சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Khan11

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 12:38

First topic message reminder :

ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்
உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்
தண்டனை விவரத்தை 3 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி
ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றம் என்றும் தகவல்
ஜெயலலிதாவுக்கான தண்டனை விவரம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பு
https://www.facebook.com/tamilnewsbbc

 இந்த செய்தி எத்தனை வீதம் உண்மை?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 22:12

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 DrMChannaReddy
ஆளுனர் சென்னா ரெட்டி


அதன் பிறகு, சென்னா ரெட்டியை சந்தித்து, ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க சுப்ரமணிய சுவாமி மனு அளித்தார். அந்த மனு மீது  ஆளுனர் சென்னா ரெட்டி, முட்டாள்கள் தினமான 1995ம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று, அனுமதி அளித்தார்.   அந்த அனுமதியை எதிர்த்து, 6 ஏப்ரல் 1995 அன்று, ஜெயலலிதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அவ்வழக்கு நீதிபதி சிவராஜ் பாட்டீல் முன்பு விசாரணைக்கு வருகிறது.. ஜெயலலிதாவுக்காக மூத்த வழக்கறிஞர் பராசரன் ஆஜரானார்.  சுப்ரமணிய சுவாமி தனக்காக தானே வாதாடுகிறார்.  வழக்கை விசாரித்த சிவராஜ் பாட்டீல், அரசியல் அமைப்புச் சட்ட விவாதங்கள் இதில் அடங்கியிருப்பதால், இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறார். 

20 ஏப்ரல் 1995 அன்று இந்த வழக்கு நீதிபதி எம்.சீனிவாசன் மற்றும் எஸ்.எஸ்.சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வருகிறது.   ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பராசரன் வாதிடுகிறார்.  சுப்ரமணிய சுவாமி, அவரே வாதிடுகிறார்.  தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகிறார். வழக்கின் விசாரணை காலை 10.30 முதல் மாலை 4.30 வரை தொடர்ந்து நடைபெறுகிறது.  வழக்கு விசாரணை முடிந்ததும் தீர்ப்பை ஒத்தி வைக்கிறார் நீதிபதி.   மாலை 4.30 மணிக்கு, அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துக்கிருஷ்ணன், சுப்ரமணியன் சுவாமியின் காதில் ஏதோ சொல்லுகிறார்.  உடனே எழுந்த சுவாமி, தன் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், போலீசார், வாயிலில் காத்திருப்பதாகவும், தனக்கு முன்ஜாமீன் வழங்கும்படியும் கேட்கிறார். நீதிபதி சீனிவாசன் அரசு வழக்கறிஞரைப் பார்த்து விபரத்தை கேட்டதும், அவர் தனக்கு இது குறித்து எதுவுமே தெரியாது என்கிறார். நீதிபதி, நாளை காலை 10.30 மணி வரை உங்களை கைது செய்ய தடை விதிக்கிறேன் என்கிறார்.

மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், சுப்ரமணிய சுவாமி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஒரு Political Pariah என்று பேசியால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இதையடுத்தே சுவாமியை கைது செய்ய, காவல்துறை நீதிமன்றம் வந்திருந்தது. 
ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 DR_SUBRAMANIAN_SWAM_292918f


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 22:15

Pariah என்ற ஆங்கிலச் சொல், தமிழில் உள்ள பறையர் என்ற சாதிப்பெயரில் இருந்தே தோன்றியது.  ஒதுக்கப்பட்டவர் என்ற பொருளில் இந்த சொல், ஆங்கில மொழியில் பதினெட்டாம் நூற்றாண்டு முதல் வழக்கத்தில் இருந்து வருகிறது.  தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக எத்தனையோ வன்கொடுமைகளை இழைக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்த ஜெயலலிதா, கொடியங்குளத்தில் தலித்துகளின் வீடுகளை காவல்துறையை விட்டு சூறையாடுவதை வேடிக்கை பார்த்த ஜெயலலிதா, சுப்ரமணியன் சுவாமி Political Pariah என்று சொன்னதற்காக, வழக்கு தொடுத்தார்.  அப்படியே சுப்ரமணியன் சுவாமி சாதி ரீதியாக அந்த வார்த்தையை பேசியிருந்தாலும் கூட, அதில் புகார் கொடுக்க வேண்டியது வேலுப்பிள்ளை பிரபாகரன்தானே தவிர, காவல்துறை அல்ல.  

நீதிமன்றத்தின் வெளியே சுவாமி வந்தபோது, அப்போது, மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த வால்டர் தேவாரம் மற்றும், மதுரை ஆணையர் ஆர்.என்.சவானி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுவாமியை கைது செய்ய காத்திருந்தனர்.  சுவாமியோடு வந்த 30 கமாண்டோக்களும் இருந்தனர்.  ஒரு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.


ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 1458458_384610965005723_1745450706_n


சுவாமி வந்ததும், தேவாரம் உங்களை கைது செய்கிறேன் என்றார். சுவாமி, எனக்கு உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச், நாளை காலை 10.30 மணி வரை கைது செய்ய தடை விதித்திருக்கிறது என்றார்.  தேவாரம் உத்தரவின் நகலைக் கொடுங்கள் என்றார்.  சுவாமி இது வாய்மொழி உத்தரவு என்றார். நான் நம்ப மாட்டேன் உங்களை கைது செய்கிறேன் என்றார் தேவாரம்.   உடனே சுவாமி, நான் உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது என்று சொல்கிறேன். நீங்கள் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கைது செய்வேன் என்கிறீர்கள்.   நெருப்போடு விளையாடுகிறீர்கள்.    இதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும் என்கிறார்.

கொஞ்சம் தயங்கிய தேவாரம் மைக் மூலமாக, உயர்நீதிமன்றத்தினுள் இருந்த காவலரை அழைத்து, அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் விபரம் கேட்டு சொல்லும்படி உத்தரவிட்டார்.  15 நிமிடங்கள் கழித்து, மைக்கில் அந்த காவலர், அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் பி.ஸ்ரீராமுலு, நீதிபதிகளின் தீர்ப்பை உறுதி செய்ததும், சுவாமியை செல்ல அனுமதித்தார்.

அங்கிருந்து நேராக தன் வீட்டுக்கு சென்ற சுவாமி, ஆளுனரை சந்திக்கப் போவதாக தெரிவித்தார்.  பத்திரிக்கையாளர்களும், அவர் பின்னாலேயே சென்றனர்.  ஆளுனர் மாளிகைக்கு சென்று, சென்னா ரெட்டியை சந்தித்த சுவாமி, மீண்டும் திரும்பி தன் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரம் கழித்து, முக்கிய டெவலப்மென்டுகள் இருப்பதாகவும், மீண்டும் ஆளுனரை சந்திக்கப் போவதாக அறிவித்து விட்டு கிளம்பினார். பத்திரிக்கையாளர்களும், அவர் பின்னாலேயே சென்றனர். ஹால்டா சந்திப்பு வந்ததும், சுவாமியின் கார், நிற்காமல் நேராக சென்றது. என்ன நடக்கிறது என்பதை உணரும் முன், சுவாமி, நேராக விமான நிலையம் சென்று, வாசலில் தயாராக போர்டிங் பாஸ் வைத்திருந்தவரிடம் அதை பெற்றுக் கொண்டு, எந்த லக்கேஜும் இல்லாமல், விமான நிலையத்தினுள் நுழைந்து, மும்பை செல்லும் விமான நிலையத்தில் ஏறினார்.

விமானம் கிளம்ப இன்னும் 30 நிமிடங்கள் இருந்தன.  செய்தியறிந்த ஜெயலலிதா ருத்ர தாண்டவம் ஆடினார். என்ன ஆனாலும் சரி. சுவாமியை விமானத்துக்குள் ஏறி கைது செய்யுங்கள் என்றார்.  அப்போது சென்னை மாநகர ஆணையர் ராஜகோபாலன்.  டிஜிபியாக ஸ்ரீபால் இருந்தார். இருவரும், விமான நிலைய வாயில் வரைதான் தமிழக காவல்துறையின் கட்டுப்பாடு.  விமான நிலையத்தின் உள்ளே மத்திய அரசின் கட்டுப்பாடு. விமான நிலையத்தில் ஏறுவதில்லை என்று முடிவெடுத்தனர்.

மறுநாள் காலை, புதிய டிஜிபி மற்றும் புதிய ஆணையர்.   ஆளுனரைப் பார்க்க சென்ற சுவாமி, ஆளுனர் மாளிகையில் இருந்து மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவாணை தொடர்பு கொண்டு, விபரத்தை சொல்லுகிறார்.   சவாண், உடனடியாக டெல்லி வருமாறும், டெல்லி விமானம் உடனடியாக இல்லாத காரணத்தால், மும்பை சென்று, அங்கிருந்து டெல்லி வருமாறும் கூறுகிறார்.   அதன்படி, மும்பை சென்ற சுவாமி, தமிழக காவல்துறையிடமிருந்து தப்பிக்க, நேராக பால் தாக்கரே இல்லத்தில் சென்று, தங்கி விட்டு, அங்கிருந்து டெல்லி சென்றார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 22:18

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Ch164174

டெல்லியில் 10.30 மணி முடிந்ததும் சுவாமியை கைது செய்யலாம் என்று தமிழக காவல்துறை காந்திருந்தது.  9 மணிக்கே உச்சநீதிமன்றத்தினுள் சென்ற சுவாமி தலைமை நீதிபதி அகமாதியை அவர் அறையில் சந்தித்து விபரங்களை தெரிவிக்கிறார்.   அகமாதி 10.30 மணிக்கு நீதிமன்றத்தினுள் வந்து கூறுமாறு கூறியதன் அடிப்படையில் அவ்வாறே செய்கிறார் சுவாமி. வழக்கின் விபரங்களை கேட்ட அகமாதி சிரித்து விட்டு, இந்தியாவில் எந்த மூலையில் அவர் கைது செய்யப்பட்டாலும், 100 ரூபாய்க்கான சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, உத்தரவின் நகலையும் உடனே வழங்க உத்தரவிடுகிறார்.  வெற்றிக் களிப்போடு வெளியேறினார் சுவாமி.
இந்த வழக்கின் தீர்ப்பு 27 ஏப்ரல் அன்று வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்தன.  சென்னா ரெட்டி வழக்கு தொடுக்க கொடுக்க இருந்த அனுமதி சரி என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று அறிந்ததும் 26 அன்று சட்டசபையில் ஒரு அடிமையை விட்டு கேள்வி கேட்க வைத்தார் ஜெயலலிதா. அவரும் அப்படியே கேட்டார். உடனே ஜெயலலிதா, நான் ஆளுனரை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறேன் என்றால், கடந்த முறை ஆளுனரை சந்தித்தபோது, என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று கூசாமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.  இதுதான் ஜெயலலிதா.

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 DR_SUBRAMANIAN_SWAM_292918f
தனக்கு எதிராக தீர்ப்பு வர இருக்கிறது என்று தெரிந்ததும் அதற்கு காரணமான சென்னா ரெட்டியை அவமானப்படுத்துகிறாராம்.   இந்த சம்பவத்தையும், தற்போது சொத்துக் குவிப்பு வழக்கின் புகார்தாரரான சுப்ரமணியன் சுவாமியின் மீது ஜெயலலிதா தொடர்ந்துள்ள 5 அவதூறு வழக்குகளையும் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.  தெளிவு பிறக்கும்.

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 96_msrinivasan
நீதிபதி எம்.ஸ்ரீனிவாசன்


அதன் பின் நீதிபதி என்.சீனிவாசன் ஆளுனர் அளித்த அனுமதி செல்லும் என்று தீர்ப்பளித்ததும், உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றார் ஜெயலலிதா.   அந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு, இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பது ஒரு சோகமான வரலாறு.

பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு எதிராக ஆளுனர் ஊழல் வழக்கு தொடுக்க அனுமதி கொடுத்த முதல் நபர் ஜெயலலிதா என்று வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் இடம் பிடித்தார் ஜெயலலிதா. இதற்கு முன், இதே போல மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் ஏ.ஆர்.அந்துலேவுக்கு எதிராக அம்மாநில ஆளுனர் அனுமதி அளிக்க இருந்தார்.  ஆனால் அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே, பதவியை ராஜினாமா செய்தார் அந்துலே. ஊழல் பேர்வழியாக இருந்தாலும், அந்துலே பொதுமக்கள் கருத்துக்கு மரியாதை கொடுத்தார்.  

ஆனால் ஜெயலலிதா ?

இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்பது தெரிந்தும், நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து, அதற்காக ஒரு புதிய வழக்கை வாங்கிய அறிவாளிதான் ஜெயலலிதா.

இந்த வழக்கு குறித்து பேசிய ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கூறுகையில் "18 ஆண்டுகளாக இந்திய நீதித்துறையை ஜெயலலிதா கற்பழித்துள்ளார். இது போல ஒரு வழக்கை இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் இழுத்தடித்தது கிடையாது. வழக்கறிஞரின் மாமனாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதையெல்லாம் காரணம் காட்டி வாய்தா கேட்டனர். நீண்ட தாமதத்துக்குப் பிறகு, இவ்வழக்கின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பச்சாபுராவை கதற வைத்தனர்.  மனம் நொந்த அவர், கடந்த ஆறு மாதங்களாக இவ்வழக்கில் ஒரு முன்னேற்றமும் இல்லை. நான் இந்த நீதிமன்றத்தில் தனியாக எந்த வேலையும் இல்லாமல் அமர்ந்திருக்கிறேன். ஏறக்குறைய தனிமைச் சிறையில் இருப்பது போல உணர்கிறேன் என்று அவர் மனம் நொந்து புலம்பினார்.

அடுத்ததாக இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா மீது கர்நாடக லோக் ஆயுக்தாவில் பொய்யான ஒரு வழக்கை தாக்கல் செய்து, அவரை மனம் நோகச் செய்து, ராஜினாமா செய்ய வைத்தனர்.  60 ரூபாய் ஊதியம் பெற்ற ஒருவருக்கு 66 கோடி ரூபாய் எப்படி வந்தது என்ற மிக மிக எளிமையான வழக்கு இது. ஆனால், 18 வருடங்களாக இந்த வழக்கை இழுத்தடிக்க ஒரு அரசியல்வாதியால் முடிகிறது என்பது, இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு." என்ற அவர் மேலும், "தனது நண்பர்கள் ஒவ்வொருவராக எதிரியாக்கியதன் மூலம், ஜெயலலிதா தன்னுடைய மரண வேட்கையை வெளிப்படுத்துகிறார்.  90 வயதிலும் கருணாநிதிக்கு இன்னும் மூன்று முறை முதல்வராக வேண்டும், கட்சியையும் தமிழகத்தையும் ஆள வேண்டும் என்ற வேட்கை உள்ளது.  ஆனால், ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா தன்னுடைய மரண வேட்கையைத்தான் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்" என்றார்.

அவர் கூறியது உண்மை என்று உணர்த்தும் வண்ணமே ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஜெயலலிதாவோடு, ஒட்டி உறவாட விரும்பும் பல்வேறு பார்ப்பனீய சக்திகள் பிஜேபி முழுக்க நிறைந்துள்ளன. ஆனால், எந்த விதமான அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாத ஒரு மிக மிக சாதாரணமான உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒரே கட்சியான பிஜேபியின் வேட்பாளர்களை கடத்துவது, கட்சி மாறச் செய்வது, வேட்பு மனுக்களை வாபஸ் பெறச் செய்வது என்ற தனது நடவடிக்கைகளின் மூலம், ஜெயலலிதா தனது மரண வேட்கையையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

எப்படியாவது ஜெயலலிதாவுக்கு உதவலாம் என்று நினைப்பவர்களைக் கூட, வம்பாக சண்டை இழுத்து எதிரியாக்குகிறார்.    

நாளை சிறை என்ற அச்சுறுத்தல் இருக்கையில் உலகில் எந்த அரசியல்வாதியாவது,  மின் கட்டணத்தை 20 சதவிகிதம் உயர்த்துவானா ? இது ஜெயலலிதாவின் மன நிலையையும், சாடிசத் தன்மையையுமே உணர்த்துகிறது.  இப்படிப்பட்ட ஒரு மன நிலை உடையவர் தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்தால், அதனால், தமிழக மக்கள் அடைய உள்ள துன்பங்கள் ஒன்றிரண்டு அல்ல.

இந்த கட்டுரையும், இது போல பல்வேறு விபரங்களும், தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கைகளிலும், தீர்ப்பு நாள் அறிவிக்கப்பட்டது முதல், வெளி வந்திருக்க வேண்டும்.  இன்றைய தலைமுறைக்கு இந்த விபரங்கள் சுத்தமாக தெரியாது.  ஆனால், ஜுனியர் விகடனைத் தவிர்த்து ஒரு ஊடகம் கூட இது குறித்து எழுதாமல் கள்ள மவுனம் சாதிக்கின்றன. 
 
அந்த பத்திரிக்கையாளர் இது குறித்து கூறுகையில், "இந்த வழக்கில் ஜெயலலிதா விடுதலையானால் கூட என்னால் சகித்துக் கொள்ள முடியும்.  அப்படி விடுதலை ஆனால் மைக்கேல் குன்ஹாவைக் கூட மன்னிப்பேன்.   ஆனால், இந்த சோரம் போன ஊடகங்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன். பக்கம் பக்கமாக எழுதப்பட வேண்டிய ஒரு விஷயத்தை இந்த ஊடகங்கள் திட்டமிட்டு மூடி மறைக்கின்றன.  

ஜெயலலிதாவின் வழக்கு குறித்து எழுதாவிட்டால் ஜெயலலிதா காப்பாற்றப்படுவார் என்பது போன்ற பொய்யான நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஊடகங்கள் மவுனம் காக்கின்றன.  ஜெயலலிதாவின் 91 ஆட்சியிலும், 2001 ஆட்சியிலும், பல்வேறு ஊழல்கள் வெளி வந்ததற்கான ஒரே காரணம் ஊடகங்களின் அற்புதமான பணிதான்.   ஆனால், 2011 ஆட்சியில் ஊடகங்கள் மிக மிக மோசமான துரோகத்தை தமிழகத்துக்கு செய்து கொண்டிருக்கின்றன.  ஊடகங்களின் மவுனம், இந்த ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து"  என்றார்.

அரசியல்வாதிகளின் ஊழல்களை கூட மன்னித்து விடலாம். ஆனால் ஐஏஎஸ் அதிகாரியின் முகத்தில் ஆசிட்டை ஊற்றுவதும், மகாமகக் குளத்தில் தோழியோடு குளிப்பதற்காக, நெரிசலில் 50க்கும் மேற்பட்டடவர்களை நெரிசலில் சாக வைப்பதும் ஏற்றுக் கொள்ள முடியுமா ?  அந்த மகாமகக் குளத்தில் உங்கள் பெற்றோரும், என் பெற்றோரும் இறந்திருக்கக் கூடும்தானே..... ?   இதற்கெல்லாம் தண்டனை வேண்டாமா.... ?  அதுதான் சொத்துக் குவிப்பு வழக்கு.  

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.


http://2.bp.blogspot.com/-JZPYjz_CTGQ/VCTLzTSn2QI/AAAAAAAAK8g/nnLBAhsvZjg/s1600/96_msrinivasan.jpg


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 22:49

ஜெ. தீர்ப்பு எதிரொலி.

  • ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை! 
  • ரூ100 கோடி அபராதம்- 
  • முதல்வர் பதவி பறிப்பு!!
  • சட்டசபை உறுப்பினர் பதவி இழப்பு
  • 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது!
  • பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா!
  • ஜெ. கைதி எண்: 7402- 
  • 2வது முறையாக பறி போன ஜெ.வின் முதல்வர் பதவி
  • அக்டோபர் 5 வரை ஹைகோர்ட் லீவ்! வெளியில் வர முடியாது
  • சசிகலா, இளவரசி சுதாகரனுக்கு 2 தண்டனை… 
  • கூட்டுச்சதிக்கு 6 மாதம் சிறை
  • முதல்வரும் இல்லை.... 
  • அமைச்சர்களும் இல்லை....
  • சென்னையில் கலவரம்… 
  • ஸ்தம்பித்த தமிழகம்
  • காஞ்சி, கோவையில் பஸ்கள் எரிப்பு… 
  • பஸ்கள் ரத்து- மக்கள் பெரும் அவதி

அடுத்த முதல்வர் யார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sat 27 Sep 2014 - 23:10

தலைமையில்லாத தமிழகம்..

இதனையடுத்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கலவரம் வெடித்துள்ளது. முதல்வர், அமைச்சர்கள், ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள், தலைமைச்செயலகத்தின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் பெங்களூருக்கு சென்றுள்ளதால், அதிமுகவினரை கட்டுப்படத்த யாருமில்லை. கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by rammalar Sun 28 Sep 2014 - 3:50

தீர்ப்பு பாதகமாக இருந்தால் தமிழகம்
முழுவதும் கலவரம் வெடிக்கும் என கவர்னருக்கு
தெரியாதா..?
-
கலவரத்தை தடுக்க அவர் என்ன நடவடிக்கை
எடுத்தார்..?
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sun 28 Sep 2014 - 9:21

இன்றைய நிலவரம் என்ன?

முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற நாட்டின் 'முதல்' முதல்வர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sun 28 Sep 2014 - 9:22

ஜெயலலிதா பதவி வகித்தபோதே தண்டிக்கப்பட்டதால் தமிழகத்துக்கு தலைக்குனிவு: விஜயகாந்த்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by சுறா Sun 28 Sep 2014 - 9:23

rammalar wrote:தீர்ப்பு பாதகமாக இருந்தால் தமிழகம்
முழுவதும் கலவரம் வெடிக்கும் என கவர்னருக்கு
தெரியாதா..?
-
கலவரத்தை தடுக்க அவர் என்ன நடவடிக்கை
எடுத்தார்..?
-

பாஸ் இதுக்கு முன்னாடி கவர்னர் என்ன எடுத்தார் --  i* i* ஒன்னும் எடுக்கல அதே தான் இப்பவும்  )* )*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sun 28 Sep 2014 - 9:28

கவர்னர் என்பவர் சும்மா அலங்காரபொம்மை ஆகி ரெம்பக் காலம் ஆகி விட்டதே!

ஏன் ஜெயலலிதா மேடம் தானே முதல்வராய் இருந்தார்கள்.. தீர்ப்பு எதிராய் வந்தால் தன் ஆட்கள் எப்படியெல்லாம் கொந்தளிப்பார்கள் என அவருக்கும் தெரியும் தானே!

ஏற்கனவே தர்மபுரி கறையை கழுவவில்லை தானே? தீர்ப்பு எப்படி இருந்தாலும் தன்னை நம்பிய மக்களின் பாதுகாப்பு அரசின் பொதுசொத்துக்கான பாதுகாப்பை குறித்து ஏன் அவர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by சுறா Sun 28 Sep 2014 - 9:31

ஆமா அப்படியே நீங்க சொல்றது அவங்க காதுல விழுந்து அவங்க இனி திருந்திடுவாங்க.. அட போவீகளா  !*


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sun 28 Sep 2014 - 9:32

அடுத்து என்ன?
மேல்முறையீடு செய்யலாம்

அடுத்த முதல்வர் யார்?
முன்னர் பன்னீர் செல்லம் போல விசாலாட்சி நெடுஞ்செழியன்

அடுத்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியுமா?
மேல் முறையீட்டிலும் தீர்ப்பு உறுதியானால் போட்டியிட முடியாது.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sun 28 Sep 2014 - 9:34

சுறா wrote:ஆமா அப்படியே நீங்க சொல்றது அவங்க காதுல விழுந்து அவங்க இனி திருந்திடுவாங்க.. அட போவீகளா  !*

எங்கே போகணுமாம்? நானா அவங்களுக்கு வோட்டு போட்டேன்! நீங்க தானே அம்மாவே தாயே மகாராசி என போட்டிங்க.. முதல்ல முன்பக்கம் போய் அவங்க சொத்து பட்டியலை பாருங்க!

ஒரு பதிவுக்குள் அடங்க மாட்டேன் என அடம்பிடித்த பட்டியலை இரண்டாக்கி போட்டிருக்கேன்.

ஆமா நீங்க அம்மா விசுவாசியா ஐயாவிசுவாசியா சாரே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by சுறா Sun 28 Sep 2014 - 9:35

நான் ஓட்டே போடுறது இல்லயாக்கும் ஹ◌ா ஹா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sun 28 Sep 2014 - 9:43

வழக்கு போட்ட காலம் இருந்ததை விட பல மடங்கு சொத்து மதிப்பு கூடியாச்சு!

இந்த சொத்தை வைத்து என்ன தான் செய்வார்கள் இவர்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by சுறா Sun 28 Sep 2014 - 9:45

Nisha wrote:வழக்கு போட்ட காலம் இருந்ததை விட பல மடங்கு சொத்து மதிப்பு கூடியாச்சு!

இந்த சொத்தை வைத்து என்ன தான் செய்வார்கள் இவர்கள்?

சுதாகரனின் ஒரு 21 வது மகன் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கோர்ட்டில் தெரிவித்திருந்தார். பாவம்.

பாருங்க சொத்தை வாங்கலாம் சுகத்தையும் நிம்மதியையும் வாங்க முடியாதுன்னு படிச்சிருக்கேன்
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sun 28 Sep 2014 - 9:53

சுறா wrote:
Nisha wrote:வழக்கு போட்ட காலம் இருந்ததை விட பல மடங்கு சொத்து மதிப்பு கூடியாச்சு!

இந்த சொத்தை வைத்து என்ன தான் செய்வார்கள் இவர்கள்?

சுதாகரனின் ஒரு 21 வது மகன் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கோர்ட்டில் தெரிவித்திருந்தார். பாவம்.

பாருங்க சொத்தை வாங்கலாம் சுகத்தையும் நிம்மதியையும் வாங்க முடியாதுன்னு படிச்சிருக்கேன்

அடடா! வழக்கின் ஆரம்பமே இவர் திருமண ஆடம்பரம் தான் அல்லவா? நிஜமாகவே மன நிலை பாதிப்பா? ஆனாலும் அந்த உடன்பிறவாச்சகோதரியின் அட்டகாசங்கள் குறையாமல் தானே இருந்தது.

வினை விதைத்தவன் அதை அறுக்கத்தானே வேண்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by சுறா Sun 28 Sep 2014 - 10:10

அவரின் இரண்டாவது மகன் பார்கவ் சுதாகரன் எனது மாணவன் 11வது படிக்கிறான். போட்டோ இருக்கிறது இங்கு பதிய இயலாமைக்கு வருந்துகிறேன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sun 28 Sep 2014 - 10:15

ஓ உங்க ஸ்கூலில் தானா படிக்கின்றார்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by சுறா Sun 28 Sep 2014 - 10:18

Nisha wrote: ஓ உங்க ஸ்கூலில் தானா படிக்கின்றார்கள்!

ஆமாம் ரொம்ப நல்ல பையன். அமைதியானவர் சிறந்த பேச்சாளன் (ஆங்கிலத்தில் சரளமாக) பள்ளியின் மாணவ உதவி தலைவன். அவங்க அம்மா சிவாஜியின் பேத்தி பல பேருக்கு பள்ளி கட்டணத்தை உதவியாக கட்டி வருபவர் தெய்வபத்தி உடையவர். அதைியின் சொரூபம். உதவி என்றால் போதும் தயங்காமல் எவ்வளவானாலும் கொடுத்து உதவுபவர்கள்.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sun 28 Sep 2014 - 10:20

அப்படியா!

சிவாஜி பேத்தி என்பது தெரியும் சார்.. அவர்கள் இங்கே மாட்டி ரெம்ப சங்கடப்ட்டு விட்டார்கள் போல.. பாவம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by சுறா Sun 28 Sep 2014 - 10:23

Nisha wrote:அப்படியா!

சிவாஜி பேத்தி என்பது தெரியும் சார்.. அவர்கள் இங்கே மாட்டி ரெம்ப சங்கடப்ட்டு விட்டார்கள் போல.. பாவம்.
ஆமாம் அவர்கள் மேன்மக்கள். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

நான் யுரோப்பில் இருந்து வந்தபோது பள்ளி விடுமுறை நாட்களில் இவங்க பள்ளி வந்தாங்க அலுவலக ஊழியர்களுக்கு அவர்கள் யாரென்று தெரியாததால் கவனிக்கவில்லை மேலும் விடுமுறை நாட்கள். நான் அவர்களை கண்டு என்ன வேன்டும் என்று கேட்டு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க படிவத்தை இணையத்தில் எடுத்து உடனே உதவி செய்தேன். இரண்டு மணி நேரமாக காத்திருந்தார்கள். எந்த கோபமும் படவில்லை. ஒன்னுமில்லாத சாதாரண பெற்றோர்களே கொஞ்ச லேட் ஆயிட்டாலே குதிப்பாங்க
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sun 28 Sep 2014 - 10:26

பல நேரம் பணத்தில் வளர்ந்தவர்களுக்கு அதன் செருக்கு இருக்காது. இடையில் வந்தால் தான் இல்லாத ஆட்டமெல்லாம் ஆடுவர்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Nisha Sun 28 Sep 2014 - 10:27

இந்த தீர்ப்பால் அந்த பசங்களுக்கு ஏதும் சங்கடம் வருமோ ஜானி?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by சுறா Sun 28 Sep 2014 - 11:29

Nisha wrote:இந்த தீர்ப்பால் அந்த பசங்களுக்கு ஏதும் சங்கடம் வருமோ ஜானி?

.ஒரு பயமும் இல்லை. அப்பா வேற வழி பசங்க நேர்வழி
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை - Page 2 Empty Re: ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum