சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கிளைமேட் சாம்பியன்' பட்டம் வென்ற அசோகவர்ஷினி! Khan11

கிளைமேட் சாம்பியன்' பட்டம் வென்ற அசோகவர்ஷினி!

3 posters

Go down

கிளைமேட் சாம்பியன்' பட்டம் வென்ற அசோகவர்ஷினி! Empty கிளைமேட் சாம்பியன்' பட்டம் வென்ற அசோகவர்ஷினி!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 12:17

கிளைமேட் சாம்பியன்' பட்டம் வென்ற அசோகவர்ஷினி! Ashoka%20varshini-jpg-1046
நாம் பொதுவாக நம்மைப் பற்றிக் கவலைப்படுவோம். ஆனால், உலகைப் பற்றிக் கவலைப்படுகிறார் அசோகவர்ஷினி.

"சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது மாதிரி சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் நமக்கு நாமே தீங்கு விளைவித்துக்கொள்கிறோம். அதை உணராமலே இருப்பதுதான் இன்னும் சோகம்!" என்கிற அசோகவர்ஷினி, சென்னை அண்ணா பல்கலைக்கழக எம்.எஸ்சி., மின்னணு ஊடகவியல் மாணவி.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுச் செயல்பாடுகள், பணிகளுக்காக கடந்த 2010-ம் ஆண்டில் பிரிட்டீஷ் கவுன்சில் சார்பில் சர்வதேச 'கிளைமேட் சாம்பியன்களுள்' ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அசோகவர்ஷினி.

கல்வித் தேனீக்களால் களைகட்டியிருக்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அவரை சந்தித்துப் பேசினோம்...

சுற்றுச்சூழல் சாம்பியன் ஆனது எப்படி?

இளந்தலைமுறையினர் இடையே சுற்றுச்சூழலைக் காப்பது தொடர்பான ஆர்வத்தை வளர்க்கும் விதமாக 'கிளைமேட் சாம்பியன்' பட்டம் வழங்கும் திட்டத்தை பிரிட்டீஷ் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. இது சர்வதேச அளவிலான ஒரு திட்டம். கடந்த 2009-ம் ஆண்டில் 'கிளைமேட் சாம்பியன்' ஆனவர் எனது தோழி ஹரிப்பிரியா. நான் ஊடக மாணவி என்பதால் எனக்கு வானொலி தொடர்பான பணிகளில் அனுபவமும், ஆர்வமும் உண்டு. எனவே நான் ஹரிப்பிரியாவின் சுற்றுச்சூழல் புராஜெக்டில் பள்ளி மாணவர்களுக்கு வானொலிப் பயிற்சி அளிக்கும் பணியில் உதவினேன். அப்போது 'கிளைமேட் சாம்பியன்' பற்றி அறிந்த நான், கடந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பித்தேன், தொடர்ந்து நேர்முகத் தேர்வின் அடிப்படையில் சர்வதேச சுற்றுச்சூழல் சாம்பியனாகத் தேர்வானேன்.

நீங்கள் ஏற்கனவே சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டது உண்டா?

பள்ளியில் படிக்கும்போதே, 'புலியைக் காப்பது' போன்ற விழிப்புணர்வுப் பிரசாரங்கள், முகாம்களில் பங்கேற்றிருக்கிறேன். நான் தற்போது மேலும் தீவிரமாகவும், பின்னணிப் பலத்தோடும் சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளில் ஈடுபட 'கிளைமேட் சாம்பியன்' பட்டம் உதவுகிறது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக நீங்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் முயற்சி?

முன்பு, வானொலி மூலம் சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களைப் பரப்புவதற்கு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தேன். தற்போது வானொலி ஊடகம் மட்டும் போதாது என்று எண்ணி, எழுத்து, புகைப்படம், மறுசுழற்சிப் பொருட்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வைப் பரப்பி வருகிறேன்.

மாணவர்களிடம் இந்த விஷயத்தில் எந்தளவுக்கு ஆர்வம் இருக்கிறது?

ரொம்பவே அதிகமாக! 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நான் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பயிற்சி அளித்து வருகிறேன். என்னிடம் இருந்து அவர்கள் கற்றதை விட, அவர்களிடம் இருந்து நான் அதிகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். சுற்றுச்சூழல் நிலை, அதைக் காக்கும் வழிகளில் மாணவ-மாணவியர் காட்டும் ஆர்வம், அவர்களின் படைப்புத் திறன், புதுமையான சிந்தனை எல்லாமே என்னை வியக்க வைக்கின்றன. சமீபத்தில் ஊட்டி சென்றிருந்த சில மாணவர்கள் அங்கும் தாங்கள் என்ன சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட்டோம் என்று எனக்கு புகைப்படங்களை மின்னஞ்சல் செய்திருந்தார்கள். இன்னொரு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமைப்பு மேற்கொண்ட முயற்சியால், சுற்றுச்சூழல் மாசுபடுவததைத் தவிர்க்க தீபாவளியின்போது பட்டாசே வெடிக்க மாட்டோம் என்று சுமார் 40 மாணவர்கள் முடிவெடுத்தார்கள் என்றால் நம்புவீர்களா?

நீங்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறை போன்றவற்றுக்கான நிதியுதவி?

ஏற்கனவே கூறியபடி, 'பிரிட்டீஷ் கவுன்சில்' நிதியுதவி அளிக்கும். ஆனால் நான் தற்போது பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பயிற்சி அளிப்பதால் அதிகச் செலவில்லை. எங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் எனக்குத் தேவையான நிதியுதவியை அளிக்கிறது.

இன்று உலகம் முன்பிருக்கும் மிகப் பெரிய சுற்றுச்சூழல் அபாயம் என்ன?

வசதி என்று கருதி, வகை தொகையில்லாமல் பிளாஸ்டிக் பைகள், அதுசார்ந்த பொருட்களைப் பயன்படுத்தி வருகிறோமே, அதுதான். அதிலும் வளர்ந்த மேலைநாடுகள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஒட்டுமொத்த உலகத்துக்கே பாதிப்பு ஏற்படுகிறது. அமெரிக்கா, கனடா போன்ற வடஅமெரிக்க நாடுகள் வெளியேற்றிய பிளாஸ்டிக் கழிவுகளால் பசிபிக் கடலில் டெக்சாஸ் மாநில அளவுக்கு ஒரு செயற்கைக் கழிவுத் தீவே உருவாகிவிட்டது தெரியுமா? குளிர்பானம் அடைத்துவரும் சில டப்பாக்களில், 'மறுசுழற்சி செய்யக்கூடியது' என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் உள்ள பல்வேறு அடுக்குகளைப் பிரித்து மறுசுழற்சி செய்ய முடியாது என்பதுதான் 'பகீர்' உண்மை.

சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் பொதுமக்களுக்கு எந்தளவு விழிப்புணர்வு உள்ளது?

இன்னும் போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே வருத்தமான நிஜம். நாம் செய்யும் நன்மையும், தீமையும் நமக்கே திரும்பிவரும் என்கிற மாதிரி, நாம் செய்யும் சுற்றுச்சூழல் மாசுபாடு நம்மையே பாதிக்கும். உதாரணத்துக்கு கடலில் எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை மீன்கள் உட்கொள்கின்றன. நாம் அந்த மீன்களை சாப்பிடும்போது நமக்குள்ளும் பிளாஸ்டிக் நஞ்சு சென்றுவிடுகிறது. எங்கும் பறந்து திரியும் பிளாஸ்டிக் பைகளை விழுங்கும் பசுமாடுகளால், கறந்த பால் கூட நஞ்சாகிவிட்டது.

சுற்றுச்சூழலைக் காக்கும் விஷயத்தில் மாணவர்களால் என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்கள்?

எங்களின் முயற்சிகள், பயிற்சிகள் எல்லாம் சிறுஅளவிலான பலனைத் தரும். நான் எங்கள் வீட்டில், துணி, காகிதப் பைகள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறேன். அதற்கான மனமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறேன். இப்படி, எங்கள் புராஜெக்ட்டில் பயிற்சி பெற்ற மாணவர்கள் அவரவர் வீடுகளில் கூறியிருக்கிறார்கள். மிகப் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் அரசு, கொள்கைரீதியாகச் செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலைக் காப்பதற்கு நமக்கு ஏற்கனவே போதுமான சட்டங்கள் உள்ளன. அவற்றை உறுதியாக நடைமுறைப்படுத்தினாலே போதும்.

உங்களின் இந்தப் பயணம் எதுவரை தொடரும்?

உலகின் சுற்றுச்சூழல் மாசுபாடு, வெப்பமயமாதல் பிரச்சினை உடனடியாகத் தீர்வு கண்டுவிட முடிகிற விஷயமா என்ன? அவையெல்லாம் இருக்கிறவரை எனது பயணம் தொடரும். எனது புராஜெக்டில் பயிற்சி பெற்ற மாணவர்களின் புகைப்படங்கள், கட்டுரைகளுடன் பத்திரிகை வெளியிட வேண்டும். கண்காட்சி நடத்த வேண்டும் என்றெல்லாம் திட்டமிருக்கிறது. பார்க்கலாம்.

சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களை அறிந்தபிறகு, உலகின் எதிர்காலம் குறித்துப் பயமாயிருக்கிறதா?

அப்படி அவநம்பிக்கைகொள்ள மாட்டேன். நான் நம்பிக்கையான நபர். சுற்றுச்சூழல் தொடர்பாக இன்று நாம் பேச ஆரம்பித்திருப்பதே நல்ல விஷயம்தானே? நிச்சயம் மாற்றம் வரும்!

அசோகவர்ஷினி சொல்கிற மாதிரி நம்புவோம், நம்மாலானதைச் செய்வோம்!
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கிளைமேட் சாம்பியன்' பட்டம் வென்ற அசோகவர்ஷினி! Empty Re: கிளைமேட் சாம்பியன்' பட்டம் வென்ற அசோகவர்ஷினி!

Post by பர்வின் Mon 25 Jul 2011 - 13:18

நல்ல முன்மாதிரி நாமும் சாதிக்க வேணும் ##* :”@:
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

கிளைமேட் சாம்பியன்' பட்டம் வென்ற அசோகவர்ஷினி! Empty Re: கிளைமேட் சாம்பியன்' பட்டம் வென்ற அசோகவர்ஷினி!

Post by ஹம்னா Mon 25 Jul 2011 - 17:23

அவருக்கு எம்முடைய பாராட்டுகள். :) :) :)


கிளைமேட் சாம்பியன்' பட்டம் வென்ற அசோகவர்ஷினி! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கிளைமேட் சாம்பியன்' பட்டம் வென்ற அசோகவர்ஷினி! Empty Re: கிளைமேட் சாம்பியன்' பட்டம் வென்ற அசோகவர்ஷினி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum