Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
3 posters
Page 1 of 1
பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவினால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் தேர்தல் செயலக வளாகப்பகுதியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணி முதல் பகல் 11 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 11 மணி முதல் 11.30 மணி வரை ஆட்சேபனை தெரிவிப்பதற்கான கால அவகாசம் அளிக்கப்படும். அதன் பின்னர் போட்டியிடத் தகைமைபெற்ற வேட்பாளர் பட்டியல் உத்தியோகபூர்வமாக ஆணையாளரால் அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலில் தற்போது அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பொது எதிரணியின் சார்பில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுமே பிரதான வேட்பாளர்களாக காணப்படுகின்றனர். இந்த இருவருக்குமே போட்டி நடக்கின்றது. இது தவிர மேலும் 17 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்களும் ஒரு தமிழரும் களமிறங்கியிருக்கின்றனர்.
ஏனைய 17 பேரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாவர். வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் இன்றைய தினம் தலைநகர் கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று ஒருவாரம் முடியும் வரையிலான காலப்பகுதியில் நாட்டில் எந்தப்பகுதியிலும் ஆர்ப்பாட்டங்களோ, ஊர்வலங்களோ நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்வதற்காக இன்று காலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், பிரதான எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் தேர்தல் செயலகத்துக்கு வருவதால் தேர்தல் செயலக வளாகப்பகுதியைப் பொலிஸார் பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணையாளரின் அனுமதி பெற்றிராத எவரும் இப்பகுதிக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். இன்று வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்றதும் அரசியல் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படவுள்ளன.ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரம் அநுராதபுரத்தில் ஆரம்பித்து மொத்தம் 27 பிரதான பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் நாளை செவ்வாய்க்கிழமை தலதாமாளிகை சென்று வழிபட்டதன் பின்னர், நாளை மாலை கண்டி கெட்டம்பே பகுதியில் இடம்பெறும் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வார். இதனிடையே ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவுற்றதும் தேர்தல் செயலக வளாகப்பகுதியில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாக ஊர்வலங்கள் நடத்த இடமளிக்கப்படமாட்டாதென பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அனைத்து ஆதரவாளர்களும் ஆயுர்வேத மருத்துவ மனைப்பகுதிக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். வேட்பு மனுத்தாக்கலையொட்டி பொரளை கொட்டா வீதி, ராஜகிரிய, பாராளுமன்ற வீதிகளில் வாகனப்போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்[/size]
தினக்குரல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வேட்பு மனுவை கையளித்துள்ளார். இாஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்துக்கு இன்று காலை சென்ற இவர் தனது வேட்புமனுவை தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளித்துள்ளார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
இது தவிர மேலும் 17 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்களும் ஒரு தமிழரும் களமிறங்கியிருக்கின்றனர்.
அப்புறம் என்னாகும்! டெபாசிட் மிஞ்சுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கையளித்தார். இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் தனது வேட்பு மனுவை கையளித்துள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
எவர் ஜெயித்தால் என்ன? ஜெயிப்பவர்கள் ஆரம்பத்தில் நல்லவர்களாயிருந்து அப்புறம் அட்டூழியம் செய்ய ஆரம்பிப்பார்கள்.
பதிவி வந்தால் கூடவே பவிசும் வரணும் என்பது எழுதப்படாத விதி ஆகி போன இக்காலத்தில் ஜனாதிபதி மாறினாலும் இலங்கை மக்கள் தலையெழுத்து மாறவா போகின்றது?
பதிவி வந்தால் கூடவே பவிசும் வரணும் என்பது எழுதப்படாத விதி ஆகி போன இக்காலத்தில் ஜனாதிபதி மாறினாலும் இலங்கை மக்கள் தலையெழுத்து மாறவா போகின்றது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
இருந்தாலும் குடும்ப ஆட்சி என்று வரும் போது மக்களுக்கு கஷ்டம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
அடுத்து வருபவர் தம் குடும்பத்தினை ஆட்சிக்குள் கொண்டு வர மாட்டார் என்பது மட்டுமென்ன நிச்சயமாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
Nisha wrote:அடுத்து வருபவர் தம் குடும்பத்தினை ஆட்சிக்குள் கொண்டு வர மாட்டார் என்பது மட்டுமென்ன நிச்சயமாம்?
அவன் ஒண்டிக்கட்ட குடும்பம் பிள்ளை குட்டி இல்லாதவன் ஒரேயொரு மனைவிதான் ஹா ஹா பயம்காட்டாதிங்க அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
யார் ஜெயித்தாலும் பிரச்சினை பிரச்சினையாகவே இருக்கும் காரணம் யார் வந்தாலும் பேரின வாதியாகத்தான் இருப்பார் அவர் குணம் மாறாது என்பதுதான் எதார்த்தம்
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
அதெல்லம வருவாய்ங்க.. மாமாட பச்சான்.. பாட்டிட தம்பி... சித்தப்பாக்கு பெரியப்பா என வருவாய்ங்கப்பூ.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
நேசமுடன் ஹாசிம் wrote:யார் ஜெயித்தாலும் பிரச்சினை பிரச்சினையாகவே இருக்கும் காரணம் யார் வந்தாலும் பேரின வாதியாகத்தான் இருப்பார் அவர் குணம் மாறாது என்பதுதான் எதார்த்தம்
அப்பாடா! இது தான் சரி! இப்படித்தான் ஆகும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே
முடியல
முடியல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
யாவரும் அறிந்த விடயம்தான் ஆனாலும் யாராவது புதியவர் வந்தால் பிரச்சினைகள் தீருமா அல்லது பெருகுமா என்று காத்திருந்துதான் பார்க்கணும்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:யார் ஜெயித்தாலும் பிரச்சினை பிரச்சினையாகவே இருக்கும் காரணம் யார் வந்தாலும் பேரின வாதியாகத்தான் இருப்பார் அவர் குணம் மாறாது என்பதுதான் எதார்த்தம்
அப்பாடா! இது தான் சரி! இப்படித்தான் ஆகும்.
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
ஏன் என்னாச்சு இன்னும் எவ்வளோ இருக்குப்பா இப்பதானே மனுத்தாக்கல் பொறுத்திருங்கள் வரும் தொடர்ந்து வரும்நண்பன் wrote:ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே
முடியல
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
நேசமுடன் ஹாசிம் wrote:யாவரும் அறிந்த விடயம்தான் ஆனாலும் யாராவது புதியவர் வந்தால் பிரச்சினைகள் தீருமா அல்லது பெருகுமா என்று காத்திருந்துதான் பார்க்கணும்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:யார் ஜெயித்தாலும் பிரச்சினை பிரச்சினையாகவே இருக்கும் காரணம் யார் வந்தாலும் பேரின வாதியாகத்தான் இருப்பார் அவர் குணம் மாறாது என்பதுதான் எதார்த்தம்
அப்பாடா! இது தான் சரி! இப்படித்தான் ஆகும்.
ஆரம்பத்தில் சமுகமாய் இருக்கும். அப்புறம் போகப்போகத்தானே தெரியும். ஆனால் இலங்கை சூழல் அதள பாதாளம் நோக்கி போவதாய் தான் அங்கேயே சூழ்னிலை சொல்கின்றது.
சீனக்கப்பல்கள் இலங்கை தேசியகொடியுடன் இலங்கைக்கடற்பரப்பில் செல்ல அனுமதியாம்.. இதன் மூலம் இலங்கையை சீனாவுக்கு அடிமை சாகாசனம் எழுதிகொடுத்தது உறுதி ஆகி விட்டது-
ஏற்கனவே ஒரு விஜயன் வந்து.. அது முடிந்த பாடில்லை. இன்னும் ஐம்பது வருடத்தில்ல்.. சீனன் சொல்வார்.. இலங்கை எங்கள் பூமி என.. அப்ப தமிழ் பேசுபவருடன் சிங்களவனும் இணைந்து புதிதாய் ஒரு விடுதலைபோர் ஆரம்பமாகும்.
இலங்கைக்கு எங்கே விடிவு பிறக்கும். அங்கே பிறந்ததால்...??///
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
அது உண்மைதான் சீன மயமாக்கல் ஆரம்பமாகி அரங்கேற்றமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது எதிர்கால சந்ததியினரை இறைவன்தான் பாதுகாக்கணும்
Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
ஒரு பண்ணாட மாறிட்டான் மகிந்தக்கு மறுபடியும் குளிர் விட்டுடும்நேசமுடன் ஹாசிம் wrote:ஏன் என்னாச்சு இன்னும் எவ்வளோ இருக்குப்பா இப்பதானே மனுத்தாக்கல் பொறுத்திருங்கள் வரும் தொடர்ந்து வரும்நண்பன் wrote:ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே
முடியல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum