சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

மதுவினால் ஏற்படும் தீமைகள் Khan11

மதுவினால் ஏற்படும் தீமைகள்

3 posters

Go down

மதுவினால் ஏற்படும் தீமைகள் Empty மதுவினால் ஏற்படும் தீமைகள்

Post by ahmad78 Sat 24 Jan 2015 - 12:33

மதுவினால் ஏற்படும் தீமைகள்
2000ம் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்துவதின் தீமை பற்றி நமதுவள்ளுவப் பெருந்தகை தனது 'கள்ளுண்ணாமை' அதிகாரத்தில் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்.
உட்கப் படாஅர்; ஒளி இழப்பர்; எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டு ஒழுகு வார்.
குறள் விளக்கம்: போதைப்பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார்; வாழும் காலத்து,மரியாதையும் இழந்து போவார்கள்.
நாண் என்னும் நல்லாள் புறம்கொடுக்கும், 
கள் என்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
குறள் விளக்கம்: போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங்குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப்போய் விடுவாள். பண்பில்லை என்றால் எவ்வளவு அறிவிருந்தும்பயனில்லை!!
இஸ்லாத்தின் பார்வையில் மது அருந்துதல்!
மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: -
“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)
மதுபானங்கள் அருந்துபவர்கள் மாத்திரம் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் அல்ல. மதுபானங்கள் அருந்துவதில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவர்கள் அனைவரும் இறைவனால் சபிக்கப்பட்டவர்களே.
என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் – மூன்றாம் பாகத்தில் – முப்பதாவது அத்தியாயமான போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் 3380வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மது குடிப்பதால் சில பயனுண்டு, பயனை விட கெடுதிகள் அதிகம்... என்று அல்குரான் கூறுவதை, இன்றைய நவீன அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மருத்துவ ஆய்வுக்கழகமான அமெரிக்காவின் மாயோ மருத்துவ கழகமும் இதையே கூறுகின்றது.
(Mayo Foundation for Medical Education and Research)
“Alcohol may offer some health benefits, Especially for your heart. On the other hand, alcohol may increase your risk of health problems and damage your heart. Certainly, you do not have to drink any alcohol,and if you currently do not drink, and do not start drinking for the possible health benefits. In some cases, its safest to avoid alcohol entirely – the possible benefits do not outweigh the risks. ” ——www.mayoclinic.com/health/alcohol
போதை தரக்கூடிய பொருள்கள் உலகில் ஏராளம் உண்டு.அவைகள் திட, திரவ, வாயு எனும் மூன்று நிலைகளில் கிடைக்கிறது. ஆனாலும் அதிகம் போதை தரக்குடியது ,சமுதாயத்திற்கு பெரிதும் தீங்கிழைப்பது என்று அரசாங்கங்கள் கருதுவது திட வடிவில் உள்ள ஹெரோயின், கோகைன் ,ஹஷிஸ் ,கஞ்சா,அபின் போன்றவைகளைத்தான். பெரும்பாலான நாடுகள் போதை மருந்து கடத்துபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கின்றன. ” டாஸ்மாக் ” சாராய பாட்டிலை வீடு முழுவதும் அடுக்கி வைத்திருந்தாலும், அரசுக்கு கவலையில்லை ஏனேனில் அவை சட்டபூர்வமான போதை.
அதே சமயம் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தால் 10 வருட சிறை தண்டனை அத்துடன் குண்டர் சட்டமெல்லாம் பாயும்.
ஏனென்றால் அரசின் செல்லப்பிள்ளையாக,வருவாய் ஈட்டித்தரும் மூத்த (குடி) மகனாக மதுவை அரவணைத்து, ஆசீர்வதித்து பட்டி தொட்டிதோரும், கவர்மென்ட் சரக்கை ஆறாக ஓடவிட்டு கஜானாவை நிறைக்கின்றனர்.
உலகில் நல்ல(குடி)மகனை உருவாக்க ஒவ்வொரு நாடும் பாடுபடுகின்றன. ஒருசில நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளின் அரசாங்க கப்பல் மிதப்பது” தண்ணீ” வருவாயில்தான்.
மது குடிப்பதை எல்லா குடியரசுகளும் சட்டபூர்வமாக்கி மக்களின் நல்வாழ்வை சீரழிக்கின்றன.இவர்கள் பார்வையில், மதுவை விட போதை மருந்துகள் பெரும் தீமையாகத்தெரிகிறது. இவைகளை தடுக்க கடும் சட்டம். ஆனால் பிராந்தி, விஸ்கி,ரம், ஜின், ஒயின் சாராயம் போன்றவை சமுதாய அங்கீகரிக்கப்பட்ட (Social Drinks) பானமாக ஆராதிக்கப்படுகிறது.
போதை வருவாயில் தள்ளாடும் தமிழ்நாடு அரசு
இன்றைய குடியரசு ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் மது போதை தாராளமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.குறிப்பாக தமிழ்நாடு அரசு இதற்கு தனித் துறை ஏற்படுத்தி சேவை செய்கிறது. “TASMAC” (Tamil Nadu State Marketing Corporation) தமிழ்நாடு முழுவதும் சுமார் 6800 சில்லறை கடைகள் 44000 ஊழியர்கள் 48 சேமிப்பு கிடங்குகள் மூலம் தமிழ் மக்களின் தாகங்களை தீர்க்கிறார்கள். தெருக்குழாயில் தண்ணீர் வருவது நிச்சயமில்லை என்றாலும் ‘டாஸ்மாக்கில்” தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும்.
1983 ல் டாஸ்மாக்கின் வருமானம் வெறும் 183 கோடி ரூபாய் மட்டுமே, ஆனால் இன்று ( 2013 - 2014 ) சுமார் 32,670 கோடி ரூபாய். தமிழக அரசின் மொத்த வருவாயில் பாதி வருவாய் போதை வருவாய்தான். இந்த வருமானம் ஆண்டுதோறும் சுமார் 20% அதிகரிப்பதாக அறிவிக்கிறார்கள். இதன் பொருள் 20% இளைஞர்கள் போதைக்குள் நுழைகிறார்கள் என்பது மறைமுக உண்மை. கடந்த அக்டோபர் மாத தீபாவளி பண்டிகை இரண்டு நாளில் மட்டும் சரக்கு விற்பனை 370 கோடியாம். இது சாதனையா அல்லது வேதனையா?
இந்தியாவிலேயே அதிக மது விற்பனை எங்கு தெரியுமா? கேரளா மாநிலம் சாலக்குடி பகுதியில்தான். ஊர் பெயரைக்காப்பற்ற மக்கள் சாலக்குடிக்கிறார்கள். நன்றாக குடிக்கிறார்கள்.
ஆனாலும் மது விற்பனை மூலம் அதிக வருவாய் ஈட்டும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம். தள்ளாடித்திரியும் தமிழர்கள் இறுதியில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகமானோர் தற்கொலை செய்து கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். கடந்த ஆண்டு மட்டும் 24568 நபர்கள். அதாவது ஒவ்வொருமணி நேரத்திற்கும் 18 பேர்கள். இந்த தற்கொலை சாவுகளில் 50% பின்னணியில் இருப்பது மதுப்பழக்கமே.
ஒவ்வொரு குடிகாரரும் துவக்கத்தில் ‘கௌரவ குடிகாரரராகத்தான்’ ஆரம்பித்திருக்கிறார் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு குடிகாரரும் – ஆரம்பத்தில் தான் ஒரு மொடாக் குடியனாக வேண்டும் என்ற எண்ணத்தில் குடிக்க ஆரம்பிப்பதில்லை. ஆனால் எந்த ஒரு குடிகாரரும் பல வருடங்களாக குடித்ததில் நான் ஒரு முறை கூட போதையால் பாதிக்கப்பட்டதில்லை – நான் குடித்த எல்லா நாட்களிலும் சுய கட்டுப்பாட்டுடன்தான் இருந்தேன் என நிச்சயமாக சொல்ல முடியாது.
ஓரு குடிகாரர் ஒருநாளாவது குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்து – பாதிக்கப்பட்ட அந்த நாளில் அவர் ஒரு மானக்கேடான செயலை செய்திருப்பாரேயானால் – அந்த மானக்கேடான செயல் அவரது வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கும்.
மதுவினால் உண்டாகும் துன்பங்களை கணக்கெடுப்பது மக்கள் தொகையை எண்ணுவது போல கடினமானது.மொத்தத்தில் சில தலைப்புகளில் கீழ் பட்டியலிட்டு கொள்ளலாம்.
1.சுபாவ மாற்றங்கள்
2.மனநல பிரச்சனைகள்
3.மற்றவருடன் சிக்கல்கள்
4.தொழில் பிரச்சனைகள்
5.குடும்பத்தினருடன் குழப்பங்கள்
6.சுற்றுபுறத்துடன் விவகாரங்கள்
7.கலாச்சார குளறுபடிகள்
8.சமூக பிரச்சனைகள்
9.சட்ட பிரச்சனைகள்
10.பொருளாதார சிக்கல்கள்
உலகத்தில் 44 முதல் 67 சதவீதம் வரையிலான சாலை விபத்து இறப்புகளுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம் என்ற அதிர்ச்சித் தகவலை உலக சுகாதார நிறுவனம் ஓர் ஆய்வில் தெரிவித்திருக்கிறது.
அரசே முன்னின்று சாராயக்கடைகளையும் மதுக்கடைகளையும் திறந்து விட்டிருக்கிறது. டாஸ்மாக்கினால் அரசுக்கு வருடந்தோறும் பண்டிகைக் காலங்களிலும் ஏனைய நாட்களிலும் பல கோடிக்கணக்கான வருமானம் வருகிறது. அரசே இதை ஒழித்தால்தான் மதுவினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கமுடியும்.......

மதுவினால் ஏற்படும் தீமைகள் 10931304_918579601494469_776720089850468016_n

மதுவினால் ஏற்படும் தீமைகள் 10940521_918579741494455_3241188322444640002_n

மதுவினால் ஏற்படும் தீமைகள் 10917461_918579814827781_3670849102436457108_n

மதுவினால் ஏற்படும் தீமைகள் 10933746_918579961494433_8719355442133905330_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமைகள் Empty Re: மதுவினால் ஏற்படும் தீமைகள்

Post by சே.குமார் Sat 24 Jan 2015 - 13:11

நல்லதொரு கட்டுரை...
பகிர்வுக்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமைகள் Empty Re: மதுவினால் ஏற்படும் தீமைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Jan 2015 - 15:04

நல்ல கட்டுரை உண்மைதான் அண்ணா 

மதுவினால் எப்பயனும் இல்லை என்று தெரிந்திருந்தும் அதை ஊக்குவித்து அதில் மூழ்கின்றார்களே எப்படித்தான் திருத்துவது


மதுவினால் ஏற்படும் தீமைகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமைகள் Empty Re: மதுவினால் ஏற்படும் தீமைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum