சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

ஆண்மகனின் பேறுகாலம் Khan11

ஆண்மகனின் பேறுகாலம்

Go down

ஆண்மகனின் பேறுகாலம் Empty ஆண்மகனின் பேறுகாலம்

Post by rammalar Sun 31 Jan 2021 - 17:53

ஆண்மகனின் பேறுகாலம் 842cfd10


காலை அலுவலகம் செல்கையில்:

எனக்கு தேதி தள்ளி போகுது. Pregnancy Kit வாங்கிட்டு வாங்க.

இரவு 2 மணி:
கணவன் : ஒரு வேலை உண்டாயிருந்தா என்ன பண்றது?
மனைவி : பெத்துகிற நானே கவலை படல.உங்களுக்கு என்ன? தூங்குங்க.

விடியற்காலை 5 மணி:
கணவன் : போய் பாத்துட்டு வாயேன். பயமா இருக்கு.

5:10 மணி:
மனைவி : இந்தாங்க நீங்களே பாத்துக்கோங்க.
கணவன் : (கண்களில் கண்ணீருடன்) கவலைப்படாத, நான் உன்ன பத்திரமா பாத்துக்கிறேன்.
மனைவி : பாத்துக்காம இருந்து தான் பாரேன். 😀

2 ஆம் மாதம்:
மனைவி : Doctor checkup க்கு appointment போட்டியா?
எனக்கு பயங்கரமா தலை சுத்துது.
எந்திரிக்கவே முடிய மாட்டேங்குது.
இடுப்பெல்லாம் வலிக்குது.
கணவன் : நீ rest எடு. நான் பாத்துக்கிறேன்.

3 ஆம் மாதம்:
மனைவி : மருத்துவமனைக்கு கூட வருவ தானே?
அந்த கோழியை தின்னுட்டு என் பக்கத்துல வராத. நாத்தம் தாங்கல.
அந்த folic acid மாத்திரை எல்லாம் என் பக்கம் நீட்டாதே. வாந்தி வருது.
நீ முன்ன பின்ன வாந்தி எடுத்திருக்கியா?
கணவன் : இல்ல. நான் வாந்தி எடுக்காமலேயே 28 வயசு வரைக்கும் வளந்துட்டேன். எப்படி இருக்கும் சொல்லு?
மனைவி : கர்ப்பம் ஆகி வாந்தி எடுத்திருக்கியா ? அப்டியே அடிவயிறுல இருந்து வலிக்குது. 🙁
கணவன் : சரி. படுத்துக்கோ. ஒன்னும் சாப்பிட வேண்டாம்.
மனைவி : அப்போ நா பட்டினியா இருந்தா பரவால்ல. நீ மட்டும் கோழி சாப்பிடுவ.

4 ஆம் மாதம்:
இரவு 3 மணி:
மனைவி : எனக்கு பசிக்குது. பிரட் எடுத்துட்டு வரியா?
கணவன் : (தூக்க கலக்கத்தில்) போறேன்.
வருகையில்: Bread, Jam, Nutella, பழங்கள் , தண்ணீர் , பழச்சாறு .
அவள்: :O

5 ஆம் மாதம்:
மனைவி : கால் எல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா? கைல, கால்ல எல்லாம் நீர் போடுது. மோதிரம் கூட போட முடில.
கணவன் : பாப்பா வளருது. அந்த எடைய தூக்க முடியாம தான் கால் வலிக்குது. நான் அமுத்தி விடறேன்.
மனைவி : என்ன இப்படி அமுக்கற? நீ அமுக்கவே வேண்டாம். வலிக்குது. எங்க நல்லா அமுக்குனா, இவ சும்மா சும்மா நம்மள அமுக்க சொல்லிடுவாளோனு தானே, வேணும்னு இப்படி வலிக்கிற மாதிரி அமுக்குற?

6 ஆம் மாதம்:
மனைவி : முக்கி முனகி எந்திரிக்க முனைகையில்
கணவன் : என்னாச்சு? வலிக்குதா? விடிஞ்சிருச்சா? ambulance கூப்பிடவா? தண்ணி வேணுமா? கொஞ்சம் பொறுத்துக்கோ.
மனைவி : யோவ், எதுக்கு இவ்ளோ சத்தம்? chu chu போகணும், எந்திரிக்க முடில.
கணவன் : இப்போ தானே போன? அதுக்குள்ளயா? நான் வேணும்னா Adult Diaper வாங்கி தரவா? இப்படி 10 தடவை எந்திரிக்க வேண்டாம்.
மனைவி : (முறைத்தபடி) மூடிட்டு தூங்கிடு. இல்ல சாவடிச்சுடுவேன்.

7 ஆம் மாதம்:
கணவன் : பக்கத்தில் அமர்ந்து பார்க்கிறார்.
மனைவி : எதுக்கு என்ன பாக்குற? எதுக்கு சும்மா பாக்குற? வேற எங்கயாவது பாரு. நான் தான் கிடைச்சேனா பாக்க?
கணவன் : பாத்தது ஒரு குத்தமா? அதுக்கு ஏன் அழற?
மனைவி : நான் அப்படி தான் அழுவேன். நீ ஏன் என்ன பாக்குற? நா அழுதா உனக்கு என்ன? இந்த வீட்ல அழ கூட உரிமை இல்லையா? நான் எங்க வீட்டுக்கு போறேன். எனக்கு எங்க அம்மா வேணும்.
கணவன் : சரி. நான் போறேன். உன்ன பாக்கல.
மனைவி : ஆமா. நான் தான் இப்போ குண்டாயிட்டேன். அசிங்கமா இருக்கேன். எப்படி என்ன எல்லாம் பாக்க தோணும். நீ மட்டும் நல்லா ஒல்லியா இருக்க . போ போ. என்ன பாக்காத.

8 ஆம் மாதம்:
நடுஇரவில்:
மனைவி : ஏன் தூங்குற?
கணவன் : இப்போ நான் தூங்கிறது பிடிக்கலையா? இல்ல உனக்கு தூக்கம் வரலையா?
மனைவி : ரெண்டுமே இல்ல. நீ ஏன் குப்புற படுத்து தூங்குற? நான் மட்டும் அப்படி தூங்க முடில. நீயும் தூங்காத. என் புள்ள மட்டும் இல்ல.உன் புள்ள கூட தான்.
கணவன் : சரி. நான் திரும்பியே படுத்துகிறேன்.

9 ஆம் மாதம்:
மனைவி : ரொம்ப வலிக்கும் தானே? எப்படி தாங்கிப்பேனோ? ரொம்ப பயமா இருக்கு.
கணவன் : பயப்படாத. நான் பக்கத்துலயே இருப்பேன். நான் பாத்துக்கிறேன்.
மனைவி : நீ பக்கத்துலயே இருப்ப. ஆனா உனக்கு வலிக்குமா? எனக்கு தான வலிக்கும். என் வலிய நீ வாங்கிப்பியா? இல்லேல. அப்போ பேசாத. வலில இருக்கும் போது, “push, push” னு கூவுனா, கொரவளைய கடிச்சு வெச்சுடுவேன்.
கணவன் : சரி மா, நான் எதும் சொல்ல மாட்டேன்.
மனைவி : ஒரு பாப்பா நான் பெத்துக்கிறேன். அடுத்தது, நீ தான் பெத்துக்கணும். என்னால முடியாது.
கணவன் : கண்டிப்பா நானே பெத்துக்கிறேன். இந்த பாப்பா மட்டும் நீ பெத்துக்கோ.

10 ஆம் மாதம்:
மனைவி : என்னங்க, வலிக்குது. தாங்க முடில. ஏதாவது ஊசி போட்டு என்ன கொன்னுடுங்க. இதுக்கு மேல முடியாது.
கணவன் : கவலைப்படாத மா. நான் பக்கத்துலயே இருக்கேன். எங்கயும் போகல. கொஞ்சம் நேரம் தான்.

கூடவே இருந்து, முதல் மாதத்திலுருந்து , பத்தாம் மாதம் வரை, நாம் செய்யும் அலப்பறைகளை பொறுத்து, நமக்கு வேண்டியவற்றினை செய்து , நம்மிடம் திட்டும் வாங்கி, ஏன் திட்டுகிறாள், அழுகிறாள் என தெரியாமல் பேந்த பேந்த என முழித்து , அதற்கும் நம்மிடம் வாங்கி கட்டிக்கொண்டு , எந்த நேரத்தில் வலி வருமோ என நாம் எண்ணுவதைக் காட்டிலும், எப்போதும் பாதி தூக்கத்தில் இருந்து, இயற்க்கை அழைப்புக்கு அழைத்துச் செல்வதிலிருந்து சகலமும் செய்து, ” கொசு கடித்தாலே கூவுவாள், பேறுகாலத்தை எப்படி தாங்கி கொள்வாளோ ” என பயந்து, வலி வந்தவுடன் , தாயும் சேயும் பத்திரமாக இருக்க வேண்டுமே எனப் பிரார்த்தித்து, எங்கே பயத்தை முகத்தில் காண்பித்தால் அவளும் பயந்து விடுவாளோ என மனதிற்குள்ளே வைத்து, வெளியே சிறு புன்னகையுடன், அவளுக்கு தைரியம் சொல்லி, தாயுடன் சேர்ந்து , மனதளவில் இரண்டு மடங்காய் சோர்ந்து, கடைசியில் குழந்தை பிறந்தவுடன் , தன் இரு உயிர்களையும் முத்தமிட்டு, கண்களினோரம் கண்ணீருடன், வெளியே வந்து, உறவினர்களுக்கு நா தழுதழுக்க செய்தியை சொல்லுமிடத்தில் இருக்கிறது “ஆண்களின் பேறுகாலம்” .

பெண்கள் தரும் இன்னல்களை முகஞ்சுளிக்காமல் பொறுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் ஒரு தாய் தான்.

பெண்கள் பேறுகாலம் என்னமோ பத்து மாதம் தான். ஆனால் ஆண்களுக்கு வாழ்நாளெல்லாம்.

பெண்களுக்கு வயிற்றில். ஆண்களுக்கு மனதில்.
பெண்களுக்கு சேய். ஆணகளுக்கு தாயும் சேயும்.


சூப்பரா இருந்தது அதனால் பகிர்ந்து கொண்டேன் படித்ததில் பிடித்தத
-
பதிவிட்டவர் - பூவிழி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum