கண்ணில் அன்பை சொல்வானே யாரும் இல்லை இவன் போல
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பான் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவான்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவான்
பேசாமல் மௌனத்தினாலே மனதை சொல்லிடுவான்
இவன் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவான்
உலகம் எந்தன் உலகம் எங்கும் இவனே வந்திடுவான்
இவன் போலே இவனைப் போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
என்னை நானே காண்பது போலே இவனை பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித்துணையாக இவனை கேட்கின்றேன்
உறவேன்னும் வார்த்தைக்கு தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவன் அன்பின் வெளிச்சம் என்மேல் இரவும் பகல் தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவன் சொந்தம் வேண்டும்!