானால் அடுத்த பத்து ஆண்டுகள்  பதவிக்கும் வர முடியாது, தேர்தலில் போட்டியிட முடியாது  என்பதாக நீதிபதிகள்  கருதுவதாக செய்திசானல்களில் அறிவிப்பு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 21:56

பரப்பன அக்ரகாரம் சிறையில் அடைக்கப்பட்டார். 

பல இடங்களில் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர். திருமங்கலம் அ.தி.மு.க.,வினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். திருசெந்தூரில் இருந்து பழநி சென்ற பாசஞ்சர் ரயிலை மறித்ததால், அந்த ரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.திருச்சியில் தனியார் பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில் நான்கு பயணிகள் காயம் அடைந்தனர். சிதம்பரத்திற்கு சென்ற பஸ்கள் மீது சிலர் கல்வீச்சு நடத்தினர், இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. 

மயிலாடுதுறையில் கோர்ட் தீர்ப்பை கண்டித்து அ.தி.மு.க.,வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல், கருணாநிதி உருவ பொம்மை எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. கோவில்பட்டியில் தனியார் பஸ் மீது கல் எறிந்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது,துறையூரில், கருணாநிதியின் உருவபொம்மையை எரித்து, அ.தி.மு.க.,வினர் தங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர். பஸ் ஸ்டாண்டில் நடப்பட்டிருந்த தி.மு.க., கொடி கம்பத்தை அகற்றினர். இதையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தஞ்சாவூரில், பழைய, புதிய பஸ் ஸ்டாண்டு பகுதிகள் மற்றும் அக்ரஹாரம் ஆகிய இடங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கருணாநிதியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.

பஸ்கள் நிறுத்தம்; கடைகள் அடைப்பு:

பண்ருட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. பல இடங்களில் கருணாநிதியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. பண்ருட்டியில் இருந்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லையில் ரயில் மறியலில் அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டனர். ரயில்வே போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதேபோல், நாகப்பட்டனம் ரயில்வே ஸ்டேஷனிலும் , திருப்பரங்குன்றம் ஸ்டேஷனிலும் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.மேலூரில் அ.தி.மு.க., தரப்பில் கண்டன ஊர்வலம் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் தனியார் பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில் நான்கு பயணிகள் காயம் அடைந்தனர். சிதம்பரத்திற்கு சென்ற பஸ்கள் மீது சிலர் கல்வீச்சு நடத்தினர், இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.

நன்றி : தினமலர்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 21:58

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Jjsasikalanakeeran

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 22:01

லைமுறைகளைக் கடந்து நடக்கும் இவ்வழக்கின் விபரங்கள், இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு தெரிந்திருக்காது.  அது இணையம் இல்லாத காலம்.  அதனால் அது குறித்த பல பதிவுகள் இல்லை.

ஜெயலலிதாவைப் போல ஒரு மோசமான ஆட்சியாளர் / அரசியல்வாதியை பார்க்கவே முடியாது.  கிட்டத்தட்ட ஹிட்லர் ஆட்சி போலத்தான் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நடத்தி வந்தார்.  

ராஜீவ் கொலைக்குப் பிறகு, தேர்தல் ஒரு மாத காலம் தள்ளி வைக்கப்பட்ட பிறகு, நடந்த தமிழக தேர்தலில், திமுக மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாகவும், ராஜீவ் மரணத்தின் காரணமாக ஏற்பட்ட அனுதாப அலையின் காரணமாகவும், மிருக பலத்தோடு ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா.   ஜெயலலிதா எப்படிப்பட்ட ஆணவம் மிகுந்தவர் என்பதை அப்போது தமிழ்நாடு கண்டது.  ஒரு ஆண்டு முடிவதற்குள்ளாகவே, ராஜீவ் அனுதாப அலையால் அதிமுக வெல்லவில்லை....  சொந்த பலத்தில்தான் வெற்றி பெற்றது என்று அறிவித்தார்.   தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் நடந்த கொள்ளைகளுக்கு காரணம் நரசிம்மராவ்தான். 

 கைதானவர்கள் எல்லோரும் தெலுங்கு பேசுகிறார்கள், ஆகையால் அனைவரும் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் என்று சட்டப்பேரவையிலேயே அறிவித்தார்.

அதன் பிறகு, நாள்தோறும் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம், உள்ளிருப்பு போராட்டம், கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் என்று பல்வேறு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் ஜெயலலிதா.

மற்றொரு புறம், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த மதுசூதனன், எஸ்.டிசோமசுந்தரம் ஆகியோர், ஜெயலலிதாவின் மனம் குளிர அத்தனை அடாவடிகளிலும் ஈடுபட்டனர்.  

ஜெயலலிதா ஆட்சியின் தொடக்கமே, ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்த தராசு இதழின் இரண்டு ஊழியர்களின் படுகொலையில்தான். காவேரி பிரச்சினை காரணமாக, காங்கிரஸ் அரசு கர்நாடக அரசுக்கு ஆதரவாக இருந்தது என்பதால், அதன் அமைச்சர் ப.சிதம்பரத்தின் வாகனத்தை அதிமுகவின் 400 ரவுடிகள் தாக்கினர்.  அண்ணா பல்கலைக்கழகத்தில் மண்டல் பரிந்துரை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவேன் என்று அறிவித்தார் அதன் துணை வேந்தர் முனைவர் அனந்தகிருஷ்ணன்.  இரண்டு நாட்களில் மர்ம நபர்கள், அவர் வீட்டுக்குள் நுழைந்து அவரை தாக்க முனைந்தனர்.  அனந்த கிருஷ்ணன், வீட்டினுள் இருந்த அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டதால் தப்பித்தார்.  சமூக நீதி காத்த வீராங்கனையின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றினாராம்.  அதற்குத்தான் இந்த தாக்குதல்.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி 50 சதவிகித இட ஒதுக்கீட்டை மட்டுமே பின்பற்ற வேண்டும், மாறாக தமிழக அரசு 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறது என்று வழக்கு தொடுத்தார் வழக்கறிஞர் கே.எஸ்.விஜயன். 

 இதையடுத்து, இவர் மீது நடந்த கொடூர தாக்குதலில், விஜயனுக்கு, கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மூன்று மாதங்கள் படுக்கையில் இருந்தார்.   இதே போலத்தான் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தின் மீதும் கொடூரத் தாக்குதல் நடைபெற்றது. 

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை IMG_20140822_170929
தொண்ணூறுகளில் வழக்கறிஞர் விஜயன்.

தொடரும்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 22:02

இது போன்ற தாக்குதல் வழக்குகள் அனைத்திலும், போலி குற்றவாளிகளை ஆஜர் படுத்தி, வழக்கின் விசாரணையை திசை திருப்புவதில், காவல்துறை மிக மிக முனைப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

திருத்துரைப்பூண்டி இந்தியக் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பழனிச்சாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுவதாக புகார் கூறினார். மறு நாள், அவர் வீட்டிலேயே, மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர், கள்ளச்சாராயத்தை தேடி சோதனை நடத்தினர்.   

சட்டப்பேரவையில், அப்போதைய பாமக எம்எல்ஏ பண்ருட்டி ராமச்சந்திரன், ஆளுனர் உரைக்கு எதிராக எழுந்து, பேச முயன்றபோது, அப்போது சுயேட்சை எம்எல்ஏவாக இருந்த தாமரைக்கனியால் தாக்கப்பட்டார்.  

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.ஆர்.லட்சுமணன், நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார்.  இந்த வழக்கு ஜெயலலிதாவுக்கு எதிராக செல்லும் என்பதை உணர்ந்த ஜெயலலிதா, காவல்துறையை வைத்து, ஏ.ஆர்.லட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்தார். 

ஜெயலலிதாதான் இப்படி அராஜகவாதியாக நடந்து கொள்கிறார் என்றால், ஒட்டு மொத்த நிர்வாகமும் அவருக்கு துணை போனது.  காவல்துறை அதிகாரிகள், அம்மா கட்டி விட்டு வரச் சொன்னால் வெட்டி விட்டு வந்தார்கள்.

அரசியல் எதிரிகள், அப்போது இருந்த ஆள்தூக்கி தடா சட்டத்தின் கீழ் சகட்டு மேனிக்கு கைது செய்யப்பட்டார்கள்.   ஏராளமான திமுகவினர்   விடுதலைப் புலிகளோடு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.    

வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என்று அறிவித்த தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை ஏற்போர்ட்டில் இருந்து வெளியே வராமல் நான்கு மணி நேர வன்முறை.  சென்னை வந்து, தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்த சேஷனின் மீது மீண்டும் தாக்குதல்    என்று அநியாயங்களும், அக்கிரமங்களும், ஜெயலலிதா அரசின் அன்றாட வழக்கமாக இருந்தன. 

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல நடந்த சம்பவம்தான் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலோகா மீதான ஆசிட் வீச்சு.

சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் - ஸ்பிக் என்ற நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகள், தமிழக அரசு நிறுவனமான, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் வசம் இருந்தது (டிட்கோ). ஸ்பிக் நிறுவனத்தின் நிறுவனர்களான, ஏ.சி முத்தையா செட்டியார் மற்றும் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் ஆகியோர், அரசு வசம் இருந்த பங்குகளை வாங்க வேண்டும் என்று கடும் முயற்சிகள் எடுத்தனர். 

அரசும் பங்குகளை விற்பதென்று முடிவெடுத்தது. ஆனால், என்ன விலைக்கு விற்பனை செய்வத என்பதில் கடும் சிக்கல் நீடித்தது.  டிட்கோ நிறுவனத்தின் தலைவராக சந்திரலேகா ஐஏஎஸ் இருந்தார். அப்போது தொழில் துறை செயலராக பி.சி.சிரியாக் இருந்தார்.

விற்பனை நடந்த அன்று சந்தை விலைக்கு விற்றிருந்தால், அரசின் பங்குகளுக்கு 40 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.  ஆனால், அந்த பங்குகளை விலை குறைத்து விற்பனை செய்ய வேண்டும் இரண்டு செட்டியார்களும் விரும்பினர்.  செட்டியார்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதை விட, ஜெயலலிதாவுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும் ?

24 ஜனவரி 1992 அன்று பங்குகளை செட்டியார்களுக்கு விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்த அன்று, ஒரு பங்கின் விலை 80.  அரசு விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்ட நாள் 23 மார்ச் 1992.  மார்ச் 1992 வாக்கில் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு ஸ்பிக் பங்கு, ரூபாய் 210 அளவுக்கு உயர்ந்தது. 

டிட்கோ தலைவரான சந்திரலேகா ஐஏஎஸ், 80 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  ஜெயலலிதா நேரடியாக சந்திரலேகாவை தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்து, அது மோசமான உரையாடலாக மாறி, யார் அழகு என்ற ரீதியில் வளர்ந்ததாகவும், உரையாடலின் இறுதியில், முதலமைச்சராவதற்கு, தோற்றம் அடிப்படை என்றால், நானும் முதல்வராகியிருப்பேன் என்று சந்திரலேகா கூறியதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையடுத்து, இந்த விபரத்தை ஜெயலலிதா அப்போது அமைச்சராக இருந்த மதுசூதனனிடம், சந்திரலேகாவுக்கு தக்க பாடம் புகட்ட சொல்லி, மதுசூதனன், இதை திண்டுக்கல் சீனிவாசனிடம் சொல்லி, சீனிவாசன், இந்த பொறுப்பை தற்போது நத்தம் விஸ்வநாதன் என்று அழைக்கப்படும் விஸ்வநாதனிடம் கூறியதாகவும், நத்தம் விஸ்வநாதன் ஏற்பாடு செய்தபடியே, சுடலை என்கிற சுர்லா சந்திரலேகா மீது ஆசிட் ஊற்றியதாகவும் கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையில் சுர்லா மதுசூதனனின் பெயரை கூறியதன் அடிப்படையில் மதுசூதனனை கைது கூட செய்தது சிபிஐ இணைப்பு தமிழகத்தில் ஆசிட் கலாச்சாரத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது அந்த சம்பவமே.

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Ch11023
சுப்ரமணியன் சுவாமியோடு சந்திரலேகா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 22:03

தொடரும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 22:05

சாதாரணமாக நெருப்பு லேசாக நம் மீது பட்டாலே துடி துடித்து விடுகிறோம்.  ஒரு அழகான ஐஏஎஸ் அதிகாரியின் முகத்தில் ஆசிட் வீசினால், அவர் எப்படி வேதனைப் பட்டிருப்பார் என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.  

ஜெயலலிதாவை நேரடியாக தொடர்புப் படுத்த, நேரடியா எவ்வித சாட்சிகளும் இல்லையென்றாலும்,  சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு நடத்த யாருக்கும் காரணங்கள் இருக்க முடியாது.  அந்த வழக்கில் யார் பின்னணியில் இருந்தவர்கள் என்பது இறுதி வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.     பண்டிட் சந்திரகாந்த் சொக்கா மோரே, அண்ணா துரை, சுனில் தாமோதர்     பாண்டவ் மற்றும் மஞ்சித் சிங் என்கிற பாலி ஆகியோர் குற்றவாளிகள் என்று பின்னாளில் விசாரணை நடத்திய சிபிஐ கண்டறிந்தது. 

ஆனால், ஜெயலலிதாவின் கீழ் செயல்பட்ட மாநில காவல்துறை, சுடலைமுத்து என்கிற சுர்லாதான் இதில் குற்றவாளி என்று அவனை கைது செய்து 5 ஆண்டுகள் பிணையில்லாமல் சிறையில் இருந்தான். பின்னாளில், சுர்லாவுக்கு இதில் தொடர்பில்லை என்றனர்.  ஆனால், சுர்லாவோ, சிறையை விட்டு வெளியேறி விடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தான்.  வழக்கில் தொடர்பில்லை என்று சிபிஐ முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே, அவன் வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணமூர்த்தியை நீதிமன்றத்துக்குள்ளாகவே தாக்க முயற்சி செய்தான். 

இந்த வழக்கில் இறுதி வரை யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.  

காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து, எத்தனையோ போராட்டங்களை நடத்தினாலும், தனி நபராக இணைந்து, ஜெயலலிதா கண்ணில் விரலை விட்டு ஆட்டியது யாரென்றால் சுப்ரமணிய சுவாமிதான்.  திமுக பேரணிகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும், வழக்கு போட்டு, ஜெயலலிதாவை எரிச்சலின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றது சுப்ரமணிய சுவாமி மட்டுமே.

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை F46sm12-000375%5B1%5D

 30.05.1993 வரை, தமிழகத்தில் ஆளுனராக இருந்தவர், பீஷ்ம நாராயண் சிங். இவரை காங்கிரஸ் அரசாங்கம் நியமித்திருந்தாலும், இவரை வளைப்பது எப்படி என்ற கலையை கற்றிருந்தார் ஜெயலலிதா.   பீஷ்ம நாராயண் சிங்கின் "தேவைகளை" ஜெயலலிதாவின் தளபதிகள், கச்சிதமான நிறைவேற்றி வைத்தனர்.  அப்போது, வால்டர் தேவாரத்திடம் பணியாற்றிக் கொண்டிருந்த லாலி என்ற பெண் காவலர், பீஷ்ம நாராயண் சிங் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டார் என்பது, நீங்கள் புரிந்து கொள்ள ஏதுவாக கொடுக்கப்படும் க்ளு.

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை BhishmaNarainSingh

ஆளுனர் பீஷ்ம நாராயண் சிங்

காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவுக்கும் மோதல் முற்றுகிறது. ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.  ஒரு கட்டத்தில், சட்டப்பேரவையிலேயே, தமிழகத்தில் நடக்கும் நெடுஞ்சாலை கொள்ளைகளுக்குக் காரணம், மத்திய அரசுதான்.   தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, நரசிம்மராவ் இப்படி கொள்ளையர்களை அனுப்புகிறார்.  இதற்கு காரணம், பிடிபட்ட கொள்ளையர்கள் அனைவரும் தெலுங்கு பேசுகின்றனர் என்றார். 

இந்த விவகாரங்களையெல்லாம் அறிந்த நரசிம்மராவ், இனி பீஷ்ம நாராயண் சிங்கை தமிழகத்தில் வைத்திருந்தால், சுத்தப்படாது என்று முடிவு செய்து, பழுத்த அரசியல்வாதியான சென்னா ரெட்டியை மாநில ஆளுனராக 31 மே 1993ல் நியமிக்கிறார்.    பீஷ்ம நாராயண் சிங் இருந்தபோது, ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு திமுக அளித்த விண்ணப்பத்தை நிராகரித்திருந்தார் பீஷ்ம நாராயண் சிங்.  
ஜெயலலிதாவுக்கு, சென்னா ரெட்டி எதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது.   சென்னா ரெட்டி வந்த நாள் முதலாகவே, தினந்தோறும் மோதல்தான். அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களுக்காக அரசு அலுவலகத்தில் டைரி அச்சிடப்பட்டு வழங்கப்படும்.   அந்த டைரியின் முதல் பக்கத்தில் மாநில ஆளுனரின் படமும், இரண்டாவது பக்கத்தில், மாநில முதல்வரின் படமும் வைக்கப்படும்.  1994ம் ஆண்டு டைரியில் சென்னா ரெட்டியின் படத்தைப் பார்த்ததும் கோபப்பட்டு டைரியை விசிறியடித்தார் ஜெயலலிதா.   

அப்போதும் இருந்த ஜெயலலிதாவின் அடிமைகள், உடனடியாக அம்மாவின் மனம் கோபித்துக் கொண்டதே என்பதை உணர்ந்து உடனடியாக அத்தனை டைரிகளையும் அழித்தனர்.  ஜனவரி, மாதம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய டைரிகள், மே மாதம் வழங்கப்பட்டது வரலாறு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum