சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

எங்கெங்கு காணினும் ஜடேஜாவின் விஸ்வரூபம் ஆல்-ரவுண்டரிடம் அடங்கியது ஆர்சிபி Khan11

எங்கெங்கு காணினும் ஜடேஜாவின் விஸ்வரூபம் ஆல்-ரவுண்டரிடம் அடங்கியது ஆர்சிபி

Go down

எங்கெங்கு காணினும் ஜடேஜாவின் விஸ்வரூபம் ஆல்-ரவுண்டரிடம் அடங்கியது ஆர்சிபி Empty எங்கெங்கு காணினும் ஜடேஜாவின் விஸ்வரூபம் ஆல்-ரவுண்டரிடம் அடங்கியது ஆர்சிபி

Post by rammalar Mon 26 Apr 2021 - 6:27

எங்கெங்கு காணினும் ஜடேஜாவின் விஸ்வரூபம் ஆல்-ரவுண்டரிடம் அடங்கியது ஆர்சிபி Tamil_News_4_26_2021_79108829
-
மும்பை: 
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்சுடன் நேற்று மோதிய 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ஆல் ரவுண்டர் 
ஜடேஜாவின் அமர்க்களமான ஆட்டத்தின் முன் எதிர்ப்பின்றி 
சரணடைந்தது. 

சிஎஸ்கே தொடக்க வீரர்கள் ருதுராஜ் - டு பிளெஸ்ஸி முதல் 
விக்கெட்டுக்கு 9 ஓவரில் 74 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் 
அமைத்தனர். ருதுராஜ் 33 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) 
எடுத்து வெளியேற, டு பிளெஸ்ஸி - ரெய்னா ஜோடி 2வது 
விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்தது. ரெய்னா 24 ரன் (18 பந்து, 
1 பவுண்டரி, 3 சிக்சர்), டு பிளெஸ்ஸி 50 ரன்
 (41 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹர்ஷல் பந்துவீச்சில் 
அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இதனால் சிஎஸ்கே ஸ்கோர் வேகம் தடைபட்டது. 
ராயுடு 7 பந்தில் 14 ரன் எடுத்து ஹர்ஷல் மிதவேகத்தில் 
ஜேமிசனிடம் பிடிபட்டார்.

இந்த நிலையில், சிஎஸ்கே 170 ரன் எடுத்தாலே அதிகம் என 
எதிர்பார்க்கப்பட்டது. அடுத்து ஜடேஜாவுடன் கேப்டன் தோனி 
இணைந்தார். அவர் ஒரு முனையில் பார்வையாளராக நிற்க, 
ஹர்ஷல் வீசிய கடைசி ஓவரை ஜடேஜா துவம்சம் செய்தார்.
 ஒவ்வொரு பந்தையும் அவர் அநாயசமாக சிக்சருக்கு தூக்க, 
அது வரை அற்புதமாகப் பந்துவீசி வந்த ஹர்ஷல் 
செய்வதறியாது திகைத்தார். 

அந்த ஓவரில் மட்டும் ஜடேஜாவின் ஆக்ரோஷமான 
ருத்ரதாண்டவத்தில் 6, 6, 6+1 (நோபால்), 6, 2, 6, 4 என மொத்தம் 
37 ரன்கள் சிஎஸ்கே கணக்கில் சேர்ந்தது.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு
 191 ரன் குவித்தது. ஜடேஜா 62 ரன் (28 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), 
தோனி 2 ரன்னுடன் ஆட்டமிழக்கமால் இருந்தனர். 

கோஹ்லி & கோவுக்கு ஏதோ புயல் அடித்து ஓய்ந்தது போலவே 
இருந்தது என்றால் மிகையல்ல. குறிப்பாக, தனது 
முதல் 3 ஓவரில் 14 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டையும் 
வீழ்த்தியிருந்த ஹர்ஷல் பேய் அறைந்தது போல மிரண்டு 
போனார். 

சாஹல் 1 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, 
20 ஓவரில் 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான 
இலக்குடன் களமிறங்கியது ஆர்சிபி அணி. 

கேப்டன் கோஹ்லி 8 ரன்னில் வெளியேற, அதிரடியாக மிரட்டிய 
படிக்கல் 34 ரன் (15 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி 
பெவிலியன் திரும்பினார்.

இந்த நிலையில், பந்துவீச்சிலும் தனது முத்திரையை ஆழமாகப் 
பதித்த ஜடேஜா, பெங்களூர் அணியை தோல்வியின் பிடியில் 
சிக்க வைத்தார். அவரது மந்திர சுழலில் சுந்தர் (7), 
மேக்ஸ்வெல் (22), டி வில்லியர்ஸ் (4) அணிவகுப்பு நடத்த, 
டேன் கிறிஸ்டியனையும் (1) தனது துல்லியமான த்ரோவில் 
ரன் அவுட்டாக்கி அமர்க்களப்படுத்தினார். 

ஹர்ஷல் (0), சைனி (2) இருவரும் தாஹிர் சுழலில் மூழ்க, 
பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு
 122 ரன் மட்டுமே எடுத்து 69 ரன் வித்தியாசத்தில் நடப்பு தொடரின் 
முதல் தோல்வியை சந்தித்தது. 

4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 13 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றி 
ஆல் ரவுண்டராக ஜொலித்த ஜடேஜா ஆட்ட நாயகன் விருது 
பெற்றார்.

தினகரன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum