சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!! Khan11

முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!

Go down

முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!! Empty முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!

Post by rammalar Sat 18 Nov 2023 - 4:00

முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!! 29-32

-
‘முருகா’ என்று நீங்கள் ஒருமுறை சொல்கிற பொழுது, 
முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள். 
‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப்படும் திருமாலைக் 
குறிக்கும். ‘ரு’ என்றால் ‘ருத்ரன்’ என்றழைக்கப்படும் சிவனைக் 
குறிக்கும். ‘க’ என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனான 
பிரம்மாவைக் குறிக்கும். 


மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால் 
‘முருக’ என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும் 
மூர்த்திகளின் அருளும் முருகன் மூலமாக நமக்கு வந்து சேரும் 
எனபது ஐதீகம்..


1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், 
லோபம், மதம், மாற்சர்யம்.


2. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு 
உள்ளது.


3. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு 
பெயர் உள்ளது. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. 
விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.


4. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், 
கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு 
ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் 
கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.


5. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. 
இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி 
வடிவில் உணர்த்துவது ஆகும்.


6. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி 
அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களுக்கும் 
நிவர்த்தியாகும்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!! Empty Re: முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!

Post by rammalar Sat 18 Nov 2023 - 4:01

7. முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, 
காந்தன் முதலியவை ஆகும்.முருகனை ஒரு முறையே வலம் வருதல் 
வேண்டும். முருகப் பெருமானை வணங்க சஷ்டி, விசாகம், கார்த்திகை, 
திங்கள், செவ்வாய், ஆகிய இவை அனைத்துமே உகந்த நாட்கள் 
ஆகும்.


8. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான், இதனால் காங்கேயன் 
என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். 
ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான் .கார்த்திகை 
பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் 
சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன் 
என்றும் பெயர் கொண்டான்.


9. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் 
கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, 
சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.


10. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் 
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் 
திருக்கோவில் ஆகும் முதலாம் ஆதித்த சோழன் இதனைக் 
கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக 
உள்ளது ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் 
சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள்பாலிக்கிறார்.


11. முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று 
அருட்கவி அருணகிரி பாடியுள்ளார். முருகனைப் போன்று கருப்பை 
வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.


12. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று 
பலர் பாடியுள்ளனர். பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் 
முருகனை மட்டுமே காண முடியும் பிற கடவுள்களுக்கு இல்லாத 
சிறப்பு இது.


13. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.


14. கந்தனுக்குரிய விரதங்கள்: 1 வார விரதம், 2 நட்சத்திர விரதம், 
3 திதி விரதம் .முருகனின் மூலமந்திரம் ஓம் ‘சரவணபவாய நமஹ’ 
என்பதாகும்.


15. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் 
ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான். முருகனின் 
கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.


16. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து 
முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீ ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும்
 இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.


17. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் 
தொழிலையும் செய்திருக்கிறார் இதனை உணர்த்தும் வகையில் 
திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்
பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது .


18. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் 
மூன்றாகும் அவைகளில் சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 
2 தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3 இந்த இருவரின் 
சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.
-


நன்றி-தினகரன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum